Saturday, June 23, 2012

வாழ்க்கை(வலி)ன்னா என்ன? --ஒரு உண்மை சம்பவம் உங்களுக்காய் கலப்படமற்று (பாகம் - 7)நன்றிங்க ஏழாம் பாகத்தை படிக்க வந்ததிற்கு,சரிங்க,  தொலைபேசி  ஒலித்த அந்த படபடப்பான நிமிடங்களில் என்ன நடந்தன,அதன் பின் அரங்கேறியவைகள் என்ன என்று பார்ப்போம்.. 
முதல் பாகம் இணைப்பு இங்கே : -
முதல் பாகம்

இரண்டாம் பாகம் இணைப்பு இங்கே : -
இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம் இணைப்பு இங்கே : -
மூன்றாம் பாகம்

நான்காம் பாகம் இணைப்பு இங்கே : -
நான்காம் பாகம்

ஐந்தாம் பாகம் இணைப்பு இங்கே : -
ஐந்தாம் பாகம்


ஆறாம் பாகம் இணைப்பு இங்கே : -
ஆறாம் பாகம்
ஒருவித படபடப்புடன் தொலைபேசியை செயல்பெற செய்கிறேன்.எதிர்முனையில் ஒரு பெண்ணின் குரல்.

OtherEnd(மறுமுனை): This is vijay? (நீங்க தானே விஜய்?)
me(நான்): yes, am vijay.(ஆமா நான் தான்)

OtherEnd(மறுமுனை): Nisha calling from fourth dimension, Currently we are recruiting prople for java project. we are looking for the candidate who have experience around 2 years. (நான் நிஷா பேசுறேன் போர்த் டைமன்சன் அப்டிங்கற நிறுவனத்துல இருந்து அழைக்கிறேன்.எங்கள் நிறுவனத்தில் ஜாவா கணினிமொழியில் வேலை செய்ய இரண்டு வருட அனுபவம் ஆள் தேவை படுகிறது,)
me(நான்): ok (சரி)

OtherEnd(மறுமுனை): you are looking for a change right?.(நீங்கள் வேலை மாற நினைக்கிறீர்களா?)
me(நான்): yes(ஆம்)

OtherEnd(மறுமுனை): Ok, How many years experience you have in java.?.(எவ்வளவு வருட அனுபவம் உள்ளது ?. )
me(நான்): yes i have around 2 years experience in java. (ஏறக்குறைய இரண்டு வருட அனுபவம் உள்ளது )

other End(மறுமுனை): ok good.can you attend the interview tomorrow?.(சரி நேர்முகத்தேர்விற்கு நாளை வர முடியுமா?)
me(நான்): sure(சரி)

OtherEnd(மறுமுனை): Please tell me the convinet time. (உங்களுக்கு உகந்த நேரத்தை சொல்லுங்கள்)
me(நான்): 2.45

OtherEnd(மறுமுனை): good, vijay,notice period?(தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் பணியில் சேர நீங்கள் எடுத்துகொள்ளும் காலம் எவ்வளவு?)
me(நான்): ( Think....) ,around 2 years. (இதற்க்கு அர்த்தம் புரியவில்லை.நிறுவனத்தில் பயன்படுத்தும் சில வார்த்தைகள் வேறு வித பொருளை கொண்டு இருக்கும், நான் தவறாய் அனுபவத்தை கேட்கிறார்கள் என இரண்டு வருடம் என சொல்கிறேன்)

OtherEnd(மறுமுனை): (she got shocked....) and asked me wat?..3 months or 2 months?(திகைப்புடன் என்ன சொல்கிறீர்கள்?, மூன்று மாதமா?, இரண்டு மாதமா?.)
me(நான்): 3 months.(மூன்று மாதம் )

