Thursday, July 1, 2010
கணவன் (என்கிற) காதல்
உன்னை மணந்த நாள் முதல் இன்று வரை உன்னை நேசிக்கிறேன்
நாம் இருவரும் ஒன்றாய் நின்று கொண்டு இருப்போம்,நமக்கு முன்னே இருக்கும் ஒரு இலக்கை காட்டி,
அதை தொடுபவர் வெற்றியாளர் என்பாய், நான் 1,2 3 சொல்லியவுடன் ஆரம்பிக்க வேண்டும் என்பாய் ..
3 சொல்லி முடித்து இருப்பாய்... சிறுது நேரம் கழித்து இருவரும் சிரித்துகொண்டு இருப்போம் சிறிதும் நகராமல்,
நீ முதலில் அல்லது நான் முதலில் வருவோம் என்று நினைத்து ஏமார்ந்து போன இலக்கை பார்த்து ....
என்னுடன் மோதிப்பார் என்று என் கைபிடித்து நாற்காலியில் வைத்து சாய்த்து பார் என்பாய், ஆரம்பிப்பதற்கு முன் சொல்வாய் இருமுறை மோத வேண்டும் என்று, ஆளுக்கொரு முறை வெற்றிபெற்றுவிட்டு சிரித்துகொண்டே செல்வோம், இன்னும் அந்த நாற்காலி எத்தனை முறை தான் ஏமாறும், யாரவது ஒருவர் ஒருநாள் வெற்றிபெறுவார்கள் என்று...
சமைக்கும் பொழுது விரல்களை சுட்டுக்கொண்டு சத்தம்போடுவாய்,பதறிக்கொண்டு ஓடிவந்து, கலங்கிய கண்களுடன் மருந்து தடவி முடிக்கும் பொழுது, அழ ஆரம்பிப்பாய்,
நிமிர்ந்து பார்க்கும் என்னிடம் ஒன்றுமில்லை என்பாய், உன்னை சுட்டுவிட்ட பாத்திரம் கூட நிச்சயம் மன்னிப்பு கேட்டு இருக்கும்...
அதிகாலையில் நீ என் நெற்றிபொட்டில் சத்தமில்லாமல் உன் முத்தங்களை விட்டு செல்லும் பொழுது முணு முணுக்கிறாய்,நன்றி கடவுளே என்று, நான் கடவுளை நம்பாதவன், நான் யாருக்கு நன்றி சொல்வது என்று தவித்த தருணங்கள் உண்டு.நீ கொடுத்த முத்தங்களை பத்திரமாய் வைத்து இருந்து, நீ உறங்கிய பின்பு உனக்கு திருப்பிதந்து இருக்கிறேன்.
நீ ஊருக்கு சென்ற நாட்களில் உன் பிரிதலின் வழியால் கண்கலங்கி இருக்கிறேன், ஏன் அழுதும் இருக்கிறேன், உண்மையை சொல்ல வெட்கம் ஒன்றும் இல்லை எனக்கு.ஊரிலிருந்து தொலைபேசியில் நீ என்னிடம் கேட்கும் பொழுதெல்லாம், நான் நன்றாக இருக்கிறேன் என்று என் உதடுகள் பொய்யை உதிர்க்கும், நீ திரும்பி வந்து நிற்கும் பொழுது ,என் கண்கள்- உதடுகள் கூறிய பொய்யை உடைக்கும்.
அன்றும் அப்படி தான் உன்னை மருத்தவமனை அறைக்குள் அனுப்பி வைத்துவிட்டு, கலங்கிய கண்களோடு காத்திருந்தேன்.நீண்ட நேரங்களுக்கு பிறகு வந்த மருத்துவர், நம் குழந்தையை கையில் கொடுத்துவிட்டு, மன்னிக்கவும் என்றார்கள், சந்தோஷத்தில் சிரிக்க ஆரம்பித்த என் உதடுகள், கண்கள் கேள்வியுடன் மருத்துவரை பார்த்தன, கால்கள் முந்திக்கொண்டு ஓட ஆரம்பித்து உன் அறையில் நின்றது.
