Sunday, August 1, 2010

வாழ்க்கை(வலி)ன்னா என்ன? --இலக்கை நோக்கிய பயணத்தில் (பாகம் - 6 )



நன்றிங்க ஆறாம் பாகத்தை படிக்க வந்ததிற்கு,
சரிங்க, கண்டிப்பாக ஆவலோடு வந்து இருப்பீங்கன்னு தெரியும், அப்படி என்ன தான் என் அம்மாவிடம் சொல்லிவிட்டு வந்தேன், ஏன் வழக்கமானதை விட அதிகமா அழுதாங்க ?..உங்கள் கேள்விக்கான விடை கீழே.......

முதல் பாகம் இணைப்பு இங்கே : -
முதல் பாகம்

இரண்டாம் பாகம் இணைப்பு இங்கே : -
இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம் இணைப்பு இங்கே : -
மூன்றாம் பாகம்

நான்காம் பாகம் இணைப்பு இங்கே : -
நான்காம் பாகம்

ஐந்தாம் பாகம் இணைப்பு இங்கே : -
ஐந்தாம் பாகம்


வாழ்க்கையோடு போராடிய வலியும், வாழ்க்கைல ஜெயிக்கணும் அப்டிங்கற தீயும் எரிஞ்சுக்கிட்டு இருந்தது மனசுக்குள்ள,என்னை அப்படி பேச வைத்ததும் அதுவே தான் "இனி இந்த மண்ணில் காலெடுத்து வைக்கமாட்டேன் - வேலை கிடைப்பதற்கு முன், உங்களையும் கூட இனி காண வரமாட்டேன், வேலை கிடைப்பதற்கு முன் வந்தால், இறந்து தான் வந்து இருக்கிறேன் என புரிந்துகொள்ளுங்கள் அம்மா", என்று சொல்லிவிட்டு பேருந்தில் அமர்ந்தேன்.

பேருந்து புறப்பட ஆரம்பித்தது, பழைய அறை நண்பர்களுக்கு எனது கைபேசியில் அழைப்பு விடுத்தேன், சென்னை வருகிறேன் என்றேன்,அறை நண்பன் கூறியது - மனதை ஒரு நிமிடம் ஸ்தம்பிக்க வைத்தது, "நாங்கள் அறையை காலி செய்து விட்டு என்னுடன் வேலை செய்யும், சக ஊழியனின் அறைக்கு மாற்றலாகிவிட்டோம் ." கைபேசியை அணைத்துவிட்டு எங்கே செல்வது என்று யோசித்தேன்,நான் அமர்ந்திருந்த பேருந்திற்கு கூட தெரிந்து இருக்கும் அது எங்கே போய் சேரவேண்டும் என, அதில் அமர்ந்திருக்கும் எனக்கு தெரியவில்லை எங்கே செல்வது என.

ஏறக்குறைய கைபேசியில் இருக்கும், அனைத்து சென்னையில் தங்கியிருக்கும் நண்பர்களையும் அழைத்துவிட்டேன், பதில்கள் அனைத்தும் என்னை ஏமாற்றம் செய்வது போலவே அமைந்தது, என்ன செய்ய?..மீண்டும் ஒரு முறை முயற்சி செய்தேன் ," ஒரு வாரம் மட்டும் தங்கிகொள்வதாய்" , சரி என ஒரு நண்பனிடம் இருந்து வந்த பதில் ,நிஜமாய் நான் எங்கே செல்ல வேண்டும் என்ற இலக்கை பேருந்திடம் துணிச்சலாய் சொல்லிக்காட்டி கொண்டு இருந்தது.


சென்னை மண்ணை மிதித்தேன், இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாய், திரும்பிச்செல்ல இனி வழி கிடையாது என்னிடம். என் வாழ்வையும் சாவையும் இந்த மண் தான் தீர்மானிக்க வேண்டும். நண்பன் அறைக்கு சென்றதும் என் அத்தியாவசிய தேவைகளை முடித்த பின், மீண்டும் படிப்பும், செய்தித்தாளில் வேலை விளம்பரத்தை புரட்டுவதுமாய் அந்த நாளும், வாரமும் கழிந்தன ,கூர்மையற்ற கத்தியால் 10 மணி நேரம் ஒரு மரத்தை வெட்டுவதைவிட, கத்தியை கூர்மையாக்க 8 நேரம் செலவழித்துவிட்டு 1மணிநேரத்தில் வெட்டுவதே கூர்மையான அறிவு சார்ந்த வழியாகும். அதை தான் நானும் செய்தேன், படித்து படித்து கற்றுக்கொண்டு இருந்தேன் எனக்கான நேர்முகத்தேர்வுக்கான வாய்ப்பு கிடைக்கும் வரை.

