Friday, July 23, 2010

நான் சந்தியா,


நான் சந்தியா,

உன்னை எனக்கு நன்றாய் தெரியும் நீ என் அத்தை மகன் என்பதால்,என் ஒவ்வொரு பள்ளி கோடை விடுமுறையும் - என் அம்மாவின் அம்மாவை காண ,என்னைச் சுமந்து வரும் - உன் வீட்டிற்கு,உன்வீட்டிற்கு வர கொஞ்சம் தயக்கம் தான்,

அப்படி தான் அந்த பத்தாம் வகுப்பு கோடை விடுமுறைக்கும், வெட்கத்தை வென்றுவிடும் ஆர்வத்தை, மறைக்க முடியாமல் வந்து விழுந்தேன் உன் வீட்டில் - காற்றில் ஊதிவிடப்பட்ட வேலிச்செடியின் பட்டுஇறகாய்.- நான்கைந்து ஆண்டுகளுக்கு பிறகு ,உன் வீட்டை நெருங்க நெருங்க எதோ ஒன்று மூச்சு விட சிரமப்படுத்தியது,அது சந்தோசமாய் இருக்கலாம், அளவுக்கு மிஞ்சிய வெட்கமாய் இருக்கலாம், நீண்ட நாட்களுக்கு பின் உன்னை காணும் ஆர்வமாய் இருக்கலாம்.எது என்று உணரும் முன் உன் வீட்டை அடைந்து விட்டேன்,

உன் அம்மாவிடம் பேசும்பொழுதே, என் கண்கள் நீ எங்கே? என்று கேட்டுக்கொண்டிருந்தது - அதற்கு தெரிந்த ஏதேதோ பாவனைகளில் பாவமாய், பாவம் உன் உன் அம்மாவிற்கு தான் புரியவில்லை,உடை மாற்றிக்கொண்டு வருவதாய் சொல்லி, உன் வீட்டின் அனைத்து அறைகளையும் தேடிவிட்டேன்,

என் கலங்கிய கண்கள் நீ காணவில்லை என்பதை உணர்த்தியது,உன்னை கண்டதும் எதுவும் பெரிதாய் பேசிவிடப்போவதில்லை என்பது என் உதட்டிற்கு தெரியும் தான் ,என் கண்களுக்கு தெரியவில்லை என்ன செய்ய...

எப்படி கேட்க உன் அம்மாவிடம் நீ எங்கே என்று?, எப்படி சொல்ல என் இதயம் கனக்கிறது என்று.என் கைபிடித்து இழுத்து, சாப்பிட அழைத்த உன் அம்மாவிற்கு தெரியாது கனத்த இதயத்தில் காற்று நுழைவதே கடினம் என்று, இதில் சாப்பாடு எப்படி.....

நான் வருவது தெரியாது உனக்கு, எங்கே சென்று இருப்பாய் என்ற கேள்வி, உணவோடு சேர்ந்து என் உடலுக்குள் சென்றது,சிறிது நேரத்தில் உன் சத்தம் கேட்டது "அம்மா பசிக்குது, சீக்கிரம் சாப்பாடு போடு, திரும்பவும் விளையாட போகணும்",வார்த்தைகள் உணர்ந்த அடுத்த கணம், வெட்கம், சந்தோசம் , சொல்ல முடியா உணர்வுகள் ஒருபுறம் இருக்க, கைகள் தானாய் முகத்தை, தலைமுடியை சரி செய்தது, நீ சமையலறைக்குள் வந்த அந்த நிமிடம் என்னை அறியாமல் வெட்கம் என் முகத்தில் ஒட்டிக்கொண்டது,

