Thursday, July 8, 2010

வாழ்க்கை(வலி)ன்னா என்ன? -- வங்கியின் வாசலில் பிச்சைக்காரனாய்...(பாகம் - 5 )நன்றிங்க ஐந்தாம் பாகத்தை படிக்க வந்ததிற்கு...


முதல் பாகம் இணைப்பு இங்கே : -
முதல் பாகம்

இரண்டாம் பாகம் இணைப்பு இங்கே : -
இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம் இணைப்பு இங்கே : -
மூன்றாம் பாகம்

நான்காம் பாகம் இணைப்பு இங்கே : -
நான்காம் பாகம்

எப்பொழுது தூங்கினேன் என்று தெரியவில்லைங்க, 5 மணிக்கெல்லாம் எழுந்துவிட்டேன் , எழும்பொழுதே துக்கம் என் கன்னத்தோடு ஒட்டியிருந்தது, வாழ வந்தாச்சு வாழ்ந்து தான் ஆகணும், சிங்கம் இருக்கும் கூண்டில் தள்ளப்பட்டத்துக்கு அப்புறம் எதுக்கு சிந்தனை, பலம் இருக்கும் வரை மோதி உயிரை காப்பாத்த வேண்டியது தானே. அதை தான் நானும் பண்ணினேன், யாரும் வருவதிற்கு முன்னமே என் "கால்கள்" அந்த அலுவலகத்தை சுற்றி நடந்துகொண்டிருந்தது, "கண்கள்" யாராவது வருகிறார்களா என்று பாதையை நோக்கிக்கொண்டிருந்தது , "மூளை",பணம் கிடைக்குமா என கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தது , "மனது" அப்பா,அம்மா வருந்திக்கொண்டு இருப்பார்களோ என ஏங்கிக்கொண்டிருந்தது,

நேரம் மாற மாற ஏமாந்தவர்களின் கூட்டம் அதிகமாகியது, நீண்ட நேரப்போராட்டத்திற்கு பிறகு, நிறுவனத்தின் உரிமையாளரை பார்க்க முடிந்தது, கூடி நின்ற கூட்டங்களின் கோபத்தைப்பார்த்ததும், பணம் தருவதாய் ஒப்புக்கொண்டார், ஆனால் நாங்கள் விடுவதாய் இல்லை, "எப்போது" என்ற கேள்வியையும், "எப்படி" நம்புவது என்ற கேள்வியையும் முன்வைத்த பிறகு , நிறுவனத்தின் உருவம் பதித்த தாளில் எப்பொழுது தருகிறேன், என்ற விவரத்துடன் கையொப்பமிட்டு கொடுத்தார்..

ஏதோ பணம் வந்த திருப்தி எங்களுக்கு வந்திருந்தது, வாங்கிக்கொண்டு கிடைச்சுருமா?, ஓடாம இருப்பானா என 1000 கேள்விகள் நெஞ்சை சுட்டுக்கொண்டேயிருந்தன, அந்த தாள் அவ்வப்பொழுது மருந்து போட்டுக்கொண்டே இருந்தது சுடப்பட்ட என் நெஞ்சிற்கு.


வாரங்கள் கடந்து மாதம் ஆகின, பணத்தைத்திருப்பி தருவதாய் சொல்லியிருந்த தேதியும் வந்தது, எப்பொழுது எழுந்தேன் என்று தெரியாது , ஆனால் நான் 5 மணிக்கெல்லாம் நிறுவனத்தின் வாசலில் இருந்தேன், மணி 9 ஐ நெருங்கியதும் நிறுவனத்தின் காவலாளி வந்திருந்தார், மன்னித்துக்கொள் என்று அவர் ஆரம்பித்ததும் கண்கலங்க ஆரம்பித்தது, அதற்குள் அவர், இன்னைக்கு பணம் கொடுப்பதாய் அறிவிக்கப்பட்ட எல்லோரையும் நாளைக்கு வரச்சொல்லிவிட்டார்கள் என்று கூறினார்,

இல்லை என்று சொல்வதற்கு பதிலாக நாளை வா என்று கூறியது கொஞ்சம்,உயிரை மிச்சம் வைக்காமல் கொன்றதிற்கு பதில் வெறும் காயங்களுடன் வெட்டிச்சென்றது போலிருந்தது ..

