Wednesday, June 9, 2010

வாருங்கள், வதம் செய்தே தீர வேண்டும்

நிறையா விசயம்(விஷம்) இருக்கு தோழர்களே, நம்ம பகிர்ந்துகொள்ள

அதில் கவனிப்பாரற்று கிடக்கும் சிலவற்றை பற்றி விவாதம் நடத்த, நல்லதொரு முயற்சியை ,நல்லதொரு முடிவை காண உங்களை அழைக்கிறேன்..

இதைப்பற்றி நிறையா பேர் பேசிட்டாங்க , இருந்தாலும் என்னுடைய கருத்தை முன்வைக்க விரும்புகிறேன் ..

நமது தாய் நாடு ஏன் இன்னமும் மற்ற நாடுகளுக்கு சவால் விடும் நிலையில் கொஞ்சம் பின் தங்கி உள்ளது.எனக்கு நிஜமாய் அரசியல் தெரியாது, ஒரு அடிப்படை கல்வியரிவாளன் நினைப்பதை இங்கே எழுதுகிறேன்




முதல் காரணம் -- நமது தாய் நாட்டின் மக்கள்தொகை 1,027,015,247. எந்த ஒரு திட்டமும் கடைசிநிலை மனிதனை சென்றடைவது மிகக்கடினமான ஒன்று தான். ஒரு குழந்தையை நாம் நினைத்தார் போல் வளர்ப்பதே, கட்டுக்குள் கொண்டு வருவதே மிகச்சிறந்த செயலாக கருதுகிறோம், அந்த கண்ணோட்டத்தில் பார்க்கும் போது இவ்வளவு மனிதனையும் ஒருமித்த கருத்தோடும், நல்எண்ணத்தோடும் வளர்ப்பதும், மாற்றுவதும் மிகக்கடினமான ஒன்று தான். ஒரு நாள் உணவிற்கு தடுமாறும் பிச்சைகாரர்கள் கூட 4 அல்லது 5 குழந்தைகளை பெற்றுக்கொள்கிறார்கள், அதை நான் தவறு சொல்ல முடியாது,அவர்களுக்கு கிடைக்கும் ஒரே சந்தோசம் அவை தான் என்று நம்புகிறேன்.படித்த, பணக்கார தம்பதிகள் கூட கருத்தடை சாதனம் வாங்கவே கூச்சபடுகிறார்கள்,யோசிக்கிறார்கள் இப்படி இருக்க எப்படி பிச்சை எடுக்கும் அவர்கள் வாங்கி உபயோகப்படுத்துவார்கள் என்பது நிச்சயம் கேள்விக்குறியான ஒன்று தான்.

அதுமட்டும் அல்லாது சில படித்த மனிதர்களே தம் மதத்தின் எண்ணிக்கையை பெருக்க,அதிக குழந்தைகளை பெற்றுகொள்கிறார்கள் என்பதும் வெட்கப்பட வேண்டிய ஒரு பொறுப்பற்ற செயல் தான் .

சரி இதன் தீர்வு தான் என்ன?,நான் முன்பே கூறியது போல், ஒவ்வொரு அடிப்படை இந்தியனும் மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்துஇருக்க உதவி செய்தே ஆகவேண்டும்.



