Saturday, June 18, 2011

பத்திரமாய் திறந்து வைக்கப்பட்ட ரகசியம்
ரொம்ப நாள் ஆச்சு உங்களை சந்திச்சு , சில நேரங்களில் சிலவற்றை தேடிசெல்ல வேண்டி இருக்கும், அத்தகைய தருணங்களில் நம்மை நேசிக்கும் அன்புள்ளம் கொண்டவர்களை விட்டுச்செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு இருப்போம், அத்தகைய தருணம் தான் உங்களுக்கும் எனக்கும் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது என எதோ ஒரு கணக்கில் நம்பிக்கொண்டிருக்கிறேன், இக்கனக்கையும் உடைத்துபோட்டுவிட்டு உங்களை இப்பதிவின் மூலம் நெருங்க ஆசைப்பட்டேன், நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதுகிறோம், எத்தனை பேர் இதைவாசிக்கபோகிறார்கள் என்ற மனதின் எதோ ஒரு கேள்விக்குறியை தாண்டியும், எழுதியே ஆகவேண்டும் என்ற மனதின் எதோ இன்னொரு மூலையிலிருந்த வந்த பிடிவாதத்தின் பிரதிபலிப்பு தான் இங்கே நீங்கள் வாசிக்க போகும் எழுத்தாய்.


இங்கே உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கிறேனா என்று தெரியவில்லை, அனால் இப்பதிவு நிச்சயம் நீங்கள் கடந்தவைகளாகவும், கடக்கபோவைகளில் ஒன்றாய் தான் இருக்கும் என உறுதியாய் கூறி ஆரம்பிக்கிறேன் ......

ஆரம்பிப்பதற்கு முன் தெளிவாய் உங்கள் முன் ஒன்று கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன், அழகாய் இயங்கிக்கொண்டு இருக்கும் உங்கள் மனதின் மீது ஏதோ ஒன்றை திணிக்க முயல்வதாய் என்ன வேண்டாம், திணிக்க போவதும் இல்லை, இவைகள் யாவும் உங்கள் மனிதில் அழகாய் இயங்கிகொண்டு இருக்கும் எண்ணங்களை போன்று என் மனதில் அழகாய் அசைந்து கொண்டு இருந்தவைகள், அவைகளைத் தான் இப்பொழுது வார்த்தைகளில் அசையா வண்ணம் அடித்துவைத்து இருக்கிறேன்...

வாழ்க்கை என்றால் என்ன?....ஆயிரம் விடைகள் இந்த வினாவிற்கு பதிலாய். புத்தகத்தில் எழுத்துக்களாய், அறிஞர்களின் அற்புத சொற்களாய், ஞானிகளின் வாழ்க்கைகளாய், இப்படி பலவிதங்களில் நமக்கு விடைகளாய் நம்மை வந்தடைந்திருக்கும். படிக்கும், கேட்கும், தருணங்களில் மட்டும் அந்த விளக்கங்கள் நமக்கு புரிந்தவைகளாய் இருக்கும். சில விளக்கங்கள் இவ்வாறு உணர்த்தும் " வாழ்க்கை அப்டிங்கறது ஒரு சவால், அதனால் எதிர்க்கணும்", "வாழ்க்கை அப்டிங்கறது ஒரு போர், அதில் போராடனும்", "உன் வாழ்க்கை முழுவதும் உன் கையில் "........... இப்படி பல விளக்கங்கள்.

கொஞ்ச நேரம் இந்த விளக்கங்களை மறந்துவிடுவோம்.......

உண்மையில் நம் வாழ்க்கை நம் கையில் தான் தீர்மானிக்கபடுகிறதா?.நமது வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடிகளும் நம்மால் தான் கடக்கிறதா?. அனைத்து வெற்றிகளும், தோல்விகளும் நம்மால் தான் தீர்மானிக்கபடுகிறதா?.பிறப்பும் இறப்பும் மட்டும் தான் நம்மால் தீர்மானிக்க படவில்லையா?..