உறங்கியது போன்ற உன் முகம், சொல்லவந்து ஏமாந்ததின் தோற்றமாய் உன் கண்கள் மூடி இருந்தன.புரிந்ததடி புரிந்ததடி உனக்கு இனி வலிக்காது என்று தெரிந்த போதும் உன்னை அடித்தேன், என்னை சுற்றி அத்தனை பேர் இருந்தும் நீ மட்டும் வேண்டும் , நீ மட்டும் வேண்டும் என்று கதறிநேனடி,என் அருகிலே இருந்தாய் பேசமுடியவில்லையடி,
கணவாய் இருக்ககூடாதா என்று மனம் ஏங்கியதடி, நீ என்னை அழ விடாமல் பாதுகாத்து வைத்து இருந்த கண்ணீரெல்லாம்,இப்பொழுது கரைந்து கொட்டுதடி,விழித்து என் கண்ணீரை துடைக்கமாட்டாய என்று ஏங்குதடி , உன்னோடே இறக்கவிடாமல் எனக்காக ஒரு இளம் உயிரை தந்து விட்டாய்.எப்படி உன்னோடு இறப்பேனடி....
இன்றோடு 20 வருடங்கள் ஆகுதடி, நான் உன்னை எனக்குள் புதைத்து, இன்னும் நீ மட்டுமே மனம் வீசிக்கொண்டு இருகிறாய், இப்பொழுது நானும், நம் மகளும் தானடி இங்கு வந்து இருக்கிறோம், அவள் பிறந்தநாளை சமர்பிக்க...
பிறந்த நாள் வாழ்துக்கள் "சுருதி ", நீ ரொம்ப அழகாய் இருக்கிறாய் , நான் உன்னை காதலிக்கிறேன் "சுருதி ",நீ என்னை காதலிக்கிறாயா என்று சொல் ,
இல்லை அருண், நான் உன்னை காதலிக்கவில்லை , .....
உனக்கு என் காதலின் அர்த்தம் புரியவில்லை சுருதி,அதான் என்னை வெறுக்கிறாய்...
காதலின் அர்த்தம் புரிய வேண்டுமா அருண் , பார் அங்கே,அவர் தான் காதலின் அர்த்தம், இறந்த பின்பும் மனைவியின் காதலை இன்னும் நினைவிலும், கல்லறையிலும் தேடுகிறார்.என்னில் அழகை தேடிய உன்னிடம் எப்படி காதலை தேடுவது ? ...
திரும்பி பார்க்கிறேன் என் மகள் யாரோ ஒரு பையனிடம் என்னை நோக்கி கையை நீட்டிக்கொண்டு பேசிக்கொண்டு இருக்கிறாள் ....
 
Subscribe to:
Post Comments (Atom)
45 comments:
அனுபவ பதிவோ என்று பயந்து விட்டேன் விஜய்... அழகாகவும், கனமாகவும், திடமாகவும் இருக்கிறது...
கதை அருமை. ஒரு திரைப் படத்தின் சாயல். நன்றாக் எழுதியிருகிறீர்கள்.தொடர்க. வாழ்த்துக்கள். நட்புடன் நிலாமதி அக்கா
Nice one!
புரிந்ததடி புரிந்ததடி உனக்கு இனி வலிக்காது என்று தெரிந்த போதும் உன்னை அடித்தேன்//நான் ரசித்தது
இதில் சில உங்கள் ஆசையா.....
kALAKKURA MAKKA , ARUMAIYANA , ALAMANA , VALIYANA , KADHALAI SOLLI IRUKKIRAI NANBA VALTHUKKAL ...
இன்றோடு 20 வருடங்கள் ஆகுதடி, நான் உன்னை எனக்குள் புதைத்து, இன்னும் நீ மட்டுமே மனம் வீசிக்கொண்டு இருகிறாய்.
அதிகாலையில் நீ என் நெற்றிபொட்டில் சத்தமில்லாமல் உன் முத்தங்களை விட்டு செல்லும் பொழுது முணு முணுக்கிறாய்,நன்றி கடவுளே என்று, நான் கடவுளை நம்பாதவன், நான் யாருக்கு நன்றி சொல்வது என்று தவித்த தருணங்கள் உண்டு.நீ கொடுத்த முத்தங்களை பத்திரமாய் வைத்து இருந்து, நீ உறங்கிய பின்பு உனக்கு திருப்பிதந்து இருக்கிறேன்.
நீ கொடுத்த முத்தங்களை பத்திரமாய் வைத்து இருந்து, நீ உறங்கிய பின்பு உனக்கு திருப்பிதந்து இருக்கிறேன்.
/////////
அழகு.........
அழகிய கவிதையை மிளிர்கிறது இந்த கதை
தொடர்ந்து எழுதுங்கள்
வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி வீரா ,
அனுபவ பதிவில் இதைவிட இன்னும் கனமாகவும், திடமாகவும், உணர்வோடும் எழுத முடியும், :) ..இப்போதைக்கு கனவு பதிவு தான் இது ...மிக்க நன்றி வீரா உன் கருத்துகளுக்கு ...மீண்டும் வருக ..