இரண்டாம் காரணம்-- அரசியல்வாதிகள் எனும் பணம் தின்னும் மனிதப்பேய்கள், இவர்களை குற்றம் கூறுவதற்கு முன் நிச்சயம் நாம் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம், யார் இந்த அரசியல்வாதிகள்? , எங்கு இருந்து முளைத்தார்கள்?,எப்படி இப்படி மாறினார்கள்? இன்னும் எந்த வகையில் இவர்களை கேள்விகள் கேட்டாலும் ,அதற்கான பதில் " நீங்கள் (நாம்) " தான் என்றுவரும்.ஒரு 100 ரூபாய் நோட்டு, கேட்க ஆளின்று கிடந்தாலே, உடனே அதை சட்டை பையில் எடுத்து மறைத்து வைத்துகொள்கிறோம், இப்படி இருக்க பல்லாயிரம் கோடி பணம், கேட்க ஆளின்று பணம் தின்னும் பேய்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என இவர்கள் தின்று போடும் மிச்சம் தான் அடிப்படை மனிதனுக்கு, இவைகள் எப்படி அடிப்படை மனிதனை சென்றடையும்?. நிச்சயம் முடியாது.நாம் கண்கூடாக பார்க்கிறோம் குடும்பம் மட்டுமே அரசியலாக இருப்பதையும், தோழிகளின் விளையாட்டிற்கு எனது தமிழகம் கால்பந்தாக மாறி சின்னாபின்னம் ஆக்கபடுவதையும். தனக்கென ஒரு நிலையான சொந்தமான கொள்கைகூட இல்லாத சில மூன்றாம் நிலை ஜாதிகட்சிகள்,வருஷம் ஒரு கட்சிக்கு தாவும் குரங்கு கட்சிகள்.
இவற்றை படிக்கும்போது ஒரு உண்மை நிலை புரியாமல் தனது கட்சியை தவறாக எழுதுகிறான் என்று கோபப்படும் அப்பாவி தொண்டர்கள் இருக்கும் வரை இந்த பணம்தின்னும் பேய்கள் நிச்சயம் கொண்டாடிக்கொண்டு தான் இருக்கும். வாய் திறக்கும் எம்.எல்.ஏ களுக்கும், எம்.பி களுக்கும் பணங்கள் கட்டு கட்டாக திணிக்கபடுகின்றன, பிறகு எப்படி இவர்கள் மக்களிடம் வாய் திறப்பார்கள்?

சரி, நோட்டுகளை வாங்கிக்கொண்டு வாக்குகளை பதிவு செய்யும் மக்களை தவறு என்று சொல்வதா?.நிச்சயம் கூடாது ஒரே ஒரு ஆடையை தாயும், மகளும் மாற்றி உடுத்திக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே வரும் அவலம் உள்ள ஒரு அடிப்படை இந்திய குடிமகன், குடிமகள் நோட்டை வாங்கிக்கொண்டு தான் வாக்கை பதிவு செய்வாள்,செய்வான்.பணம் போதுமான அளவுக்கு இருக்கும் பணக்காரர்கள் கூட நோட்டுகள் வாங்கிக்கொண்டு வாக்குபதிவு செய்கிறார்கள் என்றால் நிச்சயம் அவர்கள் நினைத்து இருக்ககூடும் நாம் உழைத்தால் தான் பணம், உணவு, உடை அனைத்தும் கிடைக்கப்பெறும் ,எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நமக்கொன்றும் நடக்கபோவதில்லை என்று. நியாயம் தானே,ஆளும் கட்சியும்,எதிர் கட்சியும் தின்று எறியும் மீதி இந்த அடிப்படை மக்களை சென்றடையவா போகிறது?..

சரி இதற்க்கு என்ன தான் தீர்வு?..காந்தியடிகள் வழிகளில் செல்ல அல்லது சொல்ல வேண்டுமானால் , நோட்டுகள் வாங்கிக்கொண்டு வாக்களிக்கும் அடிப்படை இந்தியகுடிமகன் , எம்.எல்.ஏ, எம்.பி ,இவர்களை திருந்த சொல்லிவிட்டு கையை கட்டிக்கொண்டு, வாயை பொத்திக்கொண்டு அமைதியாய் ஓரமாய் நிற்க வேண்டும்.

தலைவர் சுபாஷ் சந்திர போஸ் வழிகளில் செல்ல அல்லது சொல்ல வேண்டுமானால் தப்பு செய்கிறவனை தகர்த்து எறி,எங்கு இருந்தோ வந்த வெள்ளைகாரர்களை பின்னங்கால் பிடறி அடிக்க ஓட செய்த நம்மால், ஏன்? ,நம்முள் பிறந்து, நம்மை ஏமாற்றி, நம்மை அழிக்கும், அரசியல் எனும் போர்வையை தவறாக போர்த்திக்கொண்டு பல திருட்டுகளையும், கொலைகளையும், துரோகங்களையும் செய்யும் இந்த மனிதர்களை ,இந்தியாவின் முதன்மை துரோகிகளாய் கணக்கெடுத்து, தடயமே இல்லாமல் அழித்துவிட முடியாது?.நிச்சயம் துளி கூட தடயம் இல்லாமல் அழிக்க முடியும் .

