Friday, June 18, 2010

நானும் உங்களை மாதிரி தானுங்க ......



நானும் உங்களை மாதிரி தாங்க பத்து மாசம் சுமக்கபட்டேன்,
நல்லா தாங்க பிறந்தேன் , நல்லா தாங்க வளர்ந்தேன்,
எட்டாம் வகுப்பு படிக்கரவரைக்கும் எனக்கு "செல்வன்" அப்டிங்கற பெயர் தாங்க.

என்னமோ தெரியலைங்க பொண்ணுங்கள மாதிரி இருக்கணும்னு தோனுச்சு,முகத்துக்கு பூச்சு,கண்ணிற்கு மை,காதிற்கு தோடு இப்படி ஆசை வந்துச்சு,
நான் மாறிகிட்டே வருவது கூட படிக்கிற பசங்க கேலி பண்ணும்போது தாங்க புரிய ஆரம்பிச்சுது, என்ன பண்றதுன்னு தெரியல,

நான் அப்பா அம்மாகிட்ட அதிகம் பேசறது இல்ல சின்ன வயசுல இருந்தே,அதனால என் பிரச்சனைய அவுங்ககிட்ட சொல்லவும் முடியல.
ரொம்ப வலிச்சுது கூட படிக்கிற பசங்க கிண்டல் பண்ணும்போது , பல பெயர்களை வைச்சு என்னை அழைக்கிற போது , என்ன பண்றதுன்னு தெரியல, எங்க அப்பாவும், அம்மாவும் எவ்வளவு நாள் தான் கேட்கறவங்க கிட்ட எல்லாம் சொல்லி சமாளிப்பாங்க, அவுங்க கஷ்டப்படுரத பார்க்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சுங்க,அதான் ஒரு நாள் சென்னைக்கு யாருக்கும் தெரியாம பஸ் பிடிச்சு வந்துட்டேன் .

இங்க வந்து ஒரு கார்த்திக் உணவகம்,தி.நகர்ல வேலைக்கு சேர்ந்தேன்,கொஞ்ச நல்ல வேலை பார்த்தேன்,இங்கயும் அதே தொந்தரவு ஆரம்பிச்சுது,என்ன பண்றதுன்னு தெரியலங்க, என்னை மாதிரி பிறந்தவங்க எல்லோரும் உங்களால வினோதமா பார்க்க படுகிறோம்ங்க, கிண்டல் பண்ண படுகிறோம், இன்னும் சில பேரு வினோதமா பார்ப்பதற்கும் கொஞ்சம் மேல போயி படுக்க கூப்பிடுறாங்க,

ஆணாவும், பெண்ணாவும் பிறந்த உங்களுக்கு எங்கள மாதிரி பிறந்தவங்கலோட வலி தெரியலைங்க, உலகம் தெரியா குழந்தைங்க கூட எங்கள பார்த்து கிண்டல் பண்ற மாதிரி உங்களை போன்ற உயிர்களை கொண்ட எங்களை வேடிக்கை பார்க்க உதவும் பொருளாய் மாற்றி விட்டீர்கள்.

அண்ணா நகர்ல என்னை மாதிரி பிறந்த மனிதஉயிர்கள் இருக்கிறதா கேள்விபட்டு அங்கே போனேன்.ஒவ்வொருத்தர் கதைய கேட்குறப்ப மனசு வலிச்சுது, யாரும் எங்களுக்கு வேலை கொடுக்கறது இல்ல, வேலை கொடுக்கறவங்க எதுக்கு கொடுக்றாங்க அப்டின்னு உங்களுக்கு சொல்லி தான் புரியணும்னு அவசியம் இல்ல.


எங்களுக்கும் வயிறுன்னு ஒன்னு இருக்குதுங்களே என்ன பண்றது, சில பேரு உடம்பவிக்குறோம், சிலபேரு மனச விக்குறோம், இதோ 6.30 ரயில்ல உங்ககிட்ட பிச்சை கேட்கிறோம், ஆண் ,பெண் அப்டிங்கற தகுதிய தவிர எல்லாமே எங்ககிட்ட இருக்குங்க, ஆனா இந்த சமுதாயம் எங்களை பிச்சை எடுக்கவும், இச்சையை களித்துகொள்ளவும் உபயோகப்படுதுறாங்க....

