
இரவு- கண்விழிக்கும் முன்பே கோணிப்பையை எடுத்துக்கொண்டு, நீங்கள் போதையிலும், யார்மேலையோ இருக்கும்கோபத்திலும்,பணம் அதிகம் இருக்கிறது என்ற பகட்டிலும் வேண்டாம் என்று தூக்கி எறியப்பட்ட உணவிலும், பொருளிலும், என் பசியை ருசிக்க செய்யும் ஆதாயம் தேடுபவன் நான்.
காலை- கண்விழிக்கும் பொழுது பல தெருக்களை கடந்து இருப்பேன்,சிறுவர்கள் நிறைந்த அந்ததெருக்களை கடக்கும் பொழுதுதான் நானும் சிறுவன் என்பது புரியும் எனக்கு, அங்கே அந்த சிறுவர்கள் ஹட்ச் டாக் உடன் நடந்து செல்வார்கள், காலைச்சுற்றிக்கொண்டு ஓடும் அழகை காண வேண்டும் என்பதற்காக தினந்தோறும் சரியாக அந்த தெரிவிற்கு சென்றுவிடுவேன்.
தெருக்களின் விளம்பரபலகைகளிலும், உயர்ந்த கடைகளின் தொலைகாட்சிகளில் காணும்போதும் ஆசை அதிகமாகியது, என்னோடு குப்பைப்பொறுக்கும் ரவி சொன்னான் அதன் விலை நாம் வருடம் முழுவதும் குப்பைப்ப்பொறிக்கினால் கூட அதனை அடைய முடியாது என்று,
என் எலும்பு, சதைகளின் மொத்த எடைகளை விட ,அதிகம் கணக்கும் குப்பைகளை சுமந்த பொழுது கூட இந்த வலி இல்லை எனக்கு , அவன் அடைய முடியாது என்று சொன்ன பொழுது இருந்த வலியை இன்னும் எத்தனை நாள் என் கோணிப்பையோடு சேர்த்து சுமப்பேன் என்று தெரியவில்லை அந்த நேரத்தில் .
அன்று ரவி வேகமாய் ஓடி வந்து என்னை இழுத்துச்சென்று புதரைக்காட்டினான்,7அழகான நாய்குட்டிகள்,ஹட்ச் டாக் கனவு விடிந்துவிட்டது தெருஓர நாய்குட்டியால்,அதிலிருந்து ஒன்றை கையில் எடுத்துக்கொண்ட
அப்பொழுதே எனக்கு ரவிக்கும் ஒரு ஒப்பந்தம் , இனி நீ பொறுக்கும் அணைத்து பால் உரைகளும் எனக்கு வந்தாக வேண்டும் என்று ,அதில் மிச்சம் ஒட்டிக்கொண்டு இருக்கும் பால் தான் இதற்கு உணவு என்பதை சீக்கிரம் புரிந்துகொண்ட ரவியும் சரி என்று தலை ஆட்டினான்....
சாப்பிடுவதும்,தூங்குவதும்,கண்விளிப்பதும், விளையாடுவதும், சண்டையிடுவதும், பாசம் காட்டுவதும், முத்தங்கள் கொடுப்பதும், இப்படி நாட்கள் நகர்ந்தன, சீக்கிரம் பெரியவனாக வேண்டினேன் அப்பொழுது தானே அந்த தெரு சிறுவர்களிடம் எனது ஹட்ச் டாக்கை காட்ட முடியும்,
சீக்கிரமாய் வளர்ந்தான், அன்று என்னோடு சேர்ந்து ஏழைகள் ஏழைகளாகவே, பணக்காரர்கள் பணத்திமிரோடும் இருக்கும் வீதிகளை என்னோடு சேர்ந்து சுற்றிக்கொண்டு இருந்தான் , வேகமாய் அந்த தெருவை அடைந்தேன், குறுக்கும் நெருக்குமாய் என்னுடைய ஹட்ச் டாக்கை பாருங்கள் என்று சொல்லாமல் சொல்லிக்காட்டிக்கொண்டு இருந்தேன்.
அந்த நொடிகளில் என் கோணிப்பையை வைத்துவிட்டு குட்டிக்கரணம் போட்டேன்.சந்தோஷத்தில் கலைத்து வீடு திரும்பியது அன்று தான் முதல் முறை.
நேற்று என்னோடு வர மறுத்த என் ஹட்ச் டாக்கை பார்த்தேன்,என்ன ஆகிற்று என்று தெரியவில்லை படுத்தேகிடந்தது, எழுப்ப முயற்சிக்கிறேன்,கண்களை எறும்புகள் மொய்த்துகொண்டு இருந்ததை பார்த்து, கண்ணீரோடு எறும்புகள்தான் தான் காரணம் என்று கோபத்தில் எறும்புகள் அணைத்தையும் வெறியுடன் கொன்று தீர்த்த எனக்கு, என்னைப்போல் என் ஹட்ச் டக்கால் இரவுப்பசியை தாங்கிக்கொண்டு இருக்க முடியாது என்று தெரியவில்லை. முதல் முறையாக நானும் வேண்டாம் என்று தூக்கி எறிந்தேன் எனக்கு பிடித்த என் ஹட்ச் டாக்கை,என் மனசுல வைச்சுக்கிட்டு..
இப்ப எல்லாம் அந்த தெருப்பக்கம் போறது இல்ல,
36 comments:
ஏன்யா இப்படி மனச கொடயறீங்க!
நன்றி பட்டாசு அவர்களே , கஷ்டப்படுற மக்களோட இன்னொரு பக்கத்தை இந்த மக்களுக்கு காட்டணும்னு ஆசை, அதான் இந்த முயற்சி...நன்றி தோழரே
இன்னும் எத்தனை வலி இருக்கிறதோ...