வேலைத்தேடும் நேரத்தில் இப்படி ஒரு பிரச்சனை நமக்கு தேவையா என்று மனசு சொல்லிக்கொண்டேயிருக்கும் ..எப்படியோ விடிந்தது , சரியான நேரத்தில் அங்கே இருந்தேன், அந்த நாளில் 100 பேருக்கு மட்டும் கொடுப்பதாய் அறிவித்திருந்தார்கள், சிறிது நேரத்தில் நிறுவன உரிமையாளர் வந்தார், சிறிய உருவம், சரியாக சாப்பிடவில்லை, இப்படி நான் இருந்தாலும் , என் பெற்றோர்கள் கஷ்டப்பட்ட பணம் பரிபோகக்கூடாது என்று கூட்டத்தில் முண்டியடித்து 4 ஆம் இடத்தைப்பிடித்தேன், ஒவ்வொருவராய் அறைக்குள் அழைக்கப்பட்டு காசோலை வழங்கப்பட்டது, அதை நான் வாங்கிய நிமிடத்தில், கலங்கிய கண்களை துடைத்துக்கொண்டு நன்றி தெரிவித்துவிட்டு வெளியேறினேன்...

அப்பொழுது யாரென்றே தெரியாத ஒரு நண்பர் என்னை அழைத்து சீக்கிரம் வங்கிக்கணக்கு ஆரம்பித்து காசோலையை உன் கணக்கில் போட்டுவிடு, ஒரு வேலை நிறுவனத்தின் கணக்கில் பணம் குறைவாகக்கூட இருக்கலாம் என்றார்...

சொல்லி முடிப்பதற்குள் வேகமாகிவிட்டேன், நான் தங்கியிருந்த அறைக்கு கூட செல்லவில்லை, ஒவ்வொரு வங்கியின் படியை மிதித்த அடுத்த சில நிமிடங்களில் ,சுவற்றில் எறியப்பட்ட பந்தினை போல் எறியப்பட்டு இருப்பேன்,நிரந்திர இருப்பிட முகவரி சான்றிதழை அளிக்க வேண்டும் என்ற காரணத்தினால் துப்பி எறியப்பட்டேன், அனைத்து வங்கிகளிலும் சொல்லி வைத்தாற்போல். ஒரே ஒரு வங்கியில் மட்டும், இந்த வங்கியில் கணக்கு வைத்து இருக்கும் பிரபலமான ஒருவர் கையொப்பமிட்ட இருப்பிட சான்றிதல் இருந்தால் வங்கிக்கணக்கை துவக்கி தருகிறோம் என்றார்,

யாரைத்தேடுவது , யாரைப்பிடிப்பது என்று தெரியாமல் வங்கியின் வாசலில் அமர்ந்து அழ ஆரம்பித்தது இன்னும் இதயத்தைக்கலங்கச்செய்யும்.நண்பனிடம் பென்சில் வாங்கவே பல நூறு முறை யோசித்து விட்டு, கடைசியில் கடன் வாங்க பிடிக்காமல் ஆசிரியரிடமே அடி வாங்கிக்கொள்வது மேல் என்று செல்பவன் நான், இப்பொழுது யாரை, எங்கே கேட்பது எனக்கு உதவி செய் என்று, முதல் முறையாய் மனசாட்சி சொல்வதை கேட்க மறுத்துவிட்டு வங்கிக்கு வரும் சிலபேரிடம் கெஞ்சிப்பார்த்தேன், விவரத்தை கூறியும் பார்த்தேன், ஒருவரும் உதவ முன்வரவில்லை, உண்ண வேண்டும் என்ற ஒன்றே எனக்கு மறந்து போயிருந்தது.

