Wednesday, June 23, 2010

வாழ்க்கை(வலி)ன்னா என்ன? -- சொந்த மண்ணில் என்ன நடந்தது? (பாகம் - 4 )



நன்றிங்க நான்காம் பாகத்தை படிக்க வந்ததிற்கு...


முதல் பாகம் இணைப்பு இங்கே : -
முதல் பாகம்

இரண்டாம் பாகம் இணைப்பு இங்கே : -
இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம் இணைப்பு இங்கே : -
மூன்றாம் பாகம்


அன்றைய பேருந்தின் பயணம் உடல்வலியோடு , மனவலியும் சேர்த்து சுமந்து சென்றது . கால்கள் நடக்க மறுத்து கெஞ்ச ஆரம்பித்தன, வீட்டை அடைந்தபோது அம்மா சமையலறையில் எதோ செய்து கொண்டு இருந்தாங்க, என்னை பார்த்ததும் ஓடி வந்து, என்னை பிடித்து படுக்கவைத்துவிட்டு, அழுதாங்க, அதை இன்னும் மறக்க முடியல, அப்பா கடைல இருந்து வேகமா வந்து என்னை மருத்துவமனைக்கு கூட்டி சென்றார்..

அவர் உள்ளுக்குள் அழுததை என்னால் உணரமுடிந்தது ..ஒரு வார காலம் என்னை அமரவைத்து விட்டது டைபாய்டு .இந்த ஒரு வாரம் என்னை நலம் விசாரிக்க வந்தவர்கள் அம்மாவிடம் கேட்டவை "இன்னும் வேலை கிடைக்கலையா உன் பையனுக்கு , நாங்க அப்பவே சொன்னோம் இருக்குற காச வைச்சு கடை வைச்சு கொடு நல்ல பிளைசுக்குவான்னு , நீ தான் கேட்குல, இப்ப பாரு பையன் எப்படி வந்து நிக்குறான்" என விசாரித்தார்கள் , அம்மாவும் விட்டு கொடுக்காமல், "வேலை கிடைச்சுரும் , கிடைக்காம எங்க போய்ட போகுது" என எனக்காக வாதாடினாங்க.

நிற்க , நடக்க, ஓட, தகுதி ஆகிவிட்டதை உணர்ந்தேன்...

திடீரென எனது உடைமைகளை எடுத்துகொண்டு அம்மாகிட்ட சொல்லிட்டு கிளம்ப ஆரம்பிச்சேன், " இன்னும் ஒரு வாரம் இருந்துட்டு போட அப்படினு அம்மா சொன்ன வார்த்தைக்கு பதில் சொல்லாம, இந்த முறை கொஞ்சம் அதிக வெறியோட ..

சென்னை வந்து சேர்ந்தேன், இந்தமுறை தேடல் கொஞ்சம் அதிகமா இருந்துச்சு , அட நீங்க வேறங்க ,தேடல் மட்டும் தான் அதிகமா இருந்துச்சுங்க , ஆனா எப்பவும் போல இழப்பு தான். 6 மாதம் தோல்வி தோல்வினு நகர்ந்து போய்டுச்சு...அன்னைக்கும் எப்பவும் போல தான் விடிஞ்சுது , ஆனா கொஞ்சம் வித்தியாசாமான நாள் , நண்பன் ஒருத்தன் சொன்னான் சென்னைல இருந்து காஞ்சிபுரம் போற வழியில் ஒரு கம்பெனி ஆரம்பிச்சு இருக்காங்க , நிறையா பேர் தேவைபடுதாம்,அதனால எழுத்து தேர்வில் வெற்றி பெற்றால் போதும், அப்புறம் 10,000 கட்டனும் ,அதுவும் நம்ம கம்பெனிய விட்டு ஒரு வருடம் எங்கயும் போக கூடாது என்பதற்காக தான் என கூறினான்...உடனே கிளம்பிட்டேன், முதல் சுற்றை அழகாய் முடித்தேன் ,

அப்பாவிடம் கூறி 10,000 பணத்தையும் கட்டிவிட்டேன், கைகளில் வேலையில் சேருவதற்கான கோப்புகளை வாங்கிவிட்டேன்,வானத்துக்கும், பூமிக்கும் குதிச்சேன் அப்டின்னு சொல்வாங்களே அந்த மாதிரி உணர்ந்தேன். அதில் ஒரு மாதத்திற்கு பிறகு வேலையில் சேருவதற்கான நாளும் குறிப்பிட்டு இருந்தது , ஆரம்ப சம்பளம் 7500. காஞ்சிபுரத்தில் தங்குவதற்கு வீடு எடுத்தேன்...