எனது ஒரு வேலை உணவை நான் தான் வாங்கிக்கொள்ள வேண்டும் இனி, என்று முடிவு செய்த ஓரிரு நாட்களில் படிப்பிற்கும், வேலைக்கும் சம்பந்தம் இல்லாத ஒரு பகுதிநேர வேலையில் அமர்ந்தேன், என் முயற்சியை, எனக்குள் எறிந்த தீயை வேறுதிசை நோக்கி பயணிக்க செய்ததை போல் உணர்ந்தேன்,அங்கிருந்து வெளியே வந்தேன் எனக்கான இலக்கை இனி அடையாமல் வீழப்போவதில்லை என்று.மீண்டும் தேட ஆரம்பித்தேன், ஆரம்பித்த சில நாட்களிலேயே

இனி வாய்ப்பே கிடைக்காது என்பதை நாட்காட்டியின் தேதி உறுதி செய்தது, ஆம் நான் கல்லூரி முடித்து ஒருவருடம் ஆகிவிட்டது,இதற்குமேல் புதிதாய் கல்வியை முடித்துவரும் அவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்,நிறுவனங்களால்..கொஞ்சம் துவண்டு தான் போய்விட்டேன். இருப்பினும் வாழ்ந்து ஆகவேண்டும், ஜெயித்தாக வேண்டும் என்ற எண்ணம் என்னை யோசிக்க வைத்தது, யோசனையின் முடிவு என்னவாய் இருந்து இருக்கும் என்று ஒவ்வொரு மென்பொருள் வல்லுனருக்கும் தெரியும்.ஆம் அதுவே தான்,("fake"-ஒரு நிறுவனத்தில் பணிபுரிவதாய் "பொய்" சொல்வது. தன் திறமையை நிரூபித்து, பணிபுரிவதற்கான சான்றிதழ்களை காட்டி மற்றொரு நிறுவனத்தில் சேருவது).

இது நிஜமாய் குற்றம்தாங்க, ஆனா வேற வழியில்லை, என்னை மாதிரி தமிழ் வழிகல்வியில் பயின்று, ஆங்கிலத்தை தடுமாறி உச்சரிக்கும், யார் உதவியும் கிடைக்காம, தானாய் புதியதொரு ஊரில், பெற்றோர்களின் 1500 ரூபாய் பணத்தில் ஒரு மாதத்தை கழிக்கவேண்டும் என்று போராடுபவர்களுக்கு வேற வழியில்லை, நாட்கள் நீள நீள, அம்மாவின் ஒவ்வொரு நகையும் வங்கிக்கு சொந்தாமாகி போயி கொண்டு இருக்கும் தருணங்களில் நியாயம் எது, அநியாயம் எது என்று யோசிக்க நேரமில்லைங்க.

சரி என்ன பண்றதுன்னு யோசிச்சா இன்னொரு வருடம் போயிடும்னு தெரியும், உடனே செயலில் இறங்க ஆரம்பிச்சேன், பல தேடல்களுக்கு பிறகு அனைத்தையும் தயார் செய்தேன், வேலை கிடைத்தவுடன், பொய் சான்றிதழ் வாங்க பணம் கொடுத்தால் போதும் என்பது உறுதியானது, சரி இனி திறமையை நிரூபித்து நேர்முகத்தேர்வில் தேர்ச்சி பெற என்ன செய்ய வேண்டும், ஒரு வருடம் பணிபுரிந்ததை போன்ற திறமையோடு பேச வேண்டும், அனைத்து விதமான கேள்விக்கும் பதிலளிக்க வேண்டும்,

சரி பணிபுரியும் நண்பர்களிடம் நிறுவனத்தில் என்ன நடக்கும்,எப்படி ஒரு வேலையை செய்து முடிக்கிறார்கள் என்பதை கேட்டால் ஒவ்வொருவரின் பதிலும் வித்தியாசமாய் இருக்கும், ஒருவன்,வேலையே கிடையாது மச்சி, சும்மா தான் உட்கார வைச்சு இருக்கிறான் என்பான், இன்னொருவன் நான் செய்யுற வேலையை 12 ஆம் வகுப்பு முடிச்சவன் பண்ணுவான் என்பான், இன்னொருத்தனை கேட்டா,அவன் என்ன சொல்றான்னே புரியாது, புரியுற மாதிரி சொல்லுடா மச்சி என்றால், உனக்கு புரியாதது மாதிரி தான், எனக்கும் ஒன்னும் புரியாது மாப்புள என்பான்,

சரி இனி யாரையும் நம்பி பலனில்லை என தோன்றியது,ஒரு வருட அனுபவம் உள்ளவர்களுக்கு எப்படி நேர்முகத்தேர்வில் கேள்விகளை தொடுக்கிறார்கள் என்பதை தேடிப்படித்தேன் வலைத்தளங்களில் இருந்து,நன்றாக படித்தேன், அதற்குள் நான் ஒருவாரம் மட்டும் தங்குவதாய் கேட்டுவந்திருந்த நாட்களை தாண்டி பல வாரங்கள் ஓடிவிட்டன, நண்பர்கள் ஒன்றும் சொல்லவில்லை, இருந்தபொழுதும் மனதின் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒன்று தவறு என உணர்த்தியது, குறைந்த வாடகையில் வீடு தேட ஆரம்பித்தேன், வீட்டின் ஆரம்ப வாடகையே 1500 ரூபாயில் ஆரம்பித்தது, முன்பணம் பல ஆயிரங்களை சாதாரணமாய் தாண்டியது, சாப்பாட்டிற்கே வீட்டில கையேந்துகிறேன், இதில் எப்படி இவ்வளவு ரூபாயில் வாடகை, சரி கொஞ்சம் தன்மானத்தை விட்டுவிட்டு நண்பர்களிடம், இன்னும் சிறிது காலம் தங்கிக்கொள்வதாய் கேட்ட அடுத்த நொடியே, மறுப்பு சொல்லாமல் தங்கிக்கொள் என்றார்கள்,