மாலையில் எனது அறைக்குத்திரும்பினேன், கோவிந்தராஜ் என்ற ஒரு அண்ணன் அங்கே தங்கியிருந்தார், நிலைமையறிந்த அவர் எனக்குத்தெரிந்த ஒருவர் இருக்கிறார் என்று என்னை அழைத்துச்சென்று , நான் அவரிடம் ஓட்டுனராக வேலை செய்கிறேன் என்றும், இந்த விலாசத்தில் தான் தங்கியுள்ளான் என்றும் ஒரு கடிதம் எழுதி கையொப்பமிட்டு கொடுத்தார்,

எப்படியோ கணக்கை ஆரம்பித்து காசோலையையும் கணக்கில் போட்டுவிட்டேன், இன்னும் 5 நாள் கழித்து வாருங்கள் என்று சொன்னார்கள். இந்த 5 நாளும் காலையில் 2 தேனீர் , மதியம் 3 தேனீர் , இரவு 2 பரோட்டா என்று நகர்ந்தது... உறங்கும் பொழுது ரம்பா, சிம்ரன்லாம் கனவுல வரவேண்டிய வயசுங்க, ஆனா வேலை கிடைக்குற மாதிரியும், நேர்முகத்தேர்வில் தோற்கிற மாதிரியும், ஜெயிக்கிற மாதிரியும் காண்கிற கனவுல , இந்த ஐந்து நாட்களில் பணம் கிடைக்குற மாதிரியும், கிடைக்காத மாதிரியும் சேர்ந்துகிடுசுங்க .இரவுளையும் என்னைச்சுத்தி அவ்வளவு வெளிச்சமுங்க, கண்ணை இருக்கிமூடித்தூங்கினா கூட தோல்வியும், ஏமாற்றமும் துருத்துசுங்க கனவா வந்து.

அவர்கள் சொன்ன அந்த நாளில் முதல் ஆளாய் வங்கியின் வாசலில் நின்றேன், வங்கியும் திறக்கப்பட்டது, ஓடி விசாரித்தேன், உங்கள் கணக்கில் 10,000 வந்துவிட்டது என்றார்கள்... நிச்சயமாய் அந்த கணம் உணர்ந்த சந்தோசம் , நான் கல்லூரியில் 96% எடுத்து முதல் மாணவனாய், மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தை பிடித்து, மாநில அளவில் நான்காம் இடத்தை பிடித்து, செய்தித்தாளில் எனது பெயரை அப்பா எனது தெருவில் உள்ளவர்களிடம் காட்டிய பொழுது இருந்ததை விட மிகப்பெரிய சந்தோசமாய் இருந்தது..

இதைப்படிக்கிற எத்தனைப்பேரால் இந்த வழிய புரிஞ்சுக்க முடியும்னு தெரியல, என்னை மாதிரி லட்சக்கணக்கில் இந்த சென்னையை தினமும் சுத்திசுத்தி வராங்க.உயிரை பணயம் வைத்து பனை மரத்தில்ஏரி, பதநீர்இறக்கி சம்பாதித்த பணம், காலை 8 மணியில் இருந்து 4 மணி வரை வெய்யலில் கலைவெட்டி அம்மா சம்பாதித்த பணம் என்னை விட்டுப்போகுல, என் கையில் தான் இருக்கு, பணத்தை எடுத்துக்கிட்டு கிளம்பிட்டேன் என் சொந்த மண்ணுக்கு,

ஏமாறவில்லை நான் அப்டிங்கற ஒரு சின்ன திமிரோட என் சொந்தமண்ணில கால் எடுத்துவைச்சேன், வீட்டுக்குப்போனதும் முதல் வேலையா பணத்தை எடுத்து அம்மா கையில் கொடுத்ததும் கொஞ்சம் கண் கலங்கிட்டேன், என் அம்மா பக்கத்து வீட்டு அக்காகிட்ட சொன்னங்க " பையன் இந்த காச வாங்கிறதுக்காக சாப்பிடமா கூட இருந்து இருக்கான் போல, காசு போனா கூட பரவாயில்லை, இப்படிப்பாவமாய் வந்து இருக்கானேன்னு" அழுதாங்க..

