Friday, December 17, 2010

எனது பார்வையில் என் தாய் மண்.......



இவ்வளவு நாள எங்க போகிட்ட நீ ? அப்டின்னு , நீங்க எல்லோரும் திட்டுறது எனக்கு கேட்குதுங்க, என்னங்க பண்றது?, ஆபிசுல மூட்டை மூட்டையா கொடுத்திருக்காங்க ஆணி, சுவத்துல அடிக்க சொல்லி, இது பத்தாதுன்னு பின்னாடி லாரி வந்துகிட்டு இருக்குங்குறாங்க...

சரி வாங்க போவோம் ........

9.30 அலுவலக வேலை தொடங்கும் நேரம். 7.30 க்கு எழுந்து அவசர அவசரமா உடற்பயிற்சி கூடத்துக்கு சென்று அதையும் , இதையும் முயற்சி பண்ணி முடியாம தூக்கிபோட்டுட்டு , ஓடி வந்து புறப்படுவேங்க, அட நமக்கு அலுவலகத்துக்கு புறப்படுறதுக்கு ரொம்ப நேரம்லாம் ஆகாதுங்க. தேவை கேத்த சம்பளமா இருந்தாலும் கொஞ்சம்(கொஞ்சம் இல்லைங்க மிக ) அடிமட்டத்துல இருந்து வந்தவன் நான்,

அதனால உடுத்துகிற ஆடைல இருந்து, அடிக்கிற வாசனை திரவியம் வரை பாத்து தேர்ந்துடுக்கிற அவசியம் இல்லைங்க, அதனால சீக்கிரம் புறப்பட்டுருவேன், ஆனா மனசுக்குள்ள இருக்குற கலாரசிகன் அப்பப்போ கொஞ்சம் நவீன முறையில் நம்மளும் இருக்கலாமென்று நினைப்பான், அதனால சில நேரங்களில் கொஞ்சம் ஆசை பட்டதை விலை அதிகமா இருந்தாலும் வாங்கிடுவான், ஆனா அதுக்கு குறைஞ்சது ஒரு மாசமாவது வேதனை படுவான், இது நமக்கு தேவையான்னு. அதனால அதிக ஆடைகள் என் ஆடை மாட்டும் கொக்கிகளை அலங்கரிப்பதில்லை,

புறப்பட்டு முடிச்சதும் சமையலறையை எட்டிப்பாத்தா, வாரத்துக்கு மூணு நாலு வந்து சமைக்கிறதே பெரிசா நினைசுகிட்டு இருக்கிற சமையல் செய்றவங்க அட இன்னைக்கும் வந்து இருக்கமாட்டாங்க, அட போங்கப்பா இதுக்காவாவது சீக்கிரம் கல்யாணம் முடிக்கணும் போல இருக்கு அப்டின்னு மனசுக்குள்ள புலம்பிகிட்டு, தோல்பையை எடுத்து தோளுல மாட்டிகிட்டு ( அட அப்டி என்ன தான் அந்த தோல்பையில வைச்சு இருக்க அப்டின்னு நீங்க கேட்குறது கேட்குதுங்க எனக்கு, அட அதுக்குள்ளே ஒன்னுமே இருக்காதுங்க, அலுவலகத்துல குறிப்பு எடுப்பதற்காக எப்பவோ வாங்கிபோட்ட குறிப்பேடு, சாப்பாடு இல்லைனாலும் உன்கூட தான் இருப்பேன் அப்டின்னு தோல்பையோடு தினம் அடம்பிடிக்கிற மதியஉணவு பாக்ஸ்.,அவ்வளவுதான் ) கிளம்பிடுவேனுங்க.

தூரம் குறைவா இருந்தாலும் அலுவலகத்துக்கு போற எளிதான ஒரே வழி பக்கத்துல இருக்குற ரயில் நிலையம் தானுங்க, அட ஆமாங்க ரயில தான் தினமும் அலுவலகம் போறேன், வீட்ல இருந்து நடக்க ஆரம்பிச்சதும் அக்காவோட அறிவுரையும், சில பாசமிக்க நண்பர்களோட அறிவுரையும் ஞாபகத்துக்கு வருமுங்க, சொல்றேன் சொல்றேன் என்ன அறிவுரைன்னு? அவசரபடாதீங்க..

ஒழுங்கா காலைல சாபிட்டுரனும், இல்லைனா குடல் புண் வந்துடும் அப்டின்னு அவுங்க சொன்ன அறிவுரை அபாய மணி மாதிரி அடிக்குமுங்க , அய்யயோ அப்டின்னு போற வழியில இருக்குற தள்ளுவண்டி கடைலபோயி நிப்பேன் , அண்ணா ஒரு சொம்பு கூழ் குடுங்க அப்டின்னு கேட்டதும் புன்னகையோட சிரிசுகிட்டு, இந்தாப்பா , கடிச்சுக்க மிளகாய் வேணுமா?, இல்லை மாங்காய் ஊறுகாய் வேணுமா அப்டின்னு, குடுக்குற கூழில் குடல் நிறையரத விட , காட்டுற புன்னகைல மனசு நிறையுதுங்க, இந்த புன்னகையும், இந்த அக்கறையும், குளிர்ச்சியான அறையில் சாப்பாடு பரிமாறுற போலி புன்னகையவிட கொஞ்சம் வித்தியாசமா தான் இருக்குதுங்க, இதைவிட இன்னொரு காரணமும் இருக்குதுங்க இந்தக்கடை என்னை ஈர்ப்பதற்கு,

நடுஇரவு ,அதிகாலையா மாறுவது, நடு இரவுக்கு தெரியுதோ இல்லையோ, பசங்கள பெரியபடிப்பு படிக்கவைச்சுபுடனும்னு வைராக்கியத்த மனசுல வைசுகிட்டு இருக்கிற என் அப்பாவுக்கு தெரிஞ்சிரும், அதிகாலை ரெண்டு மணிகெல்லாம் பதநீர் (பணம் கல்லு ) இறக்க கிளம்பிடுவாரு,அந்த இருட்டுல பாம்பு இருந்தாலும், பூரான் இருந்தாலும், தேள் இருந்தாலும் தெரியாதுங்க, அதை எல்லாம் ஒதுக்கிவைசிட்டு எப்படியாவது வாழ்க்கைல ஜெயச்சுபுடனும் அப்டின்க்ரத மட்டும் மனசுல வைச்சுக்கிட்டு, உயரத்த மனசுல வைச்சுக்காம, தவறி கீழ விழுந்தா வாழ்க்கை என்னாகும் என்பதையும் ஓரமா ஒதுக்கி வைச்சிட்டு மரத்துல ஏரி பதநீர் இறக்குறது அப்பாவோட வேலைனா! அம்மாவும் அதுக்கு சளைத்தவங்க இல்ல, அந்த இரவுளையும் எதுக்கும் பயப்படாம ஒவ்வொரு மரமா போயி நின்னு பதநீர சுமந்து வந்து, அதை காசாக்குற வரைக்கும் அவுங்க பொறுப்பு,