எப்படியோ அங்கேயே அட்டை போல் ஒட்டிக்கொண்டேன், வேறவழி இல்லைங்க என்ன பண்றது நீங்களே சொல்லுங்க, எல்லோரும் தன் ஊதியம் பத்தவில்லை என நிறுவனங்களிடம் வாதாடி கொண்டு இருக்கும் வேளையில் நானும் வாதாடினேன் என் அம்மாவிடம் 1000 ரூபாய் மட்டும் கொடுங்க அம்மா போதும், நான் சமாளிச்சுக்கிறேன் என. அம்மா அப்பாவோட ரத்தத்தை உறிவதைப்போன்ற உணர்வு ,நான் அவர்களிடம் மாதம் மாதம் பணம் கேட்கும் பொழுதெல்லாம்..

சண்டைக்கு தேவையான அனைத்தையும் தயார்செய்து விட்டேன், இனி போர்களத்தில் குதிப்பது தான் மீதம், எனது சுயவிவரம் , பணிபுரிந்துகொண்டு இருக்கும் அனுபவம், நிறுவனத்தின் விவரம் என அனைத்து விவரங்களையும் ,வேலை வாய்ப்பு வலைதளத்தில் பதிவு செய்துவிட்டேன். பதிவு செய்த சில மணி நேரங்களிலேயே எனது கைபேசி ஒலிக்கத்தொடங்கியது,

என்ன நடந்தது என்பதை அடுத்த பதிவில் காண்போம்...


                                                                                         
                                             

48 comments:

dheva said...

கற்றுத் தேர்ந்து வெளியே வரும் இந்திய இளைஞர்களின் தலையெழுத்து பணியில் முன் அனுபவம் உண்டா என்று கேட்கும் கேள்வி,,,


சான்றிதழ் போலியாக பெற்றது தவறு என்றாலும்...உனக்கு அந்த சூழ் நிலையை கொடுத்ததின் பெரும்பங்கு சமுதாயத்திற்கு உண்டு....

ஒரு வருட அனுபவத்தை விட உனது திறமை அதிகம் என்பதை எப்படி கணிக்கப்போகிறார்கள் ரெடிமேடாக ஒரு சிஸ்டம் வைத்திருக்கும் முதலளிகள்....!

வலியோடு இருக்கும் உன் தேடல் முகத்தில் அறைகிறது தம்பி....உன் குடும்பத்தில் ஒருவன் என்ற உணர்வோடு......இருப்பதால் அந்த வலியின் வேதனை எனக்கு அதிகமாக இருக்கிறது.

புதிதாய் வேலை தேடும் தம்பிகளுக்கு உத்வேகம் கொடுப்பது போல இருக்கிறது கட்டுரையின் போக்கு....ஆக்ரோசம் தெரிகிறது ...தம்பி எழுத்துக்களில் ஆனால் இயலாமையாய் அது வெளிப்பட்டுள்ளது....!

அருண் பிரசாத் said...

என்ன சொல்வது என்றே தெரியவில்லை. தொடருங்கள்,

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருண் கூறிய நிலை தான் எனக்கும் தொடருங்கள்..

ஜில்தண்ணி said...

நிறைய அனுபவங்களை பகிர்ந்திருக்கிறீர்கள் அண்ணா

இவை எங்களுக்கு வாழ்க்கையை ஒரு படிப்பினையாக இருக்கும் :)

தங்கள் மன உறுதிக்கு தலை வணங்குகிறேன்

சௌந்தர் said...

எவ்வளவு கஷ்டம் உங்களுக்கு மனம் வலிக்கிறது

விஜய் said...

உண்மை தான் அண்ணா,

நான் இங்கே எழுதிபோட்டு இருக்கும் இந்த பதிவு,வாழ்கையில் வலி சாதரணமான ஒன்று தான், அவற்றை எப்படி நமக்கு தேவையான வண்ணங்களில் மாற்றிகொள்வது என்பது, தான் நிமிர்ந்து நின்று எதிர்கொள்ளும் முறையில் தான் இருக்கிறது என்பதை உணர்த்தவே இங்கே எழுதி போட்டி இருக்கிறேன்.
என்னைவிட ஆயிரம் படித்த போராளிகள் தினமும் போரிடுவதை இந்த சென்னை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது, வெய்யலிலும், மழையிலும் அலைந்தது திரிந்த அந்த நாட்களில் எனக்கு இப்படி ஒரு நட்பு வட்டாரம் கிடைக்கும் என்பதை உணர்த்தவில்லை..
மிகவும் அருமையான காலங்கள், கற்றுக்கொடுத்து ஏராளம் வேலைக்கான கல்வியை தாண்டியும்,, வாழ்க்கைக்கு தேவையான கல்வியை ...