அடப்போங்க, அப்பா, அம்மா பாசத்த அடிச்சுக்க இந்த உலகத்துல எதுவுமே இல்லைன்னு மனசுல ஆழமா பதிஞ்சுபோய்டுச்சுங்க அந்த நேரத்துல.அன்று இரவே சென்னைத்திரும்ப முடிவு செய்துவிட்டேன், இரவு ஆனதும் பையைத்தூக்கிக்கொண்டு கிளம்பும்பொழுது ,அம்மா அழுதுகொண்டே இன்னும் ஒரு 2 வாரம் இருந்து நல்லா சாப்பிடுட்டு அப்புறம் போயி தேடுடா என்று சொன்னாங்க, அப்பாவும் பக்கத்துல நின்னுகிட்டு மெதுவா போலாம் ஒன்னும் அவசரம் இல்லைன்னு சொன்னாங்க,

ஆனா நான் இப்படி ஒரு வார்த்தை சொல்வேன், அவுங்கள அழ வைப்பேன்னு அவுங்க கனவுல கூட நினைச்சு இருக்க மாட்டங்க, அப்படி என்ன சொல்லிவிட்டு சென்னைக்கு வந்தேன்?..

ஆறாம் பாகம் இணைப்பு இங்கே : -
ஆறாம் பாகம்

                                                                                         
                                             

34 comments:

dheva said...

//யாரை தேடுவது , யாரை பிடிப்பது என்று தெரியாமல் வங்கியின் வாசலில் அமர்ந்து அழ ஆரம்பித்தது இன்னும் இதயத்தை கலங்க செய்யும்.நண்பனிடம் பென்சில் வாங்கவே பல நூறு முறை யோசித்து விட்டு, கடைசியில் கடன் வாங்க பிடிக்காமல் ஆசிரியரிடமே அடி வாங்கி கொள்வது மேல் என்று செல்பவன் நான்,//

நிறைய சமயங்களில் நானும் இப்படி இருந்ததுண்டு தம்பி....!

பணம் கிடைத்தது ரொம்ப சந்தோசமா இருக்குப்பா! ரொம்ப அருமையான ஒரு அனுபவமா இருக்குப்பா ...படிக்க ..படிக்க... அலுக்கவே..இல்லை... தம்பி..! வாழ்த்துக்கள்!


keep Rocking... very badly waiting for the next episode.........!

ஜீவன்பென்னி said...

அண்ணனை வரிக்கு வரி வழிமொழிகிறேன்.

Chandrasekeran S said...

ஹாய் விஜய்!... நீங்கள் நெடுங்காலம் அனுபவித்த வலிகளையும் கஷ்டங்களையும்
ஐந்து நிமிடங்களுக்குள் எனக்கு உணர்த்திவிட்டது உங்கள் எழுத்துக்கள்.....
உங்கள் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்......

-- உங்கள் புது ரசிகன் சந்துரு....

சிவராஜன் said...

அடபோங்க, அப்பா , அம்மா பாசத்த அடிச்சுக்க இந்த உலகத்துல எதுவுமே இல்லைன்னு மனசுல ஆழமா பதிஞ்சுபோய்டுச்சுங்க அந்த நேரத்துல.

arumaiyaan pathivu vijay , athudu enna nadanthathunu therinchukka avaloda kathirukken ....

Wilson said...

படிக்கும் போதே என் கண்களில் கண்ணீர் வழிகிறது. பெற்றோர் கஷ்டம் உணர்ந்த மகன், மகன் மனதை புரிந்த பெற்றோர், நீ குடுத்து வைத்தவன் விஜய். பெயருக்கேற்ப்ப பல வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துக்கள்!!!

சௌந்தர் said...

