Tuesday, June 1, 2010

வாழ்க்கை(வலி)ன்னா என்ன? -- பாகம் 2





நன்றிங்க இரண்டாம் பாகத்தை படிக்க வந்ததிற்கு...

முதல் பாகம் இணைப்பு இங்கே : -
முதல் பாகம்


அங்க போயி நிக்கும்போது அடிவயிரே கலக்குற மாதிரி இருக்குங்க, ஆமா அங்க பார்த்தா என்னை மாதிரி குறைஞ்சது ஒரு 500 பேராவது நிற்பாங்க,திரும்பி போன வாழ்க்கை இல்ல அப்டின்னு மனசு சொல்லும், சரின்னு காத்து இருப்பேன்.கடைசில எல்லோரும் உங்க சுயவிவரம் அடங்கிய தாளை கொடுத்துவிட்டு செல்லுங்கள், உங்களை விரைவில் அழைக்கிறோம் அப்டின்னு சொல்வாங்க,


வெற்றி அடைந்திடலாம் என நினைத்த வெள்ளந்தி மனசு அப்டியே உடைந்து போகும் பாருங்க,மணி 4 ஆகி இருந்தும் சாப்பிட கூட மறந்துடும்ங்க இந்த வயிரும். 1 மணிக்கு சாப்பிட வேண்டிய மதிய உணவை 12 மணியில் இருந்து ,சாப்பிடு,சாப்பிடு அப்டின்னு சொல்ற அம்மா கண்முன்னாடி வந்து வந்து போவாங்க பாருங்க. என் தன்னம்பிக்கையை என்கூட இருக்க சொல்லிட்டு என் கண்ணீர் துளி மட்டும் என்னைய விட்டு வெளியே போகும்ங்க அந்த நேரத்துல ...

எப்படி வீடு திரும்பி போவேன்னு தெரியாதுங்க, 5.30 மணிக்கு டீ கடைல "அண்ணா ஒரு பாதம் பால்" அப்டின்னு ,சொல்றப்ப ஏதோஒரு இனம் தெரியா ஆறுதல்,போற-வர மக்களை பார்க்கும் போது நாமும் ஒரு நாள் சாதிச்சுடலாம்னு மனசு எனக்குள்ளே சொல்லிக்கும். இரவு சாப்பிட்டுட்டு படுக்கிறதோட சரிங்க, தூக்கத்த முந்திகிட்டு, கஷ்டப்பட்டு படிக்க வைச்ச அப்பா அம்மாவோட நினைவுதாங்க வரும்,அந்த மொட்டை மாடி தரைக்கு நிச்சயம் தெரியும்ங்க என் கண்ணீரோட முகவரி,

இப்படிதான் பல நேர்முகத்தேர்வுகளின் தோல்விகளை, மாலை நேரத்து சூடான பாதாம் பால் குளிர வைக்கும்ங்க..அன்றைய ஒரு மாலை நேரம் அழகானதாய் மாற்றிவிட்டது "நீங்கள் நேர்முகத்தேர்விற்கு அழைக்க படுகிறீர்கள்" என்ற அந்த மின்னஞ்சல்..

வேகமாய் எனது அறைக்கு வந்து படிக்க ஆரம்பித்துவிட்டேன், அரைகுறையாய் இரவு உணவு, அரைகுறையாய் அனைத்தும் முழுமையாய் இந்த முறை ஜெய்த்துவிடவேண்டும் என்பதற்காக..
தூங்கியதாய் ஞாபகம் இல்லை விழிக்கும்போது, மீண்டும் அரைகுறையாய் அணைத்தும்,சரியான தேர்வு நடைபெறும் இடத்தில் ஆஜராகியதை தவிர,