மிக்க நன்றி அன்பின் தேவா அண்ணா....

விஜய் said...

மிக்க நன்றி அன்பின் அருண் பிரசாத்,

என்னை போல் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இப்படி தான் இன்னமும் தன் இளமையை இப்படி வேலை தேடுவதில் தொலைத்து கொண்டு இருக்கிறார்கள், என்ன செய்ய ?, இப்படி தான் கண்ணை மூடிக்கொண்டு நடப்பதை கவனிக்காமல் போக வேண்டி இருக்கு,

உங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி அருண் பிரசாத்,

கனிமொழி said...

என்ன சொல்வது என்றே தெரியவில்லை. தொடருங்கள்,
அதே நிலைமை தான் இங்கும் விஜய்...

விஜய் said...

மிக்க நன்றி ஜெய்

நீங்கள் கொடுக்கும் ஆதரவு தான் என்னை இன்னும் எழுத செய்து, என் எழுத்தின் மூலம் ஏதாவது ஒரு சின்ன நல்ல கருத்தை ஒவ்வொரு ஒவ்வொரு தேடலுக்கும் வித்திட உதவும் என எண்ணுகிறேன் .

மிக்க நன்றி உங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் ஜெய்

AltF9 Admin said...

Intha Sinna Prachanaikalai parthu nonthu udkaara sinna payala nee nanba , Todarnthu sandai idu , aduthu enna ....?

விஜய் said...

மிக்க நன்றி அன்பின் ஜில்தண்ணி - யோகேஷ் தம்பி,

நான் விட்டு செல்லும் வார்த்தைகள் ஏதாவது ஒரு வகையில் படிக்கும் ஒவ்வொருத்தருக்கும் உதவியாய் , ஏதோ ஒரு மூலையில் உற்சாகமாய், பயனுள்ளதாய் இருக்க வேண்டும் என எண்ணுகிறேன், உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் பயன்படுகிறது என்பதை நினைக்கையில் , என் எழுத்துக்கள் உயிரே பெற்றதாய் உணருகிறேன்.

மிக்க நன்றிப்பா தம்பி

விஜய் said...

மிக்க நன்றி சௌந்தர்,
வலிகளை வழிகளாக்குவோம், பின் தொடருங்கள் சௌந்தர்,

விஜய் said...

மிக்க நன்றிங்க கனிமொழி

எழுத்தத் தெரிந்தவன் ஆதலால் எழுதிப்போட்டுவிட்டேன் இங்கே, இன்னும் எத்தனை மனிதர்களின் கஷ்டங்கள் ஊமைகளாய் திரிகின்றன இந்த சமுதாயத்தில், இவைகளும் ஒரு நாள் பேசும் என் மூலம் என நம்புகிறேன் ..
விரைவில் தொடுருகிறேன் அவைகளையும்..

உங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க கனிமொழி

விஜய் said...

கண்டிப்பா சிவா,

வாழ்க்கை என்னிடம் விளையாடி விளையாடியே நான் கற்றுகொண்டு இருக்கிறேன் என்னால் முடிந்தவைகளை , அதலால் வாழக்கையிடம் நிச்சயம் தோற்க மாட்டேன் என நம்புகிறேன்...

பார்ப்போம் அடுத்த பதிவில் சிவா..

மிக்க நன்றி சிவா உங்கள் பின்னூட்டத்திற்கு

Ramesh said...

நீங்கள் எழுதியது நெகிழ்ச்சி என்றால்..பின்னூட்டத்தில்...அதைவிட நெகிழ்ச்சி...

//எழுத்தத் தெரிந்தவன் ஆதலால் எழுதிப்போட்டுவிட்டேன் இங்கே, இன்னும் எத்தனை மனிதர்களின் கஷ்டங்கள் ஊமைகளாய் திரிகின்றன இந்த சமுதாயத்தில்///

உண்மைதான்...வலி அனுபவித்தவனுக்கு..அடுத்தவன் வலி சொல்லித் தெரிய வேண்டியது இல்லை....இந்தத் தொடரைப் படிச்சாலே மனசு என்னவோ பண்ணுது விஜய்....

Unknown said...

மிகவும் ஆழமான கருத்துக்களைக் கொண்ட தொடர்.. மிகவும் அருமையாக வெளிப்படுத்தியுள்ளீர்கள் உங்களது உணர்வுகளை.. வாழ்த்துக்கள்..

விஜய் said...