என் பெண்மையை உணரவைத்தது, என் முகத்தில் ஒட்டி யிருந்த அத்தனை வெட்கமும்,
சமையறையில் வேகமாய் எடுத்துவைத்த உன் காலடி, வேகமாய் பின்னோக்கியது என்னைப் பார்த்ததும்,"அம்மா நான் அப்புறம் சாப்பிட்டுகொள்கிறேன் " என்ற சத்தம் மட்டும் தான் அங்கிருந்தது ,உன்னைத்தவிர. திட்டிகொண்டு இருந்தேன் , உன்னை காண முடியாமல் செய்த- என் வெட்கத்தை ,

உனக்காய் காத்துகொண்டு இருந்த என்னை, சிரிக்க வைத்தது உன் அம்மாவின் முனகல்
"என்ன ஆச்சு இவனக்கு இன்னைக்கு , சாப்பிடாம கூட விளையாட ஓடிட்டான் "

கண்கலங்க செய்ததது ,"சரி கிளம்புகிறோம்" என்ற என் அம்மாவின் விடை பெரும் வார்த்தை ."நாளைக்கு போகலாம்" என்று உன் அம்மா கூறிய வார்த்தையில் அமர்ந்து கொண்டு அடம்பிடித்தது என் இதயம்,

நீ வந்துவிட வேண்டும் என்று ஏங்கிய மனதை புரிந்தவன் போல வந்து நின்றாய் , நாங்கள் நகரப்போகிற அந்த நொடியில் ,இந்தமுறை முகத்தோடு ஒட்டி இருந்த வெட்கத்தை பிய்த்து, மனதுக்குள் புதைத்துகொண்டு உன்னை பார்த்தேன்,

உன் வெட்கத்தை மறைக்க உன் அம்மாவின் கழுத்தை இருக்கமாய் உன் அம்மாவின் பின்புறம் இருந்து பிடித்துகொண்டு ,உன் உதட்டை மெல்லியதாய் விரித்து, உன் பற்களை வெட்கத்தில் காட்டினாய், உன் கண்ணும் என் கண்ணும் தெரியாமல் மோதிக்கொண்ட அந்த சில நிமிடத்தில் உன்னிடம் பேச நினைத்த அனைத்தையும் பேசியதாய் தோன்றியது,

விடைபெற்ற அந்த வினாடியில் தான் தெரியும் , பேசியும் - தீராத வார்த்தைகள் என்னுள் இருக்கிறது என்று,நான் நகரும்பொழுது நீ கையசைத்து வழி அனுப்பி வைத்தது எதோ வலியை என்னுள் திணித்தது .

பேருந்தின் வேகம் என் கலங்கிய கண்ணீரினை காற்றுடன் கலக்க செய்தது ,

எத்தனை முறை உன் வீட்டிற்கு வந்து இருக்கிறேன், இதற்கு முன் என்றாவது உன் வெட்கத்தை காட்டி ,இப்படி அழ செய்ததுண்டா?.என்ற கேள்வியோடு என் வீட்டை அடைந்தேன்.

காதலிக்கும் வயதுமில்லை, காமமறியும் வயதுமில்லை அது , இதயம் கனத்த அந்த வினாடிகள், இன்றும் என்னுள் இனிமையாய், காதலும் இல்லாமல், காமமும் இல்லாமல் கண்ணியமாய் பசுமை நிறைந்த கனவாய் மட்டும் ....

                                                                                         
                                             

46 comments:

வெறும்பய said...

அருமை நண்பா...

அனைத்தும் கவிதைத்தனமான வரிகள்..
கவிதை படித்தது போன்ற உணர்வு..

ஒவ்வொரு வரியும் காதல் சொல்கின்றன..

ஒரே ஒரு வருத்தம்... எனக்கு இப்படி ஒரு மாமன் பொண்ணு இல்லையே என்று...

விஜய் said...

மிக்க நன்றி ஜெயந்த் ,
உங்கள் வருகையிலும்,நீங்கள் ரசித்ததிலும் மிக்க மகிழ்ச்சி, கவலைபடாதீங்க தோழா, இதை விட அழகா ஒருத்தங்க வருவாங்க உங்களை பார்த்துக்க . ஆஹா எ ஹ ஹ ...