தயவு செய்து குழந்தைங்க கிட்ட தப்பு தப்பா சொல்லி வைக்காதீங்க,.உயிர்களை மதிக்க கற்று கொடுங்க...
சரி இதை எல்லாம் கேட்குறீங்களே , நீங்க எங்களுக்காக என்ன பண்ண போறீங்க,

சரிங்க நான் வரேன், அடுத்த ரயில் வர நேரம் ஆகிடுச்சுங்க,


என் பெயர் இப்ப "செல்வி"ங்க ...உங்க பெயர் என்னங்க..


என் பெயர் "விஜய்" ங்க அக்கா....

                                                                                         
                                             

32 comments:

elamthenral said...

nice one.. we should know thr feelings too.. good post one.. keep it up.. and all the best

சௌந்தர் said...

தயவு செய்து குழந்தைங்க கிட்ட தப்பு தப்பா சொல்லி வைக்காதீங்க,.உயிர்களை மதிக்க கற்று கொடுங்க...
சரி இதை எல்லாம் கேட்குறீங்களே , நீங்க எங்களுக்காக என்ன பண்ண போறீங்க,

கலக்கல் பதிவு சூப்பர்

dheva said...

ஒரு கத்தியை எடுத்து ஒரே வீச்சில் சீவியது போல முடித்திருக்கிறாய்...தம்பி....! அடுத்த தலைமுறைக்கு இந்த.... திரு நங்கைகளைப் பற்றி.... ஒரு விழுப்புணர்வோட கூடிய புரிதலை உண்டாக்கணும் அப்டீன்ற உன் முற்போக்கு பார்வைக்கு பாராட்டுகள்.

நிறைய எழுது தம்பி...ஒரு வலியோடு....உன் கருத்தின் உண்மையை ஏற்றுக் கொள்கிறேன்...! முடிந்த வரை எல்லோருக்கும் சொல்கிறேன்...!


மீண்டும் பாராட்டுக்கள் தம்பி....!

விஜய் said...

நன்றி புஷ்பா அவர்களே, கண்டிப்பா நம்ம அவர்கள் உணர்வுகளை மதிக்க வேண்டும் , மிக்க நன்றி எனது பதிவைப்பற்றி உங்களது கருத்துக்களுக்கு .....மீண்டும் வருக

விஜய் said...

மிக்க நன்றி சௌந்தர்....உங்களின் கருத்துக்கள் எனக்கு மிக்க அவசியமான ஒன்று...நன்றி உங்கள் பின்னூட்டதிற்கு ....மீண்டும் வருக

பட்டாசு said...

Dear Vijay, you are touching one more side of pain. its a real hurt to all human beings.
Good work. carry on.

karthickarts said...

romba arumai ya iruku thala...
all the best keep going.

விஜய் said...

மிக்க நன்றி தேவா அண்ணா, எழுத்து அப்டினா ஏதாவது பண்ணனும் அப்டின்னு புரிய வைச்சதே உங்க எழுத்து தான், நீங்க பாராட்டியதிற்கு மிக்க நன்றி... நிச்சயம் என்னால் முடிந்ததை இந்த எழுத்துக்கள் மூலம் செய்வேன்....நன்றி அண்ணா உங்கள் பின்னூட்டத்திற்கு ....

விஜய் said...

மிக்க நன்றி "பட்டாசு" அவர்களே, நம்மள போல உணர்வு இருக்குற அவுங்கள நம்ம மதிச்சே ஆகணும் அப்டிங்கற உங்க உணர்வுக்கு மிக்க நன்றி ...மிக்க நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு பட்டாசு அவர்களே ....

விஜய் said...

நன்றி கார்த்தி, எனது பதிவை படித்து பார்த்து உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டதிற்கு... மிக்க நன்றி மீண்டும் வாங்க கார்த்தி...