மிக்க நன்றி பிரசன்னா ,
உங்களை போன்றோரின் உற்சாகம் தான் என்னை போன்ற கத்துக்குட்டிகளை காலூன்றி நடை பழக செய்கிறது ...மிக்க நன்றி பிரசன்னா உங்கள் பின்னூட்டத்திற்கு
மிக்க நன்றி நிலாமதி அக்கா ,
:) ...
திரைபடத்தின் சாயல் தெரிகிறதா?, என்னை புகழ்றீங்களா, இகல்றீங்களா? தெரியல, சரி விடுங்க , அக்கா எது சொன்னாலும் தம்பியின் முன்னேற்றத்திற்க்காக தான் இருக்கும்,
நன்றி அக்கா மறக்காம உங்க தம்பிக்கு உங்கள் கருத்தை பின்னூட்டமாக இட்டதிற்கு....அன்புடன் உங்க தம்பி ....
மிக்க நன்றி சௌந்தர்
யாருக்கு தான் ஆசை இல்ல சொல்லுங்க சௌந்தர் :) ..
இப்படி எல்லாம் பாத்துக்கணும், கையில் வைச்சு மனைவிய தாங்கனும் அப்டின்னு எல்லோரும் தான் நினைக்குறாங்க, அனா அவுங்க தொழில், வியாபாரம், குடும்பசுமை அப்படி, இப்படின்னு வாழ்க்கைய வாழ்ந்து பாக்காமலே இறந்துடுறாங்க ....
மிக்க நன்றி சௌந்தர் உங்கள் பின்னூட்டத்திற்கு
மிக்க நன்றி சிவராஜன்,
நீங்கள் வாழ்த்த வாழ்த்த என் அடுத்து வெளியிடும் பதிவுகளை மெருகேற்றி அனுப்ப முயற்சிக்குறேன்..நான் நன்றிக்க எழுதுவதிற்கு உங்களை போன்ற நண்பர்கள் தான் காரணம்
மிக்க நன்றி சிவராஜன் உங்கள் பின்னூட்டத்திற்கு
மிக்க நன்றி செந்தில் ,
என் எழுத்திற்கு மிக பெரிய அங்கீகாரம் கொடுத்தது நீங்களும், தேவா அண்ணாவும் தான், நிஜமா நான் ஏதோ எழுதுறேன் நல்லா இருக்குன்னு சொன்னவங்க நீங்க தான் ...நான் நல்லா எழுதறனா அப்டின்னு இன்னும் எனக்கு சரியா தெரியல, என்னை பொருத்தவரைக்கும் இப்பவும் நான் கத்துக்குட்டி தான்
மிக்க நன்றி செந்தில் உங்கள் பின்னூட்டத்திற்கு
மிக்க நன்றி உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com)
,
உங்களை போன்றோரின் உற்சாகம் தான் என்னை போன்ற கத்துக்குட்டிகளை காலூன்றி நடை பழக செய்கிறது ...மிக்க நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு
யாரோ ஒரு கவிஞன் சொன்னான்......காதல் என்பது கொடுப்பது அல்ல...பெறுவதுமல்ல....அது நிகழ்வது.....! இதோ அப்பட்டமான உனது கவிதை நடை காவியமான இந்தக் கட்டுரை சொல்ல முயல்வதும் இதுதானே தம்பி....
நான் விக்கித்துப் போய் நிற்கிறேன் தம்பி....
//சமைக்கும் பொழுது விரல்களை சுட்டுக்கொண்டு சத்தம்போடுவாய்,பதறிக்கொண்டு ஓடிவந்து, கலங்கிய கண்களுடன் மருந்து தடவி முடிக்கும் பொழுது, அழ ஆரம்பிப்பாய்,
நிமிர்ந்து பார்க்கும் என்னிடம் ஒன்றுமில்லை என்பாய், உன்னை சுட்டுவிட்ட பாத்திரம் கூட நிச்சயம் மன்னிப்பு கேட்டு இருக்கும்...//
காதல் மிகுதியால் காதலியின் வலியினை உள்வாங்கிக் கொண்டு...அந்தக் கதறலை வலியை தாங்கமுடியாமல் பாத்திரம் கூட மன்னிப்பு கேட்கும் என்று கூறியிருப்பது...மிகைப்பட்ட காதலுணர்வி வெளிப்பாடு தம்பி...!
