Monday, June 21, 2010
காதலியை கள்ளத்தனமாய் சந்தித்த சந்தோஷத்தில்...
வயது 26 ஐ தொட்டுவிட்டு அடுத்து நகர ஆரம்பித்துவிட்டது,
இன்னும் ஒவ்வொரு மழை தூறும் மாலை பொழுதையும்,
கைகளை நான் மட்டுமே இருக்க கட்டிக்கொண்டு ரசித்து கொண்டு செல்கிறேன்..
என் கரங்களை இன்னொரு கரம் பற்றிக்கொண்டு நடக்க விரும்பவில்லை,
மழையின் வாசத்தையும், தீண்டலையும், விலகளையும் நான் மட்டும் ரசிக்க வேண்டும் என்ற சுயநலமாய் இருக்கலாம்,
என் உணர்வுகளை புரிந்து கொள்ளாத கரமாய் இருந்துவிட்டால் என்ற அச்சமாய் இருக்கலாம்,
இலக்கு இல்லாத பயணத்திற்கு எதற்கு இன்னொரு கரம், இருக்க
கட்டிக்கொண்டு செல்வதே மேல் என்ற என்னமாய் இருக்கலாம்,
சரி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், என் உடல் தீண்ட முயற்சிக்கும் மழை துளிக்கு வழிவிட முயற்சிக்கிறேன்,
"மழையில் நனையாதே" என்று திட்ட அம்மா அருகே இல்லை, "நீ பைத்தியகாரனா மழையில் நனையற" என்று திட்ட நண்பன் அருகே இல்லை, ஓடி வந்து குடைபிடிக்க காதலி இல்லை,
நான் அர்த்தமற்றவனா என்ற ஆராய்ச்சிக்கான நேரம் அல்ல, அதிர்ஷ்டக்காரன் என்று மழை இதழ் முததமிடும் நேரம்,
மலை இடுக்குகளில்,சரிவான பாதைகளில் ஓடி, விழும் துளிகளை என் மீது வாங்கிகொள்ளும் முயற்சியில் தோற்கவில்லை நான்,
தேகம் தீண்ட வாடும் மழைதுளிக்கு தடைவிதிப்பதில்லை, உடைகளை களைகிறேன் என் நெற்றியில் விழுந்து,என் பாதத்தில் மரிக்க..
என் உடல் மறுக்கும் வரை மழைதுளியை என் தேகம் தீண்ட அனுமதிக்கிறேன்,
மறுத்த நொடியில் என் தேகம் சுருக்கி, பாறை இடுக்குகளில் பதுங்கி கொள்கிறேன்.
தீண்டலில் தாகம் அடங்கிய என் உடல், பார்வையில் காதல் கொள்கிறது, நடுக்கத்துடன் கண்ணிமைக்காமல் காதல் கொள்கிறேன், ரசிக்கிறேன் ஒவ்வொரு துளியையும்.
என் உடலை பிரிய மறுக்கும் ஈரத்தை இருக்கமாய் கட்டியணைத்து,என் சுவாசத்தின் வெப்பம் பாறை இடுக்குகளை பற்றி எரிய செய்கிறேன்,என் கண்கள் மரணிக்க முயற்சித்து, வெற்றியும் பெறுகின்றன. எனக்கும் மழைக்குமான காதல் மறித்து மௌனம் பரவத்தொடங்க, மழையும் நின்று, என்னிடம் தோற்றுப்போனதை ஒப்புக்கொள்கிறது,
காலை கண்விழித்ததும் அவசர அவசரமாய் வீடு வந்துசேர்கிறேன் , என் காதலியை கள்ளத்தனமாய் சந்தித்த சந்தோஷத்தில்...
 
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
படங்கள் அருமை.
நயமான சிந்தனை பாராட்டுக்கள்.
மிக்க நன்றி சி. கருணாகரசு அவர்களே.....என் எழுத்துக்கள் நல்ல அங்கீகாரம் பெறுவதை உங்களை போன்றோரின் ஊக்கமிகு கருத்துக்களில் இருந்து அறிய முடிகிறது , மிக்க நன்றி சி. கருணாகரசு அவர்களே உங்கள் பின்னூட்டத்திற்கு ..