OtherEnd(மறுமுனை): thanks vijay, bye (நன்றி விஜய், மீண்டும் சந்திப்போம் ).
அவ்வளவு தாங்க வேலையே கிடைச்ச மாதிரி அவ்வளவு சந்தோசம் , அட நேர்முகத்தேர்வுக்கு தானடா கூப்பிட்டாங்க இதுக்கே இப்படியா அப்டின்னு நமக்குள்ள இருக்குற நியாயவாதி கேட்பான் கேள்விய,அட போடா நாங்க எல்லாம் அப்டி தான் அப்டினுகிட்டு போவோம்.பரபரப்பா சில நிமிடங்கள் இருந்துச்சு அப்புறம் கொஞ்ச நேரம் அமைதியா உட்கார்ந்து என்ன என்ன பண்ணனும் அப்டின்னு ஒரு பெரிய லிஸ்ட் எடுக்க ஆரம்பிச்சாச்சு. முதல்ல முகச்சவரம் பண்ணனும். அப்புறம் வேளச்சேரி மழைல நனைஞ்சு பிஞ்சு போன காலணிய சரிபண்ணனும் .அப்புறம் பக்கத்துல இருக்குற கம்ப்யூட்டர் செண்டர்க்கு போயி அவுங்க அனுப்பின கம்பெனி முகவரி அடங்கிய நேர்முகத்தேர்வு அழைப்பிதழை நகல் பிரிண்ட் எடுக்கணும்,அப்புறம் நம்ம சுயவிவரம் அடங்கிய தாளையும் பிரிண்ட் எடுக்கணும். அப்புறம் இருக்குற அரைகுறை சட்டைய அழகாய் வெள்ளையா மாத்தணும், மாத்தினதுக்கு அப்புறம் பெட்டிபோட்டு மடிப்பு கலையாம பத்திரமா தயார் செய்யணும்.

அப்புறம் உட்கார்ந்து இதுவரைக்கும் படிச்சதை எல்லாம் திருப்பி மறுபடியும் ஞாபகப்படுத்தணும், அப்புறம் நமக்கு சுட்டுபோட்டாலும் வராத ஆங்கிலத்த பேசி பாக்கணும் கொஞ்சம் ஸ்டைலா.

லிஸ்ட் ரெடி ஆனதும், கொஞ்சம் வேகமாவே லிஸ்ட்ல இருக்குறத ரெடி பண்ண ஆரம்பிச்சாச்சு, அட எப்பவும் காத்துவாங்கிகிட்டு இருக்கும் சலூன் கடை கூட இன்னைக்குனு பாத்து சரி கூட்டமா இருக்கும். அங்க கொஞ்ச நேரம் காத்து இருந்து முகச்சவரம் பண்ணுறதுக்குள்ள இன்னும் கொஞ்சம் வளந்துரும்.அப்புறம் அங்க இருந்து கிளம்பி ஓடி போயி செருப்பு தைக்கிற கடைல போயி நின்னு எவ்வளவுங்க தைக்கிறதுக்கு அப்டின்னு கேட்டா அவரு யானை விலை சொல்லுவாரு தைக்கிறதுக்கு.

அதையும் மீறி பேரம் பேசினா, எப்பா தம்பிகளா, கண்ணாடி போட்ட கடைகளுக்குள்ள போன சொன்னா சொன்ன விலை கொடுப்பீங்க, இங்க மட்டும் வந்து அஞ்சுக்கும் பத்துக்கும் அடிச்சு பேரம் பேசுவீங்க அப்டின்னு செருப்பால அடிக்காம,அடிச்சமாதிரி கேள்வி கேட்பாரு.அதுசரி அவரு கோவத்துலயும் ஒரு நேர்மை, நியாயம் இருக்குதானே.சரிங்க தைச்சுவைங்க, அப்புறம் கீழ இதையும் ஒட்டிவிட்டுருங்க, நான் ஒரு மணி நேரம் கழிச்சு வரேன் அப்டின்னு சொல்லிட்டு நேர அப்டியே,கம்ப்யூட்டர் சென்டர் போயி,அடிச்சு புடிச்சு ஒரு இடம் புடிச்சு, உட்கார்ந்து பார்த்தா கம்பனில இருந்து மெயில் வந்து இருக்கும்.அதை பார்த்த உடனே ஒரு பீலிங்,அங்க வேலை கிடைக்கிற மாதிரி, அதுமட்டும் இல்லாம பாருடா நமக்குன்னு ஒரு கம்பனில இருந்து ஸ்பெஷல்அஹ மெயில் வருது அப்டின்னு நம்பவும் முடியாம, நம்பாமாவும் இருக்கமுடியாத அப்டி அது ஒரு இனம் கலந்த சுகம்.அனுபவிச்சவங்களுக்கு புரிஞ்சிருக்கும்.