காலைல அவசர அவசரமா பள்ளி பயிற்சி வகுப்பு போறப்ப, சொம்புல பதநீர ஊத்திகொடுத்துட்டு ,அண்ணா சீக்கிரம் குடிச்சிட்டு காச கொடுங்க அண்ணா, நேரமாச்சு நான் போகணும்னு அடம்பிடிக்கிற என்னிடம், தம்பி நீ ஒரு சொம்பு குடிச்சு பாருன்னு சொல்றவங்ககிட்ட, என் பையன் குடிக்க மாட்டான் அப்டின்னு நம்பிக்கையா அம்மா சொன்ன வார்த்தைய இன்னும் மனசுல ஆழமா பதிச்சுவைச்சுஇருக்கேங்க.அம்மா நிஜமா சொல்றேன் இப்ப நான் பிடிச்சு இருக்க சொம்புல கூழ் தான் இருக்கு, ஆனா அப்போ நீ என்மேல வைச்ச நம்பிக்கை தான் என் மனசுமுழுவதும் இன்னமும் இருக்கு. .

அவசர அவசரமா கூழ குடிச்சிட்டு வேகமா ஓடிபோயி ரயில்யேரி , இறங்குற அந்த ஐந்து நிமிட அழகான நேரத்துல நான் பாக்குற நிகழ்வுகள் அத்தனையும் அப்டியே மனசுல பதியுமுங்க, அந்த அவசர கூட்டத்துல அப்படியும், இப்படியும் ஆடி அசைஞ்சு எப்படியாவது தலைய மேல கொண்டுவறதுக்கு நான் சிரமப்படுவேன் பாருங்க, ஐயோ நான் மட்டும் இல்லைங்க அங்க நிக்குற எல்லோரும் தான் கஷ்டபடுவாங்க, எப்படியோ ஒருவழியா தலைய மேல கொண்டு வந்து அந்த ஐந்து நிமிடத்துல பாக்குற கேட்குற யாவும் அழகாய் இருக்கும், வெறும் "தாயே பிச்சை போடுங்க அப்டின்னு கேட்பதிற்கு பதிலா", கண்ணுதெரியலைனாலும் ஏதாவது ஒரு திறமைய வளர்த்து, அத நம்மகிட்ட காட்டி, வயித்துக்கு உதவி கேட்கும் அவுங்களோட முயற்சி, அங்க ஓரமா உட்கார்ந்து இருக்குற ஏமாத்தி பிழைக்கிற ஒரு மனுசனோட மனச சத்தமில்லாம பாதிச்சிட்டு போற அழகே தனி தானுங்க,

இன்னைக்கு என் மனச பாதிச்சிட்டு போன ஒரு நிகழவ தானுங்க இப்ப சொல்லபோறேன், கூட்டத்துல தலைய தூக்கி மேல பார்த்தேன், அவர பாக்கவே ஆச்சாரமா இருந்தாரு , நெத்திமுழுசா திந்நீறு,அவசர அவசரமா அவரு கைல கட்டி இருக்குற சாமி கையிற (கருப்பு கையிற ) அவிழ்க்க முயற்சி பண்றாரு, எதுக்குன்னு எனக்கு புரியல, கொஞ்சம் ஆவலா நானும் இன்னும் கொஞ்சம் கஷ்டப்பட்டு கூட்ட நெரிசலில் தலைய உயர்த்தி பாக்குரேங்க, இப்போ பார்த்த பக்கத்துல இருக்குரவரும் இப்போ அவருகூட சேர்ந்து அவிழ்க்க முயற்சிபன்ராறு, ஒன்னுமே புரியல என்ன பண்றாங்கன்னு, எதுக்கு இவ்வளவு அவசர படுராருன்னு..அதற்குள்ள நான் இறங்க போற இடமும் வர போகுது ,எப்படியோ அவுத்துட்டாங்க, சரி கையிற மாத்தபோராறு போல அதான் அப்டின்னு நினைச்ச எனக்கு நிஜமாவே கண்ணு கலங்கிடுசுங்க,அவசர அவசரமா ரயில் ஏறுறப்ப பாதி கால் இல்லா முதியவர், பிளாஸ்டிக் கால் கட்டிருந்த கயிறு துண்டாகிடுசுங்க, அந்த பெரியவர் அடுத்த நிறுத்தத்துல எறங்க போறாரு,அவருக்கு உதவி செய்யத்தான் அத்தனை பேரும் அவசரபட்டாங்க அப்டின்னு நினைக்கும்போது என் மக்கள் மேல ரொம்ப மரியாத வந்து ஒரு படி மேல போயி கலங்கின கண்ணீருல வணக்கம் வைச்சேங்க, அவசர அவசரமா அத்தனை பெரும் அவரு காலுல, அந்த பிளாஸ்டிக் காலை கட்டிவிட்டதும் அவரு சொன்ன நன்றி இன்னும் மறக்க முடியல ..

தையவு செய்து என் இந்திய மண்ணை குறை சொல்லாதீங்க,நிஜமா இங்கு கருணை உள்ளவர்கள் அதிகமுங்க, ஒருசில பேரை வைச்சு இந்த மண்ணை குறைச்சு சொல்லாதீங்க, எந்த நாட்டுலங்க பையனுக்கு ஐம்பது வயது ஆகுரப்பகூட, என்பது வயது அப்பா கஷ்டப்பட்டு உழைச்சு பையன் நல்லா இருக்கணும்னு காசு கொடுக்குறத பாத்து இருக்கீங்க ?.. பையன்கூட சண்டை போட்டுகிட்டு தனியா வந்து வாழ்ந்தா கூட , "என் பையன் நல்லா இருக்கானா அப்டின்னு பாக்க போறவங்ககிட்ட கேட்குறது எந்த நாட்டுலங்க இருக்கு என் இந்திய மண்ணைவிட?..உடலுறவு என்பது மணமானதற்கு பிறகு இருக்கவேண்டும் என்று மகளுக்கு சொல்லிகொடுக்கும் தாய் எந்த நாட்டுலங்க இருக்காங்க என் இந்திய மண்ணை தவிர அதிகமாய் ?..