குறிப்பிட்ட நாள் அன்று, வேகமாய் பேருந்தை பிடித்து பேருந்து நிறுத்தத்தில் இறங்கினேன்.... நிஜமாய் நினைக்கவில்லை இப்படி நடக்கும் என்று , சினிமாக்களில் தான் இப்படி ஒரு திருப்பம் வரும், ஆனால் என் நிஜ வாழ்க்கையில் பார்த்தேன் அப்பொழுது..

பேருந்து நிறுத்தத்தில் இறங்கியதும் பெரிய கூட்டத்தை காண்கிறேன்,என்ன நடக்கிறது என்று தெரியாமல் நடக்க ஆரம்பிக்கும் என்னை காவல் துறை அதிகாரிகள் தடுக்கிறார்கள், அங்கு செல்ல தடை விதித்து இருக்கிறோம் என்று, புரியாமல் அவர்களிடம் கேட்டேன்,
மூன்று மாதமாய் வேலை செய்தவர்களுக்கு ஊதியம் தரவில்லை என்று பணிபுரியும் ஊழியர்கள் இன்று காலை அலுவலகத்தையும் , கணினியையும் அடித்து நொறுக்கி போராட்டம் செய்துவருகிறார்கள் என்று அவர்கள் சொல்லி முடிக்கும் முன் வியர்த்து கொட்டியது, என்ன செய்வது என்று தெரியவில்லை, அந்த கூட்டம் இருக்கும் இடத்தை நெருங்கினேன், என்னை போல் நிறையா பேர் அங்கு இருந்தார்கள், அவர்கள் நம்ம கொடுத்த காசு அவ்வளவு தான் என கூறினார்கள்,

இதயம் வேகமாய் துடிக்க ஆரம்பித்துவிட்டது, என்ன செய்வது என்று தெரியவில்லை,அருகே இருந்த பெட்டிக்கடையில் குடிக்க தண்ணீர் வாங்கிகொண்டு, கொஞ்சம் தூரம் விலகி சென்று, தண்ணீரால் முகத்தை நிரப்பிவிட்டு தேம்பி தேம்பி அழுதேன், கண்ணீர் தனியாய் தெரியாமல் இருக்க தண்ணீரால் முகத்தை அவ்வப்பொழுது நிரப்பி கொண்டே இருந்தேன்,

அப்பா 10,000 நோட்டு கட்டுகளை என்னிடம் கொடுக்கும்பொழுது எதையோ வங்கியில் அடமானாமாய் வைத்து தருகிறார் என்று தெரிந்த மனசு அப்பொழுது பயங்கரமாய் வலித்தது,
ஏமாந்து விட்டேன் என்று சொல்வது எவ்வளவு கஷ்டமான ஒரு விசயம் என்பது எனக்கு புரிந்தது, அளவுக்கு அதிகமா கஷ்டத்த அனுபவிக்கும் பொழுது அழுகை அதிகமாகி சிரிப்பு வர ஆரம்பிக்கும் அப்டின்னு சொல்வாங்களே அதை அப்பொழுது அனுபவிச்சேன்..

அங்க இருந்தவங்க பணத்தை திருப்பி கொடுக்க சொல்லி போராடினாங்க, நானும் சேர்ந்து கொண்டேன், அன்று இரவு வரை அதற்க்கு ஒரு தீர்வும் கிடைக்கல,மீண்டும் அடுத்த நாள் கூடினோம், போராடினோம், உண்ணவே இல்லை நான், மறந்துவிட்டது..அன்றும் இரவு வரை போராடினோம், முடிவு கிடைக்கவில்லை..பாதிபேர் ஏமாற்ற பட்டுவிட்டோம் என ஒப்புக்கொண்டு , கிளம்பிவிட்டனர்..

ரெண்டு நாளுக்கு அப்புறம் எனது கைபேசியை செயல் பெற செய்கிறேன், அப்பாவை அழைக்கிறேன்.எப்படி இருக்க?, கம்பெனில சேர்ந்து விட்டாயா ?, எப்படி இருக்கு கம்பெனி?.... என கேள்விகளை கேட்ட என் அப்பாவிடம் நான் எப்படி சொல்ல நடந்ததை,அழுகை என் மௌனத்தை உடைத்தெறிந்தது, நடந்ததை கூறினேன்..நிச்சயம் என் அப்பாவிற்கு தெளிவாய் புரிந்து இருக்க வாய்ப்பே இல்லை,என் அழுகை தான் தெளிவாய் புரிந்து இருக்கும்,

என் அப்பாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, என் அம்மாவை அழைத்து பையன் அழுகிறான் என்று கூறினார், அம்மா என்னிடம் காரணம் கேட்கவில்லை ,"ஆம்பிள பையன் அழகூடாது, தைரியாமா இருக்கணும் என சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுதே, அப்பா என்னிடம் கூறிய வார்த்தை பிரமிக்க வைத்தது,

" காசுபோனா போய்ட்டுபோது உடனே கிளம்பி வந்துடு" ...