மிக்க நன்றி அன்பின் ரமேஷ்

என் பதிவை தவறாமல் படிக்க வருகிறீர்கள் , அதற்க்கு மிக்க நன்றி, தன் எழுத்திற்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் பொழுது பெறுகிற சந்தோசத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை என்று தான் சொல்வேன். உண்மை தான் ரமேஷ், இன்னும் எத்தனை எத்தனை பட்டினிகளும், நாட்களை எண்ணிக்கொண்டே போகும் தேடல்களும் இங்கு அதிகம், வாழ்க்கையை தேடி தேடி கலைத்து மடிந்தவர்கள் இங்கே ஏராளம் சாதித்தவர்களை விட. ஊமையாய் மடிந்தவைகளை நினைக்கையில் இதயம் கனக்கிறதே என்ன செய்ய தோழா..

வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழரே

விஜய் said...

மிக்க நன்றிங்க அன்பின் பாபு

உங்களை போன்ற முகம் தெரியாதவர்கள் கூட என்னை பாராட்டி செல்வதை நினைக்கையில் சந்தோசமாய் இருக்கிறது தோழரே, நீங்கள் நன்று என்று சொல்லிய வார்த்தை இப்படியே கிடப்பதில்லை, அவைகள் என் ஆழ்மனதில் நான் சொல்ல வேண்டியவைகள் ஏராளம், என்று புதிதாய் முளைத்து கொண்டு இருக்கிறது , நீங்கள் நன்று என்று விட்டு சென்ற பின்னோட்டம்.நிச்சயம் இன்னும் அழகாய் என் எழுத்துக்கள் மிளிரும் ...

மிக்க நன்றிங்க பாபு உங்கள் வருகைக்கும், விட்டு சென்ற விதைக்கும் ...

அமைதி அப்பா said...

முதலில் எனக்குத் தெரிந்த நண்பரின் கதை.
அவர் பொறியியல் பட்டம் பெற்ற பின்பு, மூன்று ஆண்டுகள் சென்னையில் வேலைத்தேடி அலைந்ததுதான் மிச்சம். ரூ.2000 சம்பளத்தில் கூட அவருக்கு வேலை கிடைக்கவில்லை. ஆனால், தற்பொழுது வெளிநாட்டில் லட்சத்திற்கு மேல் சம்பளம் பெறுகிறார்.

அவருடைய அறிவுக்கு இங்கே ரூ.2000 கூட கொடுக்க யாரும் முன் வராத போது, அங்கே எப்படி அவரை வைத்து வேலை வாங்குகிறார்கள்? அவரிடம் திறமை இல்லையென்றால், எப்படி இவ்வளவு சம்பளத்தில் வேலை கொடுப்பார்கள்? இங்கே, இவர்கள் எப்படி திறமையானவர்களைக் கண்டுகொள்கிறார்கள் என்பதே கேள்வி.

எனக்கு இந்த சிஸ்டம் புரியவில்லை. இதையும் தாங்கள் விளக்குவீர்கள் என்று நம்புகிறேன்.

இந்தப் பதிவு இபொழுது வேலைத்தேடும் நண்பர்களுக்கு உதவியாக இருக்குமென்று நம்புகிறேன்.

ஜீவன்பென்னி said...

விஜய் நான் எங்கயுமே வேலையே தேடல. நேரடியா வேலை கிடச்சு இங்க வந்துட்டேன். ஆனா ஒவ்வொரு பகுதியப் படிக்கும்போது மனசுல ஒரு உருத்தல். என்னன்னே தெரியல.

பனித்துளி சங்கர் said...

பல சிறப்பான உண்மைகளையும் உணர்வுகளையும் முன் வைத்திருக்கும் விதம் அருமை . இதைப் பற்றிய முந்தையப் பதிவுகளை இன்னும் வாசிக்கவில்லை . வாசித்துவிடுகிறேன் விரைவில் . நன்றி

Chitra said...

உங்கள் மனதின் வலிகளை - போராட்டமே வாழ்க்கை என்று இருக்கும் நிகழ்காலத்தை - அருமையாக பகிர்ந்து கொண்டு இருக்கிறீர்கள். (கடவுள்) நம்பிக்கையை விடாமல் முயல்வது, வெற்றியை தரும். வாழ்த்துக்கள்!

Anonymous said...

விஜய் நான் இன்னிக்கு தான் உங்க ப்ளாக் follow பண்ண துடங்கினேன் ..வாழக்கை ஏன்னா என்ன ?ஆறு பாகவும் படிச்ச பிறகு கமெண்ட் எழுதறேன் சரியா..

Amaithi Virumbi said...

உண்மையை மறைக்காமல் சொன்னதற்கு முதலில் என் வாழ்த்துக்கள் ... நீங்கள் செய்தது மிகப்பெரிய தவறு இல்லை , இந்த சுயநல உலகத்தால் வஞ்சிக்கப்பட்டவர் நீங்கள் .... அதனால் வருத்தம் வேண்டாம் அண்ணா ... நீங்கள் அளித்தது போலி சான்றிதழ் அல்ல , தங்களின் சுயமதிப்பீடு .. ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான ஒன்று .. மறுபடியும் என் வாழ்த்துக்கள் அண்ணா பதிவுகள் மிகவும் உணர்வுப்பூர்வமாக உள்ளன .. தங்களுக்கு வந்த அழைப்பின் நோக்கத்தை அறிய காத்திருக்கிறேன் ...