டக்குனு வேலைய முடிசுகிட்டு ஓடி போயி காலனிய வாங்கிகிட்டு,நேர நம்ம டீ கடைக்கு நடைய கட்டுவேன் .அண்ணா ஒரு டீ அப்டின்னுசொல்லி, நாங்களும் வருவோம்ட அப்டின்னு நினைச்சுகிட்டே குடிச்சிட்டு.அண்ணா வரேன் நாளைக்கு நேர்முகத்தேர்வு இருக்கு அப்டின்னு நம்ம சொல்றப்ப, அப்படியா,கிடைச்சிரும் போய்ட்டுவா அப்டின்னு அவரு வாழ்த்துகிரப்ப தானுங்க, இந்த சென்னைய ரொம்ப பிடிக்க ஆரம்பிக்கும். அப்பா அம்மா பக்கத்துல இல்லாத குறை தொண்டைய அடைக்கும்.பக்கத்து வீட்டுக்கு போனாவே மூச்சுக்கு முன்னூறு தடவை பாத்துபோய்ட்டுவா பாத்துபோய்ட்டுவா அப்டின்னு சொல்ற அம்மாவை ஏளனமா பாத்து சிரிச்சுட்டு உனக்கு வேறவேலை இருந்தா போயி பாரு அப்டின்னு சொன்னத நினைச்சு, கொஞ்சம் கண்ணுகலங்க ஆரம்பிக்கும்.ஒரு வருட படிப்புக்கு பரீட்சை எழுத போகும்போதே,சாமி கும்பிட்டு திருநீர் வைச்சுகிட்டு போ அப்டின்னு சொல்ற அப்பாவோட வாழ்த்துக்கள்,இப்பொழுது வாழ்க்கை தொடங்குறதுக்கான பரீட்சை எழுதபோகிரப்ப வாழ்த்த பக்கத்துல இல்லைங்கற வருத்தம் எட்டிப்பாக்கும்.சரி சரி போதும் பீலிங் கிளம்பு, போயி அடுத்த நடவடிக்கைகள ஆரம்பி, அப்டின்னு நமக்குள்ள இருக்கிற கருத்து கண்ணாயிரம் கடுப்பாயி திட்டுவான். சாரி பாஸ் அப்டின்னு சொல்லிட்டு நடையகட்டுவேன் என் அறைக்கு போனதும் புத்தகத்த எடுத்து படிச்சு படிச்சு சொல்லிப்பார்த்துகிட்டே ,இடையில் கொஞ்சம் சாப்பிட்டுட்டு மறுபடியும் படிக்க ஆரம்பிச்சு எப்போ தூங்கிபோனோம் அப்டினே தெரியாது,