நம் தந்தையின் ஒருதுளி விந்தணுவில் ஒருகோடி நமது சகாக்கள்( ஒரு கோடி உயிரணுக்கள் ), நமது தாயின் உயிரணுவில் நுழைய போட்டி இட்டு, நாம் மட்டும் நுழைந்து அத்தனை சகாக்களையும் வென்று இன்று நான் என்று கூறிகொள்ளும் முதல் வெற்றியில் ஆரம்பிக்கிறது நமது அதிர்ஷ்டம்..

பிறகு நமது பணக்கார அப்பாவால், ஏழையான அப்பாவால் தீர்மானிக்கபடுகிறது நம் ஆரோக்கியமான, ஆரோக்கியமற்ற குழந்தை பருவ வளர்ச்சி, பிஞ்சுவிரல்கள் பளிங்குத்தரையில் படுகிறதா, சுல்லிபொருக்கும் பொட்டல்காட்டில் பதிகிறதா என்பதை தீர்மானிப்பதும் , கதர்சட்டையில் கட்டுகட்டாய் பணம் என்னும் பணக்கார அப்பாவாலோ, கசங்கிக்கிடக்கும் கோமணத்துணியில் சத்தம் எழுப்பும் நாணயங்களுக்கு எஜமானான ஏழை அப்பாவாலோ.... அடடா இந்த குழந்தை பருவவளர்ச்சியும் அதிர்ஷ்டத்தில் தான் ஆரம்பிக்கிறதா?

அடுத்து, கல்வியும், காதலும், கலந்து மாறிமாறி வரும் , புற்றிஈசலுக்கு இறக்கை முளைத்து சுற்றிதிரியும் இறப்பின் அச்சம் அறியா இளம்கன்று பருவம். புத்தகத்தோடு,கலப்பையையும் இருக்கபிடித்து, கலப்பை தின்று,எஞ்சிய கைரேகைகளில் எழுதுகோலை இருகபிடித்து அழகாய் எழுதியபின்பும்,வடை தின்றுகொன்று,ஏதோ வீட்டுச்சன்டையில் நமதுவிடைத்தால் தண்டனைபெற்று முற்றுபுள்ளிவைக்கப்பட்டு இருக்கும், கதைகளை கட்டி இருக்கும் விடைத்தாள் நேற்று நடந்த சுமூக உறவில் மதிப்பெண்களை வாரிகுவித்திருக்கும். அட இந்தபருவமும் அதிர்ஷ்டத்தில் தான் வளர்கிறதா?...

தான் உண்ணாமல் நமக்கு கொடுத்து ,தன்னை குடல் திங்கும் அமிலத்திற்கு தாரைவார்த்துவிட்டு முகம்மலரும் தாயின் கருணையில் கிடைத்த பழையசோறும், ஊறுகாயிலும் வளர்ந்த உடல் மினுமினுப்பதில்லை, மரங்கள் கூட மினுமினுக்கும் வண்ணங்களில் மயங்குவதுண்டு, அப்படியிருக்க ஆறறிவுகொண்ட மனிதன் தோல்மினுமினுப்பதில் மயங்குவதில் ஆச்சர்யம் இல்லை, ஆப்பிளையும், ஆரஞ்சையும் முதன்முதல் உண்டுபலகிய ஆதி மனிதன்கூட பலாப்பழத்தை உண்ண பயம்கொண்டிருக்கிறான்..இங்கே அழகிய காதலும் அழகைவைத்தே ஆரம்பிக்கிறது, அட இந்தபருவமும் அதிர்ஷ்டத்தில் தான் மலர்கிறதா ?...

உயிரையும்,வியர்வையையும் விற்று விற்று சேர்த்த சில்லறையில் பட்டபடிப்பை முடித்து பட்டணம் சென்று, ஒவ்வொரு வீதியில் தன் கால்தடம் பதித்தும் கிடைக்காத வேலை, ஓய்ந்து உட்காரும் பொழுதில் கிடைத்து இருப்பதை நாம் உணர்ந்திருப்போம், போதும் என்று வீடும் செல்லும் வேளையில்,ஓடிவந்து உனக்கும் சொந்தம் என்று நம்மோடு ஒட்டிக்கொண்டு உறவாடும் வேலையை நம்மில் அனைவரும் நிச்சயம் உணர்ந்திருப்போம்.இரவில் விளிக்கா நண்பன் வேலைகிடைத்த சந்தோஷத்தில் முழக்கமிடும் சத்தத்தில், இரவிலும் உறங்கா உழைத்தநண்பன் தோல்வியின் சத்தமில்லா சத்தில் கரைந்து போவதை உணர்ந்திருப்போம்,