சிங்கம் இருக்கும் கூண்டில் தள்ளப்பட்டத்துக்கு அப்புறம் எதுக்கு சிந்தனை,/ இந்த வரியை நான் மறக்க மாட்டேன்.

இந்த மன தைரியம் தான் உங்களை வாழ்கையில் இந்த அளவு முன்னேற வைத்துள்ளது. இன்னும் முன்னேற இந்த அன்பு தம்பியின் வாழ்த்துகள்...

விஜய் said...

மிக்க நன்றிங்க தேவா அண்ணா ,

பணம் கிடைச்சுடுச்சுன்னு சந்தோஷ படுறீங்க பார்த்தீங்களா ,அந்த அழகான குணம் தான் அண்ணா உங்ககிட்ட என்னை கொண்டு வந்து சேர்த்து இருக்கு, அழகா எப்படி நுணுக்கமான உணர்வுகளை பதிவு செய்வது எப்படி என்று உங்களிடமிருந்து கன்று கொடுத்திருக்கிறது ....மிக்க நன்றி அண்ணா என் பதிவை பற்றிய உங்க கருத்துக்கு

விஜய் said...

மிக்க நன்றிங்க ஜீவன்பென்னி ,

உங்களை போன்றோரின் கருத்துக்கள் தான் என்னை இன்னும் அழகானாதாய் எழுத தூண்டும்

மிக்க நன்றி ஜீவன்பென்னி என் பதிவை பற்றிய உங்கள் கருத்துக்கு

விஜய் said...

மிக்க நன்றி சந்துரு ,

உண்மை தான் நெடுங்காலம் அனுபவித்ததை சுருக்கமாய் சொல்லிருக்கேன், பாதி படிச்சுட்டு யாரும் ஓடி விடக்கூடாது என்பதற்காக தான் ...

மிக்க நன்றி சந்துரு என் பதிவை பற்றிய உங்கள் கருத்துக்கு

விஜய் said...

மிக்க நன்றி சிவராஜன் ,

என் பதிவை படித்து உங்கள் கருத்தை தெரிவித்தற்கு , என் எழுத்துக்களை வாசிக்க அடுத்த பதிவு வரை காத்து இருப்பதற்கும்
மிக்க நன்றி சிவராஜன்

மிக்க நன்றி சிவராஜன் என் பதிவை பற்றிய உங்கள் கருத்துக்கு

விஜய் said...

மிக்க நன்றி வில்சன்,

எனது பெற்றோர்கள் கொடுத்து வைத்தவர்களா என்று சரியாக தெரியாது, அனால் நான் கொடுத்து வைத்தவன் என்று ஆணித்தரமாய் அடித்து சொல்ல முடியும் வில்சன் ...

நான் மேன்மேலும் வெற்றிகளை குவிக்க வாழ்த்தும் உங்கள் அன்பு நெஞ்சத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள் வில்சன்..


மிக்க நன்றி வில்சன் என் பதிவை பற்றிய உங்கள் கருத்துக்கு

விஜய் said...

மிக்க நன்றி சௌந்தர் ,

உன் தன்னம்பிக்கைக்கு முன்னாடி நான் எல்லாம் ஒரு சின்ன தூசு சௌந்தர், நான் உன்னை நினைக்கறப்ப எல்லாம் நான் ஒன்னும் பெரிசா சாதிச்சுடுல அப்டின்னு தோனும் சௌந்தர்..

நான் நன்றாக வர வேண்டும் என்ற உங்கள் அன்பு உள்ளத்திற்கு மிக்க நன்றி சௌந்தர்

மிக்க நன்றி சௌந்தர் என் பதிவை பற்றிய உங்கள் கருத்துக்கு

Jeyamaran said...