எப்படி அழிப்பது?. இந்திய அடிப்படை குடிமகன்களின் படிப்பறிவை உயர்த்தி,நாடு எங்கே செல்கிறது என்பதை, அ, ஆ ,எ,ஏ சொல்லிகொடுக்கும் போதே இதையும் குழந்தைக்கு சேர்த்து ஊட்டுங்கள்,இது ஒவ்வொரு இந்திய குடிமகளின் பணி., அடுத்ததாக இந்திய குடிமகனின் பணி- நீங்கள் சட்டங்களை பாதுகாக்கும் பணிகளையும், தவறு செய்பவர்களை மிச்சமின்றி அழிக்கும் உரிமை உள்ள உயர்பதிவிகளையும் தேர்ந்தெடுங்கள்.மீதம் உள்ள இளமை சொட்டும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பணம் தின்னும் அரசியல்வாதிகளின் இன்னொரு பக்கத்தை இவ்வுலகிற்கு காட்ட போராடுவோம், தேவை என்றால் அரசியல்வாதிகள் எனும் பணம் தின்னும் மனிதப்பேய் களைகளை நீக்கவும் உயிர் கொடுப்போம்.முதலில் என் கரத்தை நீட்டுகிறேன் இதற்கு தயார் என்று இப்பொழுதே, உங்களில் யார் அந்த சுபாஷ் சந்திர போஸ் என்னை போன்ற இரத்தம் கொதிக்கும் இளைஞர்களை வழிநடத்த தயாராக இருக்குறீர்கள்?..தேவை இன்னொரு சுபாஷ் சந்திர போஸ்...


நிறைவுப்பாகம் இணைப்பு இங்கே : -
நிறைவுப்பாகம்



                                                                                         
                                             

28 comments:

சௌந்தர் said...

பிச்சைகாரன் இருந்தாலும் சரி பணக்காரன் இருந்தாலும் சரிஒரு குழந்தையுடன் நிறுத்தி கொள்ளலாம்.

விஜய் said...

நன்றி சௌந்தர், கண்டிப்பாக நீங்கள் சொல்வதை போல் கடைப்பிடித்தால் நிச்சயம் இந்தியாவை முதன்மை நிலைக்கு கொண்டு வர முடியும்..உங்கள் பின்னூட்டதிற்கு நன்றி சௌந்தர்

நேசமித்ரன் said...

அவசியமான இடுகை

நல்ல அலசல் !

விஜய் said...

நன்றி நேசமித்திரன் அவர்களே, உங்களை போன்ற எழுத்துக்களில் சிறந்து விளங்கும் பெரியவர்கள் எங்களை பாராட்டுவதே மிக சிறந்த பாக்கியம். மிக்க நன்றி உங்கள் பின்னூட்டதிற்கு நேசமித்திரன் அவர்களே

பட்டாசு said...

என்ன விஜய், இப்படி பண்ணிடீங்களே.
வலி நிறைஞ்ச மனசு உங்களுக்குன்னு நினைச்சேன், ஆனா நெருப்பு/உத்வேகம் உள்ள நெஞ்சுன்னு இப்ப தெரியுது.
வாழ்க பாரதம்.

S Maharajan said...

நல்ல அலசல் !

பனித்துளி சங்கர் said...

சிந்திக்கத் தூண்டும் சமூக அக்கறை உள்ள சிறந்த பதிவு தொடர்ருங்கள் மீண்டும் வருவேன்

மரா said...

ரொம்ப சிக்கலான விசயம்ணே...படக்குனு முடிவு எடுக்க முடியாது.தொலைநோக்கோடு நல்ல பல சிந்தனைகள் உருவாகினால் அன்றி இயலாது.மாற்றம் தனிமனித அளவில் உருவாக வேண்டும்.நன்றி.

விஜய் said...

நன்றி மகராஜன் அவர்களே, உங்களை போன்ற பெரியவர்களின் ஊக்கம் எங்களை போன்ற கத்துகுட்டிகளுக்கு மிக அவசியம் . மிக்க நன்றி உங்கள் பின்னூட்டதிற்கு மகராஜன் அவர்களே

விஜய் said...

நன்றி சங்கர் அவர்களே, உங்களின் பதிவுகளை படித்து கொண்டு இருக்கிறேன் ,நிஜமாய் அழகான தமிழில் நீங்கள் எழுதி இருக்கும் வாக்கியங்கள் என்னை போன்ற இளம் எழுத்தாளர்களுக்கு ஒரு உந்துதலை ஏற்படுத்துகிறது. மிக்க நன்றி உங்கள் பின்னூட்டதிற்கு சங்கர் அவர்களே

விஜய் said...