முன்னும் பின்னும் அலையும் கண்களை கட்டிவைத்து காதல்வலையில் விழாமல், கொஞ்சம் விழுந்தும், விழாமலும் எப்படியோ தனக்கென நிச்சயித்த பெண்ணிடம் கொண்டு சேர்த்திருப்போம், பொண்ண நல்லா பார்த்துக்க..பிடிச்சுருக்கா? என்ற கேள்விக்கு அவசர அவசரமாய் எதோ ஒரு கணக்கை மனதில் எதிர்பார்ப்புகளை கூட்டியும்,எதிர்பார்ப்பு அற்றவைகளை கழித்தும் ஒரு ஐந்து நிமிட நேரத்தில் நம்வாழ்க்கையை ஒரு அதிர்ஷ்டத்தின் ஒப்படைத்துவிடுகிறோம், அன்பான துணையும் கூட ஒரு ஐந்து நிமிட பார்வையில் நிச்சியக்கபடுகிறது, அடடா இல்வாழ்க்கையும் கூட அதிர்ஷ்டத்தில் தான் வாழ்கிறதா?...

இப்படியாக வாழ்க்கை என்பதே ஒரு அதிர்ஷ்டத்தில் பயணிக்கும் பாய்மர கப்பல் என்று அதிர்ஷ்டத்தின் தலையில் கட்டிவிடலாம?..பிறகு வாழ்க்கை என்பதன் பொருள் தான் என்ன?..


வாழ்க்கை வாழ்க்கை அப்டின்னு பெரிதா இழுத்து, பயங்கரமாய் பயமுறுத்தும் அளவிற்கு ஒன்றும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒரு வார்த்தையில் சுருக்கமாய் சொல்லிவிட்டு நடைகட்டலாம் அந்த அளவிற்கு எளிதானது தான் வாழ்க்கையும்..

இன்னும் அழகாய் புரியும் வண்ணம் கூறியே ஆகவேண்டும்.அவசர அவசரமாய் பேருந்து நிறுத்தத்தை அடைந்திருப்போம் .நம்மைபோன்ற குறைந்தது ஒரு முப்பது பேரையாவது காணலாம் அதே பேருந்துநிருத்ததில்.சிறுவயதில் விளையாடியிருப்போம் காந்ததுண்டை வைத்துகொண்டு,மண்ணில் போட்டு புரட்டியதும் ஓராயிரம் இரும்புத்துகள்கள், காந்தத்தை கட்டிபிடித்துகொண்டும், சிலவகைகள் தொங்கிக்கொண்டும் இருக்கும். அந்த இளம் பருவத்தை ஞாபகபடுத்துவது போன்று வந்து நிற்கும் அந்த அழகிய அரசுப்பேருந்து.இந்த பேருந்து நிறுத்தத்தில் இருக்கும் நாமும் ஓடி ஒட்டிக்கொண்டு,அடித்துபிடித்து உள்ளே சென்று ஒரு இருக்கைக்கு அருகே நின்றுவிடுவோம் வெகுதூரம் நின்று கொண்டு வரும் ஒரு ஐம்பது பேரில் ஒருவனாய்..பேருந்து நகர ஆரம்பித்து ஒரு மூன்று நிறுத்தத்தை தாண்டி இருக்கும், சரியாக நாம் நிற்கும் இருக்கைக்கு அருகே அமர்ந்து இருப்பவர் எழுந்துசெல்வார் நம்மை அமரசொல்லிவிட்டு.நாமும் சிரித்துகொண்டே அமருவோம் நமக்கு முன் அரைமணி நேரம் கால்கடுக்க நின்றவனை நிற்கவைத்துவிட்டு.இது தாங்க வாழ்க்கையோட தத்துவம் கூட ....