ஆனா எனக்கு வேலை கிடைச்சு இருக்கும்.அட நீங்க வேற, ஆமாங்க கனவுல தான்.கனவும் தூக்கமும் தொலைஞ்ச நேரத்தில எழுந்திருச்சு வேகமா படிக்க ஆரம்பிச்சு அப்டியே மெது மெதுவா படிப்போட வேகம் குறைஞ்சு(Interview Fear).நேர்முகத்தேர்வு பயம் வர ஆரம்பிக்கும் பாருங்க, அடேங்கப்பா குறைஞ்சு ரெண்டு மூணு தடவையாவது கழிவறைக்கு போக வேண்டியிருக்கும்,போயிட்டு வந்தாலும் ஒரு மாதிரி பயம் கழுத்துக்கும், வயித்துக்கும் நடுவுல ஓடிகிட்டே இருக்கும். குறிப்பிடப்பட்ட நேர்முகத்தேர்வு நேரத்துக்கு, ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடியே தயாராக ஆரம்பிச்சிடுவேன். தயாரா போயி கண்ணாடி முன்னாடி நின்னா,முகத்துல பயம் ஒட்டி இருக்கும். என்ன கேட்பானுகளோ?,

வேலைய வாங்கியே ஆகணும், எத்தன பேரு நேர்முகத்தேர்வு எடுப்பனுகளோ, இவனுக பேசுற ஆங்கிலம் புரியுமா?.பதில் சொல்லுல அப்டினா கண்டுபிடிச்சுருவானுகளா?.கண்டுபிடிச்சா அசிங்கபடுத்தி மட்டும் விட்டுருவானுகளா?,இல்ல வேற ஏதாவது மற்ற கம்பனில நேர்முகத்தேர்வு போகமுடியாத மாதிரி பன்னிருவானுகளா?....இப்படி ஆயிரம் பயம்,அதை எல்லாத்தையும் மறைச்சிட்டு,போயி தான் பார்ப்போம்டா.

எது நடந்தாலும் நாலு சுவத்துக்குள்ள,திட்டினாலும், காறித்துப்பினாலும் நாலுசுவத்துக்குள்ள, வெளிய வந்தா தெரியபோறது இல்ல, அதுமட்டும் இல்லாம நமக்கு என்ன இவன் பொண்ணா கொடுக்க போறான் அசிங்கபட்டுட்டோம் அப்டின்னு பீல் பண்றதுக்கு.மறுபடியும் இவ்வளவு பெரிய சென்னைல அவன் கண்ல நம்ம திரும்பி படவா போறோம். அப்டின்னு மனசுக்கு ஏதோ காரனத்த சொல்லி சமாதனப்படுத்திகிட்டு திரும்பியும் கண்ணாடிய பார்த்து நமக்கு நாமளே சொல்லிபோம் பயம் இல்லைட இப்போ உன் முகத்துல, நீ சமத்துடா அப்டின்னு. அப்டியே வீட்டை விட்டு கிளம்பி வேளச்சேரி பேருந்து நிலையத்துக்கு போயி நின்னு சைதாபேட்டை பெருந்த தேடினா அது நம்ம கன்னுமுன்னாடியே நிக்கும்,அய்யோ அப்டின்னு ஒரு பயம்,அதுன்குள்ள என்ன அவசரம் அடுத்த பேருந்துல போலாம் அப்டின்னு சாவை தள்ளிபோடுற மாதிரி தள்ளிபோட வேண்டியிருக்கும் பயத்துல.ஆனா அதை பயம்னு காட்டிகிறது இல்ல,நான் பயப்பட எல்லாம் இல்ல, சரி அதுக்குள்ளே போயி என்ன பன்னபோறோம் அப்டின்னு தான் தள்ளிபோட்டோம் அப்டின்னு நமக்குள்ள இருக்குற,உன்னால முடியும் அப்டின்னு வீறாப்ப பேசினவன்,உள்ளுக்குள்ள பயந்துகிட்டு இருக்குற பயந்தாகோளிகிட்ட காரணம் சொல்லிக்கிட்டு இருப்பான்.கடைசியா ஒருவழியா அரைமணி நேரம் கழிச்சு சைதாபேட்டை பேருந்துல ஏறி கிளம்பிடுவோம்.சைதாபேட்டைல இறங்கியாச்சு.

