Saturday, November 20, 2010

இப்பூமியில் கால் தடம் பதித்த என் குட்டி நிலவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் (நவம்பர்-22)
நீ ஞானம் உள்ளவளாய் வளரவேண்டும் என வாழ்த்த போவது இல்லை,

தெளிந்த அறிவு, மேலோங்கிய சிந்தனை, சிறந்த குறிக்கோள் உடைய என் தேவாஅண்ணா, உன் சிறந்த பெருமைக்குரிய அப்பாவாய்,
கனிவும், கருணையும் , நற்சிந்தனையும், பாசமும் உடைய என் அண்ணி, உன்சிறந்த பாசத்திற்குரிய அம்மாவாய்,

பிறகெதற்கு என் குட்டி நிலவிற்கு வாழ்த்துக்கள், தீர்மானிக்கப்பெற்ற ஒன்றுதானே.

குட்டி நிலவு , உவமைக்காக வடித்த வார்த்தை இல்லை, அத்தனை அழகையும்கொட்டி நிரப்பிய குட்டி நிலவின் வார்ப்பு நீ,

முதல் முறை பேசுகிறாய் அலைபேசியில் என்னுடன், உன் வார்த்தைகள் புரியவேண்டும் என்று பிரார்த்தனையுடன் பேச தொடங்கும் என்னிடம்,
"எப்படி இருக்கீங்க, சாப்பிட்டீங்களா?".......பாசத்துடனும் ,மரியாதையுடனும்உதிர்க்கபட்ட வார்த்தைகளில் நிரம்பி கிடக்கிறேன் என் குட்டி நிலவே, எவ்வளவுஅழகான வளர்ப்பு இலக்கணத்தில் வார்க்கப்பட்டு இருக்கிறாய் என ,

சுட்டி அலைவரிசை நீ காண , இணைப்பை புதுபிக்க நிற்கும் என்னிடம் "சுட்டிஅலைவரிசை நிச்சயம் வேணும்பா " என அடம்பிடித்த ஒவ்வொரு கெஞ்சலிலும், உன் மிகச்சிறந்த பாசமுள்ள அப்பாவாய் தெரிகிறார் என் தேவா அண்ணா...

எவ்வளவு கொட்டினாலும் ஈடாக முடியாது என்று தெரிந்தும், என் சிறிய நன்றிகள்சமர்ப்பணமாய் இங்கே ..

நீ உருவாகிய அந்த கணத்தில் இருந்து உனக்காய்
ஒவ்வொரு அடியிலும் கவனம் காத்த உன் தாயிற்கு,

விரும்பி உண்ணும் உணவையும் கூட உனக்காய் தவிர்த்து இருக்கும் அந்தஉன்னத உயிர்க்கு,

உனக்காய் தூக்கம் தொலைத்த இரவுகளில், யாருமறியாமல் உன்னோடுஉரையாடிய களைப்பில் உறங்கிய உன் மாதாவிற்கு ..

தோல்களையும், சதைகளையும், எலும்புகளையும் , நரம்புகளையும் தாண்டிஉன்னுடன் முதன் முதல் உணர்வு பரிமாணத்தை கொட்டிய உன் அம்மாவிற்கு ..

நீ ஜனித்த அந்த நொடியில் தன் உடல் காயங்களை மறந்து, உன்னை கைகளில்ஏந்தி புன்னகை சிந்திய ஒப்பற்ற ஜீவனுக்கு...

உன் அழுகையிலும், உன் உடல்நலமின்மை நேரங்களிலும் , உன்ன மறந்து, உலகமே நீ என கிடந்த விலை மதிப்பற்ற மாணிக்கத்திற்கு.....

உன் சிரிப்பிலும், உன் செல்ல பேச்சிலும் தன்னை மறந்து கர்வம் கொண்ட உன்அன்னைக்கு....

நீ தட்டு தடுமாறி நடை பழக முயன்ற தருணத்தின் ஒவ்வொரு தோல்வியிலும், வெற்றிக்காக தனக்குள் பிரார்த்தனை செய்த அந்த தாய்மைக்கு ...