உங்கள் விலைமதிப்பில்லாத கருத்துரைக்கு மிக்க நன்றி தோழா

Karthick Chidambaram said...

வெறும்பய அவர்களை வழிமொழிகிறேன்!

விஜய் said...

மிக்க நன்றி கார்த்திக்,
என் ஒவ்வொரு பதிவையும் தவறாமல் படித்துவிட்டு , பின்னூட்டம் இடுவதை பார்க்கையில் என் எழுத்திற்கு உங்களிடம் ஒரு அங்கீகாரம் கிடைத்தாய் உணருகிறேன்,மிக்க மகிழ்ச்சி கார்த்திக் .

உங்கள் விலைமதிப்பில்லாத கருத்துரைக்கு மிக்க நன்றி தோழா

ப.செல்வக்குமார் said...

///என் கலங்கிய கண்கள் நீ காணவில்லை என்பதை உணர்த்தியது,உன்னை கண்டதும் எதுவும் பெரிதாய் பேசிவிடப்போவதில்லை என்பது என் உதட்டிற்கு தெரியும் தான் ,என் கண்களுக்கு தெரியவில்லை என்ன செய்ய...////
கலக்குறீங்க அண்ணா ..!!!
//கனத்த இதயத்தில் காற்று நுழைவதே கடினம் என்று, இதில் சாப்பாடு எப்படி..///
ஹய்யோ ...!!
சத்தியமா ரொம்ப அருமையா இருக்கு அண்ணா ...
எப்டி தான் இப்படி எழுதறீங்களோ.. இன்னும் நிறைய எழுதுங்க ..!!

Amaithi Virumbi said...

உங்களின் வரிகள் மிகவும் நன்றாக உள்ளன ... சந்தியாவை நேரில் சந்தித்து போன்ற உணர்வு ... தொடர்க அண்ணா ...

விஜய் said...

மிக்க நன்றி செல்வா தம்பி,

ஆணி அதிகமா இருக்குற நேரத்துல கூட, அண்ணனுக்காக நேரம் ஒதுக்கி, படிச்சு பார்த்து மறக்காம கருத்துரை போட்டு இருக்க , ரொம்ப சந்தோசமா இருக்கு தம்பி, எழுத்துக்கு ஒரு நல்ல மரியாதை கிடைச்சு இருக்குறத நினைச்சா சந்தோசமா இருக்கு தம்பி.

கருத்துரைக்கு மிக்க நன்றி தம்பி

dheva said...

இந்த காமமும் காதலுமற்ற நிலையில் ஓராயிரம் சினேகிதங்களை நெறியோடு தொடர முடியும் தம்பி. ஆனால் மனிதன் புலன்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவன் தவறிழைக்கும் நிகழ்வுகள் அரங்கேறி விடுகின்றன்.

பொதுவாக ஆண் பெண் நட்பை எடுத்துக் கொள்ளேன்....பெண்களின் நட்பு கண்டிப்பாய் ஒவ்வொரு ஆணுக்கும் அவசியம் என்றுதான் நான் சொல்வேன். ஆனால் அது அப்படி இருந்தால் காதலாகத்தான் இருக்க வேண்டும் என்று காமத்தின் அடிப்படையில் கற்பிதம் கொடுத்திருக்கிறது இந்த உலகம்.

காமம் என்ற இடம் ஒரு வித மனோ தத்துவ ரீதியான விசயம் அது ஒரு இடத்தில் இருந்தால் உணரதலும் நிதானமும் தெளிவும் இருக்கும் என்ற காரணத்தினால் தான் ஒருத்தனுகு ஒருத்தி என்பது சிறப்பாக சொல்லப்பட்டு பின்பற்றவும் சொல்லப்படுகிறது. காமத்தை உணராமல் உடலளவில் பார்ப்பவனுக்குத்தான் அதை ஒரு இன்பம் துய்க்கும் செயலாக இன்னதென்று அறியாத ஒன்றாக பல எதிர் பாலரை நாட வேண்டியிருக்கிறது. இப்படி நாடுவதாலேயே.....பெண் நட்பு என்ற விச்யம் அடியோடு அழிந்து போய் விட்டது.

