
படித்த கடனை அடைக்க பட்டணம் கிளம்பிய எனக்கு தெரியாது நான்
உலகத்தை இனி தான் படிக்க போகிறேன் என்று ,
திருவல்லிக்கேணியில் ஒருஅறை எடுத்து இருக்கிறேன், வந்துவிடு என்று நண்பன் சொன்னதும் முதல்முறையாக தனியாக வருகிறேன்
சென்னைக்கு,சென்னை புறநகர் பேருந்து நிலையம் கண்டதும் உலகம் பெரியது என்று தோன்றியது.
அங்கே இருந்து கலைவாணர் அரங்கம் பேருந்துநிறுத்தத்தில் இறங்கி சுறுசுறுப்பா வேகமா ஓடுற மனுசங்கள பார்த்தேன், வலிச்சுது அட சுறுசுறுப்பா வேகமா ஓடுற மனுசங்கள பார்த்து இல்லை,உடுத்த கொண்டு வந்த உடைகளைவிட படிக்க கொண்டு வந்த புத்தகங்களோட சுமை அதிகமா இருந்துச்சு அதனால.
குறுகிய படிகட்டுல ஆரம்பிச்சுது வழி,ஏறிக்கிட்டே இருக்கேன் கடைசியில் பார்த்த தொடங்கினதும் முடிஞ்சுடுச்சு அறை, குளிக்க குளிக்க வியர்க்குற குளியலறை அங்க தான் பார்த்தேன்.
சரி குளிச்சுட்டு சாப்பிடப்போன, தள்ளு வண்டீல அடிமாட்டு விலைக்கு விக்குறாங்க , அட நாற்காலி போட்டு உட்கார்ந்து கடைல சாப்பிட்டா ஒரு மாசத்துக்கு செலவுக்கு வைச்சுக்க அப்டின்னு அப்பா கொடுத்த காசு ஒருநாலுல தீர்ந்துடும் போல இருந்துச்சு , அதுக்காக குறைச்சு, தள்ளுவண்டில சாப்பிட பழகிக்கிட்டேன்.
சாப்பிடற நேரம் போக,புத்தகங்கள்(சி,சி++,ஜாவா, )தான் என்கூட பேசிகிட்டே இருக்கும்,சீக்கிரம் வேலை வாங்கணும் அப்டிங்கற கனவு பகலிலும் வரும்,நான் என்னை அறியாம உறங்கிபோன பகல் நேரங்களில். செய்தித்தாள்களும்,வேலைவாய்ப்பு இணையதளங்களும் தேய்ந்து போயின தேடி தேடி..
எப்படியாவது ஒரு நேர்முகத் தேர்வு நாளை இருப்பதை கண்டுபிடித்துவிடுவேன், இன்று இரவு உறங்காமல் படித்துகொண்டு இருப்பேன் பகல் கனவை நிஜமாக்க..விடிந்துவிடும், காலை 10 மணிக்கு இருக்கும் நேர்முகதேர்விற்கு 5 மணிக்கே எழுந்து குளித்துவிட்டு , புறப்பட்டு கண்ணாடி முன் நிற்கும் போது தான் மனசு தோத்துபோக முயற்சிக்கும்,
குழிவிழுந்த கன்னம், எழும்பும் சதையும் தோழர்களாய் சேர்ந்து ஒட்டி இருக்கும், அளவு அதிகமாக இருக்கும் மேலாடை, இடுப்புப்பட்டையால் இருக்கமாய் கட்டி இருக்கும் கீழாடை,காலணிபூச்சு போடப்படாத காலணி இவைகளை பார்த்து. திறமை இருக்கு தைரியமாய்இரு என்று சொல்லும். பேருந்தில் ஏறும்போது இருந்த மேலாடையின் நிறம், இறங்கும்போது வேறாக இருக்கும். குறைந்தது 20 பேரிடமாவது திட்டு வாங்கிக்கொண்டு தான் நேர்முகத்தேர்வு இடத்தை அடைவேன்.
அடைந்ததும் என்ன நடக்கும் என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்..
காத்திருக்கவும் கணத்தோடு....
இரண்டாம் பாகம் இணைப்பு இங்கே : -
இரண்டாம் பாகம்
26 comments:
வலிக்கிறது... தம்பி! மிகைப்பட்ட நமது இளைஞர்களுக்கு ஏற்படும் அனுபம்தான்! அடுத்த பதிவுக்காய் காத்திருக்கிறேன்...திக். திக்.திக் என்று!
