Wednesday, July 14, 2010

தயவு செய்து என்னை ஒருநாள் பின்தொடருங்கள் , இன்னொரு உலகம் காண முடியும் உங்களால்...



என் அரைகுறை தூக்கத்தில் கனவு வருவதில்லை,
கால்கள் உடைந்து, கோனல்மானலாய் நடப்பதாய் நான் காண்பதில்லை கனவுகளை,
விதவிதமான காலணிகளைத்தான் காண்கிறேன் என் ஒவ்வொரு வேலை பட்டினியிலும்,
காலணிக்குச்சொந்தமான முகங்களைக்காணமுடிவதில்லை எப்போதும்,முகம் காட்ட மறுத்து, முந்திச்செல்லும் உங்களிடம் எப்படிச்சொல்லுவது, நான் ஊனமாக்கப்பட்டு இருக்கிறேன் என்று.

உரக்க கத்திக்கொண்டு இருக்கும் சென்னைக்கு உங்களைப்போல் நானும் வந்தவன் தான்,
என்னை முடமாக்கிய நேரத்தில் நீங்கள் தப்பித்துக்கொண்டு இருக்கிறீர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்ற ஆயுதத்தால்,

அனாதையான எனக்கு பணம் கொடுத்துச்சென்னை அனுப்பிய தோழனுக்கு, விலாசம் கொடுக்க,எனக்கான முகவரியை சென்னையின் எல்லா இடங்களிலும் தேடி இருக்கிறேன் , தி.நகர் கோவில் வாசல் தான் என் நிரந்தர முகவரி என்று தெரியாமல்,

என்னை யாரும் உற்று நோக்கவில்லை, அந்த இரக்கமற்றவர்களைத்தவிர,
நான் சிந்திய வேர்வையில் அறிந்து இருக்கிறார்கள், நான் அனாதையென்று,

அனாதைக்குச்சொந்தமான பட்டினியையும், வாழ்க்கைத்தேடலையும்
இரக்கமற்ற அவர்கள் கவனித்து இருக்கிறார்கள்,இரக்கமுள்ள நீங்கள் கவனிக்கத்தவறியதை.

கவனிப்பதை நிறுத்திவிட்டு, வீழ்த்தினார்கள் எளிதாய், உதவி செய்கிறேன் என்ற ஆயுதத்தால்,

காதுகள் செவிடாகின, கத்திய சத்தத்தில்,கருணையற்ற மிருகங்களாய் எங்களை காயப்படுத்தினர்,ஒவ்வொருவருக்கும் விதவிதமாய் வழங்கப்பட்டன காயங்கள், எனக்கான தருணத்தில் கால்களும், கழுத்தும்...

கண்ணீர் துளித்தது, எனக்கான நிரந்தர முகவரியை நிர்ணயத்துவிட்டார்கள் தி.நகர் கோவில் வாசல் என, கால்களைப்பரப்பி, கழுத்தை மண்ணில் புதைத்து,சுட்டெரிக்கும் வெய்யலில் உடைகளற்று வெற்று உடம்பில் உங்கள் காலணிகளை பார்த்து பிச்சை கேட்கவேண்டும்,எனக்கான வேலையும் கொடுக்கப்பட்டுவிட்டது, நீங்கள் கொடுக்க தவறியதை, செய்தே முடித்து விட்டார்கள் கருணையற்றவர்கள்.

என் இதழ்கள் சொல்லத்துடித்தது, கேட்க தயாராக இல்லாத உங்களிடம், எதையோ நோக்கிய உங்கள் அவசர பயணத்தில் என் இதழ் நிரப்பிய சத்தத்தின் சாவு வாசனையை நுகர மறந்துவிட்டீர்கள்.கேட்க நேரமில்லாத, கேட்க தயாராக இல்லாத உங்கள் செவிகளை தொடும்முன் என் சத்தமும் மறித்து போகிறது.

என்னைத்தேடி, என் நண்பன் கூட உங்களில் ஒருவராய் என்னைக்கடந்து போகக்கூடும்,
ஒவ்வொரு நாணயத்திலும் அவன் முகம் தேடுகிறேன்,கருணையுள்ளவன் என் தோழன் நிச்சயம் எனக்கு நாணயத்தை போட்டு சென்று இருப்பான்.

உங்களின் ஒவ்வொரு ரூபாய் கருணையும், இரக்கமற்றவனின் காலடியில் மௌனமாய் எண்ணப்படுகின்றன,என் வயிரும் அளவிடப்பட்டே, தப்பித்து செல்லாதவாறு நிரப்பபடுகிறது கருனையற்றவர்களால் ,

உங்கள் செவிகளும், உங்கள் மனங்களும் எங்களுக்காய் திறக்கபடதாவரை எங்களின் நிரந்தர முகவரி -கோவில் வாசல், நெரிசல் நிறைந்த சாலை, பேருந்து நிறுத்தம் என்று கருனையற்றவர்களால் தீர்மானிக்கப்படும்...