ஆணிடம் பெண்ணும் பெண்ணிடம் ஆணும் காமம் விலக்கி நட்பாயிருத்தல் என்பது இருவரின் காமத்தைப் பற்றிய புரிதலிலும் நிறைவிலும் இருக்கிறது. மொத்தத்தில் ஆண் பெண் நட்பு வரவேற்க கூடியதே...மேற்சொன்னா எல்லா புரிதலும் இருந்தால்....


அப்போதும் காமமற்ற ஒரு காதலற்ற ஒரு நிலை பல கதைகள் சொல்லும் .....என்ன ஒன்று மனிதர்களுக்கு இது புரிவதில்லை...அல்லது எப்படி தொடர்வது என்ற அறிவும் இல்லை......

அதனால் எல்லோருக்கும் பயம்....!

ஹா...ஹா..ஹா...என்ன உன் தலைப்பை விட்டு எங்கோ சென்று விட்டேனா..


இரு வருகிறேன்...

//என்னுள் இனிமையாய், காதலும் இல்லாமல், காமமும் இல்லாமல் கண்ணியமாய் பசுமை நிறைந்த கனவாய் மட்டும் ...//

இப்போதும் எனக்குள் இப்படி இருக்கிறது என்று சொல்லி உன்னையும் தொடர் சொல்கிறேன் தம்பி...

வாழ்த்துக்கள் பா!

விஜய் said...

மிக்க நன்றி அமைதி விரும்பி தம்பி ,

ஹ ஹ ஹ அஹ , படிக்கும் பொழுதே அதை உருவக்கப்படுத்தி பார்க்கும் திறமை ஒரு சிலருக்கு தான் வரும், இந்த உருவகப்படுத்தி படிக்கும் பொழுது, அந்த கதையின் முழு அழகையும் ரசிக்க முடியும்.உன் புரிதலுக்கு, உன் ரசித்தலுக்கும் மிக்க நன்றி தம்பி

ஜீவன்பென்னி said...

அருமையான உணர்வு. நட்பு,காதல்,காமம் இது எதுலயும் சேராத ஒரு உணர்வு. அழகா பதிசெஞ்சிருக்கீங்க. பின்னோக்கி என்னைய யோசிக்க வைக்குறீங்க.

ஜீவன்பென்னி said...

தேவாண்ணே இங்க கமெண்ட்தான் போடனும் பதிவெல்லாம் எழுதக்கூடாது.

விஜய் said...

அன்பின் தேவா அண்ணா

சொல்ல வந்ததை மறந்தும், சொல்ல தெரியாமலும் முடித்து விடுகிறான் இந்த கத்துக்குட்டி, இதை தான் சொல்ல வந்து இருக்கிறாய் என்று தெளிவாய் நீங்கள் பின்னூட்டத்தில் சொல்லி முடிக்கும் பொழுது அளவற்ற சந்தோசம், ஒரு படைப்பை முழுமையாய் வாசகனிடம் கொண்டு சேர்த்த திருப்தி உங்கள் மூலம் எனக்கு கிடைக்கிறது, ஒரு படைப்பாளியின் படிப்பை படித்து நீங்கள் விட்டு செல்லும் கருத்துரை ,சரியான பாதையில் , சரியான படைப்பை கொடுக்க செய்கிறது .

நான் சொல்ல வந்ததை உங்கள் பின்னூட்டம் சொல்லி முடிக்கிறது ,
நான் தொடங்குகிறேன் உங்களுக்கு நன்றி சொல்ல .

விஜய் said...