விஜய் said...

அன்பின் அமைதிஅப்பா,

அதைப்பற்றி தெளிவாய் எழுத்து இன்னொரு பதிவு கூட போடலாம், அவ்வளவு இருக்கிறது..ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதாக ஆவணங்கள் தயார் செய்கிறோம். ஆவணங்களை தயார்செய்த பிறகு நன்றாக தன்னை தயார்செய்து செய்து கொள்ள வேண்டும், வேலை செய்த அளவிற்கு நிறையா கற்றுக்கொள்ள வேண்டும், பிறகு புது நிறுவனங்களில் நேர்முகத்தேர்வை சந்திக்க வேண்டும், நமது திறமை அவர்களை நம்ப வைக்கும் பச்சத்தில், தேர்ந்தெடுக்கிறார்கள், வேலையில் சேர்வதற்க்கான ஆவணங்களை கொடுக்கும் முன் ,நம் வேலை செய்வதாக குறிப்பிட்டிருக்கும் நிறுவனத்தில் விசாரிக்கிறார்கள், விசாரிக்கும் பொழுது ஏதாவது தவறான தகவல்கள் கிடைக்க பெற்றாலோ, அல்லது,நாம் வேலை செய்த நிறுவனம் நம்பத்தகுந்தாய் இல்லாத பட்ச்சத்தில் ,நமது வேளையில் சேருவதற்கான அழைப்பு நிறுத்தபடுகிறது இந்தியாவில்,
ஒருவேளை இதே திறமையுள்ள மாணவன் வெளி நாட்டில் நேர்முகத்தேர்வை சந்திக்கும் பொழுது, அவனது திறமை மட்டுமே பரிசோதிக்க படுகிறது, முன்பு வேலை செய்த நிறுவனத்தில் விசாரிப்பு அதிகபட்சம், பெரும்பாலும் விசாரிக்க படுவதில்லை,

மிக்க நன்றி உங்கள் வருக்கைக்கு அமைதி அப்பா

விஜய் said...

அன்பின் ஜீவன்பென்னி

நீங்கள் விரைவில் வேலையில் அமர்ந்ததர்க்காக கவலை பட வேண்டாம் தோழரே, நியதிப்படி பார்க்கும் பொழுது நீங்கள் மற்ற எதோ ஒரு சந்தர்ப்பத்தில் சிக்கல்களையும் , கஷ்டங்களையும் அனுபவித்து இருப்பீர்கள், அதலால் இங்கே கொஞ்சம் எளிதாய் கிடைக்க பெற்று இருப்பீர்கள்..அவ்வளவு தான் இந்த இயற்கை சில நேரங்களில் நாம் கற்றுக்கொள்ள நிறையானத்தை கொடுக்கிறது, சில நிறங்களில் கொடுப்பதில்லை அவ்வளவு தான் ஜீவன், சிக்கல்கள் வரும்பொழுது சமாளிக்கும் பக்குவம் இருந்தால் போதும், எதையும் வெல்லலாம் .

மிக்க நன்றி உங்கள் கனத்த இதயத்துக்கு ...

விஜய் said...

அன்பின் சங்கர்,

மிக்க மகிழ்ச்சி , எனது பதிவுகளை படிப்பதாக நீங்கள் கூறியுள்ளது. நான் எழுதிப்போடும் ஒவ்வொரு பதிவையும் உங்களை போன்று வலை தளத்தில் சிறந்து விளங்குபவர்கள் வந்து வாசித்து விட்டு ,விட்டு செல்லும் பின்னூட்டங்கள் என்னை போன்ற கத்துகுட்டிகளுக்கு மிகவும் உற்சாக மானதாய் அமைகிறது, நேரம் கிடைக்கும் பொழுது எனது மற்ற பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை சொல்லலாம்..

மிக்க நன்றி உங்கள் வருகைக்கு அன்பின் சங்கர்

விஜய் said...

மிக்க நன்றிங்க சித்ரா அக்கா,

நிச்சயம் அக்கா, விடா முயற்சி ஒன்று போதும், எதை வேணும் என்றாலும் சாதிக்கலாம், வாழ்க்கையின் முதல் பக்கமும், கடைசி பக்கமும்,முயற்சியில் தொடங்கி, முயற்சியில் முடிந்து இருந்தால், நிச்சயம் அனைத்து உட் பக்கங்களும் வெற்றியால் நிச்சயம் நிரப்பப் பட்டிருக்கும், இதில் துளியும் ஐயமில்லை...

மிக்க நன்றிங்க அக்கா உங்கள் ஆதரவிற்கு ...

விஜய் said...

மிக்க நன்றிங்க சந்தியா அக்கா,

நீங்கள் அனைத்து பதிவையும் படிக்கிறேன் என்று கூறியதே மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. நிச்சயம் படித்துவிட்டு கருத்து தெரிவியுங்கள் நான் காத்து இருக்கிறேன்.நான் எழுதிப்போட்டு இருக்கும் இவைகள் யாரவது ஒரு மாணவனுக்கு பயன்படும் எனும் ஒரு நல்ல நோக்கில் எழுதியுள்ளேன். காத்து இருக்கிறேன் எனக்கான இந்த வலைதளத்தில் யாருக்காவது ஒரு நன்று நடக்கும் என் எழுத்திலிருந்து...