*/அவர்கள் சொன்ன அந்த நாளில் முதல் ஆளாய் வங்கியின் வாசலில் நின்றேன், வங்கியும் திறக்கப்பட்டது, ஓடி விசாரித்தேன், உங்கள் கணக்கில் 10,000 வந்துவிட்டது என்றார்கள்... நிச்சயமாய் அந்த கணம் உணர்ந்த சந்தோசம் , நான் கல்லூரியில் 96% எடுத்து முதல் மாணவனாய், மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தை பிடித்து, மாநில அளவில் நான்காம் இடத்தை பிடித்து, செய்தித்தாளில் எனது பெயரை அப்பா எனது தெருவில் உள்ளவர்களிடம் காட்டிய பொழுது இருந்ததை விட மிகப்பெரிய சந்தோசமாய் இருந்தது../*

அண்ணா 96 % சொல்லவே இல்ல அருமையான பதிவு மற்றும் அருமையான வரலாறு

நிலாமதி said...

உங்களின் தன்னம்பிக்கைக்கு என்பாராடுக்கள் கதையாக் சொல்கிறீர்கள் வாழ்கையில் அடி படுபோது இருக்கும் வலி .....
இருக்கிறதே , அதை பட்டவங்களுக்கு தான் புரியும்.....தொடருங்கள். அப்படியே அங்கு ஓட்டும் போடாச்சு.

seemangani said...

,//அம்மா அழுதுகொண்டே இன்னும் ஒரு 2 வாரம் இருந்து நல்லா சாப்பிடுட்டு அப்புறம் போயி தேடுடா என்று சொன்னாங்க, அப்பாவும் பக்கத்துல நின்னுகிட்டு மெதுவா போலாம் ஒன்னும் அவசரம் இல்லைன்னு சொன்னாங்க,///

அருமையான பெற்றோர்களுக்கு பிள்ளையாய் விஜய்...வாழ்த்துகள் மேலும் ஆவலாய் நான்...அவசரமாய் தொடருங்கள்...வாழ்த்துகள் விஜய்...

வெறும்பய said...

உங்களின் தன்னம்பிக்கைக்கு என்பாராடுக்கள்

Anonymous said...

Hai Vijay,

My eyes are filled with tears. My wishes for u to reach higher and higher.

Jayanthi

விஜய் said...

மிக்க நன்றி ஜெயராமன் தம்பி

ஆமா தம்பி , ரொம்ப நன்றி இந்த பதிவை பற்றிய உன் கருத்துகளுக்கு, நிச்சயம் சீக்கிரம் தொடுருகிறேன் அடுத்த பதிவை விரைவில்.. உங்கள் காதலை பற்றிய கவிதைகள் மிக அருமையாக இருந்தது

மிக்க நன்றி தம்பி , மீண்டு வருக

விஜய் said...

மிக்க நன்றி நிலாமதி அக்கா,


கண்டிப்பா அக்கா, வலி தான் நிச்சயம் வரலாறு படைக்கும், உங்கள் தம்பி நிச்சயம் பெரிய ஆளா வருவான், உங்கள் பாசத்திற்கு மிக்க நன்றி ..என்னுடைய பதிவுகளை தொடர்ந்து படித்து கருத்து தெரிவிப்பதற்கு உங்களுக்கு மிக்க நன்றி அக்க

பாசமுடன் உங்க தம்பி

விஜய் said...

மிக்க நன்றிங்க "seemangani "

உங்களை போன்ற சிறந்த எழுத்தாளர்கள் ஊக்குவிப்பதன் மூலம் நிச்சயம் என்னிடமிருந்து தரமான படைப்புகளை வருங்காலத்தில் எதிர்பார்க்கலாம் ,

மிக்க நன்றி seemangani அவர்களே உங்க கருத்துகளை பின்னூட்டமாய் அனுப்பியதற்கு

விஜய் said...

மிக்க நன்றிங்க "ஸ்ரீ கிருஷ்ணா ஜெயந்த் (வெறும்பய ) "

நிச்சயம் சாதிப்போம்,உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி

மிக்க நன்றி ஸ்ரீ கிருஷ்ணா ஜெயந்த் (வெறும்பய ) உங்க கருத்துகளை பின்னூட்டமாய் அனுப்பியதற்கு

விஜய் said...