இதுபோன்று தான் வாழ்க்கையில் சில நேரங்களில் அதிர்ஷ்டம் நம்கரத்தை இருகபற்றிக்கொள்ளும்.இந்த அழகிய அதிர்ஷ்டத்திற்கு வித்திட்டதே நம் முயற்சி தான் என்பதே நிதர்சனமான உண்மை.ஐயோ கூட்டம் என்று நிறுத்ததிலே நின்றவர்களுக்கு மத்தியில்,சென்று தான் பார்ப்போம் என ஒரு அழகான முயற்சி எடுத்திருக்கிறோம் அவைதான் தான் நமக்கு இந்த அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

எப்பொழுது வாழ்க்கை பற்றிய அதிக எதிர்பார்ப்புகளையும், தேடல்களையும்,முன் எச்சரிக்கைகளில் நம் மனம் முழுவதுமாய் அர்ப்பணிக்கப்பட்டு இருக்கிறதோ அப்பொழுது இயற்க்கை தீர்மானிக்கும் சில முடிவுகளை எப்படி எதிர்கொள்வதென்று தெரியாமல் மனம் திக்கிமுக்காடி தான் போகிறது , கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்கிறோமா?????? சரியாக செய்கிறோமா என்றால் ஏதோ சாதனை செய்யும் அளவிற்கு செய்ய வேண்டும் என்றில்லை, உன்னால் முடிந்தவரை சரியாக செய்கிறாய் என்று நம் உள்மனதின் ஒற்றை வார்த்தை போதும்.அவ்வளுவுதான் வாழ்க்கை.

ஏதோ இரண்டாம் வாழ்க்கை (ஜென்மம்) என்றெல்லாம் படித்திருக்கிறோம், அப்படி படித்ததை மனதில் போட்டுகொண்டு, அதற்காய் கண்ணைமூடிக்கொண்டு, இளகிய மனதில் வாழ்க்கைபற்றிய சுமைகளை சுமந்துகொண்டு இந்த அழகிய வாழ்க்கையை துளைத்துவிடவேண்டாம்.

இப்ப சொல்லுங்க வாழ்க்கை பற்றிய பயம் நமக்கு தேவையான ஒன்றுதானா?..வரும்போது எதிர்கொள்வோம், அது வீழசெய்யும் மரணமாக இருந்தாலும் சரி, வாழசெய்யும் வெற்றியாக இருந்தாலும் சரி ...வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் ரசிக்க முயற்சிப்போம்,நமக்குகொடுக்கபட்ட வேலையை மிகசரியாக செய்ய முயற்சித்திக்கொண்டு.....

நம்மையும் மீறி இயற்கை தீர்மானிக்கும் சில முடிவுகளுக்கு நாம் எப்படி பொறுப்பாளி ஆக முடியும், அதற்காய் கவலை கொள்ளமுடியும்.
ஆனால் நிச்சயம் ரசிக்கமுடியும் ஒவ்வொரு முடிவையும்,நம் மனதை அழகிய வெற்றிடத்தால்(ரசிக்கும் திறன் ) நிரப்பி இருக்கும் தருனத்தால் மட்டுமே..

"கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்ய முயல், ஒவ்வொரு நொடியையும் ரசிக்க பழகு" இந்த ஒற்றை வரி தான் வாழ்க்கை !!!!!!!
19 comments:

dheva said...

முதல்ல ஒரு சர்ப்ரைஸ்தான் எனக்கு உன்னோட போஸ்ட் படிக்கும் போது....

வாழ்க்கையின் அழகு மிகுந்த தருணங்க்ள் ரசிக்கவேண்டியவை. ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தமும் கருத்துக் கொண்டு பார்த்தால் எல்லாமே அபத்தமாய் போய்விடும். அழகியல் தன்மைகளை உள்வாங்கிக் கொண்டு நகர்ந்து செல்லும் வாழ்வில் என்னதான் நடந்து விடப்போகிறது....

ரிலாக்ஸ்.. நோ டென்சன்....ஜஸ்ட் மூவ் அரவுண்ட்.. என்ன நடக்குதோ நடக்கட்டும் அதுக்கா செய்ற வேலையை செய்யமா இருந்திடாதீங்க பாஸ்னு போற போக்குக்ல சொல்லிட்டியா தம்பி.. .! கிரேட்..!