நன்றி மயில்ராவணன் அவர்களே, உங்களின் கருத்து உண்மையான ஓன்று தான், நிச்சயம் நிதானாமாய் எடுக்க படவேண்டிய ஒன்று தான், ஆனால் அவற்றை இப்பொழுதே ஆரம்பிக்கச்சொல்லி தான் கேட்டுக்கொள்கிறேன் . மிக்க நன்றி உங்கள் பின்னூட்டதிற்கு மயில்ராவணன் அவர்களே

விஜய் said...

நன்றி Anonymous அவர்களே,மிக்க நன்றி என்னோட இந்த பதிவை WWW.SINHACITY.COM தலத்தில் பார்த்து சொன்னதிற்கு.... மிக்க நன்றி உங்கள் பின்னூட்டதிற்கு Anonymous அவர்களே

விஜய் said...
This comment has been removed by the author.
Mythili said...

All your emotional words are correct. This should be possible only, every Indian should have self-control & awareness.

mythili

சிவாஜி சங்கர் said...

வணக்கம் விஜய்..
நல்ல கூர் உற்றுநோக்கல்.. :)
வாழ்த்துக்கள்..!

விஜய் said...

நன்றி பட்டாசு அவர்களே, நம் பாரதம் நசுங்கி கிடப்பதை பார்க்கும் ஒவ்வொரு குடிமகனின் ஏக்கம் தான் இப்பொழுது என் மூலம் இங்கே சிதறிக்கிடக்கிறது .நிச்சயம் விரைவில் நம் இளைஞர்கள் விழித்து எழுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு தோழரே . மிக்க நன்றி உங்கள் பின்னூட்டதிற்கு பட்டாசு அவர்களே

விஜய் said...

நன்றி மைதிலி அவர்களே, நிச்சயம் நீங்கள் சொல்வது உண்மை தான், இருந்தபொழுதும் நம்ம மக்கள் கொஞ்சம் மெதுவா பத்திக்ற விறகு மாதிரி தான் , பற்றி எரிய நேரம் ஆகும், ஆனால் பற்றிய பிறகு நிச்சயம் அநீயாயங்களை தீக்கரையாக்குவார்கள் .அவர்களை பற்ற வைப்பது நாம் தான் , நம் எழுத்துக்களும், நம் நடவடிக்கைகளும் தான். மிக்க நன்றி உங்கள் பின்னூட்டதிற்கு மைதிலி அவர்களே

விஜய் said...

நன்றி சிவாஜிசங்கர் அவர்களே,உங்களை போன்ற எழுத்துக்களில் சிறந்து விளங்குபவர்கள் பாராட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது . . மிக்க நன்றி உங்கள் பின்னூட்டதிற்கு சிவாஜிசங்கர் அவர்களே

Unknown said...

It is a good analyse and control measures. we will educate people and get them awarness about the politicians.

கனிமொழி said...

நல்ல பதிவு,
எல்லோரும் இதே போல் யோசித்தால் நாடு நன்றாக இருக்கும்...

விஜய் said...

நன்றி பிரகாஷ் அவர்களே, நிச்சயம் புதியதோர் இந்தியாவை உருவாக்க படித்த நாமும் போராடுவோம் . . மிக்க நன்றி உங்கள் பின்னூட்டதிற்கு பிரகாஷ் அவர்களே

விஜய் said...

நன்றி கனிமொழி அவர்களே, ஏமாற்றப்பட்டு , சிந்திக்க முடியாமல் ஆக்கப்பட்டு இருக்கும் நம் தேசத்து மக்களை நாம் தான் விழிப்புணர்வு பெறச் செய்யவேண்டும் . மிக்க நன்றி உங்கள் பின்னூட்டதிற்கு கனிமொழி அவர்களே

Amaithi Virumbi said...

நல்ல எண்ணத்துடன் எழுதபெற்ற இந்த பதிவிற்கு என் வாழ்த்துக்கள் .... நிச்சயம் நமது கல்வி முறை மாற்றப்பட வேண்டும் ... குழந்தை பெற்றுகொள்ளவது தனிநபர் விருப்பமேயானாலும் அது நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கக்கூடாது .... இந்த தொடக்கம் வெறும் பேச்சாக இல்லாமல் செயலாக அமையட்டும் ... இதில் கருத்தை தெரிவித்த அனைவரும் புதிய மாற்றத்திற்காக பாடுபட விரும்புகிறேன் ....

விஜய் said...