கிரிக்கெட் விளையாட்டுல என் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் விளையாடும்போது,கடைசி பந்துல மூன்று ரன் அடிக்கணும் இந்தியா, மூன்று ரன் அடிச்சிட்டா , கலக்கிட்டானுங்க அப்டின்னு பேசிக்கிறோம், அடிக்காம விட்டுட்டா வாய்க்கு வந்தபடி திட்டுறாங்க, சிலபேர் லஞ்சம் வாங்கிட்டு ஆடுறானுங்க அப்டின்னு திட்டுரோம், சிலபேர் ஒருபடி மேல போயி தகாத வார்த்தைல திட்டுரோம். எப்போ பார்த்தாலும் இந்திய தேசத்த குறை சொல்றதுக்குன்னே ஒரு கூட்டம் இருக்குதுங்க , அது ஏன் அப்டின்னு தான் புரியல ,

இதே இந்திய மண்ணுல இன்னொரு கூட்டம் இருக்குதுங்க , ஒரு பந்துல ஆறு ரன் அடிக்கணும் அப்டிங்கற பெரிய இலக்கா இருந்தா கூட, என் இந்தியா அடிக்கும்னு ஒரு நம்பிக்கையோட காத்து இருப்பாங்க , இந்த நம்பிக்கைய பாத்து கேலி பண்ண ஒரு கூட்டம், அட இந்த கேலிய பாத்து கவலைபடமாட்டாங்க .ஏங்க நம்ம அம்மா மருத்துவமனைல உயிருக்கு போராடிகிட்டு இருக்காங்க, மருத்துவர் வந்து தெளிவா சொல்றாரு , இனி உங்க அம்மா பிளைக்கமாட்டாங்கன்னு, அவ்ளோ படிச்சவரு, தெளிவா சொன்னதுக்கு அப்புறமும் நம்ம அம்மா பிளைச்சுருவாங்க அப்டின்னு ஒவ்வொரு பாசமுள்ள பையனக்கும் மனசுல ஏதோ ஒரு ஓரத்துல நம்பிக்கை இருக்குமேங்க, அந்த நம்பிக்கை தாங்க இந்த கூட்டத்துக்கும் என் இந்திய தேசத்துமேல , அடிக்காம விட்டுட்டா கூட, சூப்பர் கடைசி வரைக்கும் வந்துட்டாங்க அப்டின்னு சொல்வாங்க...


எந்த நாட்டுலங்க ,அடிபட்டு சாககிடக்கரவண, சாலையோரத்துல பூ விக்குற அம்மாவோ , தள்ளுவண்டில வேலை செய்யுற கூலிக்காரரோ, மருத்துவமனைல சேர்த்திட்டு, அழுதுகிட்டே " காப்பாத்திடு நைனா " அப்டின்னு சொல்றவங்கள பார்த்துருகீங்க என் இந்திய மண்ணைவிட அதிகமாய் ?....

என் இந்திய மண்ணில் கருணை அதிகம், கனிவு அதிகம்,உழைப்பு அதிகம், திறமை அதிகம், சிறந்த பெண்மை அதிகம், காதல் அதிகம், நட்பு அதிகம், சிறந்த தாய்மை அதிகம்,சிறந்த கலாச்சாரம் அதிகம்...என் இந்திய நாடு சிறந்தது என்று ஏற்று கொள்ளும் மனதை தவிர ..... :( :(



43 comments:

எஸ்.கே said...

உணர்வுபூர்வமான பதிவு!

Chitra said...

வாவ்! அருமையான பதிவு.

ஜெயந்த் கிருஷ்ணா said...

Welcome back nanpaa..

dheva said...

தம்பி................

நெகிழ்ச்சியோடு வரிவிடாமல் ஒரு அதீத கதியில் வாசித்து முடித்து யோசித்து பார்க்கிறேன் வாழ்க்கையில் நீ கடந்து வந்த பாதை என்னை எவ்வளவு செம்மைப் படுத்தியிறது.

இன்னும் சொல்லபோனால் உன் மீது ஒரு கோபம் கூட உண்டு அருமையான கட்டுரைகளை எழுதும் வலு கொண்ட நீ ஏன் மாதத்திற்கு இரண்டு தடவைகள் எழுதக் கூடாது?

மிகைகள் குறைந்து போனால் குறைகள் மிகைந்து போய் விடாத தம்பி? அப்படித்தான் நல்ல எழுத்துக்கள் இல்லாத போது வேறு வழியில்லாமல் குறைகளை வாசிக்கும் நிலைகு வாசிப்பாளன் தள்ளப்பட்டு விடுகிறான்.

அப்பாவின் நம்பிக்கை உனக்கு நீ தனித்து நின்று சம்பாரிக்கும் போது நினைவுகு வருகிறதே இதை கட்டுப்பாடு என்று உலகம் சொல்கிறது. இதைத்தான் கலாச்சாரம் என்று நான் சொல்கிறேன்.

புகைவண்டியில் பாதித்த நிகழ்வு மட்டுமல்ல தம்பி ஓராயிரம் நிகழ்வுகள் நம்மைச் சுற்றி இருக்கின்றன நமது மேன்மையை பறைசாற்றும் விதத்தில் என்ன நமது மனிதர்களுக்கு வேறு ஏதோ ஒன்றுதான் ஈர்க்கிறதே அன்றி சொந்த தேசம் அவர்களுக்கு இளக்காரமக தெரிகிறது.

கடந்த வாரங்களில் லிவ்விங் டுகெதர் பற்றியும் நமது கலாச்சாரம் குறைபாடுகள் உள்ளது என்பது பற்றியும் மிகைப்பட்ட கட்டுரைகள் வந்தன....

அச்சச்சொ.. நம்ம தம்பி கூட இல்லையே இருந்தால் இன்னும் எமக்கு வலுவாய் இருக்குமே என்று கூட நினைத்தேன்.. இதோ...

ஒரு ஸ்பெசல் புல்லட ஃப்ரம் யுவர் எண்ட்....