சைதாபேட்டை சாலையோரம் நடந்துகொண்டே தேடினேன். ஒரு உயர்ந்த மாளிகையில் நான்காவது தளத்தில் இருப்பதை கண்டறிந்தேன். அட கம்பெனிய பார்த்ததும் என்ன என்னமோ நடக்குது எனக்குள்ள.அதெல்லாம் சொன்னா புரியாது தம்பி அனுபவிச்சாதான் தெரியும் அப்டின்னு சொல்லுவாங்களே பெரியவங்க அந்தமாதிரி தான் அந்த மாற்றங்கள். எப்புடியும் ஜெயிச்சுபுடனும்,நம்ம கம்பனில வேலை செய்யுறதா- பொய் சொன்னது தெரியாம பாத்துக்கணும், எல்லா கேள்விக்கும் விடை சொல்லிடனும் அப்டின்னு பல பயம் வந்து வந்து போற நேரத்துல கம்பனிய கண்டுபிடிச்சப்ப வரும் பாருங்க ஒரு நடுக்கம் அட அட ...அதெல்லாம் சொன்னா தெரியாதுங்க அனுபவிச்சா தான் தெரியும்..

அப்படியே படிக்கட்டு வழியா மேலபோயி பார்த்தா, நம்மள வரவேற்கிறதுக்காகவே காத்திருக்கு ஒரு பொண்ணு மேக்கப் எல்லாம் போட்டுக்கிட்டு.என்னை பார்த்ததும்

பொண்ணு:Come Please, your name? நான்:Yes ,Vijayakumar.A (with smile)

பொண்ணு:you are come for java right? நான்:Yes ,(with smile)

பொண்ணு:Please give your resume நான்:just hand over my resume with her

பொண்ணு:Please be seated நான்:Thankss

மெதுவா உட்கார்ந்தேன், ஏற்கனவே ஒரு நான்கு பேர் உட்கார்ந்திருந்தாங்க என்ன மாதிரி நேர்முகத்தேர்வுக்கு வந்தவங்க. கொஞ்சம் நேரம் அமைதியா இருந்தது.பக்கத்துல இருக்குறவன் மெதுவா என்கிட்டே பேச ஆரம்பிச்சான்.

அவன்: நீங்க எந்த கம்பனில வொர்க் பண்றீங்க.? நான்: (மனசுக்குள்ள- கேட்டாண்ட ஒரு கேள்வி நறுக்குன்னு) கம்பனி பெயர் சொன்னேன்.

அவன்: (கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு) எங்க இருக்கு கம்பனி? நான்:(மனசுக்குள்ள -அது தெரிஞ்சா நான் ஏன் இங்க இருக்குறேன்?).பெசன்ட் நகர்,அடையார்ல.

அவன்:பெசன்ட் நகர்லையா? நான்:(மனசுக்குள்ள-அய்யயோ இவன் பெசன்ட் நகர இருப்பானோ?.)ஆமாங்க

அவன்: பெசன்ட்நகர்ல எங்க? நான்:(மனசுக்குள்ள-விடமாட்டான் போல இருக்கே, கம்முனு சரண்டர் ஆகிடலாம?..வேண்டாம் வேண்டாம் சமாளிப்போம்)-விநாயாக அபார்ட்மென்ட்ல,சின்ன கம்பெனி தான் ஒரு ஆறு பேறு வொர்க் பண்றோம், எங்க காலேஜ் சீனியர் ஆரம்பிச்ச கம்பெனி.