இம்முறை ஆட்களை கண்டு பயம் இல்லை, காரணம் டீ கடைக்காரன் கூட கண்விழித்துஇருக்காத நேரம் அல்லவா அது. நிச்சயம் நான் தான் அங்கே முதல்வனாய், தேடலில் பசிக்ககூடவில்லை, காத்திருந்தேன் காத்திருந்தேன்.சக போட்டியாளர்களின் எண்ணிக்கை நிச்சயம் 1000 தொட்டு இருக்கும்,பெரிய நிறுவனம் நடத்திய நேர்முகத்தேர்வு என்பதால்,

எப்படியோ முதல் கட்ட கணிதவியல் தேர்விற்கு உள்ளே அனுப்பப்பட்டேன்,கழித்தும்,கூட்டியும், பெருக்கியும்,வகுத்தும் என் எதிர்கால வாழ்க்கைக்கு போராடினேன். சிறிது நேரத்தில் முதல்கட்ட தேர்வு முடிந்தது ,அனைவரும் பெரிய அரங்கில் காத்திருக்கவும்,மதிய உணவை முடித்துவிட்டு வரவும் என அறிவிப்பு செய்யப்பட்டது,

கனவுகளோட காத்திருந்த அந்த நொடிகளில் நிஜமாய் பசிக்கவில்லை, எதிர்காலத்திற்காக என்னோடு என்னைபோல் என் வயிரும் கூட என்னோடு ஆவலாய் காத்து இருந்தது பசிக்காமல்,

சிறிது நேரத்தில் முடிவை வாசிக்க வந்தார்கள், இருக்கையின் நுனியில் அமர்ந்து, என் பெயரை நான் கேட்க்க ஆசைப்பட்டேன், சிறிது நேரத்தில் வாசிக்கப்பட்டு முடிந்துவிட்டது எனது பெயரை கேட்கமுடியவில்லை,எழுவதற்குமுன் இன்னொரு தகவல் அறிக்கை வந்தது, மீண்டும் வாசிக்க தொடங்கினார்கள் பெயர்களை, மீண்டும் கடவுளை பிரார்த்திக்கிறேன் , என் பெயரும் வாசிக்கப்பட்டது, நிஜமாய் இதயம் கனத்தது சந்தோஷத்தில்,வென்று விட்டதாய் குதித்தேன்,

வாசிக்கபட்டவர்கள் அந்த அறைக்கு செல்லும்படி அறையின்
பெயரை வாசித்தவுடன் அங்கே இருந்த முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன், இரண்டாவது தேர்வு, குழுவாக அமர்ந்து கருத்துகளை ஆங்கிலத்தில் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று சொன்னதும் கால்கள் நடுங்கத்தொடங்கின,

இவ்வளவு சீக்கிரம் வெற்றி வீழ்ந்துவிடும் என்று நினைக்கவில்லை இருந்தும் போராட தயாராகிவிட்டேன்..அறைக்குள் சென்றோம் நானும் சக போட்டியாளர்களும்..

அறையில் என்ன நடந்தது, அடுத்த பதிவில் பார்ப்போம்....

மூன்றாம் பாகம் இணைப்பு இங்கே : -
மூன்றாம் பாகம்



                                                                                         
                                             

30 comments:

யூர்கன் க்ருகியர் said...

சூப்பர் டா தம்பி...

செல்ல நாய்க்குட்டி மனசு said...

விஜய்,
உங்கள் பதிவு படிக்கும் போது திறமை இருந்தும் , ஆங்கிலத்தில் பேசும் திறமை இருந்தும் ஒரு வித கூச்ச சுவாபத்தில் இரண்டு நேர்முகத் தேர்வில் தோற்ற என் பெண் நினைவுக்கு வந்தாள். மூன்றாவதாக ஒரு பெரிய நிறுவனத்தில் கிடைத்த வேலையை நாங்கள் ஒதுக்கினோம். இன்று ஒரு பெரிய கல்லூரியில் ஆசிரியை. மன தைரியம் ஒன்றே விட்டு விடக் கூடாத ஒன்று. தமிளிஷ் இல் இன்னும் crispy ஆக போடுங்கள். vaalththukkal.

dheva said...