சிகரங்களை எல்லாம் நீ எட்டிப் பிடிக்கவேண்டும்.. உன்னருகில் இருந்து எல்லாம் கண்டு நான் மகிழவேண்டும்.....! அட்டகாசமான பதிவு....

வேற என்ன தம்பி நான் சொல்வதற்கு இருக்கிறது.....

வழக்கம் போல ஐ லவ் யூ சோ மச் தம்பி....!

dheva said...

//நெகிழ்ச்சியோடு வரிவிடாமல் ஒரு அதீத கதியில் வாசித்து முடித்து யோசித்து பார்க்கிறேன் வாழ்க்கையில் நீ கடந்து வந்த பாதை உனை எவ்வளவு செம்மைப் படுத்தியிறுக்கிறது.//

பர்ஸ்ட் பாராவில் ஒரு சின்ன பிழை சோ.. ரீப்பீட் பண்றேன் இங்க..!

Kousalya Raj said...

//அவருக்கு உதவி செய்யத்தான் அத்தனை பேரும் அவசரபட்டாங்க அப்டின்னு நினைக்கும்போது //

என்னை அறியாமல் என் கண் கலங்குவதை உணருகிறேன்.

வெறும் வார்த்தைகள் இல்லை இவை...நம்மிடையே கலந்திருக்கும் உணர்வுகள்.

குடும்பத்தில் பல வேற்றுமைகள் இருந்தாலும் வெளி ஆட்கள் முன் அதை வெளிக்காட்ட மாட்டோம். அதே தான், நாடு என்று வரும்போதும்...

ஆனால் இன்றோ சிலர் ஒன்றும் இல்லாததையும் குறை சொல்லி பெரிது படுத்தி தங்களை முன் நிலை படுத்தவே முயலுகின்றனர்.

வெட்டி பேச்சுகள், வீண் விவாதங்கள்...பெருகிவிட்டன இப்போது...?!

பெற்றோரின் நம்பிக்கை உங்களை இன்று வரை வழி நடுத்துகின்றது இதை விட பெரிய ஓன்று வேறு என்ன இருக்க முடியும்...? நம் பெற்றோரின் அன்பும் பாசமும் அக்கறையும் வேறு எங்கு பார்க்கமுடியும்...? விதிவிலக்கு சில இருக்கலாம் அதற்காக இது தான் இங்கே விதி என்று உறுதியாக எப்படி சொல்ல இயலும்.

அண்ணனின் ஆதங்கம் தான் எனதும் மாதம் இரண்டாவது எழுதுங்கள்...நல்ல எழுத்துக்கள் பலரால் படிக்க படவேண்டும்...பலரையும் கட்டாயம் சென்று சேர வேண்டும்.

முயற்சி செய்வீர்கள் என்று விரும்புகிறேன்.

நல்ல பதிவை படித்த மன நிறைவுடன் அக்கா

பனித்துளி சங்கர் said...

///////////எந்த நாட்டுலங்க ,அடிபட்டு சாககிடக்கரவண, சாலையோரத்துல பூ விக்குற அம்மாவோ , தள்ளுவண்டில வேலை செய்யுற கூலிக்காரரோ, மருத்துவமனைல சேர்த்திட்டு, அழுதுகிட்டே " காப்பாத்திடு நைனா " அப்டின்னு சொல்றவங்கள பார்த்துருகீங்க என் இந்திய மண்ணைவிட அதிகமாய் ?....
//////////////

வார்த்தைகளை நேசிப்பதை விட உணர்வுகளை சுவாசிக்க தூண்டும் ஒரு சிறந்தப் பதிவு தோழா . வாழ்த்துக்கள் தொடரட்டும்

பெசொவி said...

அருமையான, நெகிழ்வான, நம்பிக்கையூட்டும் ஒரு பதிவு. இதை படிக்கச் சொல்லித் தூண்டிய தேவாவுக்கு நன்றி!

செல்வா said...

//ஆனா அதுக்கு குறைஞ்சது ஒரு மாசமாவது வேதனை படுவான், இது நமக்கு தேவையான்னு. அதனால அதிக ஆடைகள் என் ஆடை மாட்டும் கொக்கிகளை அலங்கரிப்பதில்லை,///

ரொம்ப எதார்த்தமான வார்த்தைகள் அண்ணா .. நான் ஏன் இத சொல்லுறேன் அப்படின்னா நானும் அப்படித்தான் பல சமயங்களில் நினைப்பதுண்டு .!!

சௌந்தர் said...

நம்ம அம்மா பிளைச்சுருவாங்க அப்டின்னு ஒவ்வொரு பாசமுள்ள பையனக்கும் மனசுல ஏதோ ஒரு ஓரத்துல நம்பிக்கை இருக்குமேங்க, அந்த நம்பிக்கை தாங்க இந்த கூட்டத்துக்கும் ////

நீங்க சொன்ன அனைத்து விஷயம் ரொம்ப உண்மை இந்த வரிகள் சொன்னிங்க பாருங்க இதில் 1000 சதவிகிதம் உண்மை இருக்கு உங்கள் பார்வையில் தாய் மண் சிறப்பு

நீங்கள் மீண்டும் பதிவு எழுதியதற்கு அந்த உதவி செய்தவர்களுக்கு நன்றி சொல்கிறேன்...

ஜீவன்பென்னி said...

இதுதான் விஜய் உன் கிட்ட பிடிச்சதே. படிக்குறப்போ அப்புடியே உணர்ச்சி வசப்பட வைக்குது. முதல் முதலாக நான் உழைத்து வாங்கிய ரூபாயை கையில் வாங்கும் பொழுது என் தந்தைதான் என் கண் முன்னே வந்து போனார். 24 மணி நேரமும் நின்று கொண்டே வேலை செய்த பொழுது என் அம்மாவின் நினைவுவந்தது. அங்கே தான் நினைவுக்கு வந்தது நம் பெற்றோரின் வாழ்கையே நம் வாழ்க்கைக்கான முன்மாதிரி, அவர்கள் இல்லாவிட்டாலும் நம் கைப்பிடித்து வழி நடத்தும் வாழ்க்கை முறைமை நம் சமுதாயம் அவர்கள் வழி நமக்குக் கொடுக்கின்றது. நிறைவாக இருக்கின்றது நீ மீண்டும் வந்ததில். நீ என்று ஒருமையில் அழைப்பது உன் எழுத்து தந்த உரிமையில்தான்.