அன்பின் ஜீவன்பென்னி,

என் அனைத்து பதிவுகளிலும் உங்களின் பின்னோட்டம் காணுகிறேன், உங்களின் பின்னூட்டமும், பாராட்டும், என்னை முழுமையான, தரமான பதிவை தர முயற்சிக்க வைக்கிறது, நீங்கள் விட்டுசெல்லும் ஒவ்வொரு பின்னூட்டமும், என்னை முன்னேற சொல்கிறது..

மிக்க நன்றி ஜீவன்பென்னி

விஜய் said...

//தேவாண்ணே இங்க கமெண்ட்தான் போடனும் பதிவெல்லாம் எழுதக்கூடாது. //

என் எழுத்துக்கள் உங்களுக்கு புரிய வைக்க தடுமாறும் சில இடங்களில் அண்ணாவின் கருத்துரை உங்களுக்கு உதவியாய் இருக்கும் ..

நன்றி அண்ணா

சௌந்தர் said...

ஓரு பெண்ணின் உணர்வுகளை அழக சொல்லி இருக்கீங்க, மீண்டும் மீண்டும் படிக்க தோன்றுகிறது.
வெட்கத்தை பற்றி சொல்லி இருப்பது மிகவும் அழகு

Chitra said...

காதலிக்கும் வயதுமில்லை, காமமறியும் வயதுமில்லை அது , இதயம் கனத்த அந்த வினாடிகள், இன்றும் என்னுள் இனிமையாய், காதலும் இல்லாமல், காமமும் இல்லாமல் கண்ணியமாய் பசுமை நிறைந்த கனவாய் மட்டும் ....


...... பின்னீட்டீங்க, போங்க.... அட, அட, அட.... வெட்கமும், நட்பும், காதலும்..... இன்னும் மென்மையாக இழைந்து ஓடுவதை அறிந்து கொள்வதே சந்தோஷமாக இருக்கிறது.
பாராட்டுக்கள்!

விஜய் said...

மிக்க நன்றி சௌந்தர்,

நீங்க திரும்ப திரும்ப படிக்கிற அளவு எழுதி இருக்கனா என தெரியல, அப்படி நிஜமாவே எழுதி இருந்தா அதுக்கு தேவா அண்ணாவும், நீங்களும் தான் காரணம், :)

விஜய் said...

நன்றி சித்ரா அக்கா,

இவ்வளவு நாள் ஆச்சு உங்களை என் வலைதளத்து பக்கம் வரவைக்க,

உங்க கிட்ட இருந்து முதல் பின்னூட்டம் வாங்கி இருக்கேன் ,

ரொம்ப சந்தோசமா இருக்கு,

நீங்க சரியான கருத்துரை கொடுப்பீங்கன்னு தேவா அண்ணா சொல்லி இருக்காங்க..அப்டினா நான் எதோ எழுதி இருக்கேன் போல இருக்கு...

மிக்க நன்றி அக்க உங்க கருத்துரைக்கு ..

:)

அருண் பிரசாத் said...

அருமையான உணர்வுடன் கூடிய வார்த்தைகள்.

@ தேவா அண்ணா,

பதிவுதான் 2 பக்கம்னா, கமெண்ட் கூட 2 பக்கமா? அவ்வ்வ்வ்வ் மீ பாவம்.... ;)

என் பெயர் சந்துரு !... said...

இப்பதான் உங்களோட சந்தியாவ படிச்சேன்...
கலக்கிட்டீங்க !!!

எனக்கும் இந்த மாதிரி கதை இருக்கு
ஆனா அத நெனசிப்பேனே தவிர வெளிய சொல்ல மாட்டேன்...
இப்போ நீங்க சொன்னதும் பழசெல்லாம் ஞாபகம் வருது....

நீங்க சொன்ன மாதிரி, அப்போ அந்த வயசுல,
அது எந்த மாதிரி உணர்வுன்னு தெரியாமலேயே
அந்த உணர்வ அனுபவிச்சிருக்கோம்...

