Saturday, June 26, 2010

யார் கடவுள்?, கடவுள் இருக்கிறாரா ?..வாங்க தோழர்களே இன்னைக்கு நீங்களும் நானும் விவாதிப்போம்...

எதை பற்றி பேச போறோம்.?

கடவுள் யாரு? , கடவுள் இருக்காற இல்லையா?, கொஞ்சம் கடினமான விவாதம் தான். இருந்தாலும் பதிவுக்குள்ள போவோம் வாங்க ...

கடவுள் இருக்கிறார் என்பது உங்களது விவாதாமாய் இருக்கட்டும்..கோடி கணக்குல மக்கள் நேசிக்கிறாங்க அப்டினா நிச்சயம் கடவுள் அப்டிங்கறவரு ரொம்ப நல்லவராவும், வல்லவராவும் ,கருணை குணம் கொண்டவராகவும், நேசிக்கிரவராவும் இருக்கணும், சரிதானுங்களே நான் சொல்றது?.சரி,.படைத்தல் , காத்தல் , அழித்தல் ..இந்த மூணு செயலையும் கடவுள் செய்கிறாரு, அதனால இதில் என்ன தவறு நடந்தாலும் ,இந்த மூன்று செயல்களுக்கும் இவரு தான் பொறுப்பாளி, சரிதானுங்களே நான் சொல்றது?..சரி,முதல்ல "படைத்தல் ", ஊனமுற்ற பிஞ்சு குழந்தைகள், கை இல்லை, கால் இல்லை, முகம் இல்லை, இதயம் இல்லை, வாழ்க்கை முழுவதும் மனசலவுளையும், உடலளவுளையும், ஏங்கி தவிக்கிற ஊனமுற்ற படைப்பு,

முன் ஜென்மத்துல பண்ணின தப்பு அதான் இப்படி படைச்சு இருக்காரு, இது தான உங்க கேள்வி நிறைந்த பதில் ?.. சரி ஊனமா இருக்குறவங்க கிட்ட கேட்கலாம் நீங்க என்னவா இருந்தீங்க போன ஜென்மத்தில?, பதில் நிச்சயம் "தெரியவில்லை" என்று தான் இருக்கும்...என்னவாய் பிறந்தோம், என்ன தவறு பண்ணினோம் என்று தெரியாதவனக்கு, தண்டனை கொடுத்து, புரியவைக்க இப்படி படைத்தேன் என்று கூறுவது , உங்களுக்கு எப்படி தோன்றுகிறது - (மடத்தனமாய்) ?....


இரண்டாவது "காத்தல்" , 16 வயசு நம்ம சகோதரி, 7 காமுகர்களால கற்பழிக்க படுகிறாள், கதறுவதை காக்க முடியாத கேவலமான காத்தல். இரக்கமே இல்லாம ஒரு தீவிரவாதியால அப்பாவியான மக்கள் சுடப்பட்டனர், மனசாட்சியே இல்லாத ஒரு அரசியல்வாதியால் ஒரு இனமே அழிந்துவிட்டது இலங்கையில்,

இந்த ஜென்மத்துல அல்லது போன ஜென்மத்தில பண்ணின தப்பு, இது தான உங்க கேள்வி நிறைந்த பதில் ?
முன் ஜென்மத்தில பண்ணின தப்புக்கு கதற கதற கற்பை பறிகொடுப்பது தான் பரிகாரமா?, தன்னை தாக்குவதுகூட தெரியாம தன் உயிரை கொடுக்கறது தான் பரிகாரமா?, போர்க்கலாமே போகாம என் சகோதர , சகோதரிகளின் அங்கங்கள் சிதறி உயிரோட துடிச்சு சாகுறது தான் பரிகாரமா, முன் ஜென்மத்தில் செய்த தவறு என்று கூறிகொள்ளும் கேவலமான காத்தல் ...
உங்களுக்கு எப்படி தோன்றுகிறது - (மடத்தனமாய்) ?....


மூன்றாவது "அழித்தல்", இன்னும் தானே சுற்றிக்கொண்டு இருக்கிறான் பல சின்னஞ்சிறு குழந்தைகளை கொன்றவனும், பல ஆயிரம் கோடிகளை தான் மட்டுமே தின்று, பல ஆயிரம் மனித உயிர்களை பட்டினியில் சாகடித்து, தான் மட்டும் வாழும் தமிழ் தலைவன் எனும் அரசியல்வாதி, இலங்கையில் என் சகோதரிகளின் கற்பை சூறையாடிய, இலங்கை ராணுவ வீரன் எனும் அயோக்கிய மிருகங்கள்,

இந்த ஜென்மத்துல அல்லது போன ஜென்மத்தில பண்ணின புண்ணியம் அதான் அவனுக்கு கடவுள் தண்டனை கொடுக்கவில்லை,இது தான உங்க கேள்வி நிறைந்த பதில் ?
உலகம் அறியா குழந்தைகள கொன்னு இருக்கான், ஒரு பொண்ணுகிட்ட இருந்து கட்டாயபடுத்தி கற்பை பெறுகிறான், தன் சுயநலத்துக்காக,உலகத்திலே மிக பெரிய கொடுமையான பட்டினி சாவுகளை செய்கிறான், அவன் எத்தனை புண்ணியம் பண்ணி இருந்தா என்னங்க, உடனே அழிக்கப்பட வேண்டாமா ? ,


இப்ப சொல்லுங்க ரொம்ப நல்லவரா? , வல்லவரா? ,கருணை குணம் கொண்டவரா? , நேசிக்கிரவரா? ...
இப்ப சொல்லுங்க கடவுள் இருக்காற இல்லையா?..பதில் உங்ககிட்ட இருக்கு, தேடுங்க...

இப்ப முடிவு பண்ணிடீங்க தானே கடவுள் இல்லைன்னு...

நாங்க எப்போ சொன்னோம் கடவுள் இல்லைன்னு , கடவுள் எங்களை எல்லாம் கஷ்டத்துல இருந்து காத்துக்கொண்டு தான் இருக்கிறார் அப்டின்னு சொல்றீங்களா?..
என்னங்க பெரிய காமெடியா இருக்கு உங்களால, சந்தோசமா வாழ்த்தி பாடுறீங்க, உங்க கஷ்டத்த தீர்த்து வைக்கிறாரு, அங்கங்கள் சிதைந்து,கதறி அழுதுகிட்டு கடவுள கூப்பிடுறாங்க, கடவுள் ஆளையே காணாம போயிட்டாருங்கலே, இது என்ன கணக்குங்க?, லஞ்ச கணக்கா ?,வாழ்த்தி பாடுகிறவன் கண்ணுக்கு வெண்ணை, கதறி கெஞ்சுறவன் கண்ணுக்கு சுண்ணாம்பா ? ..


சரி, அப்டினா தப்பு பண்றவங்க எல்லாம் தண்டிக்கப்படுறாங்களா ?, இல்லையா ?..

"ஒவ்வொரு வினைக்கும் அதற்க்கு சமமான எதிர் வினை உண்டு."
"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்,"
"தன்வினை தன்னை சுடும் "
"வினை விதைத்தவன் வினை அறுத்தே தீர வேண்டும் "

நிச்சயம் தண்டிக்க படுறாங்க, ஏமாற்றி கோடி கோடியா சம்பாதித்தவன்,அதை அனுபவிக்க முடியாம, அனுபவிக்காம செத்து போயிடறான், எப்படின்னு தெரியுங்களா ?, தீராத நோய் வந்து, வாழ்க்கையின் கடைசி நாட்களை படுக்கையில் படுத்துக்கொண்டு , பையன் பக்கத்துல இருப்பான், மனைவி பக்கத்துல இருப்பாள், மருத்துவர் பக்கத்துல இருப்பாரு, சொந்தகாரங்க எல்லாம் பக்கத்துல இருப்பாங்க, ஆனா அவன் மட்டும் தான் வலியை உணர்ந்து, உணர்ந்து கதறி கதறி அழுது இறப்பதற்கு முன் தண்டனை பெறுவான்,
சரி அவன் சேர்த்து வைத்த சொத்து என்ன ஆகிறது, அவனக்கு ஊதாரி மகன், அல்லது ஊதாரி பேரன் எவனாவது ஒருத்தன் பிறந்து ,அதை அழித்து, எங்கு இருந்து எடுக்கப்பட்டதோ,அங்கேயே திருப்பி கொடுக்கப்படும்.

