Tuesday, November 20, 2012

மொழியில்லா உணர்வுகள்...


 


மொழி கண்டறியப்படா சத்தங்களுக்கு இங்கே வெறும் உணர்வுகளை மட்டும் வைத்து எழுத்தாய் உதிர்த்திருக்கிறேன் - விஜய்

%&*^$&^*(**^%@#$@#$#$@#$$#%$#%$# !@$%^*)^%^&^@%#$!&%^(*)(_(*(^&#%@##$!$@^%^*(&*)&)FG*^&#%@#>^(^(*(^(^( %&*^$&^*(**^%@#$@#$#$@#$$#%$#%$# !@$%^*)^%^&^@%#$!&%^(*)(_(*(^&#%@##$!$@^%^*(&*)&)FG*^&#%@#>^(^(*(^(^( %&*^$&^*(**^%@#$@#$#$@#$$#%$#%$# !@$%^*)^%^&^@%#$!&%^(*)(_(*(^&#%@##$!$@^%^*(&*)&)FG*^&#%@#>^(^(*(^(^( %&*^$&^*(**^%@#$@#$#$@#$$#%$#%$# !@$%^*)^%^&^@%#$!&%^(*)(_(*(^&#%@##$!$@^%^*(&*)&)FG*^&#%@#>^(^(*(^(^(
- 15-Nov-2012, 11.05 pm - மொழி தெரியா உயிர்


என்னைப்பற்றி சொல்வதற்கு முன் நான் இருக்கும் நிலையை கூறியே ஆகவேண்டும்.நிஜமாய் முற்றிலும் புதிய சூழல்,எல்லைகள் வகுத்து ஒடுக்கிவைக்கப்பட்டு இருந்த நான் இப்பொழுது எல்லைகளற்று விரிந்துவிடப்பட்டு இருக்கிறேன்,மிகவும் பத்திரமாய் இருப்பதாய் நினைத்து பெருமைப்பட்ட மிக நீண்ட மாதங்களை ஓரிரு நிமிடத்தில் உடைத்தெறிந்து பிரிக்கப்பட்டு இருக்கிறேன் இப்பொழுது,மெல்லிய காற்றும் கூட என்னை காயப்படுத்தும் நிலையில் இருக்கிறேன்.


பேசத்தேவையில்லை,அழத்தேவையில்லை என் தேவைகளுக்காய் எப்பொழுதும் என எண்ணிய நிமிடங்களுக்காய் இப்பொழுது வெட்கி தலைகுனிகிறேன்.


சற்று நேரத்திற்கு முன்பு தான் இவைகள் நடந்தன,சுதந்திரம்,காற்றும் கூட என் தேகத்தை கிழிக்க ஆரம்பிக்கும் நிகழ்வுகள்,என் தேவைகளுக்காய் அழுதே ஆகவேண்டிய கட்டாய சூழல்கள்,ஒரே சத்தம் மட்டும் என்னுள் விழும் தருணங்கள் கடந்து ஆயிரம் சத்தங்கள் என்னைதொடும் தருணங்கள்.என்னை சுற்றி ஒவ்வொன்றாய் உருவங்கள் தோன்றி மறைகின்றன, ஒவ்வொரு உருவங்களும் சரிவர தெரியாமல் திணறும் என் கண்ணருகே வந்து வந்து மறைகின்றன.


இதுவரை பத்திரமாய் பாதுகாத்து வைக்கப்பட்டு இருந்த இடம் எங்கே? என்ற கேள்விகளை எண்ணத்தொடங்கும் நிமிடத்தில் இவைகள் அரங்கேறின.சற்று நிமிடத்தில் என்னருகே இன்னொரு உருவம் கிடத்திவைக்கப்பட்டிருந்தது. கண்களை சுழற்றி காண முயற்சி செய்யும் முன்பே அறிந்துகொண்டேன்,நான் தேடிய இடமும்,என்னை தாங்கிய உயிரின் அதே சுவாச வாசம் அறிந்துகொள்ள முடிகிறது சந்தேகம் இல்லாமல்,உணர்ந்த அந்த நொடியில் என் முதன்மை உயிரிடம் என் அசௌகரியங்களை எடுத்துவைக்கிறேன் என் அழுகையால்,அடுத்த நிமிடம் என் மீது கரங்களை வைத்து "சரி சரி செல்லம் ஒன்னும் இல்ல அம்மா நான் இருக்கிறேன்" என்ற வார்த்தைகளும் உணர்வுகளும் என்மீது விழுந்து என்னை பாதுகாக்கின்றன.


