Friday, July 9, 2010

விரல் பிடித்து வலைதளத்தில் கால் ஊன்றி நடக்க செய்த தேவா அண்ணாவுக்கு தம்பிகளின் வாழ்த்துக்கள்
தேவா அண்ணா..................

இவர் தான் எழுத்து எனும் என் கரம் பிடித்து , பதிவுலகம் என்னும் இன்னொரு கிரகத்தை காட்டியவர் , என்னைப்போல இன்னும் பல தம்பிகளுக்கு கரம் கொடுத்து கற்றுக்கொடுத்தவர். முகம் தெரியா எங்களை ,விலைமதிக்க முடியா வாசகர்களாகிய உங்களுக்கு அறிமுகப்படுத்தியவர், உங்களிடம் எங்களை கொண்டு வந்து சேர்த்தியவர்.

நேர்மையின் ஒப்பற்ற பிரதிபலிப்பாய், நம் படைப்பு சரியாக இருக்கிறது என்றால் , முதல் ஆளாய் நின்று நன்று என்று சொல்லி பாராட்டுவதும், தவறாக இருந்தால் திருத்த முயலச் சொல்லி அருகில் நிற்பதும் தேவா அண்ணாவின் கடமையாய் இருக்கும் எப்பொழுதும்..

இரண்டு வரி கவிதைகளை எழுதினோமா , போனோமா என்று இருந்தவன் நான், எழுத்து என்பது காதலைச் சொல்ல மட்டும் தான் என்று புரியாமல் கிடந்தவன் நான், எழுத்து என்பது எங்கு இருந்தோ, ஏதோ ஒரு மூலையில் இருந்து படிப்பவனையும் சுட்டெரிக்க வேண்டும்,உள்ளுக்குள் தீப்பிடித்து எரியச் செய்ய வேண்டும் , எழுத்துகளின் உச்சரிப்பில் தன்னை மறந்து கிடைக்க வேண்டும் வாசகன் என்றும்,

சாதிகளையும், தீண்டமையயும் அடித்து நொறுக்க நம் எழுத்து ஒரு பாலமாய் இருக்க வேண்டும்,படித்து முடித்துவிட்டு சென்ற பிறகும் அசைக்கமுடியா ஆணியை நடப்பட்டு இருக்க வேண்டும் என்று உணர்த்தியவர்..

20 வரிகளில் சொல்வதை நான்கே வார்த்தைகளில் நடப்பட்டு இருக்கவேண்டும், ஸ்டாலின், லெனின் ,போன்றோர்கள் மக்களை சென்றடைய அவர்கள் பயன்படுத்திய கூர்மையான ஆயுதங்கள் எழுத்தும் , பேச்சும் தான், அத்தகைய பெருமையுடைய எழுத்துக்கள் மிகவும் கூர்மையானதாய் இருக்க வேண்டும் எப்பொழுதெல்லாம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிக்குறோமோ அப்பொழுதெல்லாம்,

அதே எழுத்துக்கள் பூவை விட மென்மையானதாய் இருக்க வேண்டும் எப்பொழுதெல்லாம் அன்பையும், காதலையும் சொல்ல முயற்சிக்குறோமோ அப்பொழுதெல்லாம்,

அதே எழுத்துக்கள் அசுத்தமற்றதாய், மேன்மையானதாய் இருக்க வேண்டும் எப்பொழுதெல்லாம் ஒழுக்கத்தையும், கருத்துக்களையும் , நம் தேசத்து மக்களுக்கு புகட்ட முயற்சிக்குறோமோ அப்பொழுதெல்லாம்,

அதே எழுத்துக்கள் புரிந்துகொள்ள இலகுவானதாய் இருக்க வேண்டும் எப்பொழுதெல்லாம் ஆன்மா, தேடல், உயிர், கடவுள், இறப்பு, பிறப்பு இவைகளை பற்றி விளக்க முயற்சிக்குறோமோ அப்பொழுதெல்லாம் ,