அப்பா,கஷ்டப்பட்டு பனைமரம் ஏறி பதநீர் விற்று பார்த்து பார்த்து சம்பாதித்த காசுங்க,அம்மா வெய்யலில் களைவெட்டி சம்பாதிச்ச காசுங்க, ஒரு நிமிடத்துல, போனா போயிட்டு போகுது நீ ஊருக்கு கிளம்பிவா அப்டின்னு அப்பா சொல்லும்போது எப்படிங்க அழாம இருக்க முடியும்?...



ஐந்தாம் பாகம் இணைப்பு இங்கே : -
ஐந்தாம் பாகம்



                                                                                         
                                             

26 comments:

விஜய் said...

நல்ல தெளிவான எழுத்துநடை.

வாழ்த்துக்கள் தம்பி

(உங்களுக்கும் எனக்கும் g தான் வித்யாசம்)

விஜய்

AltF9 Admin said...

vijay neenka valkaila periya idathukku varanum , valthukkal ,

dheva said...

வலிக்குதுப்பா...! சீக்கிரத்துலேயே உனக்கு பக்குவம் வரணும்னு கடவுள் உனக்கு வச்ச விளையாட்டுதான் இது. உன்னோட மெச்சூரிட்டிக்கும் இது போன்ற நிகழ்வுகளுக்கும் சம்பந்தம் இருக்கு...

நீ... நம்ப மாட்ட.. நான் கலங்கி உக்காந்து இருக்கேன்... !

இது ஒரு சராசரி பதிவா பாக்கலப்பா.....என் தம்பியோட ஸ்டேட்மென்டா பாக்குறேன்...!


யாரும் இல்லேன்னு எப்பவும் இனி கவலப்படாதே.... நான் இருக்கேன்பா...!

dheva said...

இமை பிரிக்காமல்..
கண்ணீரை...தேக்கி ..தேக்கி...
மனம் கனக்கிறது...!
மனிதர்கள் எல்லாம் மிருகங்களாய்..
மாறும் கொடுமையில்...
எத்தனை பிஞ்சுகளுக்கு வேதனை..!
ஏனோ தெரியவில்லை...
என்னுள் எரியும் கனல்..
இன்னும் அதிகமாய் எரிகிறது...
அ நீதிகளை சுட்டெரிக்க...
வறுமையினை வார்த்தைகளில் ..
கொண்டு வரும் வேளையில்
என் தம்பி..உன் மனம் கனத்திருக்குமே...
கண் கலங்கியிருப்பாயே...
என் நெஞ்சு பதறுதப்பா..
உன்னை என்னோடு அணைத்துக் கொள்கிறேன்...
உன் வலிகளுக்கு ஆதராவாய்..விஜய்!

செல்வா said...

ரொம்ப உருக்கமா எழுதுறீங்க .. இந்த மாதிரி வலிய என்னோட வாழ்க்கைலயும் அனுபவச்சிருக்கேங்க.. நான் +2 முடிச்சிட்டு மேல படிக்காம நின்னப்ப எத்தனையோ கேள்விகள்.. ஏன் படிக்கலை , இவ்ளோ மார்க் வாங்கிட்டு படிக்காம என்ன பண்ணுற .. ( +2 first group ல 1037 ).
அவுங்களுக்கு என்னால பதில் சொல்லவே முடியாம .... உங்க வலிய என்னால உணர முடியுதுங்க ...

நான் நான்தான் !... said...

Ovvoru thadava neenga ezhuthumpothum, kaalam pinnokki poyi, naanum ungaloda saernthu unga kashtatha anubavikkiren........

UNGAL PUTHU RASIGAN

சௌந்தர் said...

ரொம்ப உருக்கமா இருக்கிறது.....உங்கள் வலி எனக்கு புரிகிறது

விஜய் said...

மிக்க நன்றிங்க விஜய் அண்ணா , இப்ப தான் எழுத பழகுகிறேன், தெளிவா சொல்லனும்னா கத்துக்குட்டி நான் , உங்களை போன்றோரின் உற்சாகம் தான் என்னை அழகாக எழுத செய்யும்...
ரொம்ப நன்றிங்க விஜய் அண்ணா...மீண்டும் வருக ..மிக்க நன்றி உங்க பின்னூட்டத்திற்கு

விஜய் said...