தம்பி...உன்னுடைய வாழ்க்கைத் தேடல்.... நெஞ்சம் கனக்க வைக்கிறது. உன்னுடைய எழுத்தும் எழுதும் ஆர்வமும் என்னை சிலிர்க்க வைக்கிறது. மொத்தமாய் மொக்கை பதிவுகளை எழுதிக்கொண்டு தன்னை பிரபலம் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு மத்தியில் உன் எழுத்துக்கள் வைரமாய் ஜொலிக்கிறது....

அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன் தம்பி....!

விஜய் said...

நன்றி யூர்கன் க்ருகியர் அண்ணா, உங்களை மாதிரி பெரிய திறமைசாலிங்க வாழ்த்துவதே எனக்கு புத்துணர்வு....நன்றி

விஜய் said...

பெரிய நன்றிங்க ஐயா, நிச்சயம் தன்னம்பிக்கை இழக்க படக்கூடாத ஓன்று தான்,கண்டிப்பாக கிரிஸ்பி ஆக போடுகிறேன்....நன்றி ஐயா...

விஜய் said...
This comment has been removed by the author.
விஜய் said...

தேவா அண்ணா உங்கள் தம்பி அல்லவா, உங்கள் திறமை கொஞ்சமாவது எங்கையாவது ஒட்டி இருக்கும், நீங்க தான் எனக்கு குரு.நன்றி எனது பதிவுகளுக்கு உங்களது கருத்தகளை அளித்தமைக்குமிக்க நன்றி அண்ணா, நிச்சயம் அடுத்த பதிவில் சந்திப்போம் அண்ணா....

தமிழ்போராளி said...

இரவை சுமந்த இதயத்துக்கு வெளிச்சத்தின் அருமை தெரியாது...
ஆனால் எதிர்கால கனவுகளுடன் வாழ்வை சுமந்து கொண்டு வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கையுடன் உங்கள் மன உறுதியும் எழுத்தும் எழுந்து நிற்பதை காண முடிகிறது.தொடருங்கள் உங்கள் பயணத்தை நாங்களும் உங்களுடன் இருக்கிறோம்.
பட்டமரமாய் மனிதன்
விடாமல் துளிர்த்துக்கொண்டிருக்கிறது
மனதின்(மனிதனின்) ஆசைகள்..

விஜய் said...

நன்றி விடுதலை வீரா அவர்களே, உங்களை போல் நண்பர்கள் கூட இருக்கும்போது வானத்தை கூட வசப்படுத்த தோனும்,அதில் வெற்றியும் காண்பேன்...நன்றி மீண்டும் வருக விடுதலை வீரா அவர்களே..

சௌந்தர் said...

அடுத்த பதிவு எப்போது வரும். உங்களுக்கு வேலை கிடைத்தா

விஜய் said...

நன்றி சௌந்தர், அடுத்த பதிவில் நிச்சயம் நீங்கள் என்னை மறுபடியும் மறுபடியும் தேட தொடங்குவீர்கள்.....

ஜீவன்பென்னி said...

அடுத்தப் பதிவுக்கு வெய்டிங்.

விஜய் said...

நன்றி ஜீவன்பென்னி அவர்களே, கண்டிப்பாய் அடுத்த பதிவு விரைவில் பதிவு செய்கிறேன்...நன்றி மீண்டும்

சௌந்தர் said...

இது நல்ல பதிவு கமெண்ட் போட்ட அனைவரும் வோட்டு போட்டு இருந்தால் இது பிரபல இடுகைக்கு வந்து இருக்கும்.

S Maharajan said...

உன்னுடைய இந்த முயற்சியை பார்க்கும் போதும்
கண்டிப்பாக நீ வெற்றி பெற்று இருப்பாய்
என்றே எனக்கு நினைக்க தோன்றுகிறது தம்பி!எனினும் உன் அடுத்த பதிவை எதிர் நோக்கி

விஜய் said...