சரி, துடிக்க துடிக்க கொலை செய்தவனின் நிலைமை?, கண்டிப்பா அவனும் ஒரு நாள் துடிக்க துடிக்க சுட்டு கொல்ல படுகிறான்.அல்லது கொல்ல படவில்லை என்றால் துடிக்க துடிக்க கொல்லப்பட்டே தீர வேண்டும் நிச்சயம்.

என்னங்க என் கருத்த ஏற்றுகொள்ள முடியவில்லையா?, சரி வாங்க, நம்மலே நேரடியா முயற்சி செய்து பார்ப்போம். எங்காவது ஒரு இரண்டு ரூபாய் ஏமாத்திட்டு வந்துடுங்க, அந்த நாளோட இறுதி, மாதத்தோட இறுதி, வருசத்தோட இறுதியில் நீங்கள் ஏமாற்றிய அளவு நிச்சயம் இன்னொருவனிடம் ஏமாந்து இருப்பீர்கள். இது காமெடியான விஷயம் இல்லைங்க,

இப்ப முடிவு பண்ணிடீங்க தானே கடவுள் இல்லைன்னு...

சரி, யாரு கடவுள்?..

தன்னையே நாட்டிற்காக அர்பணித்து இன்றும் வாழும் தலைவர்கள், தன் தேசம் காக்க,உயிரை கொடுக்கும் இராணுவ வீரன், பல அநாதை இல்லங்களில் சம்பளம் வாங்காமல் அன்பை காணிக்கையாக்கும் என் சகோதர்கள்,சகோதரிகள், தப்பு செய்பவர்களை தலை எடுக்க புறப்பட்டு இருக்கும் என் அண்ணன்களும், தம்பிகளும், எங்கோ கஷ்டபடுகிறார்கள் என்று தெரிந்ததும் தன்னால ஆனா உதவியை செய்யும் என் தேசத்து நண்பர்கள், குக்கிராமங்களில் வாழும் ஏழைகளின் படிப்பையும், வாழ்க்கையையும் நான் பார்த்து கொள்கிறேன் என்று தோல் கொடுக்கும் என் தேசத்து இளைஞன்,
தன்னால் முடிந்த விழிப்புணர்வை எழுத்துக்கள் மூலம் பற்றி எரிய செய்யும் வலைதளத்து நண்பர்கள்,

தன் எழுத்துக்களின் மூலம் ஒவ்வொரு இளைஞனுக்குள்ளும் இருக்கும் உணர்வுகளை எரியவிடும் திரு வாசன் அவர்கள், திரு நேசமித்திரன் அவர்கள், என் தேசத்து மக்களை பக்குவபடுத்தும் முயற்சியாய், சாதிகள் போன்ற பேய்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் என் அண்ணா திரு தேவா அவர்கள், என் சகதோர்களுக்கு பாசத்தையும் விழிப்புணர்வு ஊட்டும் என் அக்கா நிலாமதி அவர்கள், பெண்ணாய் பிறந்து என் தேசத்து இளைஞர்களுக்கு வீரம் கற்பிக்கும் கலகப்ரியா அக்கா அவர்கள்,என் தேசத்து மக்களுக்கு அமைதியை கற்றுதரும் முயற்சியில் தன் மகனுக்கு அமைதி விரும்பி என பெயர் சூடி, சட்டம் படிக்க சொல்லும் அமைதிஅப்பா,

தன்னால் முடிந்த செய்திகளை கொண்டுவந்து விழிப்புணர்வு ஏற்படுத்த முயலும் என் தம்பி சௌந்தர் ,தன்னால் முடிந்தவற்றை என்தேசத்து மக்களுக்கு செய்யும் என் நண்பர்கள் சி. கருணாகரசு அவர்கள், கனிமொழி அவர்கள்,அன்புடன் மலிக்கா அவர்கள் ,ஜீவன்பென்னி அவர்கள்,புஷ்பா அவர்கள்,பட்டாசு அவர்கள் ,நாய்க்குட்டி மனசு அவர்கள்,cheena (சீனா) அவர்கள்,தமிழ் அமுதன் அவர்கள், தமிழ் மதுரம் அவர்கள், வீரமணி அவர்கள்,
சிவராஜன் ராஜகோபால் அவர்கள்,

(என்தேசத்து மக்களை தன்னால் முடியும் வண்ணங்களில் மாற்ற துடிக்கும் நல இதயங்களை இங்கு அறிமுகபடுத்தி இருக்கிறேன் , இந்த பட்டியல் இதோடு நிற்பதில்லை, புதிய நல் உள்ளங்களை சந்திக்கும் ஒவ்வொரு கணமும் இங்கே மாற்றம் செய்யப்படும் ) ,

இல்லாத ஒன்றை கடவுள் என்று சொல்வதிற்கு பதிலாய்
இருக்கும் இத்தனை நல் உள்ளங்களை கடவுள் என்று சொல்லலாமே..

வேண்டவே வேண்டாம்.

இல்லாத ஒன்றின் பெயரை எதற்கு இத்தனை நல் உள்ளங்களுக்கு வைக்க வேண்டும்?...இயற்கையை மாற்ற துடிக்கும், இயற்கையை நேசிக்கும், இயற்கைக்கு உதவும் இவர்களுக்கு "இயற்கையர் " என்று பெயர் வைக்கலாமே!,

அட இயற்கையர் ஆகிறது பெரிய விஷயம் இல்லைங்க, பசியில் துடிக்கிற ஒரு குழந்தைக்கு சாப்பிட ஒரு தேனீர் வாங்கிகொடுத்தா நீங்க கூட இயற்கையர் ஆகிடலாமுங்க

(குறிப்பு:கடவுள் இருக்கிறார் என்பதை பற்றி யாரவது சொல்ல விரும்பினால் , இந்த சிறுவனுக்கு புரிய வையுங்கள், நிச்சயம் ஏற்றுகொள்கிறேன் கடவுள் இருக்கிறார் என்று அல்ல, நீங்களும் இயற்கையர் என்று")

                                                                                         
                                             

44 comments:

dheva said...

தம்பி... நீ மேலே அட்டூழியம் செய்வதாக, அனுபவிப்பதாக கூறியிருக்கும் அனைவரும் இயற்கையர்தானே? யார் அவர்கள்?

veeramanikandan said...

நன் கடவுள் - அகம்பாவமாய் இருக்கு
நீ கடவுள் - அதிகமா இருக்கு
நாம் கடவுள் - அட கேக்கவே நல்ல இருக்கு...
பட்டியலில் இந்த கடவுளையும் இணைத்த விஜய் கடவுளுக்கு நன்றி... ஆங்கிலத்துல panthiest நு சொல்லுவாங்க விஜய்... william words worth கூட நம்மள மாதிரி தான் இயற்கையை கடவுள்னு நம்பறவர்... தேவா அண்ணாவோட காசி அண்ணன் கூட இத தான் சொன்னார்... இத சொன்ன நம்மள ஒரு மாதிரி பாக்கறாங்க... படத்துல கமல் அன்பே சிவம்னு சொன்ன 1 மாசம் ஓடவிட மற்றாங்க... மாற்றங்கள் வரணும்... புரட்சி இல்லாட்டியும் மக்கள் மனசுக்குள்ள இறக்கம் பிறக்கணும்... அதுவே மாற்றங்களை உண்டு பண்ணும்... வழக்கம்போல நல்ல பதிவு விஜய்... பாத்து யாரும் கோவில் கட்டிராம பாத்துகோங்க...

சௌந்தர் said...

நான் கடவுள் படத்தில் ஒரு வசனம் வரும் வாயும் பேசாது காதும் கேக்காது அப்புறம் என்னடா சாமீ

இதுதான் இந்த மக்களுக்கு சரியான பதில்

விஜய் said...

மிக்க நன்றி வீரமணி தோழரே, //புரட்சி இல்லாட்டியும் மக்கள் மனசுக்குள்ள இறக்கம் பிறக்கணும்... அதுவே மாற்றங்களை உண்டு பண்ணும்... // அழகான வரிகள்....நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு ...