இங்கு நீ குறிப்பிட்ட சம்பவங்களை யாரும் பெரிது படுத்தி பார்ப்பதில்லை ஏனெனில் தீயனவே மிகுதியான ஊடகங்களின் மூலம் நம்மிடையே பரப்பப்படுகின்றன. மிகுதியானவர்கள் நல்லவர்களே என்பதில் நான் உடன் படுகின்றேன். தேவா அண்ணனிடம் கேட்டுக்கொண்டே இருப்பேன், விஜய் ஏன் எழுதுவதில்லை எப்பொழுது திருப்புவார் என்று. நேற்றும் கேட்டேன் இன்று மிழ வந்ததில் மகிழ்ச்சி. முதல் முறையாக பெரிதாய் ஒரு பின்னூட்டம்.

அன்புடன்
சமீர்.

இம்சைஅரசன் பாபு.. said...

A ROYAL SALUTE FOR THIS POST MAKKAA >>>>>WONDERFUL................................ EXCELLENT >>>>>>>>>>>>>>>

விஜய் said...

மிக்க நன்றிங்க எஸ்.கே .....
ரொம்ப நாள் கழிச்சு ப்ளாக் பக்கம் வந்து பதிவ போட்டதும், அத படிச்சு உணர்வுபூர்வமான பதிவு என்று என்னை ஊக்க படுத்தியதற்கு....மீண்டும் எழுத வருவேங்க ... :)

மிக்க நன்றி மீண்டும் ஒருமுறை

நான் நான்தான் !... said...

நம்ம நாட்டுல இருந்துகிட்டு , நம்ம நாட்டையும் கலாச்சாரத்தையும் இழிவு
படுத்துறவங்களுக்கு சுருக்குனு சொன்னீங்க விஜய் !...

ஏன்னா, கிரிக்கெட்-ல தோத்துட்டா,
அந்த ஆட்டத்துல விளையாடின வீரர்களை நானும் திட்டியிருக்கேன். நீங்க சொன்னது எனக்கே சுருக்குனு-தான் இருந்தது...
NOW I FEEL GUILTY :(

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்.
எனக்காக மட்டும் இல்லனாகூட, நான் சொன்னதையும் மதிச்சி, காலைல ஏதாவது சாப்பிட்டிட்டு வர்றீங்களே!....
ரொம்ப தேங்க்ஸ்-க.
(உண்மையிலேயே சாப்பிடுறீங்களா ?)

நீங்க ஒரு பதிவு எழுதிட்டேன்னு சொன்னாலே,
அத படிக்கறதுக்கு முன்னாடி ஒரு Excitement.
ஏன்னா, கண்டிப்பா அதுல புதுசா ஒரு விஷயம் இருக்கும்.

KEEP IT UP !...
இது உன் கண்டினியூ, நீ கண்டினியூ... :)

விஜய் said...

மிக்க நன்றிங்க சித்ரா அக்கா,

என் தேவா அண்ணா இவ்வளவு அழகா பதிவ எழுதுவதுக்கு கிடைத்த ஊக்கத்துல அதிக பங்கு நீங்களாதான் இருப்பீங்கன்னு நினைக்கிறேன், நிஜமா ஒரு சின்ன சின்ன பாராட்டு தான் ஒரு பெரிய சரித்தரத்த உருவாக்கும் அப்டிங்கறது அண்ணாவ பாத்து தெரிஞ்சுக்கிறேன் ...அதனால நீங்க பாரட்டினதுல ரொம்ப சந்தோசம் அக்கா ...

மிக்க நன்றிங்க அக்கா உங்க பின்னூட்டதிற்கு ....

விஜய் said...

மிக்க நன்றிங்க ஜெயந்த் ,


என்னை மீண்டும் இந்த பதிவு உலகத்திற்கு வரவேற்பதற்கு மிக்க நன்றி ஜெயந்த் ,..எழுத்த படிச்சு உங்க பின்னூட்டத்த பதித்தற்கு மிக்க நன்றி ஒருமுறை ஜெயந்த் ...

விஜய் said...

அண்ணா ,

ஐ லவ் யு சோ மச் ......தேசங்களை தாண்டியும் நேசத்தை காட்டுவோம்னு சும்மா விளம்பரத்துக்காக சொல்வாங்க, ஆனா அத நீங்க உண்மையா நிருபிச்சுட்டீங்க...என்ன சொல்றதுனே தெரியல, என் எழுத்த இப்போ எத்தனையோ பேருக்கு கொண்டு சேர்த்து இருக்கீங்க அப்டின்னு நினைக்கும்போது நன்றி சொல்லி தானுங்க அண்ணா ஆகணும்,

உங்களுக்கு தெரியுமா அண்ணா ?, உங்க பின்னூட்டத்த படிக்க சில ஆர்வலர்கள் இருக்காங்க, அதுல நானும் ஒருத்தன்..நீங்க சொல்ற மாதிரி நிறையா எழுதனும்னு ஆசை, சில பல முடிக்கவேண்டிய இருப்பதால முடியாம போகிடுது, முக்கியமா உங்க பதிவ படிக்க நேரம் இல்லை,

வாழ்க்கை கற்று தர விசயத்த கொஞ்சம் மனச விட்டு பேச கிடைக்கிற சந்தர்பம் தான் இந்த ப்ளாக், அதுல உங்களை மாதிரி சிறந்த நட்பும், பாசமும் கிடைக்குது , இதுக்காக எவ்வளவு அழகான எழுத்தை கூட இங்கே நிரப்பி விட்டு செல்லலாம், ...

எவ்வளவு வேலைக்கு மத்தியிலும் எனக்காக படிச்சிட்டு, இவ்வளவு அழகா பின்னோட்டம் இட்டுட்டு, உங்க நண்பர்கள்கிட்ட என் பதிவை பற்றி கூறி படிக்க வைச்சு இருக்கீங்க, நான் இப்ப சொல்ற நன்றி எல்லாம் வெறும் வார்த்தைக்காக இல்ல அண்ணா, நன்றிய தவிர எக்ஸ்பிரஸ் பண்றதுக்கு வேற வழியும் இல்ல, மொழியும் இல்ல, அதாலால் நன்றிய கூறிகிறேன் நிறையா முறை ......

சீக்கிரம் திரும்ப முயற்சிக்கிறேன் அண்ணா, நீங்க வெளுதுகட்டிகிட்டு இருக்கிற போர்ல , நானும் ஒரு படை வீரனா சீக்கிரம் ....

:)

விஜய் said...