மிக்க நன்றிங்க "Jayanthi"

நிச்சயம் சாதிப்போம்,

மிக்க நன்றி Jayanthi உங்க கருத்துகளை பின்னூட்டமாய் அனுப்பியதற்கு

கண்ணகி said...

விஜய்...அப்படியே கலங்க்ப்போய்விட்டேன்..

உயிரை பணயம் வைத்து பனை மரத்தில்ஏரி, பதநீர்இறக்கி சம்பாதித்த பணம், காலை 8 மணியில் இருந்து 4 மணி வரை வெய்யலில் கலைவெட்டி அம்மா சம்பாதித்த பணம் என்னை விட்டுப்போகுல, என் கையில் தான் இருக்கு,

பெற்றொரின் வ்லி தெரிந்த பிள்ளை...எந்தநாளும் தோற்காது...மேன்மேலும் நீ வளரத்தான் பொகிறாய்..வாழ்த்துக்கள்...

விஜய் said...

வணக்கம் விஜய். நான் ஏற்கனவே ஒரு முறை உங்கள் தளத்திற்கு வந்துள்ளேன். ஆனால் சரியாக படிக்கவில்லை. காலையில்தான் நான் வங்கியில் கடன் வசதி கேட்டு சென்று வந்தேன். வங்கி என்று தலைப்பை பார்த்ததும் உள்ளே வந்தேன். தங்களின் இந்த இடுகை ரொம்பவே மனதை பாதித்து விட்டது.சிலரை பார்த்ததும் எரிச்சலாக வரும். ஏனென்றhல் அவர்களின் பெற்றhரின் நிலையறியாது தங்களை பகட்டாக காட்டிக் கொள்வார்கள். எதைப்பற்றியும் கவலையில்லை அவர்களுக்கு. பெற்றேhரின் நிலையறிந்து நடப்பவர்கள் சிலரே. தாங்கள் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வர எனது மானமார்ந்த நல்வாழ்த்துகள்.

விஜய் said...

மிக்க நன்றிங்க கண்ணகி அவர்களே ,

அடுத்தவர்கள் வலிய பார்த்து கண்கலங்குரீங்க பார்த்தீங்களா , இந்த மனிதம் தான் கண்ணகி அவர்களே ,நம் தேசத்து மக்களுக்கு வரணும்..நிச்சயம் வரும் நாளை எதிர்நோக்கி கொண்டு இருக்கிறேன் ...

ரொம்ப நன்றிங்க உங்கள் பின்னூட்டதிற்கு..
மிக்க நன்றி மீண்டும் வருக ...

விஜய் said...

மிக்க நன்றிங்க விஜய்

நிஜமாய் இந்த நிலை இன்னும் பல இடங்களில் இருக்கத்தான் செய்கிறது, ஏகப்பட்ட விதிமுறைகள், பணம் கையில் கிடைப்பதற்குள் தேவைகள் முடிந்துபோன எத்தனையோ சம்பவங்கள் இருக்கிறது விஜய்,கொஞ்சம் விதிமுறைகளை தளர்த்திக்கொள்ளலாம் இந்த வங்கிகள்

மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் , அழகான கருத்துக்கும் ,
நன்றி மீண்டும் வருக...

ப.செல்வக்குமார் said...

///இந்த 5 நாளும் காலையில் 2 தேனீர் , மதியம் 3 தேனீர் , இரவு 2 பரோட்டா என்று நகர்ந்தது...///

கண்கலங்குது அண்ணா...!!

///உறங்கும் பொழுது ரம்பா, சிம்ரன்லாம் கனவுல வரவேண்டிய வயசுங்க///
அண்ணா ரம்பா,சிம்ரன்லாம் பழசு, அசின் , திரிஷா தான் புதுசு..!(மொக்க போட்டதுக்கு மன்னிச்சுருங்க)

//நிச்சயமாய் அந்த கணம் உணர்ந்த சந்தோசம் , நான் கல்லூரியில் 96% எடுத்து முதல் மாணவனாய், மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தை பிடித்து, மாநில அளவில் நான்காம் இடத்தை பிடித்து, செய்தித்தாளில் எனது பெயரை அப்பா எனது தெருவில் உள்ளவர்களிடம் காட்டிய பொழுது இருந்ததை விட மிகப்பெரிய சந்தோசமாய் இருந்தது..///
உங்கள் வலி இதுல தெரியுது..!