ஆனா அது காதலுமில்ல
காமமுமில்ல...
அது எதிர்பாலருக்கு மேல வர்ற ஒரு கிளர்ச்சி...

அந்த கிளர்ச்சியோட இன்பத்த, நமக்கு விவரம் தெரியாத வயசுலேயே அனுபவிசிருக்கொம்னு நெனச்சா உடம்பெல்லாம் ஜில்லுன்னு இருக்கு !!!... இல்ல ?..

உங்க பதிவ படிக்கும்போது திரையில ஒரு படம் ஓடுற மாதிரி காட்சிகள் கண்ணுல ஓடுது...
அதனால்தான் உங்க பதிவு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு...

- உங்க புது ரசிகன் !....

சிவராஜன் said...

Ayya Raja Vijay , Eppudiya ippudi yellam Yosikkirinka , arumai nanba , enna enakku oru mama ponnu illayenu feelings sa pokiruchu...

நிலாமதி said...

அழகாய் சொல்ல பட்ட காதல் ..மேலும் தொடர்க. காதல் என்றும் வாழட்டும்.

கனிமொழி said...

:)
மாமா பையன் ஞாபகம் வந்தாச்சுங்க......
நடந்தெல்லாம் எழுதிவெச்ச மாதிரி இருக்கு..

//காதலிக்கும் வயதுமில்லை, காமமறியும் வயதுமில்லை அது , இதயம் கனத்த அந்த வினாடிகள், இன்றும் என்னுள் இனிமையாய், காதலும் இல்லாமல், காமமும் இல்லாமல் கண்ணியமாய் பசுமை நிறைந்த கனவாய் மட்டும் ....//

ம்ம்ம்ம்.....
தொடர்ந்து எழுதுங்கள் நண்பா....

சீமான்கனி said...

தபு ஷங்கரை படித்த ஒரு உணர்வை தந்துவிட்டீர்கள்...அருமை வாழ்த்துகள்....விஜய்....

அன்பரசன் said...

வரிகள் பிரமாதம் விஜய்

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

உணர்வுகளை வார்த்தைகளில் கசியவைக்கும் கலை அந்த தருணங்களை முழுவதும் உள்வாங்கிய ஒருவனால்தான் இயலும் . நிருபித்துவிட்டீர் போங்க . பதிவின் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் நிசப்தத்தின் சத்தம் ஓங்கி ஒலிக்கிறது மவுனத்தின் வார்த்தைகளாக இன்னும் என் அறை எங்கும் . அருமை . பகிர்வுக்கு நன்றி சகோதரா !

அஷீதா said...

ரொம்ப அருமையா இருக்கு விஜய் இந்த பதிவு . படிக்கும் போதே கட்சிகள் அப்படியே கண் முன் தோன்றுது. வாழ்த்துக்கள்!

விஜய் said...

மிக்க நன்றி அன்பின் அருண் பிரசாத்,

முதல் முறையாய் என் வலைத்தளத்தில் காலடி பதித்து , உங்கள் கருத்துக்களை பதித்துவிட்டு சென்றதில் மிக்க மகிழ்ச்சி , இன்னும் என்னை அழகாய் எழுத செய்ய உங்களின் கருத்துக்கள் எனக்கு தேவை.

மிக்க மகிழ்ச்சி மீண்டும் வருக அன்பின்அருண்

விஜய் said...

மிக்க நன்றி சந்துரு,

உண்மை தான் அந்த உணர்வுகளை வென்றுவிட்டதாய் இதுவரை எதுவும் இல்லை, தன்னை முதன்முறை ஒரு பெண்/ஆண் ஈர்க்கிறாள்/ஈர்க்கிறான் என்று தன்னுள் கொண்டு வந்த சந்தோசத்தை எண்ணி பார்க்கையில் பசுமை நிறைந்த கனவுகளாய் மனதில் எதோ ஒருபுறம் இனிக்க தான் செய்கிறது
..
மிக்க நன்று சந்துரு

விஜய் said...