சுட்டெரிக்கும் வெய்யலில் உடைகளற்று கிடக்கும் என் தேகத்தில் எங்கோ ஒரு மூலையில் பிச்சை எடுக்கிறேன் எனும் அவமானம் கொஞ்சம் கொஞ்சமாய் அரித்துகொல்கிறது.முழுவதுமாய் அரித்துகொல்லும் முன் தயவு செய்து என்னை ஒருநாள் பின்தொடருங்கள் , இன்னொரு உலகம் காண முடியும் உங்களால்...


இப்படிக்கு
ஒவ்வொரு நாணயத்திலும் தன் உயிர்நண்பனை தேடுபவன் .


                                                                                         
                                             

28 comments:

ஜீவன்பென்னி said...

உங்கள் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் எனக்கு ஒரு உந்துதலை கொடுக்கின்றது. நாம் அறிந்த மனதர்கள், அதே நேரத்தில் உதவ மறந்த மனிதர்கள். அவர்களின் மனதை இந்தக்கவிதை படம்பிடித்துக்காட்டுகிறது.

செல்வா said...

///என்னைத் தேடி, என் நண்பன் கூட உங்களில் ஒருவராய் என்னை கடந்து போகக்கூடும்,

ஒவ்வொரு நாணயத்திலும் அவன் முகம் தேடுகிறேன்,கருணையுள்ளவன் என் தோழன் நிச்சயம் ///
சத்தியமா உருக வச்சுட்டீங்க அண்ணா ..

படித்து முடித்ததும் அப்படியே உடம்பு சிலிர்க்கிறது .. எனக்கு எப்படி கமெண்ட் போடுறதுன்னு கூட தெரியலை ..

சௌந்தர் said...

என்னால் இதை படிக்க முடியவில்லை......

AltF9 Admin said...

அருமையாக பதிவு செய்து இருக்கிறாய் நண்பா , எத்தனை பேர் அடித்தட்டு மக்களை மனிதர்களாக பார்கிறார்கள் , தொடரட்டும் உனது எழுத்து தீயாய் பரவட்டும் எங்கும் ...

ஜெயந்தி said...

படமும் கவிதையும் பார்க்கவும் படிக்கவும் முடியல. தி.நகர்ல இந்த மாதிரி ஆளுங்கள பார்க்கறப்ப இப்படித்தான் இருக்கும். வெயில் நேரத்துல அப்படியே வியர்வை ஆறாக ஓட அவர்கள் கிடப்பார்கள். கண்ணில் நீர் வரும். நம்மால் வேற என்ன செய்ய முடியும்?

விஜய் said...

மிக்க நன்றி ஜீவன் பென்னி அவர்களே ,

நீங்கள் சொல்லும் அளவிற்கு என்னிடம் இருந்து கற்றுக்கொள்ள எதுவும் இல்லை உங்களுக்கு...
உண்மையில் நடக்குறத சொல்லனும்னு தோனுச்சு, சொல்லி இருக்கேன்,

நிச்சயம் இதற்க்கு தீர்வும் ஒரு நாள் செய்வேன் அப்டின்னு எனக்கு நம்பிக்கை இருக்கு,
எப்படி என்பதை தேடுறேன்...

விரைவில் விடையோடு வருகிறேன் ....

விஜய் said...

மிக்க நன்றி செல்வா தம்பி

இங்கே எழுதப்படும் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு தீர்வை தேடி கொட்டப்பட்டு இருக்கிறது,
நிச்சயம் நம்பிக்கை வைப்போம் என் எழுத்துக்கள் ஒரு பொறியாவது ஏற்படுத்தும் என்று ...

மிக்க நன்றி தம்பி, உங்கள் கருத்துகளுக்கு

விஜய் said...

சில நேரங்களில் சில அவலங்களை காண மனம் பதைக்கிறது , அப்படி தான் உங்களுக்கு பதைத்து இருக்கிறது சௌந்தர் ..

நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம் சௌந்தர், நமது ஒவ்வொரு உற்று நோக்கலும் ஒரு தீர்வுக்கான காலமாய் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை

விஜய் said...

நீங்கள் சொல்வதும் மிகவும் சரியான ஒன்று தான் சிவா,.

அனைவரையும் சமமாக பார்த்து இருந்தால் தான் பிரச்சனை இல்லையே..

இங்கு யதார்த்தத்துக்கு மேலான ஒரு அன்பு பரவ வேண்டும் , நிச்சயம் என் எழுத்தின் மூலம் ஏதாவது செய்வேன் ..