//நீ ஊருக்கு சென்ற நாட்களில் உன் பிரிதலின் வழியால் கண்கலங்கி இருக்கிறேன், ஏன் அழுதும் இருக்கிறேன், உண்மையை சொல்ல வெட்கம் ஒன்றும் இல்லை எனக்கு.ஊரிலிருந்து தொலைபேசியில் நீ என்னிடம் கேட்கும் பொழுதெல்லாம், நான் நன்றாக இருக்கிறேன் என்று என் உதடுகள் பொய்யை உதிர்க்கும், நீ திரும்பி வந்து நிற்கும் பொழுது ,என் கண்கள்- உதடுகள் கூறிய பொய்யை உடைக்கும்.//
கொன்னுட்ட தம்பி.....சான்ஸே இல்லாத உணர்வினை வார்த்தைகளுக்குள் கொண்டு வந்திருக்கும் நேர்த்தியன வரிகள்.
ஏனோ தெரியவில்லை...முடிக்கும் போது வலியோடு இருக்கிறே...என்னை உன்னுடைய உரை நடைக்கவிதை வேறு ஒரு தளத்தில் பயணிக்க அழைத்திருக்கிறது.....
சமகாலத்தில் நான் படிக்கும் எழுத்துக்களில்...அற்புத வலிவான எழுத்துக்கள் உன்னுடையதுப்பா....
வாழ்த்துக்கள் தம்பி..!
மிக்க நன்றி யோகினி அவர்களே ,
நிச்சயம் இன்னும் அழகான படைப்புகளை தர முயற்சிக்குறேன்
மிக்க நன்றி யோகினி உங்கள் பின்னூட்டத்திற்கு
மிக்க நன்றி என்று ஒரு வார்த்தையில் சொல்லி முடிக்க முடியாதா அழகானா பாசம் உங்க பாசம்,
கிறுக்கிவிட்டு ஓடி விடுவேன் என் வலைதளத்திலிருந்து, என்னை பிடித்து உட்கார வைத்து, நீ நல்லா தான் எழுதுற, இன்னும் நிறையா எழுது, நான் உன் எழுத்தை விமர்சிக்குறேன் என்று என்னை உற்சாக படுத்தியது நீங்க தான் ..உங்களிடம் நல்ல பெயர் வாங்க தான் இத்தனை பதிவும், நல்ல பெயர் வாங்கிகொண்டு இன்னும் நிறையா பதிவுகளை எழுத முயற்சிக்குறேன் அண்ணா..
நீங்கள் என்னோடு இருக்குறீர்கள் என்ற நம்பிக்கையில்...
மிக்க நன்றி தேவா அண்ணா ...
கதை அருமை.
மிக்க நன்றி அஹமது இர்ஷாத்,
நிச்சயம் இன்னும் அழகான படைப்புகளை தர முயற்சிக்குறேன்
மிக்க நன்றி அஹமது இர்ஷாத் உங்கள் பின்னூட்டத்திற்கு
படிக்கும் போது மனம் கடந்து படைப்போடே பயணிக்கிறது.
முடிவில் உணர்வுகள் சிலிர்க்கின்றன.
வாழ்த்துக்கள்.
chanceles.very nice and superb. You have lot of talents dude.. So nice dude.
மிக்க நன்றி "மால்குடி" அவர்களே
நிஜமாய் நான் உங்களை பயணிக்க வைத்து இருக்கிறேன் என்றால், நான் எதோ எழுதி இருக்கிறேன்னு புரிகிறது, மிக்க நன்றி உங்கள் ஊக்கத்திற்கு,
மீண்டும் வருக ...
நன்றி உங்கள் கருத்திற்கும், பின்னூட்டத்திற்கும் "மால்குடி" அவர்களே
மிக்க நன்றி சுரேஷ்
எழுத ஆரம்பித்த பொழுது என் எழுத்தை ரசித்த சில பேரில் நீங்களும் ஒருவர், ஆதலால் இந்த எழுத்துக்கு பின்னால் உங்கள் ஊக்கமும் மறைந்து இருக்கிறது நண்பா ...
மிக்க நன்றி நண்பா உன் பின்னூட்டத்திற்கு ..மீண்டும் வருக
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்றுக்கொள்ளவும்.
http://amaithicchaaral.blogspot.com/2010/07/blog-post_02.html
சத்தியமாக உடம்பு சிலிர்க்குதுங்க ..!! வேறு வார்த்தைகள் இல்லை ...!! இன்னும் நிறைய எழுதுங்க ..!!
மிக்க நன்றிங்க "அமைதிச்சாரல்" அவர்களே
கத்துகுட்டியான எனக்கும் விருது கொடுத்து பாராட்டியதற்கு மிக்க நன்றிங்க...இன்னும் நான் அழகா எழுத முயற்சி செய்கிறேன்...