ரொம்ப நன்றிங்க கௌசல்யா அக்கா,
உண்மை அக்கா நீங்க சொல்றது , சில பேர் தங்கள பிரபலமாக்கி கொள்ள நாட்டை பயன்படுத்திக்கிறாங்க,அதுமட்டும் இல்லாம நாட்ட தப்பான கண்ணோட்டத்துல கற்பிக்குராங்க..

அப்புறம் என் எழுத்த மறக்காம வந்து படிச்சிட்டு , மறக்காம பின்னோட்டம் போட்டுட்டு, ஒரு நிபந்தனையும் போட்டுட்டு போயிருக்கீங்க , கண்டிப்பா முயற்சி பண்ணுறேன் மறுபடியும் நிறையா பதிவு பதிக்க..உங்க அன்பும், ஊக்கமும் எப்பவும் தேவை. மிக்க நன்றிங்க அக்கா ..

சீக்கிரம் வரேன் பதிவுலகத்துக்கு

Ramesh said...

//என் பையன் குடிக்க மாட்டான் அப்டின்னு நம்பிக்கையா அம்மா சொன்ன வார்த்தைய இன்னும் மனசுல ஆழமா பதிச்சுவைச்சுஇருக்கேங்க.அம்மா நிஜமா சொல்றேன் இப்ப நான் பிடிச்சு இருக்க சொம்புல கூழ் தான் இருக்கு, ஆனா அப்போ நீ என்மேல வைச்ச நம்பிக்கை தான் என் மனசுமுழுவதும் இன்னமும் இருக்கு//

மகனை நல்லவனாக வைத்திருக்கத் தாய்க்கு அவன் மீது கொண்ட நம்பிக்கை தவிர வேறு எதுவும் தேவையில்லை....

//பிளாஸ்டிக் கால் கட்டிருந்த கயிறு துண்டாகிடுசுங்க, அந்த பெரியவர் அடுத்த நிறுத்தத்துல எறங்க போறாரு,அவருக்கு உதவி செய்யத்தான் அத்தனை பேரும் அவசரபட்டாங்க அப்டின்னு நினைக்கும்போது என் மக்கள் மேல ரொம்ப மரியாத வந்து ஒரு படி மேல போயி கலங்கின கண்ணீருல வணக்கம் வைச்சேங்க, //

உதவிய, உதவத்துடித்த அனைத்து உள்ளங்களுக்கும் என்னுடைய வணக்கங்களும்.....

அருமையான பதிவு விஜய்... எத்தனை வருசம் கழிச்சு பதிவு போட்டா என்ன விஜய்... அருமையான "பதிவு"

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

விஜய்.. உங்க பதிவை படித்ததில், அந்த பெரியவருக்கு அனைவரும் உதவி செய்த இடம்.. உண்மைலயே.. கண்ல தண்ணி வர வைக்குதுங்க.. இந்தியன்னு சொல்லி பெருமை படுறேன்.. உங்க அம்மா, அப்போ சொன்ன விசயத்த, இன்னமும் மனதில் வைத்து, நெறி தவறாம வாழுற, உங்கள போல பொறுப்பான மகன்களும்... நம்ம இந்தியா நாட்டில் தான் உண்டு...

உங்க அம்மா, அப்பாவுக்கு... இத விட நீங்க மரியாதை செய்ய முடியாது.. இந்த பதிவே அவங்களுக்கு சமர்ப்பணம்..

எத்தனையோ, மாற்றங்கள் வந்தாலும், நம்ம அடிப்படை குணம், நம்மள விட்டு எங்கும் போகாதுங்க.. உண்மையில், பெருமையா இருந்தது, உங்க பதிவ படிச்சதில்... அடிக்கடி எழுதுங்க.. ஆல் தி பெஸ்ட்..!! :-)

விஜய் said...

மிக்க நன்றி .பனித்துளி சங்கர் ,
என்னை பொறுத்தவரை இந்த மண்ணில் இன்னும் நிறையா மனிதங்களை நேசிப்பவர்கள் அதிகம் தான் , அவற்றை யாரும் இல்லை என்று மறுக்க இயலாது...ஏதோ சில விசமக்கிரிமிகள் தான் இப்படி பரப்ப, மாற்ற முயற்சிக்கின்றன,
இவற்றை என் இந்திய மண்ணின் மனிதங்கள் சீக்கிரம் அழித்துவிடும் என்பதில் துளியும் ஐயமில்லை ...

நன்றிகள் தோழா, உனது விலைமிக்க நேரத்தை எனக்காய் ஒதுக்கியதற்கு ...

விஜய் said...

மிக்க நன்றி பெயர் சொல்ல விருப்பமில்லை
இவ்ளோ பெரிய பதிவையும் உட்கார்ந்து படிச்சிட்டு மறக்காம உங்களுடைய பின்னூட்டத்தையும் இட்டு, என்னை மறுபடியும் அழகாக எழுததூண்டும் ஆர்வத்தையும் வித்திட்டு சென்று இருக்குறீர்கள், அதற்க்கு மிக்க நன்றிமீண்டும் ஒருமுறை ...
உங்களை படிக்க தூண்டிய என் தேவா அண்ணாவிற்கும் மிக்க நன்றி ...

விஜய் said...

மிக்க நன்றி செல்வா தம்பி,
நீயும் நானும் மட்டுமல்லாது , இன்னும் நிறையா மனிதர்கள் இப்படி தான் இயல்பு நிலை மாறாமல், மாற முடியாமல் நிற்கிறோம், இதில் தவறோ , சரியோ என்றோ ஆராய நேரமில்லை , விருப்பமும் இல்லாமல் வாழ்கிறோம்..அட இப்படியோ இருந்துட்டு போவோமே, மாற வேண்டிய அவசியம் ஏற்பட்டால் முயற்சி செய்வோமே , இதில் என்ன இருக்கிறது ..ஹ ஹ ஹா ... :) ...மிக்க நன்றி தம்பி மறக்காமல் பின்னோட்டம் இட்டதிற்கு ....

:)

விஜய் said...

