Thursday, December 12, 2013

சுதந்திரத்தை உடைத்துக்கொண்டு....



என் வாழ்க்கை பயணம் இங்கு தான் தொடங்கிற்று. நான் கண்விழித்ததும் ,கை கால் முளைத்து வாழ பழகியதும் இங்கு தான். நானும் எத்தனையோ குடும்பங்கள் வந்து தங்குவதையும், பின்பு காணமல் போவதையும் பார்த்து இருக்கிறேன்எதிர்வீட்டில்.

அப்படி தான் அன்றைய பொழுதும் கவனித்தேன்.புதிதாய் திருமணமான சுவடு மறையாமல் கதவை திறந்துகொண்டு உள்ளே சென்றார்கள் , சில மாதங்களாய் தனிமையில் சுதந்திரமாய் வாழ்ந்து கொண்டிருந்த அந்த வீட்டிற்குள் அதன் சுதந்திரத்தை உடைத்துக்கொண்டு .

அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் சுப்ரபாதம் ,5:10 க்கு அழகாய் லட்சணமாய் கோலம் கொட்டப்பட்டு இருக்கும் . சமையல் மனம் தூங்கிக்கொண்டு இருக்கும் கணவனை எழுப்புவதுமுண்டு .கணவனை அலுவலகம் அனுப்பி வைக்கும்வரை துரு துறுவென்று வேலைகள் நடக்கும் .அன்றாட அவர்களது வாழ்க்கையை ரசித்துக்கொண்டு தான் இருக்கிறேன் .

விடுமுறை நாட்களில் பலநேரங்களில் சிரிப்பு சத்தம் , சிலநேரங்களில் மிகப்பெரிய வாக்குவாதங்கள் ,அதன் பிறகு பெண் அழகும் சத்தம் ,சிறுது நேரத்தில் சமாதான சத்தம் ,கேர்ரம் விளையாட்டு சத்தம் ,இப்படி ஒவ்வொன்றையும் உற்று கவனிப்பதுண்டு .

கடந்த சிலவாரமாய் மீண்டும் அந்த வீடு தனிமையில் சுதந்திரமாய் வாழ்கிறது இவன் இருக்கும்போதும் .கோலம் கொட்டிகிடப்பதில்லை ,சுப்ரபாதம் கேட்பதில்லை ,சமையல் சத்தம் இல்லை , சிரிப்பு சத்தம் இல்லை ,அந்த பெண்ணும் இல்லை . சண்டை சத்தம் இல்லை ,சமாதனசத்தம் இல்லை .

ஒரே சத்தம் மட்டும் தெளிவாய் கேட்கிறது ,9 மணி வரை மின்விசிறி ஓடிக்கொண்டிருக்கும் சத்தம் மட்டும் . காலை 8 மணிக்கெல்லாம் எதிர்வீட்டு சுவற்றில் அங்கும் இங்கும் நடந்து நடந்து கத்தி கத்தி அவளிடம் என் வயிற்றை நிரப்பிகொண்டதுண்டு .

அவள் இல்லா இத்தருணத்தில் அங்கும் இங்கும் நடப்பது மட்டும் உண்டு சுவற்றின் மீது ,கத்தி உணவை கேட்பதில்லை ..

நீங்க வேணும்னா விஜய்கிட்ட கேட்டு பாருங்க , நான் வழக்கமா "கா கா " ன்னு கத்தி சாப்பாடு கேட்குறது மாதிரி எல்லாம் இப்போ கேட்கிறது இல்ல..

0 comments:

Post a Comment