மிக்க நன்றி அமைதி, நிச்சயம் கைகோர்த்து சாதிப்போம், மிக்க நன்றி பின்னூட்டதிற்கு அமைதி...

vasan said...

அர‌சிய‌ல்/வாதிக‌ள் அநியாய‌ம் ப‌ற்றிய‌
நியாய‌மான‌, சிந்திக்க‌ப் ப‌ட‌ வேண்டிய‌ ப‌திவு,
ப‌திவாள‌ர்க‌ள் அனைவ‌ரும் ஒருமித்து உற்று
நோக்கிச் செய‌ல்ப‌ட‌ வேண்டிய‌ த‌ருண‌மிது.
செய்தி ஊட‌க‌ங்க‌ள், விள‌ம்ப‌ர‌ ப‌ண‌ங்க‌ளால்
ஊமைக‌ளாகி விட்ட‌ இத்த‌ருண‌ங்க‌ளில்,
உண்மைக‌ளை உர‌க்க‌ச் சொல்ல‌ இத்த‌கைய‌
பதிவுக‌ள், புது மேடை போட‌ட்டும்.
(அர‌சிய‌ல்வாதிக‌ள் திருந்தாவிடிலும்,
செய்யும் த‌வ‌றுக‌ளை ம‌க்க‌ள் க‌வ‌னித்து
கொண்டிருக்கிறார்க‌ள் என்ற‌ ம‌ன‌ரீதியான‌
ப‌யம்/வெட்க‌ம் வ‌ர‌லாம‌ல்ல‌வா?)
ப‌ட்டா ப‌ட்டிக்கு எழுதிய‌ பின்னோட்டம்.
உங்க‌ளின் பதிவிற்கு பொருந்துமென்ற‌ புரித‌லில் இங்கும்.

விஜய் said...

நன்றி வாசன் அவர்களே, உங்களை போன்ற எழுத்துக்களில் சிறந்து விளங்கும் பெரியவர்கள் எங்களை பாராட்டுவதே மிக சிறந்த பாக்கியம். மிக்க நன்றி உங்கள் பின்னூட்டதிற்கு வாசன் அவர்களே ..

elamthenral said...

விஜய்,
இது என் கருத்து மட்டுமே.. நம் இவைகளை கண்டு வருத்தபட மட்டும் தான் முடியும், நம்மால் தீர்வுகாண்பது என்பது முடியாத ஒன்று. இப்படி ஒன்று மட்டும் பெற்று கொண்டால் போதும் என்பது உங்களை போன்று, என்னை போன்று ஆட்கள் சொல்லிக்கொள்ளலாம்.. ஆனால் நம்மை சுற்றியிருப்பவர்களே அதை மீறிகொண்டுதானிருப்பார்கள். நம்மால் எதுவுமே செய்ய முடியாது...
வருங்காலங்களில் பார்ப்போம்.... அடுத்த சங்கதியனராவது இதை திருத்த முயலட்டும்..

விஜய் said...

நீங்கள் சொல்வது ஓரளவுக்கு சரி தான் புஷ்பா அவர்களே, ஆனால் ஒரு சாதாரண தேச குடிமகன் பார்வையில் இது நிச்சயம் சாதரணமான ஒன்றாகவும், சுலபமாக தீர்க்க முடியாத பிரச்சனையாக தான் தெரியும், ஆனால் நாம் கொளுத்தி போடும் ஒவ்வொன்றும் பற்றியது அது பிரகாசமாய் எறியும் போது தான் முழுவதுமாக தெரியும் இது சாத்தியம் என, படிப்பறிவில்லா ஒரு ஆட்டுமந்தை போல் இருந்த மக்களை,லெனின்,ஸ்டாலின் போன்ற தலைவர்கள் தம் எழுத்தாலும், பேச்சாலும்,செயலாலும் மாற்றிக்காட்டினர்,அப்படி இருக்க தடம் மாறி இருக்கும் ஓரளவு கல்வி அறிவு பெற்றிருக்கும் நம் தேசத்து மக்களின் தவறான பாதையை மாற்றி சரியான பாதையை நோக்கி செலுத்தினாலே போதும்..இது அத்தனையும் சாத்தியமே.நம் தேசத்து இளம் ரத்தங்கள் நிச்சயம் செய்து முடிக்கும்...

மிக்க நன்றி புஷ்பா அவர்களே உங்கள் பின்னூட்டத்திற்கு ..மீண்டும் வருக

Post a Comment