மிக்க நன்றி சௌந்தர்,

சமீபத்திய பிரபலம் அப்டினா அது நீங்கதான் , வலையுலகத்த கலக்கு கலக்குன்னு கலக்கிட்டு இருக்கீங்க, மிக்க சந்தோசம் , நீங்க கமெண்ட்ஸ் போட்டதே ஒரு பெரிய சந்தோசம் சௌந்தர்...ஒரு விசியத்த சில பேர் ஏற்றுகொள்கிறார்கள் என்றால், அந்த நிகழ்விற்கும் அவர்களுக்கும்,ஈடுபாடு உண்டு என்பார்கள், அவ்வகையில் தாய்மை பற்றி எழுதும் இடங்களில் நீங்கள் மிக்க நேசிப்போடு பின்னோட்டம் இடுவதை நான் பார்க்கிறேன், அவ்வகையில் நீங்கள் உங்களுது அம்மாவின் மீது மிகுந்த பாசம் வைத்து இருப்பதை உணர்கிறேன் , மிக்க சந்தோசம்,

என்றும் இது போல இருக்க எனது வாழ்த்துக்கள் மகிழ்வோடு ...

:)

mkr said...

உணர்வு பூர்வமான பதிவு.குறை கூட பற்றால் வரலாம் இல்லையா....(உங்களது வலைப்பூவில் எழுத்துகள் சரியாக தெரிவதில்லை.சரி செய்து கொள்ளுங்கள்)

சுபத்ரா said...

விஜய்..வாக்குகளுக்காகவும் கமெண்ட்களுக்காகவும் எதையோ எழுதி ஒரு பதிவைப் போட்டுவிட்டு உட்கார்ந்திருக்கும் மனிதர்களைப்(என்னையும் சேர்த்து தான்) போலல்லாமல் தனக்காக தனது ஆத்ம திருப்திக்காக தான் உணர்ந்த அந்த “உணர்வை” மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதற்காக மட்டுமே பதிவிடும் ஒரு சில மனிதர்களில் ஒருவர் நீங்கள்.
உங்கள் தாய்த்தந்தையர் மேல் நீங்கள் வைத்திருக்கும் பாசமும் மரியாதையும்(இதையும் விட ஏதோ ஒன்று...சொல்லத் தெரியவில்லை) பிற உயிர்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பும் என்னைச் சிலிர்க்கச் செய்தது.

”வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலாரின் வாக்கு தான் நினைவிற்கு வந்தது.

உங்களை வாழ்த்திய உங்கள் அன்புள்ளங்கள் போல எனக்கு வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்..!!

அக்‌ஷு பிறந்தநாள் வாழ்த்தைப் படிக்கத் தான் உங்கள் ப்ளாகிற்கு வந்தேன். வேறு எந்தப் பதிவையும் படிக்காமல் சென்று விட்டேன்! இன்று மறுபடியும் வந்து படிப்பேனென்று நினைக்கவில்லை.

பதிவைப் படித்து மிகவும் சந்தோசப்பட்டேன்.

வாழ்வின் எல்லா முயற்சிகளிலும் வெற்றி பெற்று உங்களது எண்ணங்கள் அனைத்தும் இனிதே நிறைவேற இறைவனை வணங்குகிறேன்...!!!

விஜய் said...

மிக்க நன்றி ஜீவன்பென்னி,,

முதலில் நன்றி என் வருகையை பற்றி அண்ணாவிடம் அக்கறையோடு விசாரித்ததற்கு, உங்களுக்கு நிறையா நன்றி சொல்லணும்.அப்புறம் சம்பளம் வாங்கும்போது அப்பா அம்மா தான் கண் முன்னாடி வந்தாங்க அப்டின்னு நீங்க சொன்னது நிஜமா பெருமையா இருக்குங்க ஜீவன், பதிவ போட்டதும் மறக்காம வந்து முதல் முறைய பெரிய பின்னூட்டமிட்டு என்னக்கு ஊக்கம் கொடுப்பதற்கு மிக்க மகிழ்ச்சி ஜீவன் பென்னி...

நீங்கள் தாரளாமாய் நீ என்றே அழைக்கலாம்,

:)
மீண்டும் ஒருமுறை நன்றி உங்கள் வாழ்த்திற்கும், பின்னூட்டத்திற்கும்

விஜய் said...

மிக்க நன்றி இம்சைஅரசன் பாபு..

உங்கள் வணக்கத்தில் புரிகிறது எனக்கு நீங்கள் நம் தாய் மண்ணை நேசிப்பது...மிக்க நன்றி இன்னும் நன்றாக எழுத முயற்சிக்கிறேன் தோழா...

பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி தோழா.

விஜய் said...

மிக்க நன்றி சந்துரு,

பாசமிக்க ஒரு சில நண்பர்களில் நீங்களும் ஒருவர், நீங்க சொன்ன காரணத்துக்காகவே கொஞ்சம் நிறையா சாப்பிடுளைனாலும் எப்டியாவது சாப்பிட்டுரேன் , மிக்க நன்றி உங்கள் அக்கறைக்கும், அன்புக்கும் சந்துரு..அப்புறம் நான் யாரையும் திட்டுல, கொஞ்சம் தாய் மண் மேல் பற்று வைக்கலாமே என்று தான் ஒரு விண்ணப்பத்தை வைத்து இருக்கிறேன் , மத்தபடி யாரையும் திட்டனும் அப்டிங்கற உள் நோக்கம் எல்லாம் கிடையாது சந்துரு ...

மிக்க நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு

விஜய் said...

மிக்க நன்றி பிரியமுடன் ரமேஷ்

அனைவருக்கும் நன்றி கூறிய உங்கள் மனதிலிருந்து உங்கள் நற்குணத்தை அறிகிறேன், மிக்க மகிழ்ச்சி ரமேஷ் ..
இப்போ நீங்க நிறையா பதிவுகள் போடுவ்தாய் உணருகிறேன் , மிக அருமை , இன்னும் நிறையா எழுதுங்கள், நிச்சயம் நேரம் கிடைக்கும்பொழுது உங்கள் வலைதளத்து பக்கம் வருவேன்..

மிக்க நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு

விஜய் said...

மிக்க நன்றிங்க ஆனந்தி,

நீங்கள் சொல்வது மிகசரியானா உண்மை , //எத்தனையோ, மாற்றங்கள் வந்தாலும், நம்ம அடிப்படை குணம், நம்மள விட்டு எங்கும் போகாதுங்க..// ..மிக்க நன்றிங்க , கண்டிப்பா நிறையா எழுத முயற்சி பண்றேன், முக்கியமா சரியா எழுத முயற்சிக்குரேன்...

மிக்க நன்றிங்க உங்கள் பின்னூட்டத்திற்கு .....

kiruthika said...

