Saturday, July 30, 2011
என் கன்னத்தில் ஒட்டிய உன் நினைவுகள்
புரண்டு படுத்தது போதும்........,
தொலைதூரம் நடந்தும் எண்ணிக்கை பனிரெண்டை தாண்டமுடியாமல் தவிக்கும் என் கடிகார முட்கள்,பாவம்!!!! காலை- ஐந்தை தொட்டுக்கொண்டு இருக்கிறது .என் படுக்கையறை வெப்பம் கூட குளிரிடம் தோற்றுக்கொண்டு இருக்கிறது மெதுவாய்.
வெள்ளைநிற என் இலவம்பஞ்சு படுக்கை கூட என்னைத் தாங்கிக்கொள்ள மறுதலிக்கிறது.
என் படுக்கைவிரிப்பும், இலவம்பஞ்சு போர்வையும் என்னோடு இரவு முழுவதும் கட்டிப்புரண்டு உறவாடிவிட்டு களைய ஆரம்பிக்கின்றன.விலகிஓடிய தலையணையை இழுத்துவந்து, கட்டியணைத்து, கண்கள்மூடி விழிக்க முயற்சிக்கிறேன்.
விடுதலை வாங்கிக்கொண்டு, என் வீட்டு சன்னலுக்குள் வந்து சிறைபடும், குளிரை தன்னுடன் அழைத்துவந்து, என் இமைதொட்டுசென்று,நான் உனக்காய் வந்துவிட்டேன் என்பதை உணர்த்த முயற்சிக்கிறது என் வீட்டு சன்னல் காற்று,இத்தனையும் உணர்ந்தவனாய், இப்போது நடைபலகியவனைப்போல்,தத்தி தத்தி சென்று,என் கட்டுப்பாட்டையும் மீறும் இயற்கை கடன்களை அடைக்கிறேன்.
சுவற்றில் இடப்பட்ட பந்தாய் மீண்டும் படுக்கையை அடைகிறேன். படுக்கை விரிப்பை இழுத்து,என்னோடு வரும்படி,அரைகுறையாய் என் உடலோடு சேர்த்து இருககட்டிக்கொண்டு சமையலறை எட்டிப்பார்க்கிறேன். கைகள்நடுங்க,உதடுகள் ஒட்டி ஒட்டி விரிய, சுக்கை கொன்று,சர்க்கரையை மூழ்கடித்து சுடச்சுட தேநீர் தயாரிக்கிறேன்.விலகி செல்லும் படுக்கைவிரிப்பை என் உடலோடு மீண்டும் இறுக்கி கட்டிக்கொண்டு ,நாவில் உமிழ்நீர் சுரக்க,ஆவிபறக்க குவளையில் தஞ்சம் புகுகிறது தேநீர்.
விரல்களை சுட்டு பாடம் கற்பிக்கிறது தேநீர் குவளை ,அவசரமாய் தொடநினைக்கும் என்னிடம், நிதானமாய் ரசிக்க பழகு என்று ,ஏதோ சொல்ல முயற்சிக்கும் என் படுக்கைவிரிப்பிடம்,சரி என்று தலை ஆட்டிவிட்டு, தேநீர் குவளையை இறுகப்பற்றிகொள்கிறேன் படுக்கைவிரிப்பின் உதவியோடு.மீண்டும் தத்தி தத்தி நடைபயில்கிறேன் என் வீட்டு கதவை நோக்கி. தன்னை நோக்கி வருகிறான் ,விடுவிக்க போகிறான் என கனவுகாணும் என்வீட்டு கதவை, தொடுகிறேன் . திறக்கிறேன் .
அதிகாலை பெய்த மழை, தடையமாய் மழைத்துளிகளை விட்டுசென்றிருந்ததை, எளிதாய் உணரமுடிந்தது என்னால் , சிட்டுக்குருவிகள் பேசிக்கொள்ளும் காதல் மொழிகள் இன்னும் சத்தமாய், இன்னும் அழகாய் என் செவிகளை எட்டுகிறது அழகாய். சுதந்திரமாய் சுற்றித்திரியும் இளங்காற்று,என் கன்னத்தில் ஈரத்தை அறைந்துவிட்டு செல்கிறது. என் உதட்டோரம் புன்னகை எட்டிப்பார்க்கத்தான் செய்கிறது இப்பொழுது என் உடலோடு நெருக்கமாய் ஒட்டிக்கொள்ளும் படுக்கைவிரிப்பை பார்த்து.
என் வீட்டு முற்றத்தில் சாய்கிறேன். படுக்கை விரிப்பை உடலோடு சேர்த்து பற்றிக்கொள்கிறேன் ஒரு கரத்தில், ஆவிபறக்கும் தேநீர் குவளை ஒருகரத்தில்.