இப்பொழுது என் முதன்மை உயிருக்கு பெயரும் வைத்துக்கொண்டேன் "அம்மா" என்று.எனக்கும் என் அம்மாவுக்குமான உணர்வு பரிமாற்றங்கள் நிகழும் இத்தருணத்தில் சில நூறு உருவங்கள் மறைந்தும், தோன்றியும் இருந்தன, என் இன்னுமொரு பக்கம் இன்னுமொரு உருவம் மறையாமல் அப்படியே என் பிம்பத்தில் இருந்து விலகாமல் இருந்தது,அவ்வப்பொழுது என்னை உற்று தொட்டுக்கொண்டே இருந்தது, ஒவ்வொரு தொடுதலும் அழுத்தமாய்.அழுத்தம் ஒவ்வொன்றும் என்னுள் அசௌகரியத்தை ஏற்படுத்துவதை என் அம்மாவிடம் அழுகையில் தெரிவிக்கிறேன்.


என் மீது விழும் விரலை தட்டிவிட்டுகொண்டிருக்கிறேன்.அனைத்து உருவங்களும் மறைந்து சௌகரியம் ஏற்படுத்திய போதும் மறையா அதே உருவத்தால் என் அழுகையின் சத்தத்தை அதிகப்படுத்துகிறேன்.இப்பொழுது விரல் விழும் நிகழ்வு நடக்கவில்லை.மெதுவாய் அழுகையை நிறுத்துகிறேன்,இப்பொழுது என்னை சுற்றி அதே உருவம் மட்டும் மறையாமல் ஓரமாய்.


சில நிமிடங்களில் என் அம்மா அறிமுகப்படுத்துகிறாள் "அப்பா பாரு,அப்பா பாரு ,உன் அப்பா பாரு...உன் அப்பா செல்லம்,இனி என்ன வேணும்னாலும் அப்பாகிட்ட கேளு,வாங்கித்தருவார்,நமக்கு எல்லாம் அவர் தான்.அப்பா பாரு, அப்பா பாரு" என என் அம்மா கூறிய அடுத்த நிமிடமே வெட்கிபோய்விட்டேன். மன்னித்துவிட சொல்லி அழுகிறேன், அழத்தொடங்கிய அடுத்த நிமிடமே அதே விரல் மீண்டும் தொட்டது என்னை, அழக்கூடாது செல்லம், பயப்படாதே அப்பா இருக்கிறேன் உன்னோடு என்று கூறிக்கொண்டே.


இருந்த போதிலும் அழ ஆரம்பித்தேன் என் மீது விழும் அந்த விரலை கெட்டியாக பிடித்துக்கொள்ள எப்பொழுதும் இனி...
 - 15-Nov-2012, 11.05 pm - மொழி தெரியா உயிர்


2 comments:

Kousalya Raj said...

அப்பொழுதே பிறந்த உயிர் ஒன்று, தனது உணர்வுகளை வெளிபடுத்தினால் (பேசினால்) இப்படிதான் பேசி இருக்குமோ ?!!


தந்தை தன்னை சற்று குழந்தையின் நிலையில் வைத்து அந்த உணர்வை எழுத்தாக்கிய விதம், நெகிழ்ந்து விட்டேன் விஜய் !!

என் அன்பான வாழ்த்துக்கள் !!

Balaji M said...

மிக அழகான எழுத்தாக்கம்

Post a Comment