இங்கே வலைத்தளத்தில் எழுதி போட்டுவிட்டு செல்லும் ஒவ்வொரு வார்த்தையும், வாசகனின் மனதில் பதிந்து இருக்க வேண்டும், முளைத்தும் இருக்க வேண்டும், வாசகனோட நின்றுவிடாத வரிகளாக இருக்கு வேண்டும், அவன் மனதில் விதைத்த வரிகள் முளைத்து வெளிவர வேண்டும், அதன் மனமும், கிளைகளும் ஒவ்வொரு அடிப்படை கல்வியரிவாளன், கல்வியரிவற்றவனையும் தொட வேண்டும், உண்மையை போதிக்க வேண்டும், விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் , சமூக கொடுமைக்கு எதிராய் தீபந்தந்தை சுற்றி எரிய வேண்டும் ,
அன்பை மலரச் செய்ய வேண்டும், பகுத்தறிவை புகட்ட வேண்டும், உலக நடப்புகளை அறியச்செய்ய வேண்டும்,

இப்படி தான் எழுத வேண்டும் என்று பதிவுலகில் கால் ஊன்றி நடை பயில கற்றுக்கொடுத்தவரக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் மற்றும் என்னை போல் கால் ஊன்றி நடை பயில தேவா அண்ணாவிடம் கற்றுக்கொண்ட தம்பிகளின் சார்பாகவும் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியதின் விளைவாக கீழே காணும் விருதை அவருக்கு அளிக்க உள்ளோம்..
நிச்சயம் அவரது எழுத்துக்கள் உங்களுக்குள் காதலையோ, விழிப்புணர்வையோ, புரிதலையோ , தாக்கத்தையோ ஏற்படுத்தி இருக்கும் என்பதில் எங்களுக்கு ஐயமில்லை...

அண்ணனின் எழுத்தை பார்த்து பிரமித்து நிற்கும் தம்பிகள்

சௌந்தர் (ரசிகன் )
ஜீவன் பென்னி (பதிவுகள் )
வில்சன் (தமிழ் தலைமகன் )
சிவராஜன் ராஜகோபால் (கொஞ்சம் புன்னகை செய்யுங்கள்..! )
வீரமணி (மனித மனங்களின் ஒரு அராய்ச்சி.. )
செல்வா (கோமாளி )
ஜெயந்த் (வெறும்பய)
ரமேஷ் (சிரிப்பு போலீஸ் )
யோகேஷ் (ஜில்தண்ணி)
விஜய் (விஜய் கவிதைகள்)


                                                                                         
                                             

30 comments:

வெறும்பய said...

மிக்க நன்றி சகோதரா...
என் சார்பாகவும் நீயே விருது கொடுத்தமைக்கு..

ஜீவன்பென்னி said...

Thanks Vijai. Ithu endrendrum thodarum bandam.

ப.செல்வக்குமார் said...

ரொம்ப சரியா சொன்னீங்க அண்ணா .. சத்தியமா தேவா அண்ணாவோட உதவி இல்லேன்னா என்னோட வலைப்பூ இந்த அளவுக்கு பிரபலம் ஆகிருக்காது. அவருக்கு என்னோட 50 வது பதிவுல இருக்கு ஒரு விருந்து.. உண்மையாவே அவருதான் என்னை கண்டுபிடிச்சு என்னோட பதிவுல முதல் முறையா பின்னோட்டம் போட்டிருந்தார்.. அதுக்கு அப்புறம் தான் எனக்கு அவர பத்தியே தெரியும் .. ஒரு பிரபல பதிவர் புதுபதிவர்களை அடையாளம் கண்டு அவர்களின் பதிவுகளை பிரபல படுத்தனும்னு நினைக்கிறது சத்தியமா அவரோட நல்லா மனச காட்டுது.. அவரோட தம்பியா இருக்கறதுல பெருமை படுறேன்.. நன்றி தேவா அண்ணா .. கண்டிப்பா விஜய் அண்ணாவுக்கும் நன்றி ..!!ரொம்ப சரியா சொன்னீங்க அண்ணா .. சத்தியமா தேவா அண்ணாவோட உதவி இல்லேன்னா என்னோட வலைப்பூ இந்த அளவுக்கு பிரபலம் ஆகிருக்காது. அவருக்கு என்னோட 50 வது பதிவுல இருக்கு ஒரு விருந்து.. உண்மையாவே அவருதான் என்னை கண்டுபிடிச்சு என்னோட பதிவுல முதல் முறையா பின்னோட்டம் போட்டிருந்தார்.. அதுக்கு அப்புறம் தான் எனக்கு அவர பத்தியே தெரியும் .. ஒரு பிரபல பதிவர் புதுபதிவர்களை அடையாளம் கண்டு அவர்களின் பதிவுகளை பிரபல படுத்தனும்னு நினைக்கிறது சத்தியமா அவரோட நல்லா மனச காட்டுது.. அவரோட தம்பியா இருக்கறதுல பெருமை படுறேன்.. நன்றி தேவா அண்ணா .. கண்டிப்பா விஜய் அண்ணாவுக்கும் நன்றி ..!!