மிக்க நன்றிங்க சிவராஜன் அவர்களே , நிச்சயம் நல்லதொரு இடத்தை பிடிப்பேன், உங்களின் வாழ்த்துக்கும், என் மீது வைத்து இருக்கும் அன்பிற்கும் நன்றி சிவராஜன் அவர்களே..நன்றி மீண்டும் வருக ....

மீண்டும் வருக ..மிக்க நன்றி உங்க பின்னூட்டத்திற்கு

விஜய் said...

தேவா அண்ணா நீங்க இருக்கும் பொழுது நான் பயப்பட மாட்டேன் , நல்ல விசயங்களா உங்க கிட்டு இருந்து கற்று இருக்கேன், கற்று கிட்டு இருக்கேன், இன்னும் கற்றுகொள்வேன் உங்க கிட்டு இருந்து ... நிஜமா இந்த ப்ளாக் எனக்கு ஒரு நல்ல அண்ணாவ கொடுத்து இருக்கு ..
உங்களை பார்த்து, உங்க படைப்புகளை பார்த்து எல்லோரும் பிரமிச்சு போயி நிக்குறப்ப , நான் உங்க தம்பிய பக்கத்துல நிக்குறத நினைச்சா பெருமையா இருக்கு,
உங்க பின்னூட்டம் வந்ததா அப்டின்னு தான் நான் செக் பண்ணிகிட்டே இருப்பேன், உங்க பின்னூட்டம் தான் எனக்கு முதல் உற்சாக பானம். எழுத கற்றுகிட்டது உங்ககிட்ட இருந்து தான் , ...நான் இன்னும் நிறையா எழுதி உங்களுக்கு பெருமை சேர்க்க முயற்சி பன்றேன் அண்ணா . உங்களை ரொம்ப மிஸ் பண்றேன் ...

விஜய் said...

//இமை பிரிக்காமல்..
கண்ணீரை...தேக்கி ..தேக்கி...
மனம் கனக்கிறது...!
மனிதர்கள் எல்லாம் மிருகங்களாய்..
மாறும் கொடுமையில்...
எத்தனை பிஞ்சுகளுக்கு வேதனை..!
ஏனோ தெரியவில்லை...
என்னுள் எரியும் கனல்..
இன்னும் அதிகமாய் எரிகிறது...
அ நீதிகளை சுட்டெரிக்க...
வறுமையினை வார்த்தைகளில் ..
கொண்டு வரும் வேளையில்
என் தம்பி..உன் மனம் கனத்திருக்குமே...
கண் கலங்கியிருப்பாயே...
என் நெஞ்சு பதறுதப்பா..
உன்னை என்னோடு அணைத்துக் கொள்கிறேன்...
உன் வலிகளுக்கு ஆதராவாய்..விஜய்! //

அண்ணா நான் என்ன சொல்ல உங்க பாசத்த ,
கொஞ்சம் அழுதுக்கிறேன் அண்ணா ...

விஜய் said...

தேவா அண்ணா சொன்ன மாதிரி பக்குவம் அடைய இந்த வலிகள் உறுதுணையா இருக்கும் ப.செல்வக்குமார்...நிச்சயம் பெரிய இடத்த அடைய இவைகள் உறுதுணையாய் இருக்கும் என்பதில் ஐய்யமில்லை..வாழ்த்துக்கள் ...மிக்க நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு ப.செல்வக்குமார்

விஜய் said...

நன்றிங்க சந்திரசேகர் ....நீங்க என் பதிவுகளை படிச்சு கருத்துக்களை என்னிடம் நேராகவே கூறுகிறீர்கள் , ரொம்ப சந்தோசம் ...இன்னும் தோன்றுவதை தாளராமாய் சொல்லலாம்.
நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு

விஜய் said...

ரொம்ப நன்றிங்க சௌந்தர் ....வலியை பறக்க செய்து விடலாம் தோழரே....உங்கள் புதிய புதிய பதிவுகள் மிக்க அருமை , இன்னும் நீங்கள் எழுத வேண்டும், நாங்கள் வாழ்த்த தயாராய் இருக்கிறோம் ...என்னுடைய பதிவை ரசித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு மிக்க நன்றி சௌந்தர்

ஜீவன்பென்னி said...

விஜய் நீண்ட பெருமூச்சும், கணத்த மனதுடனும்

பின் தொடர்கிறேன்.

விஜய் said...