ஏன்டா..தம்பி.. டைம் கிடைக்கும் போது எழுதுடா ! எழுதுடான்னு சொல்லிட்டேன். இப்பவும் அதான் சொல்றேன்...ப்ளீஸ் புட் யுவர் பீட்ஸ் அப்போ அப்போ டைம் கிடைக்கிறப்ப...

மனிதர்கள் வசிக்காத இடத்தில் புல் பூண்டு போன்ற களைகள் முளைத்து விடும் தம்பி...! சக்தி வாய்ந்த இந்த ஊடகத்தில் உனது வலுவான கருத்துக்களை நேரம் கிடைக்கும் போது பகிர தவறாதே...!

வாழ்த்துக்கள் பா!

ஜீவன்பென்னி said...

Welcome back Vijay...


சரியாத்தான் சொல்லிருக்கீங்க...

ஜீவன்பென்னி said...

எழுத்து நடைல ஒரு மாற்றம் தெரியுது... எல்லாம் அனுபவம் தந்த மாற்றம் போல இந்த போஸ்ட் மாதிரியே.

விஜய் said...

அன்புள்ள தேவா அண்ணா,
என் ஒவ்வொரு எழுத்தின் பின்புலத்திலும் உங்கள் உற்சாகமும், அறிவுரைகளும் தான் நிரம்பி இருக்கிறது. என் எழுத்து உங்களை சம்பாதித்து இருக்கிறது.ஐயும்
மிக்க சந்தோசம். இன்னும் என் எழுத்தை ஞாபகம் வைத்து இருக்கிறீர்கள் என்பதை இப்பின்னூட்டம் நினைவூட்டுகிறது அண்ணா..

இன்னும் நிறையா எழுதவேண்டும் என்ற உங்களது ஆசையையும் முன்வைத்து இருக்கிறீர்கள் .மிக்க சந்தோசம் அண்ணா..
எழுத முயற்சிக்கிறேன் அண்ணா ..

நன்றி அண்ணா

விஜய் said...

மிக்க நன்றி சமீர்,

என் எழுத்திற்கு உங்களது பின்னூட்டத்தை விட்டுசென்று உங்கள் எழுத்தின் மீது எனக்கும் ஆர்வம் இருக்கிறது என்பதை சொல்லி இருக்கிறீர்கள் .மிக்க நன்றி சமீர்..எழுத்தை தாண்டியும் உங்களது நட்பிற்கு நான் எப்பொழுதும் அடிமை தான்...

மிக்க நன்றி நண்பா சமீர்....

நாய்க்குட்டி மனசு said...

முன்னும் பின்னும் அலையும் கண்களை கட்டிவைத்து காதல்வலையில் விழாமல், கொஞ்சம் விழுந்தும், விழாமலும் எப்படியோ தனக்கென நிச்சயித்த பெண்ணிடம் கொண்டு சேர்த்திருப்போம்,//
இதுவே இன்றைய காலக் கட்டத்தில் பெரிய சாதனை அல்லவா? நான் சொல்வதன் அர்த்தம் பெண்ணைப் பெற்ற எல்லோருக்கும் புரியும்
welcome back vijai !!

விஜய் said...

மிக்க நன்றிங்க நாய்க்குட்டி மனசு.

பதிவை போட்டுவிட்டு , ஒரு அரைமணி நேரத்திற்கு ஒருமுறை பதிவு புதிதாய் யாரையாவது சென்றடைந்தா என்று பார்க்கிறேன்...
அதில் முதல் முதல் எழுத ஆரம்பித்த பொது என்னை உற்சாகபடுத்திய நல்உள்ளங்களில் ஒரு உள்ளத்தை இப்பொழுது காண்கிறேன் இந்த
அழகிய வரவேற்ப்பு பின்னூட்டத்தில் ....மிக்க சந்தோசம் நாய்குட்டி மனசு....

நிஜமா அழகா இருக்கு "நாய்குட்டி மனசு " அப்டிங்கற வார்த்தை....
மிக்க நன்றி மீண்டும் ஒருமுறை

சௌந்தர் said...

வாங்க விஜய் அண்ணா...!!!! முதல் உங்களுக்கு ரெண்டு அடி... பதிவு எழுதமால் இருந்ததற்கு...!!!