விஜய் said...

மிக்க நன்றி சௌந்தர்,//வாயும் பேசாது காதும் கேக்காது அப்புறம் என்னடா சாமீ//..அழகான உண்மை, அப்புறம் எதுக்கு சாமி, எங்கே சாமி?...
நன்றி பின்னூட்டத்திற்கு சௌந்தர் ...

விஜய் said...

தேவா அண்ணா ,அட்டூழியம் செய்வதாக, அனுபவிப்பதாக கூறியிருக்கும் அனைவரும் காது கேட்காத, வாய் பேசாத, கண் தெரியாதா கடவுள்கள் ........

விஜய் said...

தேவா அண்ணா-------------- அவர்களுக்கு பெயர் இயற்கையர் இல்லை, அவர்களுக்கு பெயர் கடவுள்

சிவராஜன் said...

Kandippaka Kadavul irukkirar Vijay , Namakkulle than , Suyanalam illatha ovvoru manithanum kadavul , avan manithanakakave piranthalum kalam avanai kadavulaka maddrum , Esu to Puththar ellarum ithula adakkam...

விஜய் said...

ரொம்ப நல்லா சொல்லி இருக்கீங்க சிவராஜன்..கடவுள் அப்டின்னு யாரும் கிடையாது, உதவுற எல்லோரும் இயற்கையர் தான். நன்றிங்க சிவராஜன் உங்க அழகான கருத்துக்கு , நன்றி மீண்டும் வருக

harini said...

Kadvul apdininu oruthar erukuranala thane nenga discus panave arambichirukinga..
Irainambikai enbadu unarvu sambathapatathu athai arivu reedhiyaga sinthithal bathil kidaithathu.. Kaduvul nambikai enbadu kadhal nambikai pola unarathan mudiyum. kadul nambikai erukuradhu periya kutram ilaye..nanum Elangai Mannil Piranthavalin Vayitril piranthaval than angu nadakum kodumai nan arinthavai, Ovoru aniyaya vathiyum romba santhosha erukura mathirithan erukum ana avunga veetin ethooru moolaiyil avarin pavam muluvathumai olindhukondu thanerukum..erukinrathu. evarthan un thanthai endru en thai enaku eppati arimugam seitharo apadithan en kadavulaiyum arimugam seithar.. edhai nambuvathu muttal thanam endru solgirirgal. Kaduvl nambikai ullavargal muttalgal illai. Kovilil amarndhu thiyanam, yogam, seikirargal epadi naatin amaidhiyai kedupathu endru yarum yosipathilai. Erai nambikai erupathalthan nam kalaacharam ennum vaalgirathu. Eluthukal moolam pakuvapadhuthum ungal sagothara sagotharigal siyum seyal potruthaluku uriyathu. Endrum Elangayil sithari kidakum enadhu sonthangalin mugavarigalaikoda theriyamal thedikondirikirom, nalla ulangalukulu edhavadhu oru vagaiyil udhavi konduthan erukirar kadavul, endravathu orunall athai purinthukollum thiram avargaluku varum. Erainambikai Theengu vilaivikatha varaiyil athai unarubavargalai, muttalgalai pola paarkamal erupathe thagum.

Jeyamaran said...

நீங்க கடவுள் இல்லைன்னு சொல்றிக தப்பு இல்ல
ஆனால் நான் கடவுள் இல்லைன்னு சொல்லல இருந்த நல்ல இருக்குனுதான் சொல்றேன்
எங்கயோ கேட்ட மாதிரி தெரியுதா...............

நாய்க்குட்டி மனசு said...

மிக்க நன்றி விஜய் என் ப்ளாக் அறிமுகப் படுத்தியதற்கு.
கடவுளைப் பற்றிய உங்கள் logical argument பார்த்து அதிர்ந்து விட்டேன்.
கடவுள் உண்டு இல்லை என்று நான் ஆராய்ந்தது இல்லை. நான் கலங்கிய சமயங்களில் கண்ணுக்கு தெரியாத ஒரு ஆதரவு இருப்பது எனக்கு தைரியம் தருகிறது. அதனால் கடவுள் இருக்கிறார் என்றே நம்புகிறேன்.

Balji's Corner said...

"பாவிகள ஏசு ரட்சிப்பார்னு சொல்றாங்க... ஆனா ஒரு பாவமும் செய்யாத என்னை ஏன் ரட்சிக்கல சாமி?...." "எல்லா புகழும் இறைவனுக்கேனு சொல்றாங்க சாமி... அப்படினா என்னைய இப்படி படச்சது கூட அல்லா சாமிக்கு பெருமையா சாமி?"
"தெருவுக்கு தெரு இருக்கிற புள்ளையாரு,முருகன், காளியாத்தா, மாரியாத்தானு எந்த சாமியும் என்னைய ஏரெடுத்து கூட பாக்கலியே சாமி.... எல்லா சாமியும் வெறும் வேடிக்கை மட்டும் தான் பாத்துக்கிட்டு இருக்கு... நான் என்ன தப்பு பண்ணேன் சாமி?....ரொம்ப ரண வேதனையா இருக்கு சாமி...என்னய காப்பாத்துங்க சாமி... பாழாப்போன இந்த உலகத்துல என்னால வாழ முடியல சாமி..."
- நான் கடவுள் படத்தில் வந்த என் மனதை தைத்த வசனம்... நண்பர் விஜய், உங்கள் பார்வை தான் எனதும்..

shajis777 said...

மேல் குறிப்பிட்டு சொன்ன நபர்களில் யாராவது கடலின் எல்லையை கட்டுபடுத்த முடியுமா ?,இயற்க்கை அழிவிலிருந்து யாரையேனும் காப்பாற்ற முடயுமா?...இவர்களால் அழிந்து போகிற ,சில காலம் இருக்க போகிற ,நிலையில்லாத அறிவை தான் பிறருக்கு கொடுக்க முடியும் .நிலையுள்ள ,அழியாத ஆத்துமா அறிவை ஆரம்பமும் முடிவும் இல்லாத சர்வவல்லமை யுள்ள கடவுளால் தான் முடியும் .கடவுள் உருவாக்கிய கற்பனைகள்
மனிதனால் மாற்ற கூடாத ,காலம் காலமாய் நிலைதுநிர்ப்பவை.இயற்கைக்கு ஒரு கற்பனை வைத்தால் அந்த இயற்கைக்கு கடவுள் நினைத்தாலும் மற்ற முடியாது .காரணம் அவருடைய கற்பனைகள் மாறதவைகள்.மனிதன் இயற்கைக்கு மாறாக செயல்படும்போது அவனுடைய கையை பிடித்து தடுக்க முடியாது ...உதாரணம் அளவுக்கு அதிகமான சுமையுள்ள வீட்டை கட்டுவது ,கடலில் கழிவுகளை கொட்டுவது ,முறையான உடலுறவு கொள்ளாமை,
கர்ப்பகாலத்தில் சரியான ஊட்டசத்து உட்கொள்ளாமல் ,........சொல்லிக்கொண்டே போகலாம் .ஆனால் தாழ்மை உள்ளவர்களால் கடவுளின் இதயத்தை மாற்ற முடியும் .அவர் யார்மேல் இறக்கம் கொள்ள சித்தமாய் இருக்கிறாரோ அவகளுக்கு இரக்கம் கொடுத்து இயகையையும் இயற்கை கற்பனையும் மாற்றி அவர்களுக்கு உதவி செய்கிறார் .அன்பு விஜய் சகோதரா நீஉம் உன்னை தாழ்த்தினால் கடவுள் உனக்கும் இரங்குவர்...சந்தேகமே இல்லை.இயேசு உன்னை நேசிக்கிறார்.இயேசுவை விசுவாசி .

விஜய் said...