மிக்க நன்றி தோழா சிவா,

அப்படியா உங்களுக்கு மாமா பொண்ணு இல்லைங்களா?, வறுத்த படாதீங்க, ஹ ஹ ஹ ....
சில வரங்கள் நமக்கு கிடைக்குறது இல்ல, அப்டி கிடக்காம போன வரமா நினைச்சுக்கங்க ..ஹ ஹ ஹ
சரி பரவாயில்லை விடுங்க சிவா இதுக்கு எல்லாம் சின்ன புள்ள மாதிரி அழுதுகிட்டு,
கண்ணீரை துடைங்க, ம்ம்ம், இப்ப எப்படி இருக்கு மூஞ்சு ..ம்ம், இப்படியே இருங்க ...

நன்றி

விஜய் said...

அக்கா நிலாமதி (நன்றி எல்லாம் சொல்ல மாட்டோம் அக்காவுக்கு )
உங்களுக்கு நிறையா வேலை இருந்தாலும் உங்க தம்பிக்கு பின்னோட்டம் போட்டுஇருக்கீங்க , சந்தோசமா இருக்கு அக்கா. அக்கா நீங்க சொல்லுங்க நிஜமா நல்லா இருக்கு இந்த பதிவு?.. தம்பி வளரனும் என்பதற்காக பொய் எல்லாம் சொல்ல கூடாது ... :)

உங்க தம்பி விஜய்

விஜய் said...

மிக்க நன்றிங்க கனிமொழி,

ஓ அப்படியா? மாமாவோட பையன் ஞாபகத்துக்கு வந்தாச்சுங்களா?...நல்லது , ஹ ஹஹா ஹ ... :) கண்டிப்பா தொடர்ந்து நன்றாக எழுத முயற்சிக்கிறேன்..

மிக்க நன்றிங்க கனிமொழி உங்கள் பின்னூட்டதிற்கு

விஜய் said...

மிக்க நன்றிங்க சீமான்கனி,

அய்யோ அவர் எங்கே?,நான் எங்கே ?... அவர் வளர்ந்துவிட்ட மரம், நான் துளிர்விடும் தளிர், இலைகள் பார்ப்பதற்கு ஒன்று போல் தெரியலாம்,வளர்ந்துவிட்ட மரமும், தளிரும் ஒன்றல்ல.

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சீமான்கனி,

விஜய் said...

மிக்க நன்றிங்க அன்பரசன்

என்னை உற்சாகப்படுத்தி, மென்மேலும் அழகாய் எழுத முயற்சி செய்ய தூண்டும் உங்களின் பாராட்டுகள் ,

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிஅன்பரசன்,

விஜய் said...

மிக்க நன்றி அன்பின் சங்கர்,

மிக்க மகிழ்ச்சி உங்கள் பின்னோட்டம் கண்டதில், என் எழுத்துக்கள் வலிமையானதாய் மாற உங்கள் பின்னூட்டங்களை விட்டுசெல்வதாய் கூறினீர்கள், அவ்வாறே என் எழுத்துக்களை ரசிப்பதாய் கூறியது என் எழுத்துக்கள் அழகானதாய் மாற நீங்கள் கொடுக்கும் உற்சாகமாய் கருதுகிறேன் தோழா..

மிக்க நன்றி மீண்டு வருக

விஜய் said...

மிக்க நன்றி அன்பின் அஷீதா,

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு பின்னூட்டம் இட்டு இருக்குறீர்கள், மிக்க சந்தோசம், கண் முன் படமாய் ஓடுவதாய் கூறி இருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது, உங்கள் உற்சாகத்தையும் கையில் எடுத்துகொண்டு பயணிக்கிறேன் ..

நன்றி அஷீதா

Sivamurugan said...

