Thursday, May 20, 2010

இறைவன் நிஜமாய் அங்கில்லை...




இறைவன் எழுதிய கவிதையில் எழுத்துப்பிளைகளாய்
நாங்கள்,இன்னும் திருத்தப்படாமலே வாசிக்கப்பட்டுகொண்டு
இருக்கிறோம்.எங்களை திருத்த மனிதஇறைவன்கள் நீங்கள் போதும்,

சாலையோரம், புகைவண்டி நடைபாதையோரம்,கோவில்
முற்றத்தோரம்,இன்னும் எங்கெல்லாம் மனிதஇறைவன்கள்
நடமாடுகிறார்களோ அங்கெல்லாம் நாங்கள்,

கேட்கவேண்டிய கேள்விகள் ஏராளம்,விடையில்லா இறைவனிடம்

காவல் காப்பதற்கு, காவலர்கள்,
உடல் காப்பதற்கு, மருத்துவர்கள்
.
.
.
பிச்சைஎடுப்பதற்கு, ஊனமுற்ற நாங்களா?


உங்கள் முன் கையேந்தி கோவில்முன் நிற்கும்பொழுது
கண்ணீரோடு சொல்லிக்கொள்ள முயல்வதெல்லாம் ஒன்றே
ஒன்று தான்.......

"இறைவன் நிஜமாய் அங்கில்லை"

மனித இறைவங்களே பிச்சைஇடுவதிற்கு பதிலாய் ,
உங்கள் உதவிக்கரங்களை ஒருமுறை எங்களை நோக்கி
நீட்டுங்கள், நிச்சயம் ஒருநாள்

"எழுந்து நின்று வணக்கம் வைப்போம்"....



                                                                                         
                                             

34 comments:

சௌந்தர் said...

இறைவன் நிஜமாய் அங்கில்லை. உண்மை

movithan said...

நிஜமான உண்மை.
என்னுடைய ரசனை உங்களுடன் அதிகம் ஒத்துப்போகும் என்று நினைக்கிறேன்.

வேண்டுகோள் : உங்களுடைய ipod இணைப்பு அழகாகவே இருக்கின்றது.எனினும் அதை நிறுத்தும் வசதி இல்லாததால் மெதுவான இணைய இணைப்பு உள்ளவர்களுக்கு தடங்கலாக உள்ளது.

Kousalya Raj said...

சொல்லணும் என்பதற்காக சொல்லவில்லை! படமும் அந்த வரிகளும் வலிக்கிறது விஜய்! நாம் வாழும் சமூகத்தில்தான் அவர்களும் வாழ்கிறார்கள் ஒரு திருத்தம் வாழ வழி இன்றி!

உங்களின் பிற கவிதைகளையும் படித்தேன் அம்மாவை பற்றியவை பாசஉணர்ச்சி மிகுந்தவை என்றால் காதலை பற்றியவை காதலர்களின் உணர்வு பரிமாற்றமாக இருக்கிறது! தொடர்ந்து இன்னும் அதிகமாக எதிர்பார்கிறேன்........அன்பு சகோதரி. என்னை தொடர்வதின் மூலம் உங்கள் கவிதைகளை அறிமுகபடுத்தியதுக்கு நன்றி.

அமைதி அப்பா said...

நல்லதொரு சிந்தனையைத் தூண்டும் கவிதை.
உங்களுடைய சிந்தனைக்கு என்னுடைய பாராட்டுக்கள். தொடருங்கள்.
நன்றி.

விஜய் said...

nantri soundar

விஜய் said...

nantri "malgudi" thozalray

விஜய் said...

nantri "kousalya" akka...kandeeppa eluthuraen akka

விஜய் said...

nantri "amaithi appa"....sorry unka name thereiyala

அமைதி அப்பா said...

தம்பி விஜய் ,
'அமைதி அப்பா' என்றே அழைக்கவும்.

விஜய் said...

sari anna "amaithi appa"

Amaithi Virumbi said...