ப.செல்வக்குமார் said...

///படிப்பவனையும் சுட்டெரிக்க வேண்டும்,உள்ளுக்குள் தீப்பிடித்து எரியச் செய்ய வேண்டும் ///

பாத்து எழுதுங்க , கம்ப்யூட்டர் எறிஞ்சிட போகுது ..

///அசைக்கமுடியா ஆணியை நடப்பட்டு இருக்க வேண்டும் ///

ஏற்கெனவே இருக்குற ஆணிவே புடுங்க முடியல , இது வேறைய ..??

/// எழுத்துக்கள் மிகவும் கூர்மையானதாய் இருக்க ///

பொத்துட்டு வந்திட போகுது ..

///அதே எழுத்துக்கள் அசுத்தமற்றதாய், மேன்மையானதாய் இருக்க வேண்டும்///

Dettol ஊத்தி கழுவுங்க ..

///சமூக கொடுமைக்கு எதிராய் தீபந்தந்தை சுற்றி எரிய வேண்டும் ,///

போலிஸ் புடிச்சிட போகுது ..

(மன்னிச்சுருங்க விஜய் அண்ணா ,, இது பழக்க தோசத்தால வந்திடுச்சு )

சௌந்தர் said...

தேவா அண்ணனின் அன்பு எனக்கு மிகவும் புடித்து இருக்கிறது.இன்னும் தேவா அண்ணன் பல விருதுகள் வாங்க வேண்டும்.

நான் எப்போது பதிவு போட்டாலும் எபோது தேவா அண்ணன் கமெண்ட் போடுவார் என்று காத்து இருப்பேன்.

அவரை பார்த்து தான் இன்னும் நல்ல கருத்து சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. தேவா அண்ணன் போல வரவேண்டும் என்று நினைக்கிறன். தேவா அண்ணனை எபோதும் மறக்க முடியாது.

Jeyamaran said...

ஹ்ம்ம் இவர்தான் warrior (போராளி ) என்று பெயர் வைத்துகொண்டு எல்லோரையும் தன்னுடைய எழுத்துகளால் அசரவைகிறார் அவர் உண்மையிலேயே போராளிதான் அனால் அவருடைய போர்கள் அவருடைய முந்தய பதிவுகளுடன் மட்டுமே போரிடும் என்பதால் நாம் பயப்படவேண்டாம்......

LK said...

arumai ,. sariyana nabaruku sariyaana viruthu and pathivu. vaalthukkal

தமிழ் அமுதன் said...

அருமை...! வாழ்த்துக்கள் தேவா...!;)

Wilson said...

வாழ்த்துக்கள் தேவா மாப்ஸ்!! சரியான நபர்க்கு சரியான நேரத்தில் விருது கொடுத்ததற்கு மிக்க நன்றி விஜய்

dheva said...

ஆணி ரொம்ப அதிகம் தம்பி...கலையில.. அதுதான் கொஞ்சம் லேட் என்ரீ....!
அன்பிற்கு எனது நன்றிகள்....! நீங்கள் கூறும் அளவிற்கு நான் எதுவும் செய்யவில்லை என்றாலும்....உன்னுடைய....மற்றும் சக தம்பிகள் நண்பர்களின் எழுத்தாற்றல் மிக வலிமையானது. சர்வ நிச்சயமாய் இந்த எழுத்துகள் எல்லாம் வெளிப்பட்டே ஆக வேண்டும்....

மீண்டும் மீண்டும் மீண்டும் உங்களின் அன்பிற்கு எனது நன்றிகள் தம்பி...!

வலையுலகம் என்பது ஒரு மாயா உலகம்...இதில் எழுதும் எழுத்துக்கள் எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்பா...தனிப்பட்ட முறையில் நம்மிடையே ஏற்பட்டுள்ல சினேகம்...பந்தம்...எப்போதும் மிக முக்கியம்.....பதிவுலகம் நம்மை இணைத்தது..... அதற்கு நன்றி செலுத்த...அற்புதமான எழுத்துக்கள் எரிமலையாய் வெடித்து சிதறட்டும் தம்பி......