ருசிக்கமுயற்சிக்கும் நாவிற்கு சுதந்திரம் தருகிறேன்,குவளையை தீண்டி தீண்டி காதல் பரிசாய்,தேநீர் பெறுகிறது என் தேகம். என் வீட்டு முன்னமாய் நிற்கும் மரத்தின், செடியின் ஒவ்வொரு நுண்ணிய இலைகளையும் உற்று ரசித்து காதல் கொள்கிறது என் கண்கள்.
தேநீரின் ஒவ்வொரு துளியும் என் உதிரத்தில்,நரம்புகளின் வழியே பாய்வதை கண்கள் மூடி உணர்கிறேன். கன்னத்தோடு கன்னம் வைத்து பேசினேன் ,இதுவரை எனக்கு துளியும் பரிச்சியம் இல்லா ஒருமென்மையான முகத்தோடு,இன்றைய அதிகாலை கனவில்.
மென்மையான முகம் இன்னும் என் கன்னத்தோடும், என் உள்மனதோடும் ஒட்டி இருப்பதாய் உணர்கிறேன்.
அதிகாலை கனவு, அதுவும் பெண்மையோடு மென்மையாய் பழகுவது போன்ற கனவு ,மனதை விட்டு விலக, குறைந்தது ஒரு நாள் பிடிக்கும் என்பதை உணர்கிறேன் இப்போது.
கண்களை மெல்லியதாய் திறந்து, காணும் ஒவ்வொரு காட்சியிலும், மென்மை முகம் ரசிக்க பழகுகிறேன். தேநீர், குவளையின் அடிப்புறத்தை தொட முயற்சிக்கிறது.மெதுவாய் வீட்டினில் நுழைகிறேன் மீண்டும் முகத்திலும், மனதிலும் புன்னகையோடு..
அலைபேசியை எடுத்து செயல்பெற செய்கிறேன், குறுந்தகவல்கள் மெதுவாய் என் அலைபேசியை எட்டிப்பார்க்கிறது.
1 Message Receievd
from: Manikandan-Team Lead
919894519062
01-Aug-2011 7:03am
"vijay where are you?. I think that you are in your forest house right?. ok come fast, Client sent some issues, you have to take care of that one. reach office as soon as possible.
நிஜங்கள் கரைய ஆரம்பிக்கிறது, போலிகளை போர்த்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் நிர்பந்தம்,எதற்காக இந்த வேலை,உதறித்தள்ள
யோசிக்கிறேன்.இன்னொரு குறுந்தகவல் எட்டிப்பார்க்க ஆரம்பிக்கிறது
1 Message Receievd
from: Gomathi-wouldbe
919884323651
01-Aug-2011 7:05am
"Hi Dear, How r u .I Love u so much .Take care dear.
மீண்டும் போலியை எடுத்து போர்த்திக்கொண்டு நகர ஆரம்பிக்கிறேன் எனக்கான குடும்பத்திர்க்காய்..
ஒற்றை நிமிடம் மௌனமாய் நின்று,இலவம்பஞ்சு படுக்கை,தலையணை,போர்வை, படுக்கைவிரிப்பு,தேநீர்குவளை, சன்னல் வழியே என் வீட்டில் சிறைபடும் இளங்காற்று,என் வீட்டு முற்றம், சிட்டுக்குருவியின் காதல்மொழிகள்,நுண்ணிய இலைகள் இவையனைத்திடமும் காதல்மொழி பகிர்ந்துவிட்டு மௌனமாய்.
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
சேம் பிளட்... சூப்பர் நண்பா.
nice....different a eruku nanba.epodum konjam serious a eluduviga but enda time romba cool a eludi erukiga..
நண்பா கலக்குற போ!!ரொம்ப நல்லா இருக்கு!!
மிக்க நன்றி ஜீவன்பென்னி ,
ஒவ்வொரு மனிதனும் கடந்து செல்லும் நிகழ்வுகள் தான் இவை. இடம், பொருள், இவைகள் மாறி இருக்கலாம்.அனால் உணர்வுகள் ஒன்று தானே நண்பா..
மாறுபட்டு எழுதி இருக்கனா அப்டின்னு எனக்கு தெரியல கிருத்திகா, அனால் மாற்றங்கள் தேவையான ஒன்று தான் என்று தோனுகிறது.
உங்களை போன்ற ஊக்குவிக்கும் இலைகள் தான் என்னை போன்ற செடிகளை துளிர்த்து பெரிய மரங்களாக உதவியாய் இருக்கும் என நம்புகிறேன்.
உங்களை போன்றோரின் எழுத்து எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயல்வேன். நன்றி கிருத்திகா
தனசேகர் நண்பா...
நன்று என்ற ஒற்றை வார்த்தை எத்தனையோ சரித்திரங்களுக்கு அடித்தளமாய் அமையும் என்பதை நம்புவன் நான்.
மிக்க நன்றி தனசேகர் நண்பா ..
பிரமாதம் விஜய் கலக்குறபோ~~~~
Good, keep on write...
Post a Comment