மிக்க நன்றி ஜீவன்பென்னி தோழரே .... ...என்னுடைய அனைத்து பதிவை ரசித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு மிக்க நன்றி ஜீவன்பென்னி தோழரே, காத்திருங்கள்...அடுத்த பதிவை விரைவில் வெளி இடுகிறேன் தோழரே....மிக்க நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு

பட்டாசு said...

இன்று நீங்கள் கண்டிப்பாக நல்ல நிலையில் இருகிறீர்கள் என நம்புகிறேன் (பின்னே வலை பூவில் எழுதுவதற்கு வேலை, வருமானம் இல்லாத சாதாரண நபர்களால் முடியுமா) இருந்தாலும் நிகழ்வுகளை அருகில் இருந்து பார்ப்பது போல் உள்ளது.

(ஏன் நடுவில் வேறு ஒரு பிரசினைகளை கிளப்பிவிட்டு பிறகு இதை தொடர்கிறீர்கள்)

நிச்சயம் இந்த எழுத்துகள் நம்பிக்கை அற்றவர்க்கு நம்பிக்கை ஊட்டுவதாய் அமையும். வாழ்த்துகள்.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

ஏமாந்து விட்டேன் என்று சொல்வது எவ்வளவு கஷ்டமான ஒரு விசயம் என்பது எனக்கு புரிந்தது//

இந்த வலியை அப்படியே உணர முடிகிறது. profile பார்த்திட்டதால கொஞ்சம் ஆசுவாசம்

நிலாமதி said...

உங்கள் நான்காவதுபாகம் இன்று படித்தேன் .... . வலி கண்டு தான் வழி ..பிறக்குமாம்.
உங்கள் விடிவுக்காய் பிராத்திக்கும் சகோதரி .நிலாமதி

விஜய் said...

மிக்க நன்றிங்க பட்டாசு அவர்களே, ....நீங்கள் சொல்வது சரிதான் , இவைகள் என் வாழ்க்கையில் நடந்தவை, இவைகளை நான் இங்கு மறைக்காமல் பகிர்ந்து கொள்வதே என்னை போல் கஷ்டப்படும் என் சகோதரர்களுக்கு மிகவும் ஊக்கம் தரக்கூடியதாய் இருக்கும் என்ற நம்பிக்கை தான்..

நீண்ட நாட்கள் இடைவெளி விட்டால் முந்தைய பதிவுகளை மறந்து விடுவார்கள் என்று தான் குறைந்த நாட்களுக்குள் பதிவு செய்கிறேன்,

அதே சமயத்தில் என் தேசத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நான் மறப்பதில்லை பட்டாசு அவர்களே ..

உங்கள் கருத்துக்கு எனது தாழ்மையான நன்றிகள் ...மீண்டும் தொடுருவேன் பட்டாசு அவர்களே ...

விஜய் said...

மிக்க நன்றிங்க நாய்க்குட்டி மனசு அவர்களே ,
நீங்கள் நெகிழ்வு படும் அளவிற்கு நான் சொல்ல வந்ததை தெளிவாய் சொல்லிவிட்டேன் என்ற சந்தோசம் எனக்கு நிச்சயம் உண்டு ...

என்னை போல் வேலை தேடி வாடும் என் சகோதர , சகோதரிகளை சென்றடைந்து, நிச்சயம் வெற்றி பெறலாம், என்ற நம்பிக்கை ஊட்ட வேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம் ....

மிக்க நன்றி நாய்க்குட்டி மனசு அவர்களே , உங்கள் பின்னூட்டத்திற்கும், அணைத்து பதிவையும் படித்து உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்வதிற்கு மிக்க நன்றி ....

விஜய் said...

மிக்க நன்றிங்க நிலாமதி அக்கா,
//வலி கண்டு தான் வழி ..பிறக்குமாம். // ...அருமையான உணமைங்க அக்கா..

அக்கா உங்க பதிவுகளை படித்தேன் மிக்க அருமை, ரொம்ப நல்ல எழுதுறீங்க, வாழ்த்துக்கள் அக்கா, உங்க ஒவ்வொரு புது பதிவையும் வெளியிடும் பொழுது எனக்கு தெரிவிங்க அக்கா

veeramanikandan said...

take care...

ரகசிய சிநேகிதன் said...

என்ன அழ வச்சுட்ட விஜய்.... எனக்கும் இது மாதிரி நடந்து இருக்கு... கண்ணீரை துடைத்துக்கொண்டே படிக்கிறேன்...

விஜய் said...

மிக்க நன்றிங்க veeramanikandan...

விஜய் said...

தோல்விகள் ,வெற்றிகளை சுமக்கும்.....நன்றி பாலாஜி

Post a Comment