பள்ளிபருவ நாட்களில் ஏதோ ஒரு ஞாயிற்றுகிழமை மாலை நேரப்படத்தில் ஒரு காட்சி. ஹீரோ, ஹீரோயின் வயிற்றில் கைவைத்து பார்த்துவிட்டு சிறிது நேரத்தில் முகத்தில் மலர்ச்சியுடன்,சிரிப்புடன் குழந்தை உதைக்கிறது என்று சந்தோசத்துடன் கூறிவிட்டு, துள்ளிகுதித்துவிட்டு பாட்டுபாடுகிறார்.சண்டைகாட்சிகள் வரும் வரும் என்று எதிர்பார்த்து காத்து இருந்த எனக்கும் என் நண்பர்களுக்கும் அத்தனை கோபம்.இதெல்லாம் ஒரு ...படம்,குழந்தை உதைக்குதாம இதைகேட்டஉடனே இவருக்கு சந்தோசமாம.முடியலட சாமி, வில்லன இவன் உதைப்பான்னு பார்த்த, இவன இவன் குழந்தை உதைக்குதாம,இதை கேட்டு சந்தோசத்துல பாட்டு பாடுகிறாராம அப்டின்னு இடத்தை விட்டு கிளம்பிய ஞாபகம்.
நமது வாழ்க்கையில் சில நிகழ்வுகளை கேட்டறிவதிலும், பார்த்தறிவதிலும், எத்தனை படத்தினாலும்,யதார்த்தமாய் நுண்ணியதாய் உணர்த்திவிடமுடியாது, நாம் அதை கடந்து செல்லும் கணம் மட்டுமே முழுமையாய் உணர முடியும் என்பதை என் வாழ்க்கைபயணத்தின் ஒவ்வொரு நொடியிலும் உணர்கிறேன்.மனைவியின் வயிற்றில் இருக்கும் தன் குழந்தை உதைப்பதை உணர்கிற கணவனின் முகத்தில் எத்தனை மாற்றங்கள்,உடம்பு முழுவதும் ஏதோ ஒரு அசட்டு தைரியம் தீடிரென பாய்ந்து நரம்புகளில் சீறி தன் குழந்தை உதைத்து பழகுகிறது,உள்ளே விளையாடிக்கொண்டிருக்கிறது,காண முடியாமல் தவிக்கும் நிகழ்வை, எப்படி ஒரு கேட்குமறிவாலும், பார்க்குமறிவாலும், சினிமாவாலும் நூறுசதவீதம் முழுமையாய் கொண்டுவந்து சேர்க்கமுடியும் என்பதை இப்பொழுது உணர்கிறேன் உன் அப்பாவான என்னை நீ உதைக்கும் இத்தருணத்தில் .
இப்படிக்கு,
உன் அப்பா..
0 comments:
Post a Comment