ரொம்ப நன்றி ""அமைதிச்சாரல்" அவர்களே,என் பதிவை படித்து உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டதிற்கு ..மீண்டும் வருக
மிக்க நன்றிங்க ப.செல்வக்குமார்
நான் அவ்வளவு அழகா எழுதி இருக்கனா அப்டின்னு தெரியல,இருந்தாலும் உங்களுடைய கருத்திற்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி தோழா
ரொம்ப நன்றி ப.செல்வக்குமார் ,
என் பதிவை படித்து உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டதிற்கு ..மீண்டும் வருக
very nice blog........plz visit my blog if time permits.............http://lets-cook-something.blogspot.com/
விஜய் என்ன சொல்லுறதுன்னே தெரியல. இந்த நிகழ்வுகள ஒரு படமா மனசுக்குள்ள ஓட்டிப்பார்த்தேன். மனசுல மத்தாப்பு கொளுத்துன மாதிரி இருந்துச்சு. தலைகால் புரியாமன்னு சொல்லுற மாதிரி மனசு கிடந்து தவிக்குது இத படிச்சுப்புட்டு.
செம டச்சிங்க் மச்சி.
Good
Nice Post :-)
மிக்க நன்றி "callmeasviju" அவர்களே,
இன்னும் அழகாக எழுத முயற்சிக்குறேன், மிக்க நன்றி உங்கள் கருத்துக்களை பின்னூட்டமாய் அனுப்பியதற்கு
மிக்க நன்றி ஜீவன்பென்னி அவர்களே,
நீங்க புகழ்கிற அளவுக்கு நான் எழுதி இருக்கனா என்று தெரியவில்லை, இருந்தாலும் இன்னும் நன்றாக எழுத முயற்சி செய்கிறேன்..
இன்னும் அழகாக எழுத முயற்சிக்குறேன், மிக்க நன்றி உங்கள் கருத்துக்களை பின்னூட்டமாய் அனுப்பியதற்கு
மிக்க நன்றி seenu அவர்களே,
இன்னும் அழகாக எழுத முயற்சிக்குறேன், மிக்க நன்றி உங்கள் கருத்துக்களை பின்னூட்டமாய் அனுப்பியதற்கு
மிக்க நன்றி Karthick Chidambaram ,
இன்னும் அழகாக எழுத முயற்சிக்குறேன், மிக்க நன்றி உங்கள் கருத்துக்களை பின்னூட்டமாய் அனுப்பியதற்கு
மிகவும் அழகா எழுதி இருக்கிங்க விஜய். படிக்கும்போதே மனதை ஏதேதோ செய்தது.மிகவும் வலியுடன் இருந்தது ஒவ்வொரு வரிகளும்.
மிக்க நன்றிங்க பிரியா,
நான் அந்த அளவுக்கு எழுதி இருக்கனா அப்டின்னு தெரியல, ஆனாலும் இன்னும் அழகாய் எழுத முயற்சிக்குறேன்.
மிக்க நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு ..
நன்றி மீண்டும் வருக
Romba nalla iruku vijay anna, padikumpodu apadiye manasellam baram agi aluga warra madi irundadu.hmm warthaye warala.
keep it up
மிக்க நன்றிங்க சாந்தி,
என் எழுத்தை ரசித்தற்கு உங்களுக்கு மிக்க நன்றி சாந்தி, இன்னும் தவறுகள் இருப்பின் அதை சுட்டியும் காட்டலாம்,
மிக்க நன்றி உங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் ....
நீ என்னிடம் கேட்கும் பொழுதெல்லாம், நான் நன்றாக இருக்கிறேன் என்று என் உதடுகள் பொய்யை உதிர்க்கும், நீ திரும்பி வந்து நிற்கும் பொழுது ,என் கண்கள்- உதடுகள் கூறிய பொய்யை உடைக்கும்.]]
அருமை அருமை
மிக்க நன்றி ஜமால்
முதல் முறையாய் என் வலைதளத்திற்கு வந்து இருக்கிறீர்கள், எனது தாழ்மையான வரவேற்ப்பு, எனது கவிதையை கோடிட்டு வாழ்த்தி இருக்கிறீர்கள், மிக்க சந்தோசம், உங்களை போன்றோரின் உற்சாகம் தான் என்னை எழுத செய்கிறது , நன்றி
மிக்க நன்றி ஜமால் உங்கள் வாழ்த்திற்கும், உங்கள் பின்னூட்டத்திற்கும்..
அருமை...எல்லாவரிகளுமே...
mikka nantri malar.....
Best Husband and Wife Quotes in Tamil
Post a Comment