//என் இந்திய மண்ணில் கருணை அதிகம், கனிவு அதிகம்,உழைப்பு அதிகம், திறமை அதிகம், சிறந்த பெண்மை அதிகம், காதல் அதிகம், நட்பு அதிகம், சிறந்த தாய்மை அதிகம்,சிறந்த கலாச்சாரம் அதிகம்...என் இந்திய நாடு சிறந்தது என்று ஏற்று கொள்ளும் மனதை தவிர .....//
romba arumaiyana padivu.....

நிலாமதி said...

என் இந்திய மண் .............இந்தமண் வாசனைப் பதிவு அருமை.

ஆர்வா said...

உங்க கடமை உணர்ச்சி புல்லரிக்க வைக்குது...

விஜய் said...

மிக்க நன்றி MKR அவர்களே,
நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது, இருந்த போதிலும் இந்திய மண்ணை குறை கூறுவதை விட்டுவிட்டு கொஞ்சம் அதற்காய் தன்னால் இயன்றதை செய்யலாம், குறைந்தது தன்னையாவது சரியாக வைத்திருந்தால் போதுமானது... மிக்க நன்றி வலைதளத்திற்கு வந்து உங்கள் நேரத்தை ஒதுக்கி, படித்துவிட்டு, நல்ல ஒரு எழுத்திற்கு வித்திட்டு சென்று இருக்கிறீர்கள் ...

மிக்க நன்றி

விஜய் said...

மிக்க நன்றி சுபத்ரா தேவி,
எழுத்தை வாசித்துவிட்டு விட்டு செல்லும் நல உள்ளங்களுக்கு மேல் ஒருபடி சென்று , எனக்காய் பிரார்திருக்கிரீர்கள் , அதற்கு எனது நன்றிகள், இன்னும் என் இந்திய மண்ணில் ஒவ்வொரு துளியிலும் மனித நேயம் அதிகம் பிற தேசத்தை விட..நான் மட்டும் இல்ல இன்னும் என்னை போல் கோடிகணக்கில் இருக்குறார்கள், பிறப்பார்கள் , என் இந்திய தேசம் விரைவில் முதன்மையாய் மிளிரும், பொருளாதாரத்திலும் சரி , கலாசாரத்திலும் சரி, கொஞ்சம் மாற்றம் இருக்கலாம், அதற்காய் தேசத்தை முழுதாய் குறை சொல்ல முடியாது.. மிக்க நன்றி சுபத்ர தேவி, முயற்சிக்குறேன் முதன்மையாய் எழுத இன்னும்

மிக்க நன்றி

விஜய் said...

மிக்க நன்றி கிருத்திகா,

பொறுமையாய் நிதானமாய் எழுத்தை வாசித்துவிட்டு வாழ்த்திவிட்டு சென்று இருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது..எனது அனைத்து பதிவையும் படித்துவிட்டு அருமை என்று உற்சாகபடுத்திஇருப்பது, ஒரு நல்ல எழுத்து உருவாக வித்திட்டு சென்று இருக்கிறீர்கள், பின்னோட்டம் அனுப்பியதற்கும் மிக்க நன்றி கிருத்திகா

மிக்க நன்றி

விஜய் said...

மிக்க நன்றி நிலாமதி அக்கா ,

ரொம்ப நாள் கழிச்சு வந்தாலும் என் பதிவ படிச்சிட்டு பின்னோட்டம் மற்றும் மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறீர்கள் , மிக்க சந்தோசம் அளிக்கிறது, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள், நான் நம்புகிறேன் நீங்கள் நலம் என்று , அக்கறையுடன் நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலால் மிக்க சந்தோசம் அக்கா . உங்களுக்கான வேலைகளிலும் கூட எனது பதிவை படுத்தி வாழ்த்திவிட்டு செல்வது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது .. :) ...

take care akka

மிக்க நன்றி

விஜய் said...

மிக்க நன்றி கவிதை காதலன்

நீங்கள் முதல்முறை வந்து இருக்கிறீர்கள், அதற்க்கு எனது பணிவுகள்...உங்களது கவிதைகளை படித்தேன் மிக அருமை, வாழ்த்துக்கள், இன்னும் நிறையா எழுத எனது வாழ்த்துக்கள் கவிதை காதலன்...
மிக்க நன்றி மீதும் ஒருமுறை பொறுமையான வாசிபிற்க்கும், பின்னோட்டம் இட்டு உற்சாப படுத்தியதற்கும் ..



மிக்க நன்றி

Neelakantan said...

REALLY SUPERB.
UNGALPAKUTHIKKU NAAN MUTRILUM PUTHIYAVAN.

"ENATHU PAARVAIYIL ENATHU THAAI MANN"
veRum katturaiyo kathayo alla, anbarE, IvvaLavu unarChi poorvamaaga ezhuthi ennaiyum kan kalanga vaiTHuLLeer. veRum vaarTHaiGaLaal nirappamal, muzhuvathum, unmaiyaana uraniChiyaal nirappi uLLergaL. NiCHayamaaga, nalla panbukalil,"karpu" vishayaTHil, Irakka gunaTHil, naam (Inthiyar) yaarukkum kuraithavar illai. Innum sirappaga ungaLaal ezhutha mudiyum. Intha maatraan ThottaTHu malligaiyin mana maarntha vaazTHukkaL VIJAI.
With Warm Wishes NEELAKANTAN.C.S. PALAKKAD,KERALA

Unknown said...

அருமை!!

நந்தலாலாவுக்கு வருகை தாருங்கள்!

விஜய் said...

மரியாதைக்குரிய நீலகண்டனாகிய உங்களுக்கு மிக்க நன்றி,

முகம் தெரியா நட்புகள் கூட இங்கே பூக்கும், மனம் வீசும், உற்சாகம் அளிக்கும் என்பதற்கு உங்கள் ஊக்குவித்தல் நிரம்பிய இந்த பின்னூட்டம் ஒரு சாட்சி. மிக்க நன்றி என் வலை தளத்திற்கு முதன் முதலாய் வந்தமைக்கு மற்றும் இந்த கத்து குட்டியையும்,வளர்த்துவிட அச்சாரம் தூவியமைக்கு.

விஜய் said...

நன்றி நந்தலாலா,

நிச்சயம் வருகிறேன் உங்கள் வலைதளத்திற்கு.தேடுதல் ஞானத்தை வளர்க்கும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருப்பவன் நான்.

Post a Comment