நான் இங்க ஒன்னு சொல்லுறேன் இவனுக்கு மாமா பொண்ணு இல்ல அதனால இங்க எழுதி இருக்கிறான். இதுக்கே இப்டினா, இருந்து இருந்தா எப்படி எழுதி இருப்ப

harini said...

nice..
nee vandhuvida vendum endru engiya en manathai purinthavan pola vanthu nindrai...
arumaiyana varigal..

விஜய் said...

மிக்க நன்றி அன்பின் சிவமுருகன்,

வழக்கமாக் வலைப்பக்கமே வராத நீங்க, உங்கள் கருத்தை பதிவு செய்து இருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது ,
ஹ ஆஹா ஹ ஹ ஹ அஹ

மிக்க நன்றி

விஜய் said...

மிக்க நன்றி அன்பின் ஹரிணி,

நீண்ட நாட்களுக்கு உங்கள் உங்கள் பின்னோட்டத்தை என் வலைத்தளத்தில் காண்பது சந்தோசம் அளிக்கிறது,
உங்கள் ஒவ்வொரு கருத்தும் என்னை அழகாய் எலுதுஅ முயற்சிக்க தூண்டும்..

மீண்டும் வருங்க..நன்றி உங்கள் வருகைக்கும் பின்னோட்டதிர்க்கும்

தேவன் மாயம் said...

எப்படி கேட்க உன் அம்மாவிடம் நீ எங்கே என்று?, எப்படி சொல்ல என் இதயம் கனக்கிறது என்று.என் கைபிடித்து இழுத்து, சாப்பிட அழைத்த உன் அம்மாவிற்கு தெரியாது கனத்த இதயத்தில் காற்று நுழைவதே கடினம் என்று, இதில் சாப்பாடு எப்படி..//

உணர்வுகளை உருக்கி வடித்திருக்கிறீர்கள்!!

விஜய் said...

மிக்க நன்றி அன்பின் தேவன் மாயம்,

முதன் முதலாய் என் வலைத்தளத்திற்கு வந்தமைக்கு முதலில் நன்றி தேவன் மாயம், அவர்களே.உங்களை போன்றோர் விட்டுசெல்லும் பின்னூட்டங்களை பொறிக்கி என் தவறுகளை திருத்தி கொள்கிறேன், இன்னும் அழகான முயற்சிகளை மேற்கொள்ள உங்களது பாராட்டுகளை பத்திரமாய் வைத்துகொள்கிறேன் ..

மீண்டும் வருங்க..நன்றி உங்கள் வருகைக்கும் பின்னோட்டதிர்க்கும்

அப்துல்காதர் said...

ரொம்ப நல்லாயிருக்கு விஜய்..

கதையை ஒரு கவிதை மாதிரியே எழுதியிருக்கீங்க..

shansamy said...

என் அத்தை மகள் பெயர் நந்தினி இல்லையே.
என் பழைய நினைவுகள்....
மனதை ஈரம் செய்தது,

நல்ல வெளிப்பாடு. நன்றி

விஜய் said...

மிக்க நன்றி shan அவர்களே,
மிக்க மகிழ்ச்சியா இருக்கு உங்கள் பின்னோட்டம் பார்க்கும் பொழுது, இந்த பதிவில் கூறி இருக்கும் பசுமையான நினைவுகள் அனைவரையும் ஏதோ ஒரு தருணத்தில் தொட்டு சென்று இருக்கும் என்பது ஏறக்குறைய சரியான ஒன்று தான் என நினைக்கிறேன்...மிக்க நன்றி உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்..

மீண்டு வருக,

விஜய் said...

மிக்க நன்றி அப்துல் தோழா,
உங்கள் பின்னோட்டம் என் எழுத்துக்களை இன்னும் அழகானதாய் மெருகேற்றும் தோழா, இனி எனக்கானாதாய் வந்து சேரும் வாழ்த்துக்களில் உங்களது கருத்துரையின் உற்சாகத்திற்கும் பங்கு இருக்கிறது, மிக்க நன்றி தோழா ..

Post a Comment