:)... nantri anna, kandeeppa innum nirayaa aluthamaana unmaikaloada vara poakuthu ii part..... neenka wait panna vaikreenkalaa, naankalum wait panna vaippoam
" இதுவும் கடந்து போம். "
இது தான் என்னுடைய ஒவ்வொரு பிரச்னையிலும் எனக்கு நான் சொல்லிக் கொள்வது. வலியைத் தாங்கும் வலு கிடைக்கும்.
neenka solrathu mika sariyaana oantru....kandeeppa.....romba nanri for your comments "naai kutty manasu", sorry unka name thereiyalanka
//படித்த கடனை அடைக்க பட்டணம் கிளம்பிய எனக்கு தெரியாது நான்
உலகத்தை இனி தான் படிக்க போகிறேன் என்று//
அனுபவம், நல்லதோர் ஆசான்.
nantrinka appa....unmainka appa ,anupavam nijamaa oru best teacher thaan....nantri for ur commentsnkappa
வலிகளை வெற்றிப்படிகளாக்குவோம் விஜய்...
உறுதியோடு போராடுவோம்... நாளை மட்டும் அல்ல, ஒவ்வொரு நொடியும் நமதே!!
ஆல் த பெஸ்ட் நண்பா..கற்பனைத்திறன் மனிதனின் மிகப்பெரிய ஆறுதல்...அந்த இருபது பேறும் உங்களை வாழ்த்தி அனுப்புவதாய் நினைத்துகொள்ளுங்கள்.
வெற்றி உங்களுக்கே,
நட்புடன்,
ரங்கன்
போராடு!போராடு!
போராட்டத்தில் தான் ஞானம் பிறக்கும்
போரகளத்தில் தான் கீதை பிறந்தது!
வெற்றி நிச்சயம்!துவல வேண்டாம் தம்பி!
நல்ல எழுத்துநடை!
அனுபவங்களைச் சொல்லட்டும்!
படிக்கும்போது மனதை என்னவோ செய்கிறது...;(
அனுபவங்களின் வேதனையும் சோகமும் உங்கள் பதிவில் இழையோடுகிறது. மிகச்சிறு வயதில் நிறைய நீங்கள் அனுபவப்பட்டிருக்கலாம். ஆனால் அனுபவங்கள்தான் மனிதனை நல்ல முறையில் செதுக்குகிறது. இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. அதற்குள் அனுபவங்களின் சோகம் உங்களைக் கீழே அமிழ்த்திவிட ஒருபோதும் இடம் கொடுத்து விடாதீர்கள். இன்றைய அனுபவங்களும் வலிகளும் எதிர்கால பிரகாசமான வாழ்க்கைக்கு நிச்சயம் ஆதர்ச தூண்டுகோல்கள்தான்!!
ஊக்கமதை கைவிடேல்!!
தூரமல்ல தொட்டுவிடும் தூரம் தான்.
நன்றி ரங்கன்...அந்த 20 பேரும் வாழ்த்தி அனுப்புவதாக நினைத்து தான் நேர்முகத்தேர்வுக்கு சென்றேன்...
நன்றி கனிமொழி தோழி....நிஜமாய் எறும்பு ஊற கல்லும் தேயும்..
நன்றிங்க மகராஜன்....நான் நீங்கள் சொல்வது போல் துவளாமல் தான் போராடினேன் வெற்றிக்காக.....
நன்றிங்க அண்ணாமலை ....கண்டிப்பாக தொடுருகிறேன்....
நன்றிங்க பிரியா.....எழுத்து என்றால் ஏதாவது செய்ய (புரட்சி,ஏக்கம்,சந்தோசம்......)வேண்டும், சரிங்களா நான் சொல்றது ?
நன்றிங்க மனோ சாமிநாதன் அம்மா , உங்களை போல் பெரியவங்க ஆசீர்வாதம் எனக்கு எப்பவும் தேவை...
நன்றி பிரின்ஸ்....நிஜமாய் ,உங்களுக்காய் தளராமல் தேடுவேன் வாழ்க்கையை
அருமையான வரிகள். பல விசயங்கள் என் கடந்த காலத்தை ஞாபகபடுத்தின. உங்கள் அளவு கஷ்டப்படவில்லை.
ஆனாலும் கலைவாணர் அரங்கம் - திருவல்லிக்கேணி. மறக்க முடியுமா ?
நன்றி கார்த்திக், நிஜமா சென்னைக்கு புதுசா வர யாரும் கலைவானர் அரங்கம், திருவல்லிக்கேணிய மறக்க முடியாது
thala miga arumai..
valigalai valikal aakuvom..!!
நன்றி கார்த்திக் , நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை இங்கே சந்திப்பதில் பெருமிதம் ....
mika arumai vijay. You r highly talented. Keep going.
நன்றி சுரேஷ் அவர்களே, ஐயோ நீங்க நினைக்கிற அளவுக்கு நான் பெரிய திறமைசாளியானு தெரியாது ,ஆனா உள்ளத்துல இருக்றதா அழகா சொல்ல தெரியும் ,அவ்வளவு தான் ..நன்றி உங்கள் உற்சாகத்திற்கு
Post a Comment