Thursday, June 3, 2010

வாழ்க்கை(வலி)ன்னா என்ன? -- பாகம் 3




நன்றிங்க மூன்றாம் பாகத்தை படிக்க வந்ததிற்கு...


முதல் பாகம் இணைப்பு இங்கே : -
முதல் பாகம்

இரண்டாம் பாகம் இணைப்பு இங்கே : -
இரண்டாம் பாகம்

8 பேரும் தங்களுக்கான இருக்கையில் அமர்ந்தோம்.விவாதிப்பதற்கான தலைப்பு கொடுக்கப்பட்டது,எனக்கு தலைப்பை புரிவதற்கே 10 நிமிடம் தேவைப்பட்டது.ஒவ்வொருவரும் கருத்துக்களை வீசினார்கள் , மனசு - ஏதாவது பேசு, பேசினாலே நீ இந்த சுற்றில் வெற்றி அடைந்துவிடலாம் என்கிறது, இதுவரை ஆங்கிலமே அதிகம் பேசியதில்லை,சண்டை போட்டு விவாதித்து கொண்டு இருக்கும் இவர்களுக்கிடையில் நான் எப்படி பேசுவது?, இருந்தும் தோற்று விடக்கூடாது என்று பேசினேன்.

அதற்குள் நன்றி கலந்து கொண்டதற்கு, முடிவை அறிவிக்கிறோம் என்று சொன்னவுடன்,
ஏழை சிறுமி பார்ப்பளே ஏக்கத்துடன் கடைத்தெருவு இனிப்பை ,அவ்வாறு என் பெயரும் வந்துவிடாத என்று ஏக்கத்துடன் நின்றேன்.வாசிக்க ஆரம்பித்தவுடனே, முடித்துவிட்டார்கள்..நிஜமாய் கண்கலங்கிவிட்டது,கிடைத்த வாய்ப்பை விட்டுவிட்டோமே என்று, இருந்தாலும் என் மனசு பெரியா ஆளுங்க, ஆமாங்க இதுவரைக்கும் நீ வந்ததே வெற்றி தான் என சமாதானம் கூறியது.என் அறை செல்லும் வரை எனது மூளைக்கும் , மனதிற்கும் பெரிய போராட்டமே நடந்துச்சுங்க.

தோல்வி உனக்கு புதுசு இல்ல என என்னையே தேற்றிக்கொண்டது என் மனசு..அதே கடை , அதே நேரம், அதே "அண்ணா ஒரு பாதம் பால்"...மனசு வலி நின்றுடுசுங்க.சில மாதங்கள், ஏன்? பல மாதங்களே ஓடின...இதற்கிடையில் பல தோல்விகள், ஒன்றும் செய்ய முடியவில்லை என்னை- தோல்வியால்.

திடிர்னு ஒரு நாள் தோணுச்சுங்க, காலை 9.30 க்கு பேருந்தை பிடிச்சு தி.நகர் என ஒரு பயணச்சீட்டை கேட்டு , தி.நகர்ல இறங்கினேன்.எனது சுயவிவிரம் அடங்கிய தாளை நகல் எடுக்கும் கடையில் கொடுத்து 30 நகல் போடச் சொன்னேன்.

வாங்கிகிட்டு , காலைல 7 மணிக்கு வீடு வீட்டுக்கு பால் போடுகிற பையன் மாதிரி, மென்பொருள் நிறுவனம் மாதிரி தெரிகிற எல்லா நிறுவனத்திற்கும் கொடுத்தேன், சில நிறுவன காவலாளிகள் வாங்கிகிட்டாங்க, சிலர் சொன்னா புரியாதா அப்டின்னு திட்டி அனுப்பினாங்க , சில பேர் கண்முன்னாடியே குப்பைய போடுற மாதிறி உள்ள தூக்கி போட்டாங்க,வலிக்கத்தான் செய்தது.என்ன பண்றதுங்க வாழ வந்தாச்சு, இனி வாழ்ந்து தான் ஆகணும், திரும்பிப்போனா,"அப்பவே சொன்னேன் இருக்குற காசவைச்சு கடை வைச்சு புளைச்சுக்க ,படிக்காத" அப்டின்னு சொன்ன, சொந்தக்காரன் எல்லாம் காரி துப்புவான்ல அப்டின்னு நினைக்கும் போது வலி மறைந்திடும்ங்க. தி.நகர் முழுவதும் சுற்றி எப்படியும் ஒரு 25 நகல விற்றுவிடுவேங்க.