என் கரங்களை இன்னொரு கரம் பற்றிக்கொண்டு நடக்க விரும்பவில்லை என் உணர்வுகளை புரிந்து கொள்ளாத கரமாய் இருந்துவிட்டால் என்ற அச்சமாய் இருக்கலாம்//
அனைவருக்கும் இருக்கும் அச்சம் நண்பா
wonderful thala
மிக்க நன்றி சௌந்தர்....எல்லோருக்கும் உள்ள பயம் தான இது ...நான் மட்டும் தான் நினைச்சேன், நிறையா பேரு இருக்காங்க போல ...ரொம்ப சந்தோசங்க .. :)
மிக்க நன்றி கார்த்திக் ....என்னுடைய எல்லா பதிவையும் படிக்கறீங்க போல...ரொம்ப நன்றி கார்த்தி, மீண்டும் வருக ...நன்றி பின்னூட்டத்திற்கு கார்த்தி
சூப்பர்
மிக்க நன்றி அன்பரசன் அவர்களே ...., மீண்டும் வருக ...நன்றி பின்னூட்டத்திற்கு அன்பரசன் அவர்களே
:) Nice..
மிக்க நன்றி கனிமொழி அவர்களே .....ரொம்ப நன்றி கனிமொழி அவர்களே , மீண்டும் வருக ..நன்றி பின்னூட்டத்திற்கு கனிமொழி அவர்களே
அழகிய படங்களுடன் அருமையான சிந்தனைகள். தொடர்ந்து எழுதுங்கள் விஜய் வாழ்த்துக்கள்..
மிக்க நன்றிங்க மலிக்கா அவர்களே... உங்களுடைய மதிப்புள்ள கருத்துக்களுக்கு மிக்க நன்றி..மீண்டும் வருக. நிச்சயம் இன்னும் அழகான படைப்புகளை தருவேன் ..மிக்க நன்றி உங்க பின்னூட்டதிற்கு மலிக்கா அவர்களே
விஜய் இது எல்லோருக்கும் இருக்குற பயம்தான் போல, எனக்கும் இருக்கு.
மிக அழகான வார்த்தைகள் - அதற்கு ஏற்ற படங்கள். உங்கள் பதிவுகளை ரசித்து வருகிறேன்.
இப்பவே எண்ணிக்கை 3 தொட்டுடுச்சு ஜீவன்பென்னி அவர்களே..நிறையா பேர் இருக்காங்க போல , பார்ப்போம் இன்னும் எத்தனை பேரு நம்ம சங்கத்துல சேருறாங்க அப்டின்னு ... :) ...
மிக்க நன்றிங்க கார்த்திக் ... என்னுடைய பதிவுகளை தவறாமல் ரசித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு மிக்க நன்றி கார்த்திக் ..மீண்டும் வருக. நிச்சயம் இன்னும் அழகான படைப்புகளை தருவேன் ..மிக்க நன்றி உங்க பின்னூட்டதிற்கு கார்த்திக் ....
விஜய்,
அற்புதமான அந்தரங்க அரங்கேற்றம்.
சரி, இரு காதலிகளுக்கிடையே இருந்திருக்கிறீர்களா?
.............................................
மலையில், மழையில்....
மிக்க நன்றி வாசன் அவர்களே, :) ....இன்னும் இருந்தது இல்லை
இப்படி இருக்கணும்னு ஆசை , ஆசையை தான் இப்படி எழுதி இருக்கிறேன்... :) .... என்னுடைய எல்லா பதிவிற்கும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதிற்கு மிக்க மிக்க மிக்க நன்றி வாசன் அவர்களே, நன்றி மீண்டும் வாருங்கள் வாசன் அவர்களே
உயிர்த்துடிப்பிலிரிந்து தெறித்து விழுந்திருக்கும் அருமையான ஒரு கவிதை நடை கட்டுரை...! தம்பி சூப்பர்பா...! வாழ்த்துக்கள்!
வணக்கம் ...........வாழ்க்கை வலி இன்னும் வாசிகக் வில்லி. இன்று தான் உங்கள் தளம் கண்டேன். வாசித்தபின் கருது எழுதுவேன். நட்புடன் நிலா அக்கா. இந்த தளத்திலும் வந்துபோங்கள். mathinilaa.blogspot.com
அண்ணா எல்லாம் உங்ககிட்டு இருந்து கத்துகிட்டது தான் அண்ணா, எழுத்துன்னா உயிரோட்டம் இருக்கணும் அப்டின்னு நான் புரிஞ்சுகிட்டதே உங்ககிட்ட இருந்து தான் அண்ணா ...மிக்க நன்றிங்க அண்ணா உங்கள் பின்னூட்டத்திற்கு
மிக்க நன்றிங்க நிலாமதி அக்கா.....
Post a Comment