ஹரிணி நீங்க சொல்றீங்க, பாவம் செய்றவங்க வீட்டு மூலையில் பாவம் இருக்கு, அட அவுங்க வீட்ல இருந்து யாருக்கு என்னங்க லாபம். கதறி துடிக்கிற அப்போ வராம, அவுங்க செத்து போனதுக்கு அப்புறம் வந்து என்ன பிரோஜனம், அட செத்து போனதுக்கு அப்புறம் கூட நீங்க சொன்ன கடவுள் வரலைங்க..வலியை உணரவங்களுக்கு தான் அதன் உண்மை புரியும், வலியும் புரியும், உங்க தங்கை, உங்க அண்ணன் கதறி துடிச்சு அலுகுரப்ப பக்கத்துல இருந்து பார்த்து இருந்தீங்க அப்டினா, கடவள் இருக்ராருன்னு நம்ப மாட்டீங்க, அத பத்தி இவ்வளவு பாச மாட்டீங்க...நான் சொன்னது ஒன்னு தான், இன்னும் இந்த மாதிரி நிறையா தப்புகள் நடக்குறப்ப நீங்க சொன்ன என்ன பண்ணிக்கிட்டு இருந்தாருன்னு தெரியல...நீங்க கடவுள் ஒருத்தர் இருக்குரார்னு அவருக்கு பயப்படலாம் , நான் பயப்பட மாட்டேன், இருந்தார்னா என்கிட்டே வந்து பேச சொல்லுங்க

விஜய் said...

மிக்க அன்றி shajis777 அவர்களே,

//நாங்க எப்போ சொன்னோம் கடவுள் இல்லைன்னு , கடவுள் எங்களை எல்லாம் கஷ்டத்துல இருந்து காத்துக்கொண்டு தான் இருக்கிறார் அப்டின்னு சொல்றீங்களா?..
என்னங்க பெரிய காமெடியா இருக்கு உங்களால, சந்தோசமா வாழ்த்தி பாடுறீங்க, உங்க கஷ்டத்த தீர்த்து வைக்கிறாரு, அங்கங்கள் சிதைந்து,கதறி அழுதுகிட்டு கடவுள கூப்பிடுறாங்க, கடவுள் ஆளையே காணாம போயிட்டாருங்கலே, இது என்ன கணக்குங்க?, லஞ்ச கணக்கா ?,வாழ்த்தி பாடுகிறவன் கண்ணுக்கு வெண்ணை, கதறி கெஞ்சுறவன் கண்ணுக்கு சுண்ணாம்பா ? ..//

//16 வயசு நம்ம சகோதரி, 7 காமுகர்களால கற்பழிக்க படுகிறாள், கதறுவதை காக்க முடியாத கேவலமான காத்தல். இரக்கமே இல்லாம ஒரு தீவிரவாதியால அப்பாவியான மக்கள் சுடப்பட்டனர், மனசாட்சியே இல்லாத ஒரு அரசியல்வாதியால் ஒரு இனமே அழிந்துவிட்டது இலங்கையில்,
//


இதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?

விஜய் said...

மிக்க நன்றி பாலாஜி,
நீங்க சொல்வது மிகச்சரியான உண்மை, கடவுள் இருக்கிறார்னு சொல்றாங்க , அப்புறம் அங்கங்கள் சிதைந்து என் சகோதர்கள் ,சகோதரிகள் துடிக்குரப்ப வர மாட்டேன் அப்டின்னு அடம் பிடிக்கிரார்னு தெரியலையே....

விஜய் said...

மிக்க நன்றி நாய்க்குட்டி மனசு அவர்களே,


நான் இந்த பதிவை எழுதும் போதே எனக்கு தெரியும், கடவுளை நம்புகிறவர்கள் நான் சொல்லும் கருத்தை ஏற்றுகொள்ள மாட்டார்கள் என்று. கடவுள் ஒருத்தர் இருந்தார்னா, நம்ம கடவுள் இல்லைன்னு சொல்ல போயி நமக்கு கஷ்டத்த கொடுத்துருவார்னு பயப்படற மக்கள் இங்கு அதிகம்..கடவுள இருக்கிறாரா?, இல்லையா ? அப்டின்னு தேடறவங்களுக்கு நான் சொல்ற கருத்து ஏதோ ஒரு வகையில் கொஞ்சமாவது தெளிவை ஏற்படுத்தும்னு நம்புறேன்...மிக்க நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு நாய்க்குட்டி மனசு அவர்களே,

விஜய் said...

மிக்க நன்றி ஜெயராமன்,
சரியான கருத்து...மிக்க நன்றி உங்கள் பின்னூடத்திற்கு

புஷ்பா said...

விஜய்.. கடவுள் என்பது ஒரு உருவம் வடிவிலோ, மொழி வடிவிலோ, செயல்பாடு முறையிலோ இல்லை. நாம் உணரதான் முடியும். என்னை பொருத்தமட்டிலும் அவை அனைத்தும் ஒரு சக்தி(power) என்றுதான் சொல்வேன்.. ஒவ்வொரு படைப்பிலும் காணலாம் (நம்முடைய பிறப்பிலேயே பார்க்கலாம்- ஒரு கரு எப்படி உருமாறுகிறது எனபதுதான். அதற்கென்று ஒரு கண், மூக்கு, வாய் போன்று அழகாய் உருக்கொடுத்து, அதற்கு என்று ஒரு பாஷைக் கொடுத்து) இதுவே போதும் என்று நினைக்கிறேன்.. வாழ்த்துக்கள்.

murali said...

வணக்கம் விசய்,

என் இனம் அழிகிறது ஈழத்தில் என்ற உங்களின் வரிகளுக்காக உங்களுக்கு நன்றி. ஏனென்றால் உங்களை போன்ற சிறந்த எழுத்து ஆளுமை படைத்தவர்கள் குறிப்பிடும் பொழுது அதன் வீரியம் சட்றே அதிகம்.

எப்பொழுது அண்ணா தனி தமிழ்நாடுங்ற கொள்கையை கைவிட்டாரோ அப்பொழுதே நாம் இந்தி பேசும் இந்திய மக்களுக்கு அடிமை என்ற நிலை வந்து விட்டது.மேலை நாடுகளில் ஒரு பஞ்சாப் சிங்கின் மயிரை அறுத்து விட்டார்கள் அதற்கு துடி துடித்து போன மன்மோகன் சிங் தன்னுடய கடும் கண்டனத்தை தெரிவித்தார், வெளி உறவுத்துறை செயளாலரை உடனே அனுப்பினார். ஆனால் ஆயிரக்கனக்கான தமிழர்கள் கொத்து கொத்தாய் கொல்லப்பட்ட போது சிறு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. அப்படியென்றால் சிங்கின் மயிரை விட கேவலமா தமிழர்களின் உயிர்.

ஆகவே அண்ணன் காசிஆனந்தன் சொன்னதை போல
" இருப்பாய் தமிழா நெருப்பாய்
இருந்தது போதும் செருப்பாய்"

இன்னும் உங்களிடம் என் இனம் சார்ந்த கருத்துக்களை எதிர்பார்கிறேன்.

நன்றி
சதா.முரளிதரன்

harini said...

Nadri Vijay,
ungal Varigalai vimarsikum alavuku nan periya arivali ellai, Enaku bathilalika Nengal evalavu yosithiruka vendiya avasiyamum illai, nanum erainambikai athigam ellatha penthan, thangalai pondra murpoku sindhanaiyalargal kadavul nambikai ullavargalai madayargalaga paarkaamal nadunilaiyaga sinthikalame! enbadhu thaan endudaiya thaalmaiyana karuthu.. Samuga avalangalai kalaiya manitha sakthiku meeriya oru shakthiyidam muraiyidugirom allathu thanambikaiyudan naame poradukirom, Edhanai pagutharindhu kondathal neengal iyarkaiyai nambugirirgal , athai paguthariya theriyamal nangal kadavulai nambukirom, atharkaga engalai madayargalaga akidalama. . apparam…vijay kadavul kitta pesura vaaipu enaku kadaicha kandipa nenga kekura kelviyai avarkita kekuren..

விஜய் said...