வாழ்கையில் ஆரம்பத்தில் இருந்து சொல்லி இருக்கீங்க.... இதை நீங்கள் சொல்லிய விதம் நன்றாக இருந்தது....

ஒருவன் வாழ்கையில் தடுமாற்றத்தோடு இருந்தால் அவன் இதை படித்தான் என்றால் கொஞ்சம் தெளிவு வரும் அப்படி ஒரு பதிவு இது...


இந்த பதிவு தொடர்ந்து எழுத வேண்டும்...

எழுதுவீங்களா...????

Anonymous said...

enna vijay adhirshtam kadhava thatta arambichuducha? nalla padhivu... regards and care veera...

Kousalya said...

விஜய் நலமா ? ரொம்ப நாள் இடைவெளி ?!
எப்போதும் உங்கள் எழுத்துக்களில் தன்னம்பிக்கை தெரியும்...

சோர்ந்து இருப்பவர்கள் பக்கத்தில் அமர்ந்து பொறுமையாக 'வாழ்க்கை என்பது இவ்வளவு தான்பா...அதை இன்ன இன்ன விதத்தில் புரிந்து ... நேரம் கிடைக்கும்போது கொஞ்சம் ரசித்து ... சந்தோசமா வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிடு' என்று சொல்லும் விதமான உங்கள் எழுத்து லாவகத்துக்கு என் பாராட்டுகள் விஜய்.

இது போன்ற எழுத்துக்கள் இன்றைய சூழலுக்கு மிக தேவை ! யாராவது நம்மேல் அக்கறையா.. தைரியம், ஆலோசனை ஏதாவது சொல்ல மாட்டாங்களா என்று மனித மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கு உங்கள் எழுத்துக்கள் ஒரு உத்வேகத்தை கொடுக்கும் என்பது என் கருத்து...

தொடர்ந்து எழுதுங்க என்று சொல்ல நினைத்தாலும், குறிஞ்சி பூ எப்போதும் கிடைப்பது இல்லை...!! கிடைக்கும் போது பத்திரமாக பாதுகாத்து கொள்ளவேண்டியதுதான்.

வாழ்த்துகள் விஜய்.

அக்கா.

விஜய் said...

அன்புள்ள கௌசல்யா அக்காவிற்கு,

மிக்க நன்றி அக்கா முதலில் உங்கள் வருகைக்கு, இந்த பதிவுல என் எழுத்துல எதோ கொஞ்சம் மிஸ்ஸிங் அப்டின்னு எனக்கு தெரியும், ஏறக்குறைய என் எழுத்தின் பாதியாவது புரிந்தததா அப்டின்னு கொஞ்சம் எதிர்பார்ப்பு இருந்துச்சு, உங்களோட பின்னூட்டத்துல பார்த்தப்ப ரொம்ப சந்தோசம், நான் கண்டிப்பா திரும்ப வருவேன் நிறையா நல்ல விசயங்கள மற்றும் உள்ளுணர்வுகளை எடுத்துக்கொண்டு..

நிச்சயம் வருவேன் அக்கா .......

விஜய் said...

அன்புள்ள சௌந்தர்,

என்னை அடிக்கடி chat la வந்து எழுத சொல்ற நல்லுள்ளங்களில் நீங்களும் ஒருவர், எழுத்தை தாண்டியும் அழகிய சிநேகிதம்,
மனதின் ஏதோ ஒரு ஓரத்தில் உங்களை போன்ற நல் நண்பர்களை பெற்றுவிற்றோம் என்ற சாதித்த திமிரு ஒட்டிக்கொண்டு தான் இருக்க
செய்கிறது என்ன செய்ய...

மீண்டும் வருவேன் தோழா....

விஜய் said...

அன்புள்ள வீரா,

மிக்க நன்றி உங்களின் வேலைப்பளுவிலும் என்னை மறக்காமல், சாரி என் எழுத்தை மறக்காமல் வந்து படித்து உன் கருத்தை பதித்து விட்டு சென்றதிற்கு ..
நன்றி வீரா

Dhanalakshmi said...

nalla padhivu....
indru unnil pala matrangalai kangiren....
vazhthukkal......
thozha!!!!

kiruthika said...