நன்றி மகராஜன் அவர்களே, நிச்சயம் அடுத்த பதிவில் உங்களுக்கான விடை கிடைக்கும்..மீண்டும் நன்றி உற்சாகப்படுத்தியதற்கு

பட்டாசு said...

நிச்சயம் ஏதோ விஷயத்தோடு தான் எழுதி இருப்பீங்கன்னு நம்புறேன்.
உங்க தன்னம்பிக்கையை உறுதி செய்ய இங்க வந்து ஒட்டு போடுங்க.

விஜய் said...

நன்றிங்க பட்டாசு அவர்களே, நிச்சயம் தன்னம்பிக்கை ஊட்ட வேண்டும் என்பதற்காக தான் இப்பதிவை பதிவு செய்து இருக்கிறேன் ,
நன்றி மீண்டும் வருக மூன்றாம் பாகத்திற்கு....

Amaithi Virumbi said...

anna migavum nalla pathivu ... ithu palarin valkkai suvada irukum ..... thodarka ...

விஜய் said...

நன்றி அமைதி விரும்பி தம்பி, நிச்சயம் தொடுருவேன் ,தன்னம்பிக்கை ஊட்டுவேன் .....நன்றி தம்பி

பாலாஜி said...

உந்தன் இந்த பதிவு அப்படியே என் வாழ்கையில் நடந்ததுபோல இருக்கிறது...

prince said...

:-)

senthil said...

மொட்டை மாடி தரைக்கு நிச்சயம் தெரியும்ங்க என் கண்ணீரோட முகவரி............
வாழ்க்கையை வலிகளின் உணர்ச்சியான வரிகள்.உங்கள் அடுத்த படைப்பை தொடர வாழ்த்துகள்............

விஜய் said...

நன்றி பாலாஜி அவர்களே , நீங்கள் சொல்வது ஒரு வகையில் உண்மை, நம்மை போல் வேலை தேடி சென்னை வந்தவர்களின் வாழ்க்கையும் இப்படி இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம் ......உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி

விஜய் said...

நன்றி பிரின்ஸ் ......உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி

Unknown said...

வணக்கம் காருன்யா,

இவ்வளவு எழுத்து திறமை இருந்தும் எல்லாவற்றயும் மறச்சுடீங்களே!
வஞ்ச புகழ்ச்சி அனியை எனக்கிட்ட பயன் படுத்திட்டீங்களே!

இது பெருந்தன்மையா இல்லை நானும் உங்கள் எழுத்து திறமையை, அழகை பார்த்து சிறிதேனும் எழுதி விடுவேன் என்ற எண்ணமா..?

விஜய் said...

நன்றி முரளி, நிஜமாய் இப்பொழுதும் சொல்கிறேன், நான் இன்னும் வளர்ந்த மரம் அல்ல, துளிர்விடும் சிறிய செடி தான் முரளி...மிக்க நன்றி உங்கள் கருத்திற்கு....விரைவில் சந்திக்கிறேன் உங்களை

விஜய் said...

நன்றி செந்தில், வலிகள் தான் நம் முன்னேற்றத்திற்கான முன்னோடி....மிக்க நன்றி உங்கள் கருத்துகளுக்கு ..........

Anonymous said...

தம்பி உன் எழுத்து ரொம்ப எளிமை ஆனா வலிமையானது
வாழ்த்துக்கள்
தீபன் ஜெயக்குமார் (உன் சீனியர்)

விஜய் said...

நன்றி தீபன் அண்ணா, ரொம்ப சந்தோசம் நீங்க என் எழுத்துக்கள் வலிமை அப்டின்னு சொன்னதுல, இன்னும் அழகாகவும், ஆழமாகவும் எழுதுகிறேன்

Post a Comment