அதுன்குள்ள அவன உள்ள கூப்பிட்டுட்டாங்க.நிஜமா அவ்வளவு சந்தோசம், தப்பிச்சம்டா சாமி அப்டின்னு தோனுச்சு.இவனே இப்படி கேட்கிறான்,உள்ள என்ன பண்ணப்போறானோ அப்டின்னு எச்சிய முலுங்கிகிட்டு certificate fileல கைல அலுத்திபிடிச்சுகிட்டு பதட்டத்தோட அமர்ந்து இருந்து என்கிட்ட Excuseme,Can you move a bit?.திரும்பிபாத்தா ஒரு பொண்ணு நுனிநாக்குல English .நுனி உதட்டுல Lipstick.இவ கண்டிப்பா வேலை வாங்கிடுவாடோய் அப்டின்னு நினைசுகிட்டு தள்ளிஉட்கார்ந்தேன்.கொஞ்ச நேரத்துல விஜயகுமார் அப்டின்னு அழைச்சாங்க.படபடன்னு,கிடுகிடுன்னு பதறியடிச்சு ஓடி போயி நின்னேன்.உள்ள போங்க அப்டினாங்க.உள்ள போனது வாயில வார்த்தை வருல தலைஅசைச்சு சைகை காட்டினேன் Yes அப்டின்னு,இதுல Smile வேற,கவர் பன்றாரமா Interview எடுக்கவந்தவர.

அவர்: Hi vijay?,introduce yourself? நான்:Iam vijayakumar,Working as a software engineer in ...... .I have 1.5 years exp in java.Currently am working in online shopping project.am working in payment model. this model contain many screens regarding the consumer and retailer and buyer inormation and the transaction related screens.then my achievement is Got district second mark, i got 96%.father is a former, mother is a housewife, i have one younger brother , he is doing CA. அவர்: What is the difference between abstract class and interface?. நான்:abstract class can have congrete method.but interface can not have congrete method.abstract class implements for single inheritance concepts.interface implements for multifleinheritance concept.when we want the use the abstract class we have to use extend keyword..when we want to use the interface in another class mean we have to use implements keyword.and interface can have only static and final varaibles but abstarct class not. அவர்: What is the difference String and stringBuffer which one is fast why? நான்:String is immutable.mean when we try to append or add some string with existing string, it will create a new object in heap memory.String buffer is mutuable, we can append or add the string in exisitng string itself. Stringbuffer is fast, because for creating stringbuffer taking small amount of code in bytecode,we can see the difference in .class file for string object and stringbuffer object.
.

.

அவர்: What is your day acitvities daily in your office? நான்: writing a code from morning to evening. அவர்: Daily u will write the code from morning to evening and then wat wil do? நான்: just report to project manager about work status.

இவ்வளவு நேரம் கேட்டுட்டு கடைசியா ஒரு கேள்விகேட்டாரு பாருங்க?.

அவர்:U are really working? (நீங்க நிஜமா வொர்க் பண்ணிஇருக்கீங்களா)?.பொய்யா ஆச்சர்யத்த முகத்துல வரவைச்சுகிட்டு yes I am working in .... .(ஆமா ,நான் வேலை பாத்துகிட்டு தான் இருக்கேன்) உடனே சொன்னாரு (your answers are not like a experienced)உங்க பதில் எல்லாமே அனுபவமுள்ளவர் பதில் மாதிரி இல்ல. (anyway thanks for your time, please wait outside)சரி நன்றி வந்ததிற்கு வெளிய காத்திருங்க அப்டின்னு.

நம்ம சொல்ற பொய்ய யாரவது கண்டுபிடிச்சு நம்மள அசிங்கபடுத்தும்போது முதல்ல கலங்கி காட்டிகொடுக்குறது நாம கண் தாங்க. இங்க அழுதுவிடகூடாதுன்னு நினைசுகிட்டு வேகமா அலுவலகத்த விட்டு வேகமா வெளிவந்தேன்.ஒவ்வொரு படிக்கட்டும் சத்தமில்லாம என் கண்ணீர வாங்கிகிச்சு,என்ன சொல்ல.சைதாபேட்டை பேருந்துநிறுத்தம் வரைக்கும் தான் தாக்குபிடிக்கமுடிஞ்சுது.அதுக்குமேல முடியல certificate fileஅ ஓரமா வைச்சிட்டு தேம்பி தேம்பி அழுத அழுகை இன்னும் நாபகம் இருக்கு.தோத்துட்டமே,எப்டி ஜெய்க்கிறது இனிமேல்?.எப்டி படிச்ச கடன அடைக்கப்போரோம்?.நல்லாதான பதில் சொன்னோம்?.அனுபவமுள்ளவர் பதில்மாதிரி இல்லன்ன நான் என்ன பண்றது?.நானும் அவ்ளோ படிச்சனே?.நம்மளவிட திறமை இல்லாதவங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறப்ப நமக்கு மட்டும் ஏன் ஒரு சந்தர்ப்பம் கூட கிடைக்க மாட்டீங்குது?.நிச்சயம் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தா நிச்சயம் நல்ல நிலைமைக்கு வந்திடுவேன்.அப்டிங்கற எண்ணங்கள் என் அழுகையை தொடரசெய்தது,என் அழுகைய நிறைய பேர் பாத்தாங்க இங்க அழக்கூடாதுன்னு மனசு சொல்லுது, ஆனா முடியல.