பசிக்க ஆரம்பிச்சுடும் , தள்ளுவண்டி கடைய தேடி தேடி அதிகம் பசிக்க ஆரம்பிசுடும், எப்படியாவது கண்டுபிடிச்சு சாப்பிடும்பொழுது ருசிக்கும்ங்க. நிறையாத பாதி வயித்துக்கு தண்ணீர் தாங்க உணவு.தண்ணீருக்கு அங்க காசு இல்ல, அறை போனதும் படிப்பு, மாலை ஆனதும் அதே கடை,அதே "அண்ணா ஒரு பாதம் பால்"..வாழ்க்கை இனிக்கிறதே அப்பதாங்க..இதற்கிடையில வீட்ல இருந்து தினமும் இரண்டு அழைப்பு அப்பா ,அம்மாகிட்டு இருந்து, நல்லா சாப்பிடு அப்டின்னு , உதட்டலவுல நல்லா சாப்பிடுறேன் அப்டின்னு பொய் சொல்ல வேண்டி இருக்கும் .


இந்த "சுயவிவரம் அடங்கிய நகல்" விற்பனை தொழில் தி,நகரோட நிற்கவில்லை, தினமும் தொடர்ந்தது நுங்கம்பாக்கம் , கோடம்பாக்கம்,சைதாபேட்டை,வேளச்சேரி,
அண்ணாசாலை, திருவான்மியூர், ஆனா பாருங்க இந்த டைடல் பார்க்குக்குள்ள மட்டும் கடைசி வரைக்கும் போக முடியலங்க, பார்த்தாவே துரத்திடுவான், சரி நம்ம கஷ்டம் அவனுக்கு எப்படி தெரியும். இதுல முக்கியமான விசயம் என்னன்னா ஒரு நேர்முகத்தேர்வு அழைப்பு கூட வரல அப்படிங்கறதுதாங்க.ஆனா ஒண்ணு மட்டும் சரியா வந்துச்சுங்க,சென்னைல திருவல்லிகேனிக்கு வர எல்லோருக்கும் கிடைக்கிற, இங்கே தங்க தகுதியானவன் அப்டிங்கற பச்சை அட்டை , அட இன்னும் புரியலைங்களா? அது தாங்க "டைபாய்டு" காய்ச்சல்.

நானும் ஒரு ரூபாய் மாத்திரை எல்லாம் வாங்கி போட்டு பாத்துட்டேங்க, மாலை நேரம் வர வர அதிகமாகிகிட்டே போனதா பார்த்தா எதோ பெரிய காய்ச்சல்னு தெரியும் , இருந்தாலும் சரி ஆகிடாதா அப்டின்னு ஒரு ஆசை தான். தி.நகர்ல ஒரு நேர்முகத்தேர்வு இருந்துச்சுங்க , காலைல காய்ச்சல் அவ்வளவா இருக்காது அதனால் கிளம்பி போய்ட்டேன்.மதியம் 3 மணி வரைக்கும் நிற்க வைச்சுட்டு கடைசியில், 20,000 கட்டனும், நாங்க பயிற்சி தருவோம், அப்புறம் வேலை வாங்கி தருவோம் அப்டின்னு சொல்வாங்க , கண்ணுல தண்ணி வராதுங்க, ஜெய்த்துவிடலாம் இன்னைக்காவது அப்டின்னு உடல்வலியும் தாங்கிக்கிட்டு வந்த மனசுதாங்க வலிக்கும்.

குளிர்காய்ச்சல் அதிகமாகிடுச்சு, கையில் காசும் குறைவா இருக்கிறதால பெரிய தனியார் மருத்துவமணைக்கு போக முடியல, ஒரே வழி தான் , அது நான் என் சொந்தமண்ணை மிதிக்குறது தான் , நண்பர்களிடம் ஒரு தொகைய கடனா வாங்கிகிட்டு, சென்னை புறநகர் பேருந்து நிலையத்தில, சேலம் பேருந்தில் உட்கார்ந்து அழுத அழுகை இன்னும் நான் ஒவ்வொருமுறையும் செல்லும்பொழுது நினைவில் இருக்கும் .

ஜெய்க்க வந்த நான் தோல்வியோட என் சொந்தமண்ணை மிதிக்க வேண்டி வந்தத நினைச்சப்ப தான் ரொம்ப வலிச்சுதுங்க.60 பேரு தூங்கிகிட்டு போற பேருந்துல ஒருத்தன் மட்டும் உறக்கத்தையும்,வலியையும், தோல்வியையும் ,எதிர்பார்ப்பையும், சுமந்துகிட்டு கிளம்பினான்...

நான்காம் பாகம் இணைப்பு இங்கே : -
நான்காம் பாகம்


                                                                                         
                                             

16 comments:

சௌந்தர் said...

இன்னும் வேலை கிடைக்கலையே காத்து இருக்கிறேன் அடுத்த பதிவுக்கு....

விஜய் said...