மிக அழகாக சொன்னீங்க புஷ்பா அவர்களே. நீங்க சொன்ன ஒரு சக்தி (பவர்) அது உண்மை தான், ஆனா அந்த சக்திய அறிவியல் ரீதியா பார்க்காம, எதோ கண்கட்டி வித்தை காட்டி ஏமாத்தற மாதிரி, ஏமாறுற மாதிரி ஆகிடறாங்க மக்கள், கடவுள் கடவுள், தப்பு செய்யறவன தலைய எடுப்பாரு, கஷ்ட படுகிறவன காப்பத்துராறு அப்டின்னு சொல்றது, இது எல்லாம் பொய் ,ஏன் கடவுளே பொய், ஒரு நடுத்தர மக்களா இருந்து,கடவுள் இருக்கிறார்னு யோசிக்கிறது எளிது, பட்டினியால சாவை எண்ணிக்கிட்டு இருக்கறவங்க நிலைமையில் நாம் இருந்தோம் எனில்,கடவுள் இல்ல , நம்ம கஷ்ட பட்டாதான் நம் சாவின் நாளை தள்ளிபோட முடியும் அப்டின்னு தோணும்.அப்போ சொல்லுவோம் கடவுள் இல்லைன்னு, அல்லது நம் கண்கூட ஒருத்தங்க கஷ்டபடுகிரத பார்த்தா கூட கடவுள் இல்லை, கடவுளை போன்று சில மனிதர்கள் இருக்கிறார்கள் என்று புரியும்..நான் கடவுள் நம்பிக்கை உள்ள யாரையும் தவறாக சொல்லவில்லை, சொல்லவும் முடியாது, அது அவரவர் சுதந்திரம், அதில் நான் தலைஇட மட்ட்டேன்...
கடவுள் இருக்கிறாரா என்று கேள்வியோடு சுற்றும் தோழர்களுக்கும், தோழிகளுக்கும் சொல்லிகொள்கிறேன் , அவ்வளவு தான் ..நான் சுதரந்திலும் தலைஇடுபவன் அல்ல

விஜய் said...

மிக்க நன்றி முரளி,
உங்களை போன்றோரின் கருத்துக்கள் என்னை போன்ற கத்துகுட்டிகளுக்கு மிக்க அவசியம், நிச்சயம் இன்னும் எழுதுவேன் என் இனத்தை பற்றி,

விஜய் said...

ஹரிணி, நான் ஒன்றும் உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க சிரமப்படவில்லை , நீங்கள் அதற்காக கஷ்டப்பட வேண்டாம், நான் கடவுள் நம்புகிறவர்களை முட்டாள் என்று என் எழுத்தில் குறிப்பிடவில்லை, நான் கேட்டு இருந்த கேள்விகளுக்கு உங்களிடம் விடை இல்லை, அதலால் முந்திகொள்கிறீர்கள் நான் உங்களை முட்டாள் என்று சொல்ல போகிறேன் என்று..நிஜமாய் சிரிப்பு தான் வருகிறது, எங்கே சென்றார் என்று நான் கேள்வி கேட்டு இருந்த கேள்விக்கு நீங்கள் இன்னும் பதில் தரவில்லை, நீங்கள் மட்டும் அல்ல கடவுளை நம்புகிறேன் என்று சொல்பவர் யாருக்கும் தெரியாது, அதற்காக உணர முடியும், பார்க்க முடியாது என்று சொல்லி திசை துருப்ப முயற்சி செய்கிறீர்,ஒன்னு தெளிவாக சொல்கிறேன் , கஷ்டங்களை நின்று தான் மட்டும் கடந்து வந்தவனக்கு தெரியும் கடவுள் இல்லை என்று, கஷ்டங்களை யாரவது ஒருத்தரோடு நின்று கடந்து வந்தவர்கள் கடவுள் இருக்கிறார் என்று நம்புவார்கள் ....இப்பொழுதும் சொல்கிறேன் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை நான் தவறு, முட்டாள் தனம் என்று சொல்லவில்லை, அது அவரவர் நம்பிக்கை,அவர்களின் நம்பிக்கையில் தலை இட விரும்பவில்லை, நான் சந்தித்த வற்றை வைத்து கேள்வி கேட்டு இருக்கிறேன், அவ்வளவு தான்,

தமிழ் மதுரம் said...

விஜய்! மனித மனங்களின் நம்பிக்கையில் தான் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதெல்லாம் தங்கியுள்ளது. என்னால் இது பற்றிச் சரியாகக் கருத்துக்களை முன்வைக்க முடியவில்லை.

எங்கடை பெயரெல்லாம் மேலை எழுதி இருக்கிறீங்கள்? எங்களை வைச்சு காமெடி கீமடி பண்ணலையே?

விஜய் said...

தமிழ் மதுரம் உங்களை வைச்சு காமெடி பண்ண மாட்டேன்... ஈழத்தை பற்றிய உங்க எழுத்துக்கள் மிக அருமை ...மிக்க நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு

முரளிதர தொண்டைமான் said...

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவ்ன் முதற்றே உலகு.

பொருள்:
அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன்,
உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.

"கடவுள்" ‍~ இதை அவ்வளவு சுலபமாக யாரும் விளக்கிவிடமுடியாது. முதலில் கடவுள் என்பது ஏதோ கற்ப்பனையில் நாம் வடித்துகொண்ட உருவமலல! உருவமில்லாதவற்றை உணரும் திறனில்லாத பாமரனுக்காக வடிக்கப்பட்டதுதான் உருவங்கள்! அதை மேன்மேலும் அழகாக்கி அழகுபார்க்க நினைத்தபோது உருவானதுதான் ஆலயங்கள்! உண்மையில் நாம் அனைத்து கடவுள் உருவங்களயும் ஆராய்ந்து பார்த்தால் தெரியும் அந்த தோற்ற்ங்களின் உண்மையான் அர்த்தம்.. அது அனைத்து உயிரிடத்திலும் மனிதர்களாகிய நாம் அன்போடு பற்றோடு இருக்கவேண்டும். அன்பொன்றே உயிர்களிடத்தில் அடிப்படையானது அது ஒன்றே நம் துன்பங்களிலிருந்து விடுவிக்கவல்ல ஒரு அருமருந்து! அந்த அருமருந்தின் தத்துவங்கள்தான் "கடவுள்" ~ நாம் அதை கண்களால் காணமுடியாது அதை நாம் உணரத்தான் முடியும். (கொட் இட்ச் நொட் அ ஒப்ஜெச்ட் இட்ச் அ வெர்ப் சொ நெ ஒன்ல்ய் சன் ஃபேல் இட்). இன்றைய உலகில் அந்த விலைமதிக்கமுடியாத் அன்பெனும் அருமருந்து வறண்டுகொண்டிருக்கிறது அதன் பயனாகத்தான் நாம் துன்பங்களை அனுபவித்துகொண்டிருக்கிறோம்! அன்பெனும் அருமருந்தினை நாம் நமக்கும் மற்றவர்களுக்கும் செலுத்த முயன்றாலொழிய நாம் துன்பங்களிலுருந்து விடுபடமுடியாது.. கடவுள் இருக்கிறாரா என்பதை உணர்ந்து பார்த்து அறிந்துகொள்! கண்ணால் காண முயலாதே!!

விஜய் said...

மிக்க நன்றி முரளி அவர்களே, மிக்க அழகான, தெளிவான பதில், நீங்கல் சொல்வது சரி . ஏற்றுக்கொள்கிறேன்..

//அனைத்து உயிரிடத்திலும் மனிதர்களாகிய நாம் அன்போடு பற்றோடு இருக்கவேண்டும். //
அப்படி அன்போடு இருக்குறவங்க, உதவி செய்றவங்கள தான் நான் கடவுள்னு சொல்லுகிறேன் முரளி அவர்களே,

ஆராய முடியாத, உணர முடியாத, மனிதனுக்கு புரியாம இருக்ற யாரோ ஒருத்தர கடவுள்னு சொல்லி ஆராதனை பண்ணுகிறத விட,
அன்பை கொட்டுற, ஆபத்துல இருந்து காப்பாத்துற சக மனிதனை கடவுளா பாக்கலாமே , இது தான் என்னுடைய கருத்து முரளி அவர்களே,கடவுள் கடவுள்னு, சக மனிதனை நேசிக்கறது இல்ல என் மனிதர்கள், உதவி செய்யுற , அன்பை கொட்டுற சக மனிதன் தான் கடவுள்னு என் மக்களுக்கு புரிஞ்சிடுச்சுனா போதும் ...உலகம் சொர்க்கம் ஆகிடும் ..

முரளிதர தொண்டைமான் said...