/*வரும்போது எதிர்கொள்வோம், அது வீழசெய்யும் மரணமாக இருந்தாலும் சரி, வாழசெய்யும் வெற்றியாக இருந்தாலும் சரி .. */
as a long gap i saw ur post..its really very nice.dont take too much of time for ur new posts...

விஜய் said...

அன்புள்ள தோழி தனலஷ்மி,

முதலில் நன்றி கூறிக்கொள்கிறேன் என்னுள் பல மாற்றங்கள் நிகழ்ந்து இருப்பதாய் கூறியமைக்கு. நீண்ட நாட்கள் கடந்த பின்பும் மீண்டும் என் பதிவை
படித்துவிட்டு இன்னும் அழகான ஒரு தொடக்கத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு சென்றமைக்கு..

மிக்க நன்றி வருகைக்கும் , வாழ்த்தியமைக்கும், மறவாமல் பின்னூட்டம் இட்டுசென்றதிர்க்கும் ....

விஜய் said...

அன்புள்ள தோழி கிருத்திகா

நானும் எழுத வேண்டும், நல்லவைகளை மக்களுக்கு எடுத்து செல்ல வேண்டும் என்று முயற்சிக்கிறேன், கொஞ்சம் தடுமாறுகிறேன் சரியான நேரத்தை சரியானவைக்கு செலவிடமுடியாமல் . நிச்சயம் வருவேன் என்னால் முடிந்தவற்றை எடுத்துகொண்டு உங்களிடம் ...

மிக்க நன்றி மறவாமல் வந்து சென்றதிற்கு

நான் நான்தான் !... said...

ஹாய் விஜய்!... நீ என் பின்னூட்டதை எதிர்பார்த்திருக்க மாட்டாய். ஆனால் நான் உன்னுடைய பதிவிற்காக எதிர்பார்த்தேன்.

உன்னுடைய பதிவிலிருந்தே ஒரு சில வார்த்தைகளை உனக்கு சொல்கிறேன், கேள்.

"சில நேரங்களில் சிலவற்றை தேடிசெல்ல வேண்டி இருக்கும், அத்தகைய தருணங்களில் நம்மை நேசிக்கும் அன்புள்ளம் கொண்டவர்களை விட்டுச்செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு இருப்போம், அத்தகைய தருணம் தான் தற்போது உனக்கும்."

ஆனால் எனக்கு இல்லை. அவ்வப்போது உன்னை தொடர்கொள்ள முயற்சித்ததுண்டு GOOGLE TALK-ல். ஆனால் உனக்கு வேலை பளு இருக்கும் என்று எண்ணி விட்டு விடுவேன்.

நீ மீண்டும் உன்னுடைய பதிவை தொடங்கியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

வாழ்க்கையில் அழகு மிகுந்த தருணங்க்ள் ரசிக்கவேண்டியவை. அதில் ஒரு சில மட்டுமே
மறக்க முடியாதவை. என்னுடைய அந்த வரிசையில் நீயும் உண்டு.


இவண்,
சந்துரு... :)

விஜய் said...

அன்பு தோழா சந்துரு,

எப்படி இருக்கிறாய் என்ற கேள்விக்கு கூட பதில் அளிக்க நேரமில்லை என்று நான் சொன்னாலும், யோவ் ஓவரா சீன் போடாத அப்டின்னு திட்டுற

மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவனான உன் பின்னூட்டத்தை நான் எதிர்பார்க்காமல் இருக்க வாய்ப்பில்லை.எதிர்பார்த்துவிட்டு கிளம்பியதோடு சரி,திரும்பிய பொழுதில்,உற்சாகத்தை எனக்குள் அள்ளி வீசும் உன் பின்னூட்டத்தை பார்க்கிற பொழுதில் எல்லாம், நிச்சயம் நேரம் ஒதுக்கி இன்னும் நிறையா எழுதிவிட வேண்டும் என தோன்றும் நிமிடத்தை மட்டும் தான் நெருங்க முடிகிறது.பிறகு நடப்பதை என் பின்னூட்டம் ஒவ்வொன்றும் சொல்லும் எழுத முயற்சித்து தோற்றுப்போனதை..வருகிறேன் நண்பா விரைவில் ஒரு லட்சிய வெறியோடு ....

Post a Comment