///" பையன் இந்த காச வாங்கிறதுக்காக சாப்பிடமா கூட இருந்து இருக்கான் போல, காசு போனா கூட பரவாயில்லை, இப்படிப்பாவமாய் வந்து இருக்கானேன்னு" அழுதாங்க..///
சத்தியமா அழவச்சிட்டீங்க அண்ணா...!!

///ஆனா நான் இப்படி ஒரு வார்த்தை சொல்வேன், அவுங்கள அழ வைப்பேன்னு அவுங்க கனவுல கூட நினைச்சு இருக்க மாட்டங்க, அப்படி என்ன சொல்லிவிட்டு சென்னைக்கு வந்தேன்?..///
சத்தியமா அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன் ... சீக்கிரமா எழுதுங்கண்ணா ....

அமைதி அப்பா said...

இளைஞர்கள் வாழ்க்கையை புரிந்துகொள்ள உதவும் தொடர்.
நன்றி.

விஜய் said...

மிக்க நன்றி செல்வா தம்பி

நிச்சயம் அடுத்த பதிவை போட்டுடலாம் சீக்கிரமே தம்பி, உங்கள் விருப்பம் தானே முக்கியம் என்னை போல கத்துக்குட்டி எழுத்தாளனக்கு...

காத்திருக்கவும், விரைவில் வருகிறேன்
மிக்க நன்றி உன் பின்னூட்டத்திற்கு தம்பி

விஜய் said...

மிக்க நன்றி அமைதி அப்பா அவர்களே,

நல்ல தொடர் என்ற ஒரு நல்ல அங்கீகாரத்தை என் எழுத்துக்கும், என் வாழ்க்கைக்கும் கொடுத்தற்கு மிக்க நன்றி அமைதி அப்பா அவர்களே...

மேலும் என் வாழ்க்கை பயணத்தை ஒரு தொடராக தொடர உங்களை போன்ற பெரியோரின் ஆசிர்வாதம் தேவை , எனக்கு கிடைத்தற்கு மிக்க மகிழ்ச்சி ....


மிக்க நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு

ரமேஷ் said...

உங்களுடைய அனுபவமும் என்னுடைய அனுபவமும் ரொம்ப ஒத்துப்போகுது விஜய்..ரொம்ப நல்லா எழுதறீங்க..வலிமையான நடையா இருக்கு..வாழ்த்துக்கள்..அடுத்த பகுதி எப்ப எழுதப்போறீங்க..காத்திட்டிருக்கேன்..

விஜய் said...

மிக்க நன்றி அன்பின் ரமேஷ் ,

உங்களோட மட்டும் இல்ல ரமேஷ் இன்னும் நிறையா பேரோட வாழ்க்கைல இது ஒத்து போகும்னு நினைக்கிறேன் ,

இன்னும் கூட தான் ஆயிரக்கணக்குல நம்மள மாதிரி சென்னைல வேலை தேடுறாங்க தோழரே...சரி முட்டி மோதினால் தன வாழ்க்கையின் ருசியை அறிய முடியும்..
நான் சொல்றது சரிதானே தோழரே ....

ரொம்ப காக்க வைக்க மாட்டேன் தோழரே, விரைவில் எழுதுகிறேன் ...

மிக்க நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு தோழரே

ரமேஷ் said...

நீங்க சேலமா விஜய். நானும் சேலம்தான்...4 ரோடு பக்கத்துல வீடு...நீங்க எந்த ஏரியா...

விஜய் said...

ஒ அப்படீங்களா ?. நான் சேலம் பக்கத்துல , நாமக்கல் மாவட்டம், திருசெங்கோடு ...

Post a Comment