Friday, March 26, 2010

என் டையரியின் நேற்றைய பக்கம்....






இன்று மாலை நீயும் நானும் மழையில் துள்ளி குதித்து விளையாடினோம் ,
இரவு உண்ணும்போது உன்னிடம் கேட்டேன்,


நான் சிறுவயதில் மழையில் நனைந்து விளையாடும் போதெல்லாம் ,
மழையில் நனையாதே என்பாய், நானோ கோபமாய் திரும்பி பார்த்துவிட்டு
"போடி உன் வேலையை பார்" என்பேன்.
அழுதுகொண்டே ஓடிபோய் விடுவாய், திரும்பி வரமாட்டாய் என்று நினைப்பேன்,
நீயோ உன் அம்மாவிடம் திட்டு வாங்கிக்கொண்டே புதிதாய் வாங்கி வைத்திருக்கும் சேலையை எடுத்து வருவாய்,

எதற்காக என்ற கேள்விகுறியோடு பார்க்கும் என்னிடம் சொல்லாமல் சொல்வாய்,
நீ நனையாமல் இருக்க உன் தலைக்கு மேல் குடைபோல் பிடிக்க என்று,
குதித்து விளையாடும் போது இடையுறாய் வருகிறாய் என்று அடித்து விடுவேன் உன்னை.
பாவமாய், அழுதுகொண்டே மீண்டும் பிடிப்பாய் சேலையை குடைபோல் ..

இன்று நீயே என் மனைவியாய், இன்று மழையில் நனையும்போது ஏன் குடைபிடிக்கவில்லை என்றேன்?.

நீ மழையில் விளையாடிமுடித்து வீடு சென்றதும், நீ கத்தி அழும் சத்தம் கேட்கும், உன் அம்மாவிடம் அடிவாங்கி கொண்டு பாவமாய் உட்கார்ந்து இருப்பாய், உன் விழிநீர்-மழைநீரோடு கலந்து ஓடிக்கொண்டு இருக்கும்,
"காய்ச்சல் வந்தா யார்பாத்துகிறது உன்னை?" என்று, உன் அம்மா உன்னை திட்டும்பொழுதெல்லாம், நான் இருக்கிறேன் என்று கத்தி சொல்லத்தோன்றும்,
நிஜமாய் ஒருவேளை அது காதலாய் இருக்கலாம், தெரியவில்லை, எனக்கு தெரிந்ததெல்லாம் நீ அழகூடாது, சிரித்துகொண்டு இருக்கவேண்டும் என்பது மட்டுமே...

இன்று நீயே என்னுடையவனாய், உன் சிரிப்பை அருகிலிருந்து ரசிக்கிறேன் என்றாய் .

வார்த்தை பேசாமல் முத்தங்களை உன் நேசத்திற்கு பரிசாய் தந்துவிட்டு, உன் மடியில் படுத்து உறங்கிப்போனேன் ,

இன்னும் ஈரமாய் உன் நேசம், என் உடல்முழுவதும் ...



அன்புடன் உன் விஜி
24-பிப்-2010
                                                                                         
                                                                                         

6 comments:

Unknown said...

இன்னும் அழகான உவமைகள் சேர்த்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும்

மதுரை சரவணன் said...

கத்தலாம் போல் தோன்றும்...ஆம் இப்படிக்கவிதை படிக்கும் போது ...அருமை. வாழ்த்துக்கள்

Manibharathi M Kumar said...

ayyo!!!!
awesome dude

விஜய் said...

நன்றி மதுரை சரவணன் அவர்களே , உங்களின் வாழ்த்துக்கள் தான் எங்களை மீண்டும் எழுத தூண்டும் ...மிக்க நன்றி உங்கள் கருத்துகளுக்கு ..........

விஜய் said...

நன்றி சிவசங்கர் ..மிக்க நன்றி உங்கள் கருத்துகளுக்கு ..........

விஜய் said...

நன்றி மணி பாரதி ..மிக்க நன்றி உங்கள் கருத்துகளுக்கு ..........

Post a Comment