\\ஆராய முடியாத, உணர முடியாத, மனிதனுக்கு புரியாம இருக்ற யாரோ ஒருத்தர கடவுள்னு\\

முடியாததென்பது இல்லை மனிதன் முயலுவதில்லை அது மனிதர்களாகிய நம் குற்றம் பிறகெதற்க்க்கு கடவுளை அன்பை குற்றம் கூறமுடியும்?! சக மனிதர்களை நேசிக்க வேண்டும் என்று உணர்த்துவதுதான் கடவுள்களின் தத்துவும் அதை சரியாக புரிந்துகொள்ளாத, புரிந்தும் அன்பு செலுத்தாத நாம்தான் குற்றவாளிகள்?

விஜய் said...

மிக்க நன்றி முரளி அவர்களே

நீங்க சொல்ற கடவுள், துடிக்க துடிக்க சாகடிக்க படுகிற மனிதனை காப்பாற்றி அன்பை போதித்து, மனிதனக்கு காட்டலாம் உதாரணமாய், இப்படி தான் அன்பை போதிக்க வேண்டும் என்று , இப்படி தான் சக மனிதனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று , ஏன் முடியவில்லை நீங்க சொல்ற கடவுளால....
ஏன் என்றால் அப்படி ஒருத்தர் தனியாக இல்லை... சக மனிதனை நேசிக்றவன் தான் கடவுள், சக மனிதனுக்கு உதவுகிறவன் தான் கடவுள், சக மனிதனை துன்புருத்தாதவன் தான் கடவுள்,

விஜய் said...

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவ்ன் முதற்றே உலகு.


//இப்படி எழுதினவரே ஒரு மனிதன் தான் , அதனால் அவரே சொல்லிட்டாரு கடவுள் இருக்குரார்னு அப்டின்னு, அதனால கடவுள் இருக்கிறார்னு அப்டின்னு சொல்றது எந்த விதத்துல நியாயம்,

விஜய் said...

சக மனிதனை நேசிக்காம கொலை செய்யுறான், அதனால் இங்கே அன்பு இல்லை, இவன் நேசித்து இருந்தால் கொலை செய்வதை தடுக்க பட்டிருக்கலாம், அதனால் அன்பு தேவை ...இதுல கடவுள் யாரு, அன்பை போதிக்ரவரு...எல்லோரும் சக மனிதனை நேசிக்கணும் அப்டின்க்ரதுக்காக , கடவுள் அப்டின்னு பொய்யான ஒருத்தர் உருவாக்கப்பட்டு , மனிதனை பயமுறுத்தி சக மனிதனை நேசிக்க வைக்க படறாங்க இது தான் உண்மை, அதைவிட்டு விட்டு விட்டு கடவுள் மேல இருந்து குதிப்பாரு, உதவி பண்ணுவாரு, முக்கியமா கடவுள் இருக்காரு உதவி பண்ணுவாரு அப்டின்னு பாத்துகிட்டு இருப்பது அடிமுட்டாள் தனம் என்பது என் வாதம்...

நேசிக்றவன், உதவி பண்றவன், மட்ட்ரவர்களை நேசிக்க்றவன் எல்லோரும் நீங்க கற்பனையா, பெரிசா நினைச்சுக்கிட்டு இருக்ற பொய்யான கடவுள் உருவத்திற்கு இவர்கள் தான் நிஜ உருவம்

vasan said...

விஜ‌ய்,
மிக‌ப் ப‌ழ‌மையான‌, க‌டின‌மான‌, குழ‌ப்ப‌மான‌ விவாத‌ம் இது.
'இல்லொனில் இல், ஆமெனில் ஆமென்' செல்லிவிட்டுப் போக‌முடியுமா?
பிற‌ந்த‌வுடன் குழ‌ந்தைக்கு சாமி பொய‌ரைச் சொல்லி ச‌க்க‌ரை 'த‌ண்ணி'
காட்டித்தான் வ‌ள‌ர்கிறோம்.சாமிக்கு 'மொட்டை','காதுகுத்து'ன்னு தெட‌ர்கிறோம்.
மாதா,பிதா,குரு, தெய்வ‌ம், இந்துக்க‌ள், ப‌ரிசுத்த‌ மாதா, குழ‌ந்தையேசு கிருத்துவ‌ம்,
எல்லாம்வல்ல‌ அல்லா முஸ்லீம். மூன்று முக்கிய‌ ம‌த‌ங்க‌ள். இந்த‌ க‌டவுள், ந‌ம்பிய‌வ‌ர்க‌ளுக்கு
நோய்க‌ளை குண‌ப்ப‌டுத்தின, உயிர் கொடுத்த‌ன. க‌ட்ட‌ளைக‌ளும் அறிவுரைக‌ளும்,ம‌றைக‌ளும்
த‌ந்த‌ன‌.பின் வந்த‌ பொள‌த்த‌ம்,ஜைன‌ம்,சீக்கிய‌ம் ஒருவ‌ரின் கொள்கை, தீர்வுகாளால் தொட‌ர‌ப்ப‌ட்ட‌து.
ப‌டைத்த‌ல்,காத்த‌ல்,அழித்த‌ல் க‌ட‌வுள் த‌ன்மையிலில்லை, பைத்திய‌கார‌த்த‌ன‌மாயிருக்கிற‌து
என்றால், ஆம். க‌ட‌வுள் பித்த‌ன் என்பார்க‌ள். ஆக‌, அவ‌ர‌வ‌ர் அனுப‌வ‌த்தில் அறிவ‌தே அவ‌ன்.
ந‌ம்பிக்கை ம‌ட‌மையெனில், பார‌தியும், விவேகான‌ந்த‌ரும் நம்பியிருப்பார்க‌ளா?
ப‌ர‌த‌ன் சும‌ந்த‌ த‌ன் பாத‌ணிக‌ளுக்கு பரிகார‌மாய், பொரியார் போட்ட‌ அந்த‌ ம‌லையை ராம‌ர்'போட்டா'சும‌ந்த‌தா? பாண்ட‌வ‌ர்,கெள‌ர‌வ‌ர் ப‌ங்காளி ச‌ண்டைக்கு ஏன் ம‌துரா (மதுரை இல்லை)கிருஷ்ண‌ர் பார‌த‌போரில் ஐவ‌ர் த‌விர‌ அனைவ‌ரையும் கொன்றார். புன்னிய‌ நீராடும் மகாம‌குள‌த்து கும்ப‌கோண‌ம் ஏன் தீயாடிய‌ ப‌ள்ளிக்குழ‌ந்தைக‌ளை நினைவூட்டி, நெஞ்சில்
எரியூட்டுகிற‌து. க‌ட‌வுள் இருந்தால் அது காஞ்சிவ‌ர‌ காமுக‌னின் ஆச‌ன‌மாய், வாடுவேர்க்கு
ஆத‌ர்ச‌ன‌மாய் இல்லை.
ப‌ண‌மும், அதிகார‌மும், ஆதிக்க‌மும் செய்ய‌வே க‌ட‌வுள் ப‌ய‌ன் ப‌டுத்த‌ப்ப‌டுகிறார்.
அமெரிக்க‌ர்க‌ளுக்கு க‌ர‌ன்ஸியில் ‘In God we trust’ என‌வும், இந்துக்க‌ளுக்கு
விசேஷ‌மாய் திருப்ப‌தியும், மும்பை ல‌ஷ்மியுமாய், ஆப்கானியக‌ர்க‌ளுக்கு
ப‌ச்சைதுணி சுற்றிய‌ புனித‌குரான் புத்த‌க‌ம் ம‌ட்டுமாய். இங்கே சிலருக்கு வ‌ண்ண‌ங்க‌ள‌ய்.
வாம‌னாய் முடிய‌ வேண்டிய‌ பின்னோட்ட‌ம், விசுவ‌ரூப‌மாய்.
இறுதியாய், செய‌ல்ப‌டாத‌து, த‌ன்மையில‌ந்து, த‌ன்னையேயில‌ப்ப‌து போல்,
க‌ட‌வுள் த‌ன்னுள் க‌ரைந்திருக்க‌லாம்.
ம‌னித‌ம் வாழ்க‌, இய‌ற்கை வாழ்க‌, ம‌ண்ணும்,ம‌ர‌மும்,ம‌ழையும்,ம‌லையும்,கடலும்
க‌ல்லும்,புல்லும்,எல்லா உயிரும் அதுவ‌துவாய் வ‌ள‌முட‌ன் வாழ‌ வ‌ழி செய்ப‌வரை
வ‌ணங்கிப் போற்றுவோம்.