சௌந்தர் (ரசிகன் )
ஜீவன் பென்னி (பதிவுகள் )
வில்சன் (தமிழ் தலைமகன் )
சிவராஜன் ராஜகோபால் (கொஞ்சம் புன்னகை செய்யுங்கள்..! )
வீரமணி (மனித மனங்களின் ஒரு அராய்ச்சி.. )
செல்வா (கோமாளி )
ஜெயந்த் (வெறும்பய)
விஜய் (விஜய் கவிதைகள்)

இணையம் தாண்டியும் இணையட்டும் இதயங்கள்....காலம் தாண்டியும் கடக்கட்டும் நமது உறவு.....!

Jey said...

நண்பர், தேவாவுக்கு என் வாழ்த்துக்கள்.

Riyas said...

correct... Dheva beat writer.

சிவராஜன் said...

ithai naan valimolikiren vijay, naan eluthiya udan muthal karuthai eppothum deva annanidam thaan kedpen , ani enakku rompa athikam enpathaal ivvalavu lata cmd poduren....

இராமசாமி கண்ணண் said...

good thing happend. Best Wishes dheva anna. keep rocking :-).

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நம்ம தேவா அண்ணன் பத்தி பேசும்போது என்னை விட்டுட்டியே தல...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

ரொம்ப லேட்டாத்தான் வந்துருக்கேன்

நான் ஒரு 20 பதிவுகள் எழுதிய பிறகு தான் அண்ணன் தேவாவுக்கு அறிமுகமானேன்

இருந்தும் என் அத்தனை பதிவுகளையும் சலிக்காமல் படித்துவிட்டு என் எழுத்துக்களை மெருகூட்ட தன் கருத்துக்களையும்,ஐடியாக்களையும் சொல்லிக் கொடுத்தவர்

நம்மை இனைத்த இந்த பதிவுலகத்திற்கு நன்றிகள் ஒரு கோடி

அண்ணனுக்கு இந்த விழா எடுத்ததில் ரொம்ப சந்தோசம்

கனிமொழி said...

Ahaa... Nice thing... Wishes to you people for having a nice guide and brother...
:)

கே.ஆர்.பி.செந்தில் said...

Congrats dear Dheva and dearest brothers..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

thanks for adding me

அன்புடன் மலிக்கா said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

suresh said...

வாழ்த்துக்கள் vijay!!!

நீங்கள் அதற்கு முற்றிலும் தகுதி உடையவர்தான்.

இந்த விருது உங்களுக்கு முன்பே கிடைத்திருக்க வேண்டும்.

இது போல பற்பல விருதுகளை வாங்க என் வாழ்த்துகள்.

மென்மேலும் சிறந்த கவிதைகளை தர என் வாழ்த்துகள்.

இன்னும் நிறைய படைப்புகள் அளிக்க வேண்டும்…

Keep going dude..

விஜய் said...

மிக்க நன்றி "வெறும்பய "

விஜய் said...

மிக்க நன்றி "suresh"

விஜய் said...

மிக்க நன்றி அன்புடன் மலிக்கா

விஜய் said...

மிக்க நன்றி "ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) "

விஜய் said...

மிக்க நன்றி "கே.ஆர்.பி.செந்தில் "

விஜய் said...

மிக்க நன்றி கனிமொழி

விஜய் said...

மிக்க நன்றிங்க என் அன்பின் ஜில்தண்ணி - யோகேஷ் ,இராமசாமி கண்ணண் ,சிவராஜன் ,Riyas ,Jey ,Wilson,தமிழ் அமுதன்,LK,,Jeyamaran ,சௌந்தர்,ப.செல்வக்குமார் ,ஜீவன்பென்னி

நாஞ்சில் பிரதாப் said...

அட அட அட அட ....
நம்மைப்போன்ற நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை... இந்த பாட்டுத்தேன் ஞபாகம் வந்துச்சு...

தேவா மாம்சு... தம்பி உடையான் படைக்கு அஞ்சான்...உங்களுக்கு இவ்ளோ தம்பிகளா...
இந்த கேப்புல மாப்புவை மறந்துறாதிங்க.

Ananthi said...

///நிச்சயம் அவரது எழுத்துக்கள் உங்களுக்குள் காதலையோ, விழிப்புணர்வையோ, புரிதலையோ , தாக்கத்தையோ ஏற்படுத்தி இருக்கும் என்பதில் எங்களுக்கு ஐயமில்லை...///

நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு சரி விஜய்..! :-)

உங்கள் அன்பு என்றும் நிலைக்கட்டும்..!

உங்களுக்கும், தேவாவுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..!! :-))

Post a Comment