அப்படியே பேருந்த பிடிச்சு வேளச்சேரி வந்தாச்சு.வேலை இல்லாம கஷ்ட்டபடுரவங்கலோட கவலைய ஆத்துரதே நிறையா டீ கடைங்க தான். அதுவும் தெரிஞ்ச டீ கடைக்காரர இருந்தா இன்னும் அருமை.அவரு ஆத்துற டீ யில நம்ம கவலையும் ஆறிடுமுங்க.அந்த கடைல வைச்சு இருக்கிற ஐம்பது காசு நெய் பிஸ்கெட்டும்,தேங்காபர்பியும் அந்தநாள் பசியவே ஆத்திடுமுங்க.கழுத ஆனந்தபவன் ஐம்பது ரூபா சாப்பாடு தள்ளிநிக்குமுங்க இந்த ஐம்பது காசு நெய் பிஸ்கெட்டுக்கு முன்னாடி.அதுவும் அந்த கண்ணாடி பாட்டில் துறுபிடிச்ச மூடிய திறந்து கைய உள்ளவிட்டு நெய்பிஸ்கெட்ட தொடும்போதே பாதிபசி ஆறிடுமுங்க.

அப்படியே டீ ஒரு முடங்கு,பிஸ்கட் ஒரு கடி,அப்படியே ஒரு லுக்கு சாலைய.போய்கிட்டு இருக்குற பெரிய கம்பெனிங்க பேருந்த பார்த்து, நாங்களும் வருவோம்டி சீக்கிரமே, நாங்களும் engineer அப்டின்னு மனசுக்குள்ள சவால்விட்டுகிட்டு இருப்போம் அந்தசமயத்துல நம்ம டீ கடைக்கார அண்ணா கேப்பாப்புல தம்பி, என்ன ஆச்சுப்ப போன காரியம் அப்டின்னு,கிடைக்கலன்னா அப்டின்னு சொல்லிமுடிக்கிரதுக்குள்ள சொல்லுவாப்ள- தம்பி, சரவணன் அப்டிங்கற தம்பி உங்க படிப்பு தான் படிச்சு இருக்காப்ல, அவரும் இங்க தான் டீ குடிக்க வருவாப்ல , அந்த தம்பியும் ரொம்ப நாள் தேடினாப்ள, போனவாரம் தான் அவருக்கு வேலை கிடைச்சதுனாப்ள சம்பளம் நாப்பதாயிரமாம் அப்டின்னு சொல்லி, டீ யில Boost போடாமலே நம்மள Boost பன்னுவாப்ள.

மறுபடியும் நம்பிக்கையை Boost பண்ணிக்கிட்டு Certificate fileல தூக்கிக்கிட்டு அறைய நோக்கி நடப்போம்ல தங்கப்பதக்கம் சிவாஜி மாதிரி.அட நீங்க எங்க கிளம்பிட்டீங்க, பின்னாடி வாங்க பாஸ், இன்னும் நிறையா இருக்கு உங்ககிட்ட பகிர்ந்துக்க துளியும் கதையாய் இல்லாமல் நிஜமாய்.