நற்பழக்கங்களை உணவோடு சேர்த்து ஊட்டி வளர்த்து, குட்டி நிலவைமிளிரசெய்து இருக்கும் மிகசிறந்த, விலைமதிப்பற்ற உன் அம்மாவாகியமுதன்மை கடவுள்க்கு...


உன்னை சுமந்த பத்து மாதத்தையும், இனி சுமக்கபோகும் நாட்களையும், பதிவு, கவிதை, தொடர் என்ற மிக நுண்ணிய அணுக்களால் விளக்கிவிட முடியாது, உருவக படுத்திவிட முடியாது,கற்பனை செய்துவிடமுடியாது, உணர்வைபுரிந்துவிட முடியாது ,

உணர்ந்த சிலதுளிகளை இங்கே சிந்தி இருக்கிறேன் எழுத்தாய்........

படிக்க வேண்டிய படிப்புகள் ஏராளம் உன் அம்மாவிடமும், அப்பாவிடமும்...


வாழ்த்துக்கள் என் குட்டி நிலவிற்கும்,நிலவின் அம்மாவிற்கும், நிலவின்அப்பாவிற்கும்(என் தேவா அண்ணா) இந்த நன்னாளில்......


ப்ரியங்களுடன்
விஜய்


36 comments:

TERROR-PANDIYAN(VAS) said...

வாழ்த்துகள்

Ananthi said...

குட்டி நிலவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... :-))

நிலவிற்கு ஒப்பிட்டு உங்கள் உன்னதமான
அன்பை வெளிப்படுத்திய பகிர்வுக்கு நன்றி.. :-))

சுந்தரா said...

சுட்டி நிலவுக்கும் பெற்றோருக்கும் என் வாழ்த்துக்கள்!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

வாழ்த்துகள்

அந்தக் குட்டி நிலவிற்கும் பதிவிட்ட உங்களுக்கும்

சௌந்தர் said...

அக்ஷயா குட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அருண் பிரசாத் said...

வாழ்த்துக்கள்!

வெறும்பய said...

குட்டி நிலவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... :-))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

vow, வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்!

Madhavan Srinivasagopalan said...

Happy Birth Day to the sweet 'kutti'

Balaji saravana said...

அக்ஷயா குட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//vow//

வாழ்த்து சொல்ல சொன்னா எதுக்குயா கொறைக்கிற.... :)))

ஜீவன்பென்னி said...

அஷயா குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

ப.செல்வக்குமார் said...

என் சார்பாகவும் குட்டி நிலாவிற்கு வாழ்த்துக்கள் ..!!

dheva said...

விஜய்....@ தம்பி.....

உன் நினைவுக்கும்...அன்பிற்கும்.....

வார்த்தைகள் இல்லை நான் பகிர்ந்து கொள்ள.....

I luv u somuch thambi!!!!!!!!

kavitha said...

குட்டி நிலவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.என்றும் அன்புடன் - ராமராஜ் கவிதா சந்தியா, ராமகிருஷ்ணன் கோமளதேவி ஹீரா, ஜெய்கணேஷ், வலாண்டோ, அனுசுயா, சுசித்ரா வில்சன் சங்கீதா - அபுதாபி

எஸ்.கே said...

குழந்தைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Kousalya said...

//உணர்ந்த சிலதுளிகளை இங்கே சிந்தி இருக்கிறேன் எழுத்தாய்.....//

உங்களின் உணர்வுகள் மிக அழகாய் சிந்தி இருக்கிறது வார்த்தைகளாய்....! சிதறி எங்கள் மனதிற்குள்ளும் விழுந்து விட்டது.

குட்டி நிலவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

தேனம்மை லெக்ஷ்மணன் said...

அருமை விஜய்.. குட்டி நிலவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. தேவா ...நிலவைப் பெற்ற நிலவே.. உங்களுக்கும்..:))

Chitra said...