விஜய் said...

மிக்க நன்றி வாசன் அவர்களே, மிக அழகான விளக்கம்,
//இறுதியாய், செய‌ல்ப‌டாத‌து, த‌ன்மையில‌ந்து, த‌ன்னையேயில‌ப்ப‌து போல்,
க‌ட‌வுள் த‌ன்னுள் க‌ரைந்திருக்க‌லாம். //

உண்மையாய் இருக்கலாம் நீங்கள் கூறியது ....ஆனால் பஹவத் கீதையே நம்மளை போல இருக்கும் ஒரு மனிதன் எழுதியது தானே, ஆதாலால் நாம் அதை வைத்து கடவுள் இருந்தார் என்று எப்படி சொல்வது?..

நான் தவறாக கேட்டு இருப்பதை நீங்கள் நினைத்தால் மன்னிக்கவும்...
மிக்க நன்றி வாசன் அவர்களே உங்கள் பின்னூட்டத்திற்கு

முரளிதர தொண்டைமான் said...

//நீங்க சொல்ற கடவுள், துடிக்க துடிக்க சாகடிக்க படுகிற மனிதனை காப்பாற்றி அன்பை போதித்து, மனிதனக்கு காட்டலாம் உதாரணமாய், இப்படி தான் அன்பை போதிக்க வேண்டும் என்று , இப்படி தான் சக மனிதனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று , ஏன் முடியவில்லை நீங்க சொல்ற கடவுளால..//

சிறுபிள்ளைப்போலுள்ளது மேற்ச்சொன்ன உங்களது வாதம்!

//மனிதனக்கு காட்டலாம் உதாரணமாய், இப்படி தான் அன்பை போதிக்க வேண்டும்// ‍ ~ இந்த வாக்கியத்திற்க்கு உங்களுக்கு சரியான பதில் தெரியும் என் நம்புகிறேன்! உங்களது வயது அனுபவம் என்ன? இது வரையில் எத்தகையான் புத்தகங்களை படித்திருக்கிறீர்கள்? நீங்கள் சொல்வதிலிருந்து கடவுள் மனிதனுக்கு அருளிய தத்துவ புத்தகங்கள் யாவும் கரைத்து குடித்து விட்டவர்போலவும் அதில் எதிலுமே மனிதனுக்கு அன்பினை போதிக்கும் தத்துவத்தை சொல்லவில்லை போல இருக்கிறது உங்களது கருத்து. உலகில் எல்லவற்றையுமே ஒவ்வொரு மனிதனும் அனுபவித்துதான் தெரிந்துகொண்டாகவேண்டும் என்றில்லை! அப்படியானால் எவருக்கு வயது போதாது! அதனால்தான் பாமர மக்களாகிய நாம் ஆன்றோர்கள், சான்றோர்கள், பெரியோர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் போன்றோர்கள் எழுதிய புத்தகங்களின் மூலம் நாம் வாழ்வை, அன்பை நாம் அறிய முடியும்!

யாவற்றையும் அனுபவித்து தெரிந்து கொள்வதற்க்கு உமக்கோ எனக்கோ யாருக்குமோ தன் வாழ்நாள் போதா! அதனால்தான் வாழ்க்கைக்கான் தத்துவத்தை நாம் ஏற்க்கனவே நன்கு ஆராயப்பட்டு அனுபவிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ள தத்துவ புத்தகங்களை பின்பற்றுகிறோம்!

முரளிதர தொண்டைமான் said...

//இப்படி எழுதினவரே ஒரு மனிதன் தான் , அதனால் அவரே சொல்லிட்டாரு கடவுள் இருக்குரார்னு அப்டின்னு, அதனால கடவுள் இருக்கிறார்னு அப்டின்னு சொல்றது எந்த விதத்துல நியாயம்//

உலகப்பொதுமறை எனவும், கடவுள் மனிதனுக்கு போதித்தது கீதை, மனிதன் மனிதனுக்கு போதித்தது குறள் எனவும், உலக மொழிகளில் இன்றளவும் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட ஒரே புத்தகம் திருக்குறள் ஆகும், எந்த நாட்டிற்க்கு, எந்த மக்களுக்கு, எந்த சூழ்நிலைக்கு, எந்த துறைக்கும் பொருத்தமாக எழுதப்பட்டதென சான்றோர்கள் கூறியிருக்கிறாரகள்! ஆகவே திருவள்ளுவர், புரட்சி கவி பாரதி, கன்னித்தமிழ் தந்த திருவாசகம் போன்ற புத்தகங்களை வாசிக்கிறோம் ஆராய்ந்து அறிந்து அதன்மூலம் நாம் வாழ்க்கைக்கான நெறிகளை பின்பற்றுகிறோம்! ஆகவே எந்த தத்துவமும் நமகெதிராக அல்ல நாம் அதை தவறாக புர்ந்துகொண்டுறுக்கிறோம் ஆகவே நாம் தான் முதல் குற்றவாளி!

விஜய் said...

//நீங்கள் சொல்வதிலிருந்து கடவுள் மனிதனுக்கு அருளிய தத்துவ புத்தகங்கள் யாவும் கரைத்து குடித்து விட்டவர்போலவும் அதில் எதிலுமே மனிதனுக்கு அன்பினை போதிக்கும் தத்துவத்தை சொல்லவில்லை போல இருக்கிறது உங்களது கருத்து.//

கடவுள் அருளிய புத்தகங்கள் என்று நீங்கள் சொல்வதிலிருந்தே நீங்கள் கடவுள் இருக்கிறார் என்பதில் எவ்வளவு நம்பிக்கையை இருக்கிறீர் என்று புரிகிறது... நீங்க சொல்லிய அன்பை போதிக்கும் புத்தகங்கள் யாவும் ஒரு மனிதனால் எழுதப்பட்டது, அப்படியானால் மக்களுக்கு அன்பை போதிக்கிற புத்தகங்கள் எழுதிய சான்றோர்களை , ஆன்றோர்களை வேண்டுமானால் கடவுள் நிலைக்கு கொண்டு சொல்லலாம் , அதுவும் அழகான அன்பை போதித்ததால் அவர்களை கொண்டு செல்லாலாம்.அதை விட்டுவிட்டு கடவுள் என்ற ஒருத்தர் போதித்தார் என்று சொல்வதற்கு என்ன ஆதாரம்,
சரி அதை எல்லாம் விடுங்கள் , ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள், அன்பை போதித்த, புத்தகங்களை அருளிய உங்கள் கடவுள் எங்கே சென்றார், இலங்கையில் என் சகோதரிகளும் , சகோதரர்களும் அப்பாவியாய் அங்கங்கள் சிதைந்தும், கதற கதற கற்பை இளந்தபோது...நீங்க சொன்ன அன்பை போதித்தவரு..வேய்க்கானம் பேச நன்றாக இருக்கும். தன் மனைவி, கண்ணெதிரே கற்பழித்து கொல்லப்படும்போதும், அண்ணன் அங்கங்கள் சிதைந்து கண் முன்னே இறக்கும் போதும், நிச்சயம் தெரியும் கடவுள் இல்லை என்று..
நான் கல்வியறிவில்லாதவன், பாமரன் கேட்கிற கேள்வியாவே இதை நினைச்சுக்கங்க , நான் ஒன்னும் தப்பா நினைக்க மாட்டேன் , ஏன் எனில் நான் இன்னும் அறிவு வளரதா சிறுவன் தான் ...ஆனால் நான் கேட்ட கடைசி கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்

"அன்பை போதித்த, புத்தகங்களை அருளிய உங்கள் கடவுள் எங்கே சென்றார், இலங்கையில் என் சகோதரிகளும் , சகோதரர்களும் அப்பாவியாய் அங்கங்கள் சிதைந்தும், கதற கதற கற்பை இளந்தபோது"


நான் சொல்லவா ,எங்க போயி இருப்பாரு, உங்களை மாதிரி கடவுள வாழ்த்தி பாடுகிறவர்கள் வீட்டுக்கு போயி, அவுங்களை நோய் இல்லாம பக்கத்துல இருந்து பார்த்து இருப்பாரு , நீங்க சொல்கிறபடி கடவுள் என்பவர் ஒருத்தர் இருந்து இருந்தால் ...