மிக்க நன்றிங்க அக்கா உங்கள் புது வரவிற்கு

விஜய் said...

மிக்க நன்றி அமைதி விரும்பி தம்பி,

நான் இங்கே எழுதியுள்ள அனைத்தும் இன்னும் எத்தனையோ மாணவர்களின் வாழ்க்கையில் வந்து போனவைகள் தான், நிச்சயமாய் இது ஒன்று புதிது இல்லை, இன்னும் புதிதாய் சென்னை வரும் மாணாவர்களுக்கு நடக்கின்ற ஒன்று தான் ,அனால் இந்த ஒவ்வொரு நிகழ்வும், ஒரு பாடத்தை கற்க செய்கின்றன என்பதே அழகான ஒரு நிகழ்வு ஆகும்,
அதானால் நாம் இழக்கவில்லை எதையும் , இங்கே கற்றுக்கொண்டு தான் இருக்கிறோம் ...

மிக்க நன்றி தம்பி உன் அதரவு கலந்த இந்த பின்னூட்டத்திற்கு ...

Karthick Chidambaram said...
This comment has been removed by the author.
Karthick Chidambaram said...

வலியில் வந்து விழுந்த வார்த்தைகள். நேர்த்தியான வார்த்தைகள்.

செல்வா said...

ரொம்ப இடைவெளி விட்டுடீங்க அண்ணா ..
ஆனா அந்த உணர்வே எனக்குத் தெரியல ..
அடுத்து என்ன ஆச்சு அப்படிங்கிறத தெரிஞ்சிக்க ஆவலாக உள்ளேன் ..!!

Sweatha Sanjana said...

I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

விஜய் said...

மிக்க நன்றி கார்த்திக்,

ஒவ்வொரு பதிவையும் தவறாமல் படித்து பின்னோட்டம் இடுவதற்கு மிக்க நன்றி, உங்களுக்காக நான் தேடி போடும் வார்த்தைகள் நன்றாக புரியும் வண்ணம் இருக்கிறதா என்று உங்கள் பின்னூட்டத்திலும், வாக்களிப்பிலும் தான் உணர முடிகிறது கார்த்திக்,என் எழுத்துக்கள் இன்னும் அழகாகும் உங்களுக்காய்

மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் , வாக்களிப்பிற்கும், பின்னூட்டத்திற்கும் ...

விஜய் said...

நன்றி செல்வா தம்பி,
கொஞ்சம் ஆணி அதிகம் தம்பி, அதுதான் பதிவை கொஞ்சம் தாமதமா வெளியிட வேண்டியதா போய்டுச்சு, இனி தாமதம் ஆகாது என உறுதி கூறுகிறேன்..மிக்க நன்றி தம்பி

வாக்களிப்பிற்கும், வருகைக்கும், மிக்க நன்றி தம்பி

விஜய் said...

நன்றி சஞ்சனா...
நீங்கள் குறிபிட்டுள்ள வலைதளத்திற்கு செல்கிறேன்...மிக்க நன்றி

Anonymous said...

பொய் சொல்ல விரும்ப வில்லை நண்பரே... எல்லாரும் தனே எழுதுறாஙக அப்படின்னு 6 வது தொடரை படித்தேன்.படித்த பிறகு அனைத்து பதிவுகளை தொடர்ச்சியாக படித்து விட்டு விட்டேன்.எது என்னை கலங்க செய்தது என்று எனக்கு தெரிய வில்லை.கச்டத்திலும் உங்களை படிக்க வைத்த உங்கள் பெற்றொர்களா... அல்லது வழ்க்கையில் வெற்றி பெற வேன்டும் என்ற முயற்சியா... அல்லது படிப்பவர்களை உனர செய்யும் உங்கள் எழுத்து நடையா.... ஆனால் ஒன்று இத்தொடர் படிப்பவர்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கும்.பாரட்டுகள் விஜய்

விஜய் said...

மிக்க நன்றி Madukkur போஸ்ட்

நீங்கள் எனது பதிவுகளை படித்து ரசித்து கருத்துரை அனுப்பியதற்கு மிக்க நன்றி, நிச்சயம் தோழரே, இன்றைய இளைஞர்களுக்கு ஒரு பயனுள்ள பதிவாய் இருக்கும் என்பதால் என் அனுபவத்தை இங்கே பகிர்ந்துள்ளேன், துவண்டு போகும் பொழுது சரியான பாதையில் வழி நடத்துவும், வாழ்க்கை போராட்டத்தை நடத்தும் ஒரு உத்வேகத்தை கொடுக்கும் முயற்சியில் என்னை பற்றிய அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொளிகிறேன்..அதற்கு உங்களை போன்றோர்களின் பாராட்டுக்கள் என்னை இன்னும் எழுத்ததூண்டும்...
மிக்க நன்றி தோழரே...மீண்டும் வாருங்கள் என் வலைதளத்து பக்கம்....