செல்வா said...

///ஒரு கத்தியை எடுத்து ஒரே வீச்சில் சீவியது போல முடித்திருக்கிறாய்...தம்பி....! அடுத்த தலைமுறைக்கு இந்த.... திரு நங்கைகளைப் பற்றி.... ஒரு விழுப்புணர்வோட கூடிய புரிதலை உண்டாக்கணும் அப்டீன்ற உன் முற்போக்கு பார்வைக்கு பாராட்டுகள்.

நிறைய எழுது தம்பி...ஒரு வலியோடு....உன் கருத்தின் உண்மையை ஏற்றுக் கொள்கிறேன்...! முடிந்த வரை எல்லோருக்கும் சொல்கிறேன்...!
///

naan ithanai vazhi mozhikiren...

விஜய் said...

நன்றி ப.செல்வக்குமார் , எனது பதிவை படித்து பார்த்து உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டதிற்கு... மிக்க நன்றி மீண்டும் வாங்க ப.செல்வக்குமார் ...

செல்ல நாய்க்குட்டி மனசு said...

என் பெயர் "விஜய்" ங்க அக்கா...//

இந்த கடைசி வரியில் திருநங்கைகளின் மொத்த உணர்வும் பிரதிபலிச்சிடுது. இதைதான் அவர்கள் எதிர்பார்கிறார்கள். ஆனால் மறுக்கப்படுகிறது.
உற்சாகமாய் எழுதுங்கள் விஜய். தொடர்ந்து சோகம் வேண்டாம்.

கனிமொழி said...

mmm... Good post... Keep on writing...

அமைதி அப்பா said...

தமக்கு கிடைக்கும் உபரி நேரத்தை, சமூக விழிப்புணர்வுக்கு பயன்படுத்த வேண்டும் என்கிற எண்ணம், தங்கள் பதிவைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் என்று நம்புகிறேன்.

இன்னும் தாங்கள் பல விஷயங்கள் குறித்து சிந்தித்து, அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே எனது ஆசை.

விஜய் said...

நன்றிங்க "நாய்க்குட்டி மனசு" அவர்களே ..நிச்சயம் இன்னும் அடுத்த சில பதிவுகள், மனிதனின் இன்னொரு பக்கமான சந்தோசத்த சொல்ல போறேன்....நன்றிங்க உங்க பின்னூட்டதிற்கு
"நாய்க்குட்டி மனசு" அவர்களே

விஜய் said...

நன்றிங்க கனிமொழி அவர்களே . உங்களை போன்றோரின் உற்சாகம் எங்களுக்கு தேவை ..எழுத ,எழுத்துக்களை விட உங்களை போன்றோரின் கருத்துக்கள் தேவை .....நன்றிங்க உங்க பின்னூட்டதிற்கு கனிமொழி அவர்களே

விஜய் said...

நன்றிங்க அமைதி அப்பா, நிஜமா சந்தோசமா இருக்கு ,என்னோட பதிவுகள தவறாம நீங்க படிச்சு உங்க கருத்தை அறிவிப்பதை நினைத்து அப்பா .மிக்க நன்றி அப்பா ...நிச்சயம் என்னால் இயன்ற சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்துவேன் ....

அன்பரசன் said...

நல்ல பதிவுங்க விஜய்.
அருமை

விஜய் said...

மிக்க நன்றி அன்பரசன்....உங்களின் கருத்துக்கள் எனக்கு மிக்க அவசியமான ஒன்று...நன்றி உங்கள் பின்னூட்டதிற்கு ....மீண்டும் வருக

Anonymous said...

heart touching
Jayanthi

விஜய் said...

மிக்க நன்றி ஜெயந்தி அவர்களே ....உங்களின் கருத்துக்கள் எனக்கு மிக்க அவசியமான ஒன்று...நன்றி உங்கள் பின்னூட்டதிற்கு ....மீண்டும் வருக ஜெயந்தி அவர்களே....

cheena (சீனா) said...