நன்றி சௌந்தர், இன்னும் கடக்க வேண்டிய தொலைவு அதிகம் இருக்கிறது சௌந்தர், காத்திருங்கள் ....உங்கள் காத்திருப்பிற்கு மிக்க நன்றி சௌந்தர்..............உங்கள் பின்னூட்டதிற்கு நன்றி சௌந்தர்

பட்டாசு said...

என்ன விஜய் இன்னும் மனச வலிக்க விடுவீங்களா?

விஜய் said...

5 சதவிகதம் தான் சொல்லி இருக்கேன் பட்டாசு அவர்களே, இன்னும் நிறையா முட்கள் இருக்கு நான் கடந்து வந்த பாதையில,அததனையும் இல்லைனா கூட கொஞ்சமாவது சொல்லணும்னு ஆசை படுகிறேன் பட்டாசு அவர்களே..

இன்னும் வலி தொடரும் பட்டாசு அவர்களே .... உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

கனிமொழி said...

வலிகள்....
அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்.

Amaithi Virumbi said...

அண்ணா மிகவும் அருமையான பகிர்வு ... நானும் பச்சை அட்டை வாங்கியவன்தான் ... என்னதான் தாய் மொழியின் பெருமை பேசினாலும், சில நேரங்களில் அயல் மொழியின் ஆற்றலும் அவசியமாகிறது.... தொடர்க ...

விஜய் said...

நன்றி கனிமொழி அவர்களே...நிச்சயம் சொல்ல வேண்டிய வலிகள் இருக்கு இன்னமும், நிச்சயம் இன்னும் வரும் ...உங்கள் காத்திருப்புக்கு நன்றி.. உங்கள் பின்னூட்டத்திற்கும் நன்றி....

விஜய் said...

நன்றி அமைதி தம்பி, சென்னை வரும் அணைவரும் நிச்சயம் பச்சை அட்டை வாங்கிவிடுவார்கள் ...அதில் நீயும் நானும் மட்டும் விதிவிலக்கு அல்ல.. மிக்க நன்றி உன் பின்னூட்டதிற்கு ...

Yoganathan.N said...

பாகம் ஒன்றையும் இரண்டையும் படித்தேன். உண்மையிலே மனம் கனத்தது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என ஆவலைத் தூண்டுகிறது. தொடரவும் :)

விஜய் said...

மிக்க நன்றி யோகநாதன் அவர்களே, நிச்சயம் விரைவில் அடுத்த பதிவை வெளி இடுகிறேன்..மிக்க நன்றி உங்கள் பின்னூட்டதிற்கு ..

ஜீவன்பென்னி said...

தொடருங்கள் தொடர்கிறேன்.

விஜய் said...

மிக்க நன்றி ஜீவன்பென்னி அவர்களே, நிச்சயம் விரைவில் அடுத்த பதிவை வெளி இடுகிறேன்..மிக்க நன்றி உங்கள் பின்னூட்டதிற்கு ஜீவன்பென்னி அவர்களே .

veeramanikandan said...

கண்ணீர் துளிகள்...

விஜய் said...

மிக்க நன்றி வீரமணிகண்டன் அவர்களே, நிச்சயம் விரைவில் அடுத்த பதிவை வெளி இடுகிறேன்..மிக்க நன்றி உங்கள் பின்னூட்டதிற்கு வீரமணிகண்டன் அவர்களே .

Jeyanthi said...

அப்ப‌டியே கண்ணு முன்னாடி ந‌ட‌குற‌ மாதிரி இருக்கு விஜ‌ய். நானும் என் வாழ்க்கையில‌ இது எல்லாம் க‌ட‌ந்து வ‌ந்து இருக்கேன். உங்க‌ வ‌லிய‌ என்னால‌ உண‌ர‌ முடியுது. "உளி விழும் க‌ற்கள் வ‌ழி என‌ அழுதால் சிற்ப‌ங்க‌லள் ஆகா" .வ‌லிக‌ள் தாங்கின‌துனால‌ இன்று அழ‌கிய‌ சிற்ப‌மாக‌ இருகிங்க‌. Best wishes :)

விஜய் said...

மிக்க நன்றி ஜெயந்தி அவர்களே,

//"உளி விழும் க‌ற்கள் வ‌ழி என‌ அழுதால் சிற்ப‌ங்க‌லள் ஆகா" .வ‌லிக‌ள் தாங்கின‌துனால‌ இன்று அழ‌கிய‌ சிற்ப‌மாக‌ இருக்குங்க" ‌. //


மிகச் சரியான உண்மைங்க ...
..மிக்க நன்றி உங்கள் பின்னூட்டதிற்கு ஜெயந்தி அவர்களே .

Post a Comment