Unknown said...

விஜய்.. கலக்கியிருக்கீங்க போங்க.. அனைத்து பாகத்தையும் ஒரே மூச்சில் படித்தேன் நான்..

உங்களது உணர்வுகளை மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கீங்க..படிக்க படிக்க ரொம்ப ஆர்வத்தை ஏற்படுத்திடுச்சுங்க உங்களோட எழுத்துக்கள்..

வாழ்த்துக்கள் விஜய்..

junsuu said...

pedikkavellai endru ennal poi than solla mudium vijai....
enendral enaku ethaiveda valigal athigam...

விஜய் said...

மிக்க நன்று அப்துல் தோழரே,

அனைத்து பதிவையும் ஒரே மூச்சில் படித்தற்கு.மிக்க சந்தோசம் தோழா.
உன் வாழ்த்தும், உன் உற்சாகமும் என் எழுத்துக்களை செம்மையானதாய் மாற்றும்..

நன்றி மீண்டும் வருக

விஜய் said...

ஹாய் junsuu ,
மிக்க நன்றி என் வலைத்தளம் பக்கம் வந்ததற்கு..வலிகள் தான் நம்மை மெருகேற்றும், தொடர்ந்து போராடுவோம் ...

மிக்க நன்றி

கவி அழகன் said...

அருமை அருமை அருமையிலும் அருமை சுப்பரா எழுதுங்க நண்பா

விஜய் said...

மிக்க நன்றி அன்பின் யாதவன்,
முதல் முறையாய் என் வலைதளத்திற்கு வந்து, என் எழுத்துகளை ரசித்து என்னில் மேலும் ஊக்குவிப்பதற்கு மிக்க நன்றி...

மீண்டும் வருக

Dhanalakshmi said...

அன்புத் தோழரே உங்களுடைய அனுபவத்தை படித்தேன். படித்தேன் என்பதை விட உணர்ந்தேன் என்பதே சரியான சொல். எங்கள் ஊரில் வந்து ஏமாந்தேன் என்றதும் மனது இன்னும் கனத்தது. ஆனால் போரடி திரும்ப பெற்றோம் என்று சொன்னதும் தான் ஒரு சிறு மகிழ்ச்சி. எங்கள் மண் உங்களை ஏமாற்றவில்லை என்று.
உங்களுடைய இந்த பகிர்வு பல படித்த இளைஞர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நீங்கள் பட்ட வலிகளை நினைத்து பார்த்துள்ளீர்கள். நாம் வந்த பாதையை மறக்காமல் இருப்பது மிகவும் நல்லது. நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் நன்மை பிறக்கும். நல்லதே இனி நடக்கும். உங்களுக்காக என்றும் இறைவனை வேண்டும் உங்கள் அன்புத் தோழி....

விஜய் said...

மிக்க நன்றி குனலஷ்மி,

உங்கள் மண் மீது இருக்கும் பற்று மிகவும் அருமை, வலி என்பது எனக்கு மட்டும் உரித்தான ஒன்று இல்லை, உலகத்தில் ஜனிக்கும் அனைத்து உயிருக்கும் உரித்தான ஒன்று, இருப்பினும் எனது வலிகளை இங்கே சமர்பித்தற்கு காரணம், படிப்பவர்களுக்கு நிச்சயம் புரிந்து இருக்கும், வாழ்க்கையை தேடும் இளைங்கர்களுக்கு ஏதாவது ஒரு தருணத்தில், ஏதாவது ஒரு சின்ன பொறியாய் அமையும் என்ற நம்பிக்கை தான் என்னை இங்கே எழுத செய்து இருக்கிறது ..

மிக்க நன்றி குனலஷ்மி உங்கள் வாழ்த்திற்கும், உங்கள் பின்னூட்டத்திற்கும்..

Anonymous said...

unga eluththai ithanaiper vaasippathum thodarvathume ungal eluththukku ungalukku kidaiththa vettithane...உங்க‌ளின் இந்த‌ "ந‌ட‌ந்த‌து என்ன‌" என்ற‌ ரீதியில் வ‌ரும் க‌ட்டுறையை இத்த‌னைப்பேரை ப‌டிக்க‌த்துண்டி இருப்ப‌தோட‌ல்லாம‌ல் தாங்க‌ளின் க‌ருத்துக்க‌லையும் ப‌திய‌ வைத்திருக்கிற‌து.இது உங்க‌ளுக்கு கிடைத்த‌ வெற்றி..உங்க‌ளின் ப‌திலும் அருமை.தொட‌ருங்க‌ள்..உங்க‌ளின்...

"இன்னும் எத்தனை மனிதர்களின் கஷ்டங்கள் ஊமைகளாய் திரிகின்றன இந்த சமுதாயத்தில், இவைகளும் ஒரு நாள் பேசும் என் மூலம் என நம்புகிறேன்"

very nice...vijai

Post a Comment