அன்பின் விஜய்

திருநங்கைகளைப் பற்றிய விழிப்புணர்வு இக்கால கட்டத்தின் முன்பிருந்ததை விட அதிகம் இருக்கிறது. ஆனால் இன்னும் விழிப்புணர்வு வர வேண்டிய நிலை தான். அரசும் ஆவன் செய்கிறது. என்ன செய்வது .... - காலம் மாறும் - அவர்களும் மேன்மேலும் அங்கீகரிக்கப்படுவார்கள்.

நல்ல சிந்தனையில் நச்சென்ற இறுதி வரியுடன் எழுதப்பட்ட இடுகை
நல்வாழ்த்த்கள் விஜய்
நட்புடன் சீனா

விஜய் said...

மிக்க நன்றி சீனா அவர்களே ......உங்களை போன்ற பெரியோரின் கருத்துக்கள் எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது சீனா அவர்களே, நிச்சயம் என்னால் இயன்ற சமுதாய விழிப்புணர்வை என் தேசத்து மக்களுக்கு என் எழுத்தின் மூலம் நிறைவேற்றுவேன் ...மிக்க நன்றிங்க உங்கள் பின்னூட்டதிற்கு....

சிறுகுடி ராம் said...

ரொம்ப அருமை விஜய். Keep going... All the best.

விஜய் said...

மிக்க நன்றி சிறுகுடி ராமு அவர்களே . நிச்சயம் என்னால் இயன்ற சமுதாய விழிப்புணர்வை என் தேசத்து மக்களுக்கு என் எழுத்தின் மூலம் நிறைவேற்றுவேன் ...மிக்க நன்றிங்க உங்கள் பின்னூட்டதிற்கு சிறுகுடி ராமு அவர்களே....

♥♥வர்மன்♥♥ said...

உணர்வாய் ஒரு உணர்வு
உணர்த்தி விட்டாய் ஊருக்கு
விரைவில் உலகும் அறியும்...,

தொடரட்டும் உமது சமூக சிந்தனை....!

விஜய் said...

மிக்க நன்றி வர்மன் அவர்களே .

உங்களின் கருத்துக்கள் எனக்கு மிக்க அவசியமான ஒன்று... ,நிச்சயம் என்னால் இயன்ற சமுதாய விழிப்புணர்வை என் தேசத்து மக்களுக்கு என் எழுத்தின் மூலம் நிறைவேற்றுவேன் ...

மிக்க நன்றிங்க உங்கள் பின்னூட்டதிற்கு வர்மன் அவர்களே...

Yazh Athiyan said...

துயரின் அப்பட்டத்தையும் வாழ்வின் வலியையும் வடித்து,
பின்னடைந்த சமூக மனத்தின் இருள் பார்வையில் பாய்ந்த அம்பாய் ஒரு கவிதை

Dhanalakshmi said...

ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க. நம்மைவிட அவர்களுக்கு வாழக்கையில் வலி அதிகம். தொடர்ந்து எழுதுங்கோன்னா.

விஜய் said...

மிக்க நன்றி Yazh Athiyan,

இது போன்ற சமூக அக்கறையுள்ள பதிவுகளை எழுத தூண்டுவதே உங்களை போன்றோரின் உற்சாகம் தான் தோழரே,
எனது மனம் தாழ்ந்த நன்றிகள் , என் வலைதளத்திற்கு புதிதாய் வந்துள்ள உங்களை வரவேற்கிறேன், இன்னும் அழகாய் எழுதுவேன் என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன்


மிக்க நன்றி Yazh Athiyan உங்கள் வாழ்த்திற்கும், உங்கள் பின்னூட்டத்திற்கும்..

விஜய் said...

மிக்க நன்றி gunalakshmi

ஆமாம் நீங்கள் சொல்வது போன்று நம்மை விட வலி அதிகம் , ஆனால் வலியை கொடுப்பதும் நாம் தான் ...மிக்க நன்றி உங்களை வருகைக்கும் வாழ்த்துக்கும்


மிக்க நன்றி gunalakshmi உங்கள் வாழ்த்திற்கும், உங்கள் பின்னூட்டத்திற்கும்..

Post a Comment