தனியா தாகத்துடன் தேடுகிறேன் சரியான பாதையை ...

விஜய் said...

நம்மால் முடியும் ஜெயந்தி அவர்களே,

ஏதோ பேசுவதற்கும், எழுதுவதற்கும், நன்றாக இருக்கும் என்று நினைக்காதீர்கள், நிச்சயம் முடியும், மக்களுக்கு இடையே தகவல் பரிமாற்றம் இல்லாத காலத்துலையே , எங்கு இருந்தோ எழுதிய எழுத்துக்கள் மக்களை சென்றடைந்து ஒரு நாட்டின் புரட்சியை உருவாக்கி வெற்றியும் கண்டுள்ளது,
அப்படி இருக்க , இதுவும் சாத்தியமே,
பலவேறு வண்ணங்களில் தன்னை அலுகுபடுத்தி கொண்டு இருக்கும் மனிதனை , ஒரு வண்ணத்தில் ஒன்றுமித்தால் இது சாத்தியமே, ஒன்றுபடுதலை எழுத்துக்கள் சாதிக்கும் என உணர்ந்து இன்னும் எழுதுவும்,

என்றாவது ஒரு நாள் உடைக்கும், உடைக்கும் நாள் தெரிய இன்னும் எழுதுவோம் முடியும் என்ற நம்பிக்கையோடு ..

நன்றி ஜெயந்தி அவர்களே

Jeyamaran said...

அண்ணா உணர்ச்சி பொங்க பொங்க எழுதிய
வார்த்தைகள் படிக்கும் போது மனம் கனக்கிறது

சீமான்கனி said...

கவிதை ரெம்ப கனமாக இருக்கு விஜய் படித்ததும் பல நினைவுகளோடு கடந்து போகிறேன்...உங்கள் எல்லா கவிதைகளும் அருமை படிக்க படிக்க மனசுக்கு அருகில் வந்து ஒட்டிக்கொள்கிறது...

ஒரு சிறு வேண்டுகோள் கொஞ்சம் சுருக்கி முத்தான வார்த்தைகளை முதன்மை படுத்தி எழுதினால் இன்னும் வாசிப்பவர்களை கவரும்...இது என் தாழ்மையான கருத்து...இதை சொல்வதற்கு தகுதியானவனா!!?? தெரியவில்லை...

விஜய் said...

மிக்க நன்றி ஜெயராம் தம்பி

உண்மை தான் தம்பி இப்படி பட்ட மனிதர்களை காணும் போது மனம் கனக்கிறது , இரக்கமற்றவர்களை காணும்போது மனம் கொதிக்கிறது, நிச்சயம் இதற்க்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று கை கட்டி நிற்காமல் மக்களை சென்றடைவோம் ஒவ்வொரு எழுத்தின் மூலமும் ....

மிக்க நன்றி தம்பி உன் பின்னூட்டத்திற்கு ..

விஜய் said...

மிக்க நன்றி சீமாங்கனி

நிச்சயம் நீங்கள் சொல்வது போல் முத்தான வார்த்தைகளை முன் நிறுத்தி, அளவு குறைத்து ,அழுத்தத்தை அதிகப்படுத்துகிறேன் ,

நிச்சயம் உங்களுக்கு தகுதி இருக்கிறது தோழரே, தயங்க வேண்டாம் தவறுகளை சுட்டிக்காட்டலாம் ,உங்கள் சுட்டுதல் தரமான பதிவை வழங்கச் செய்யும் ...

மிக்க நன்றி சீமாங்கனி உங்கள் அழகான சுட்டுதலுக்கு ....

dheva said...

ஸ்தம்பித்துப் போய் நிற்கிறேன்.... தம்பி...! ஓராயிரம் கேள்விகள் இது போன்ற அவலங்களை உற்று நோக்கும் போது...இன்னும் சொல்லப் போனால் நம்ம நாட்டில் தான் மனித நேயம் பற்றி அதிகம் பேசுவார்கள்.....ஆனால் மனித உரிமைகள் கேவலமாகவும், மனிதனை பற்றிய பிரஞையும் இல்லாத மனிதர்கள் நம்மிடையே அதிகம். இதற்கு காரணம்....வறுமை....அந்த வறுமையின் பொருட்டு பொருள் தேடி தான் சேர்த்து வைத்துக் கொள்ளும் பொருட்டு சுய நலம் வந்து தன்னுடைய ஆக்கிரமிப்பை செய்து....மனித நேயத்தை சமாதியாக்குகிறது.