முரளிதர தொண்டைமான் said...

நீங்கள் சொல்லியிருக்கிற அந்த சம்பவங்கள் எதுவுமே ஏற்ப்புடையதல்ல! அது ஆதிக்க அரசாங்கத்தின் வெளிப்பாடு.. இதற்க்குமேல் அச்சம்பவத்திற்க்கு விளக்கம் தற விரும்பவில்லை ஏனென்றால் இது பல அரசுகள் சம்பந்தப்பட்டது! விதைத்தது யார்? அதை அறுவடை செய்தவர்கள் யார்? என்பதை காலம் சொல்லும்! அங்கே அன்பெனும் அருமருந்து ஒரு இனத்தின்மீது காட்டப்படவில்லை அது மனிதர்களாகிய இன்னொரு இனம் செய்த மாபெரும் குற்றம்! அதற்க்கான் வினையினை அறுவடை செய்வார்கள்! உணர்ச்சி மிகுதியால் எந்த வாதத்தினையும் எடுத்துரைக்காதீர்கள்! அது சிறுபிள்ளைப்போலத்தான் இருக்கும்!

//ஒரு மனிதனால் எழுதப்பட்டது, அப்படியானால் மக்களுக்கு அன்பை போதிக்கிற புத்தகங்கள் எழுதிய சான்றோர்களை , ஆன்றோர்களை வேண்டுமானால் கடவுள் நிலைக்கு கொண்டு சொல்லலாம்//

மீண்டும் மீண்டும் எங்கே சென்றார்? என்பதை விட்டுவிட்டு! மனிதர்கள் ஆடிய வெறியாட்டங்களுக்கு கடவுளை மீது பழிசொல்லதீர்கள்! அவர் சொல்லியதென்ன என்பதை நாம் பல முறை கேட்டாகிவிட்டது ஆனால் பல பாமர மண்டைகளுக்குள் ஏற மறுக்கிறது!

//நான் சொல்லவா ,எங்க போயி இருப்பாரு, உங்களை மாதிரி கடவுள வாழ்த்தி பாடுகிறவர்கள் வீட்டுக்கு போயி, அவுங்களை நோய் இல்லாம பக்கத்துல இருந்து பார்த்து இருப்பாரு//

நீங்கள்தான் இல்லை என்று மறுக்கும் அனைத்து வேத மற்றும் தத்துவ புத்தங்களைப்படித்து முடித்தவராயிற்றே! உங்களுக்கு தெரியாதல்ல! மேலிருந்துகொண்டு உள்ளிருப்பவைகளை ஆராயமுயலாதீர்கள்! அவர் சொன்ன தத்துவங்கள் எங்குமிருக்கிறது அதை பின்பற்றாதது யாருடைய தவறு!

vasan said...

திரு முர‌ளி,
கொத்துக் கொத்தாய் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளில்
எத்த‌னை பேர் 'கா‌க்க‌,காக்க‌' க‌ந்த‌ர்ச‌ஷ்டி க‌வ‌ச‌ம் அணிந்திருப்பார்க‌ள்.
இருந்துமேன், க‌வ‌ச‌ம் உயிர்காக்காம‌ல், க‌ர்க்ஹ‌ரே அணிந்திருந்த‌
(மும்பை 26~11) த‌ற்காப்பு க‌வ‌ச‌ம் போல் போலியான‌து, என்ப‌தும்தான்
விஜ‌யின் வினா.

முரளிதர தொண்டைமான் said...

//கா‌க்க‌,காக்க‌' க‌ந்த‌ர்ச‌ஷ்டி க‌வ‌ச‌ம் அணிந்திருப்பார்க‌ள்.
இருந்துமேன், க‌வ‌ச‌ம் உயிர்காக்காம‌ல், க‌ர்க்ஹ‌ரே அணிந்திருந்த‌
(மும்பை 26~11) த‌ற்காப்பு க‌வ‌ச‌ம் போல்//

வேதாளம் மரமேறியது போலுள்ளது உமது கருத்து! மேலும் அதற்க்கும் முன்னமே பதிலூட்டம் எழுதியாகிவிட்டது.

"God" is not an object, we can't see this, won't come to us to make us happy like a movie hero!! "God" is a verb we only can feel it. "God" has given/teached us in many ways to be peace life. But all the things above said, we have been made. We only find the way to the peaceful life from that instructed way us by “God”

அமைதி அப்பா said...

நான் பிறந்து வளர்ந்தது கிராமத்தில்.
எனக்கு சிறு வயதில் கடவுளை வணங்க கற்றுக் கொடுத்த எனது பெற்றோர்,எங்கள் வீட்டில்,எங்கள் முன்னேற்றத்திற்கு உழைக்கும் மனிதர்களை, வணங்க(மதிக்க)கற்றுக் கொடுக்கவில்லை. பெரிவர்களைக் கூட பெயர் சொல்லி வாடா, போடா என்று ஒருமையில் பேச கற்றுக் கொடுத்துவிட்டார்கள்.(கல்லூரி படிப்பு முடிக்கும் வரை, நான் அப்படித்தான் அவர்களை அழைத்தேன். பிறகு அவர்களை மதிக்கும் பண்பை, எனது சிந்தனை எனக்கு கற்றுக் கொடுத்தது) இன்றும் எங்கள் குடும்பத்தில் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் நான் மட்டுமே. எனது தாய் தந்தை விபுதி கொடுத்தால் எடுத்து பூசிக் கொள்வேன். இது எனது தாய் தந்தையின் மனது நோகக்கூடாது என்பதற்காக, (அவர்களுக்குத் தெரியும் எனக்கு நம்பிக்கை இல்லையென்று. ஆனால், ஒரு நாள் தனது மகன் கடவுளை மீண்டும் வணங்குவான் என்று அவர்கள் நினைக்கிறார்கள்) எனது மகனையும் கடவுளை வணங்கவேண்டாம் என்று இன்றுவரை நான் சொன்னதில்லை. அவனுக்கு அந்த நம்பிக்கை இப்போதைக்கு இல்லை, அப்படித்தான் சொல்லவேண்டும். உதாரணம் பெரியார்தாசன் என்கிற அப்துல்லா!

கடவுளை வணங்குபவர்களை கேலி செய்ய விரும்புவதில்லை. அவர்களுக்காக பல சமயம் பரிதாபட மட்டுமே என்னால் முடிகிறது. கஷ்ட்டப்பட்டு சம்பாதித்து உண்டியலில் போடும் பக்த்தர்களை நினைத்து வருந்துகிறேன்.

கடவுளிடம் பேரம் பேசும் பக்த்தர்கள்தான் இங்கு அதிகம். எனக்கு ஒரு லட்சம் கிடைத்தால் உனக்கு நூறு ரூபாய் உண்டியலில் போடுகிறேன் என்பவர்களை பிறகு எப்படி சொல்வது?!

தம்பி விஜய், எனது வலைப்பூ அறிமுகத்திற்கு நன்றி, ஆனால் இடம்தான் சரியில்லை.
தாங்கள் குறிப்பிடும் அளவு தகுதி எனக்கு இருப்பதாக தெரியவில்லை.

விஜய் said...

உங்களுக்கு சரியான இடத்தை தான் கொடுத்து இருக்கிறேன் அமைதி அப்பா அவர்களே,

நீங்கள் ஒன்றும் சந்தேகம் படவேண்டாம், இது சரியான இடம் தான? என்று, இது பிறருக்கு நல்லது செய்ய நினைக்கும் மனதளவில் பெரியவர்களை பற்றி எழுதி இருக்கும் இடம்,
நிச்சயம் இதில் உங்களைப்பற்றி இருந்தே தீர வேண்டும், அதாலால் யோசிக்க வேண்டாம்...

மிக்க நன்றி உங்கள் பின்னூட்டதிற்கு ..

இஸ்ஸதீன் ரிழ்வான் said...

ஊனமுற்ற படைப்புக்கள்.....!!
http://changesdo.blogspot.com/2010/12/blog-post_07.html

Post a Comment