HAPPY BIRTHDAY, AKSHARA!

HAPPY BIRTHDAY, VIJAY!!!

VELU.G said...

my hearty wishes to akshya. wish a happy birth day

நாஞ்சில் மனோ said...

பொம்மு குட்டிக்கு,
என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

க.பாலாசி said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தேவா ஈன்ற தேவதைக்கு...என்றும், எங்கும் பொங்கட்டும் மகிழ்ச்சி...வெள்ளமென.

r.selvakkumar said...

குட்டி நிலவின் வெளிச்சம் எங்கள் வீட்டிற்குள்ளும் வந்துவிட்டது, உங்கள் வார்த்தைகளாக!
வாழத்துகள் குட்டி தேவதைக்கு!

இளங்கோ said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

சிறுகுடி ராம் said...

Happy Birthday Akshu Kutty...

ஜெயந்தி said...

அழகு குட்டிச் செல்லத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

சத்ரியன் said...

பிறைநிலாவுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!

Mrs.Menagasathia said...

குட்டிச் செல்லத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

நாகராஜசோழன் MA said...

குட்டி நிலவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

Vijay said...

என் குட்டி நிலவுக்கு வாழ்த்துக்கள் சொன்ன அனைத்து நல்உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள், ரொம்ப நன்றிங்க உங்களை மாதிரி நல்ல உள்ளங்கள் என் குட்டி நிலவுக்கு ஆசிர்வாதம் பண்ணும்போது ரொம்ப மனசுக்கு சந்தோசமா இருக்குங்க ...

உங்க எல்லோருக்கும் தனித் தனியா தான் நன்றி சொல்ல எனக்கும் ஆசை,ஆனா முடியளையுங்க, மன்னிச்சுக்கங்க, மூட்டை மூட்டையா ஆணி கொடுத்து இருக்காங்க ஆபீஸ்ல அடிக்க சொல்லி, அதனால முடியலைங்க மனிசுக்கங்க.....

எப்படியா இருந்தாலும் உங்க எல்லோருக்கும் தனிதனியா நன்றி சொல்வேனுங்க சீக்கிரமே, அதுவரைக்கும் கொஞ்சம் பொருத்துக்கங்க...

நன்றிங்க நான் வரட்டுமா?, அட ஆணி அடிச்சுட்டு வரேங்க ..........

என் பெயர் சந்துரு !... said...

தேவா அண்ணா எனக்கு பழக்கம் இல்லை என்றாலும், விஜய் சொல்லும்போது, ஏதோ எனக்கு நெருக்கமானவர்போல் ஒரு உணர்வு.

குட்டி நிலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!....

------
அப்பறம்.... :)
வாங்க விஜய், எப்டி இருக்கீங்க?... ரொம்ப நாளா ஆளையே காணோம். உங்களோட Re-entry, அதாம்ப்பா.... மறுபிரவேசம் :) நல்லா இருக்கு!..

Keep it up (அத மேல வை!... ஹா ஹா ஹா ...)

பிரியமுடன் ரமேஷ் said...

அருமையான வாழ்த்துக்கள் விஜய்.. குட்டி நிலவிற்கு என்னுடைய வாழ்த்துகளும்..

Vijay said...

அட வந்துட்டியாப்ப இங்கயும் , ஹ அஹ ஆஹா ஹ ....
உனக்கு தெரியாதப்பா எவ்வளவு ஆணி அடிக்கிரேன்ன்னு, தெரியாத மாதிரி கேட்காதப்ப...

நான் ப்ளாக் பக்கம் வர இன்னும் ரெண்டு மாதம் ஆகுமப்ப .....

அமைதி அப்பா said...

வாழ்த்துக்கள்.....

சுபத்ரா said...

அக்‌ஷயா குட்டிக்கு Belated Birthday Wishes!

தமிழ்த்தோட்டம் said...

அருமை வாழ்த்துக்கள்

Post a Comment