மக்களின் விழிப்புணர்வோடு...அரசு...இதற்கு முடிவு கட்டவேண்டும். அரசு முடிவு கட்ட வேண்டுமானால் நல்ல அரசை தேர்ந்தெடுக்க வேண்டும்... நல்ல அரசை தேர்ந்தெடுக்க.... நல்ல மக்கள் வேண்டும்.. நல்ல மக்கள் உருவாக வேண்டுமானால் மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும். விழிப்புணர்வு ஊட்டத்தான்.... நாம் எரிந்து கொண்டிருக்கிறோம்.....இந்த எழுத்து அக்னிகளை......


சபாஷ் தம்பி.....கொஞ்சம் கூட தடம் புரளாமல் இப்படியே வா..... புதியதோர் உலகத்தை நாம் இல்லாவிட்டாலும் நமது சந்ததிகள்...கண்டிப்பாய் ஆளும்...!

விஜய் said...

நீங்க சொல்வது சரிங்க அண்ணா,

நம் தேசத்து மக்கள் உண்மையா சரியான திறமை மிக்கவர்கள் தான், அவர்களை சரியான பாதையில் கொண்டு செல்ல ஒரு அணி போதும்.
அந்த அணி இப்பொழுது உருவாகி கொண்டு இருக்கிறது ...

நிச்சயம் அத்தனையும் சாத்தியமே ....

Karthick Chidambaram said...

கொஞ்சம் நிலை குலைந்து விட்டேன். நாம் நிறைய செய்யவேண்டும். முடியும்.

சீமான்கனி said...

நன்றி விஜய்...

G.கோபி said...
This comment has been removed by the author.
G.கோபி said...

என் புதிய அன்பன் விஜய்'க்கு
இந்த கவிதை -யின் தாக்கம் நிச்சயம் ... ஒவ்வொரு இதயத்தையும் உருக வைக்கிறது...
பாராட்டுகள்...வாழ்த்துக்கள்.....பயணம்...தொடர.....
நீங்கள் பிறந்து,வளந்த மாவட்டத்தை சேர்ந்தவன் தான்...

க.கோபி.திருச்செங்கோடு..

விஜய் said...

மிக்க நன்றிங்க கார்த்திக்,

உங்களை போன்ற முடியும் என்ற நம்பிக்கை உடைய இளைஞர்கள்
தான் என் தேசத்தை மாற்ற முதல் தகுதி உடையவர்கள் என்று நம்புகிறேன் ..

மிக்க நன்றி கார்த்திக்

விஜய் said...

மிக்க நன்றிங்க க.கோபி

என் எழுத்துக்கள் உங்களை போன்றோரின் ஊக்கத்தால் தான் நாளுக்கு நாள் மெருகேருவதாய் உணருகிறேன் தோழரே, உங்கள் வலைபதிவிற்கு சென்று பார்த்தேன் , நன்றாக எழுதி இருகிறீர்கள் , இன்னும் நிறையா அழகான படைப்புகளை தர வாழ்த்துகிறேன் .


மிக்க நன்றி க.கோபி

http://rkguru.blogspot.com/ said...

தலைப்பே அட்டகாசம்........பதிவும் சூப்பர் வாழ்த்துகள்

விஜய் said...

மிக்க நன்றி rk guru

இப்படி பட்ட மனிதர்களை காணும் போது மனம் கனக்கிறது , இரக்கமற்றவர்களை காணும்போது மனம் கொதிக்கிறது, நிச்சயம் இதற்க்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று கை கட்டி நிற்காமல் மக்களை சென்றடைவோம் ஒவ்வொரு எழுத்தின் மூலமும் ....

மிக்க நன்றி rk guru பின்னூட்டத்திற்கு ..

elamthenral said...

அருமையான பதிவு விஜய்... கலக்கல் பதிவுகள்.. தொடருங்கள்...

விஜய் said...

மிக்க நன்றிங்க புஷ்பா,

உங்களை போன்றோரின் அழகான ஊக்கம் எனக்கு நிச்சயம் ஒரு உந்துதலாய் அமையும், இன்னும் நன்றாக எழுத
முயற்சிப்பேன் ..

மிக்க நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு புஷ்பா

ஜில்தண்ணி said...

மனது வலிக்கிறது

இதற்கு கண்டிப்பாக தீர்வு காண முடியும், நம்மால் அது முடியும்

வாழ்த்துக்கள் அண்ணா

யோகேஷ்

விஜய் said...

மிக்க நன்றி அன்பின் யோகேஷ் தம்பி ,

உண்மை தான் தம்பி, நிச்சயம் முடியும், எழுத்துக்கள் மூலம் சிந்திக்க வைப்போம், தேவை படும்பொழுது
புத்தியையும், உக்தியையும் வுகுப்போம், மாத்திகாட்டுவோம் ..


மிக்க நன்றி உன் பின்னூட்டத்திற்கு தம்பி

Post a Comment