மாற்றுதிறனாளிகளின் மனங்களின் பகிர்வு.... தொடர்க தோழரே ...

விஜய் said...

nantri "Amaithi Virumbi" tholaraey

Asiya Omar said...

விஜய் கவிதை நல்லா இருக்கு,தொடர்ந்து இன்னும் அருமையாக எழுதுங்க.

விஜய் said...

nantri "asiya omar"...sure

Anonymous said...

//கேட்கவேண்டிய கேள்விகள் ஏராளம்,விடையில்லா இறைவனிடம் //
விரக்தியின் விளிம்பில் நிற்கும் வரிகள்..
அருமையான வார்த்தைகள்..

விஜய் said...

nantri "indira" ......

Jayanthy Kumaran said...

Thanks Vijay for visiting 'Tasty Appetite' n for your follow...
You have a very interesting space here...will be visiting often.

விஜய் said...

sure "jay"

Priya said...

நிஜமான வார்த்தைகள்! படமும் கவிதையும் மனதை என்னவோ செய்கிறது!

விஜய் said...

nantri ...priya.......

அ.ஜீவதர்ஷன் said...

மனது இறுக்கமாகிறது.....

கே. பி. ஜனா... said...

மனதை உருக்கும் கவிதை...

பனித்துளி சங்கர் said...

வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஆழமாக பதிக்கிறது பாறைப்பொன்ற இந்த சின்ன மனத்திலும் அருமை . பகிர்வுக்கு நன்றி !

விஜய் said...

nantri jeeva...... :)

விஜய் said...

nantri janaa...... :)

விஜய் said...

nantri sankar.... :) ...nijamaai innum alakaaa elutha try panraen ....

வால்பையன் said...

//இறைவன் நிஜமாய் அங்கில்லை//

இறைவன் நிஜமாய் எங்குமில்லை....

சுப்பு said...

என்னையும் எழுத தூண்டுகிற வரிகள்.

விஜய் said...

நன்றி சுப்பு அவர்களே, நிச்சயம் நீங்களும் இவைகளை பற்றி எழுதணும், அதற்க்கு எனது வாழ்த்துக்கள்...மிக்க நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு சுப்பு அவர்களே

vasan said...

இறைவ‌ன் நிச்ச‌ய‌மாய் அங்கில்லை, இங்கிமில்லை,
ஆனால் எங்குமிருப்ப‌தாய்..ப‌ர‌வ‌லாய் ப‌ல‌ர் சொல்லி.

விஜய் said...

உண்மை தான் வாசன் அவர்களே, இரக்க குணமும், உதவி செய்வோரும் தான் கடவுள்கள் என நம்ம என்னவேண்டும் ,அதுவே உண்மையும் கூட ...மிக்க நன்றி உங்கள் பின்னூட்டதிற்கு வாசன் அவர்களே....

Shiva sky said...
This comment has been removed by a blog administrator.
விஜய் said...

மிக்க நன்றி அவர்களே,நீங்க யாருன்னு தெரியல, ஆனா என் எல்லா படைப்புக்கும் ஒரு அழகான அங்கீகாரம் கொடுக்குறீங்க , ரொம்ப நன்றிங்க ,அடுத்த முறை பின்னூட்டம் அளிக்கும் போது உங்கள் பெயரை குறிப்பிடலாமே விருப்பபட்டால்....நன்றி

விஜய் said...

மிக்க நன்றி 'C' அவர்களே,நீங்க யாருன்னு தெரியல, ஆனா என் எல்லா படைப்புக்கும் ஒரு அழகான அங்கீகாரம் கொடுக்குறீங்க , ரொம்ப நன்றிங்க ,அடுத்த முறை பின்னூட்டம் அளிக்கும் போது உங்கள் பெயரை குறிப்பிடலாமே விருப்பபட்டால்....நன்றி 'C' அவர்களே

Post a Comment