எனக்கு நன்றாகத்தெரியும் அப்பாக்கள் அணைவரும் தியாகிகள் என்று, ஏனென்றால் முகத்தை விறைப்பாய் வைத்து தன் மகனை பயமுறுத்துவதற்காக பழக்க பட்டவர்கள் என, இன்னும் முழுதாய் அப்பா என்று அழைக்க அத்தனை பயம் உங்களிடம் ,அப்... அவ்வளவு தான் வார்த்தை வரும்..அத்தனை முறை வாங்கி இருக்கிறேன் ஒழுக்க அடியை உங்களிடம்..
ஒரு பென்சில் உங்களிடம் கேட்டால் போதும், வேற என்ன எல்லாம் வேணும் குமாரு என்பீர்கள், ஒரு நடுத்தர குடும்ப பின்னணியில் இருந்துகொண்டு இதுவரை எந்த கட்டணத்தையும் இரண்டாம் நாள் கட்டியதில்லை, முதல் நாளே இருப்பீர்கள் கல்லூரியில்..
எதுக்கப்பா கல்லூரியெல்லாம் பையன படிக்க வைச்சுக்கிட்டு என்று முணுமுணுத்த ஊர் பெரியவர்களிடம், கடன் வாங்கியாவது என் பையன படிக்கவைச்சு பெரியாளாக்கிபுடுவேன் அப்டின்னு நிமிர்ந்து சொன்ன உங்களை தலை குனியவைக்க விடமாட்டேன்னு மனசுக்குள்ள தன்னம்பிக்கைய விதைக்க வைச்ச உங்க நம்பிக்கை தான் என் பலம் இப்பொழுதும்..
பத்தாயிரம் ரூபாய் பணத்தை தொலைச்சுபுட்டு வந்து நின்னப்ப, அசராம, போயிட்டு போகுது குமாரு, நீ உடனே வீடு வந்து சேரு அதுபோதும் எனக்கு என்ற ஒற்றை வார்த்தை தான் இன்னும் பாசமா ஒட்டிக்கிடக்கு...
எத்தனை கோபமாய் இருந்தாலும் சரி உங்கள் மேல், என்னை உயர்த்தி பிடிக்க நினைத்து உங்கள் தோளை கொடுப்பதிற்கு பதிலாய் உங்கள் வாழ்க்கையையே கொடுத்த உங்களை நினைத்த தருணமே மாறும் கோபமும் பாசமாய்..
குறைந்தது இருபது முறையாவது நீங்கள் பெரிய விபத்துகளில் சிக்கி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன், அத்தனை தருணங்களிலும் உங்கள் மன தைரியத்தை கண்டு வியந்து இருக்கிறேன், அப்பொழுதெல்லாம் கலங்காத நீங்கள், முதல் முறை என்னை கல்லூரி விடுதியில் சேர்த்து விட்டு விடை பெறும்போது அழுத அழுகை சொல்லிவிட்டது அப்பா நீங்கள் என் மீது வைத்து இருக்கும் உலகங்களை தாண்டிய பாசத்தை .
இப்பொழுது புரிகிறது , அப்பாக்கள் பாசத்தை பக்குவமாய் மறைத்து வைப்பதால் தான் அம்மாக்கள் முதலிடம் பாசத்தில் எப்பொழுதும் ....
5 comments:
இப்போ தான் உங்க பதிவுகளை படிச்சுகிட்டே வரேன்(வாழ்க்கைன்னா என்ன?). மனசு கனத்து போயிடுச்சு. வேலை கிடைச்சதைப் பத்தி எழுதலை... அதையும் எழுதியிருந்தா Complete ஆயிருக்கும். இன்னும் நிறைய எழுதுங்க.
நான் எழுத ஏன் மறந்தேன் என்று வருத்தபடுகிறேய்ன்....
காரணம் சொல்லி ஓடி ஒளிந்து கொள்ள ஆசைப்படவில்லை
நிஜத்தில் உன் வரிகள் என்னையும் மீண்டும் எழுதவைக்கிறது
முயற்சிக்கிறேன்.... உன் அளவில் முடியாமல் போனாலும் உன்னை ரசித்து விமர்சிக்கும் அளவிற்காவது !!!...
இப்படிக்கு
உன் கல்லூரி தோழன் " மழைக்காதலன் " கலை.....
@hema : நன்றிங்க ஹேமா, கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு பிறகு எனது தளத்திற்கு வந்து இருக்கேன், பதிவுகளை இட்டுவிட்டு ஓடிவிட நினைத்த என் எண்ணத்திற்கு,தடை போட்டு, மீண்டும் முயற்சிக்க சொல்லி இருக்கிறீர்கள், நிச்சயம் மீண்டும் பயணிக்க ஆசை படுகிறேன். படித்துவிட்டு உங்கள் பின்னூட்டத்தையும் இட்டு தொடர கை அசைத்ததிற்கு மீண்டும் ஒரு முறை நன்றி ...
@kalai : மிக்க நன்றி கலை. நானும் எழுத நேரம் இல்லை என்று எதோ ஒரு இயலாமையை காரணம் காட்டி தப்பித்து கொண்டு இருக்கிறேன் ... ரொம்ப நாட்களுக்கு பிறகு தான் இப்பொழுது எழுதி இருக்கிறேன். இன்னும் ஒரு ரகசியம் சொல்ல ஆசை. அங்கும் இங்கும் எண்ணத்தில் உதிக்கும் நேரங்களில் துண்டு சீட்டுகளில் எழுதி போட்டுவிட்டு திருப்தி அடைந்து கொள்ளும் என்னை, தளத்தில் எழுத தூண்டியதே உன்னுடைய தளம் தான் என்பதே மிகசிறந்த உண்மை கலை...
நீயும் உன்னுடைய எழுத்து பயணத்தை தொடர வேண்டும் என்பதே என் வேண்டுகோள், வாழ்த்துக்கள் கலை ...
http://blogintamil.blogspot.com/2015/02/blog-post_6.html
தங்களை வசைச்சரத்தில் அறிமுகம் செய்து இருக்கிறேன் சகோ வந்து பாருங்கள்
Post a Comment