நன்றி சௌந்தர் அவர்களே, வலிகள் ஆயிரம் , சொல்லத்தான் ஆட்கள் அதிகம் இல்லை..
:(
சொல்வதற்க்கு ஆட்கள் இருக்கிறார்கள் கேட்பதற்கு தான் ஆட்கள் இல்லை ...
நன்றி பிரசன்னா, ......உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி
நன்றி பிரின்ஸ் அவர்களே , நீங்கள் சொல்வதும் ஒரு வகையில் உண்மை தான் ......உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி
:(
Nallah ezhuthi irukkeenga.
நன்றி ஜீவன் பென்னி அவர்களே, உங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி, இன்னும் அழகாக எழுத தோன்றும் உங்களை போன்றோர் பதிவு செய்யும் கருத்துக்கள் .மிக்க நன்றி
Valikkuthu nanba ... Neenga sonnamaathiri vali sollravanga konjam kuraivuthaan
நன்றி கார்த்திக், நிச்சயம் இன்னும் என்னால் முடிந்த அளவிற்கு இந்த உலகத்திற்கு உரக்கச்சொல்வேன், மிக்க நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு தோழரே..
mansu valikuthunga.....
By,
Nithi
நன்றி நித்தியானந்தன் அவர்களே, உங்களை போன்றோரின் கருத்துக்கள் தான் எங்களுக்கு உற்சாகத்தை கொடுக்கிறது...மிக்க நன்றி
வேதனையை வேதனையோடு!
எழுதி இருக்கிறாய் தம்பி!
படித்து முடித்த உடன் அந்த வேதனையை உணர்ந்தேன்.
நன்றி மகாராஜன் அவர்களே, கடைசி தர மக்களின் வாழ்க்கை தரத்தை சொல்லனும்னு ஆசை, அதன் விளைவு தான் இவைகள் அண்ணா ....மிக்க நன்றி அண்ணா உங்கள் கருத்திற்கு ...
arumai
நன்றி LK அவர்களே, உங்களை போன்றோரின் கருத்துக்கள் தான் எங்களுக்கு உற்சாகத்தை கொடுக்கிறது...மிக்க நன்றி
ஏழ்மையை நன்றாக படம் பிடித்துக் காட்டிவிட்டீர்கள். நானும் அந்த சிறுவனுடன் நடந்து சென்றதாக உணர்ந்தேன்.
அவசியம் தாங்கள் தொடர்ந்து இதுபோன்று எழுதவேண்டும்.
நான் தொடர்ந்து தங்களின் எல்லா பதிவுகளையும் படித்து வருகிறேன், நேரமின்மை காரணமாக பின்னூட்டமிட முடியவில்லை.தாங்கள் எழுதுகிற அனைத்துமே சிறப்பாகத்தான் உள்ளது.
நன்றி.
Vithyaasama space ,romba nalla eruku ....Thanx for following me ...
மிக்க நன்றிங்க அப்பா... நிஜமாய் உங்களை போன்றோர்களின் ஊக்கம் எனக்கு பெரும் உற்சாகத்தை அளிக்கிறது.இன்னும் சிறப்பாக எழுத தோன்றுகிறது ...நிச்சயம் இன்னும் மறைந்து கிடக்கிற வலிகளை உலகிற்கு உணர்த்துவேன் ..மீண்டும் ஒருமுறை நன்றி அப்பா உங்கள் பின்னூட்டதிற்கு ..
மிக்க நன்றிங்க பிரியா .மீண்டும் ஒருமுறை நன்றி உங்கள் பின்னூட்டதிற்கு ..
very good vijy fine
V.Ramachandran
Singapore
மிக்க நன்றி இராமச்சந்திரன் அவர்களே..உங்களது ஊக்கத்திற்கு மிக்க நன்றி மீண்டும் ஒருமுறை ...
நல்லா இருக்கு
நன்றி சுப்பு அவர்களே , உங்களை போன்றோரின் ஊக்கம் எங்களுக்கு எப்பவும் தேவை .... மிக்க நன்றி உன் பின்னூட்டதிற்கு ...
மிகவும் அனுபவித்து எழுதுகிறீர்கள் என்பது மட்டும் தெரிகிறது. மனதில் ஒரு பரிதாப உணர்ச்சியை ஏற்படுத்தியது. :(
நன்றி யோகநாதன் அவர்களே , கண்டிப்பாக நீங்கள் சொல்வது சரி தான் , தினமும் பார்க்கும் முகங்களை எப்படி மறப்பது?, அவற்றை பிரதிபலிக்க இந்த பதிவுகளை உபயோகிக்கிறேன் .உங்கள் பின்னூட்டதிற்கு நன்றி யோகநாதன் அவர்களே
romba nala iruku thala...
நன்றி கார்த்திக் .., .உங்கள் பின்னூட்டதிற்கு மிக்க நன்றி கார்த்திக்.
keep rocking vijay........
நன்றி C. நிச்சயம் இன்னும் அழகாய் எழுத முயற்சிக்கிறேன் .உங்கள் பின்னூட்டதிற்கு மிக்க நன்றி C.
அழகான பதிவு என்பதை விட ஆழமான பதிவு... நெஞ்சை தொட்டது நண்பரே... வாழ்த்துக்கள்...
நன்றி கவிநா,உங்களை போன்றோரின் ஊக்கம் எங்களுக்கு எப்பவும் தேவை .... மிக்க நன்றி கவிநா உங்கள் பின்னூட்டதிற்கு
romba romba alavaikira pa.
மிக்க நன்றி kiruthika
உங்கள் உள்ளம் தொடும் அளவிற்கு என் பதிவு அமைந்துள்ளதா என்று தெரியவில்லை, இல்லை என்றால் அடுத்த முறை நிச்சயம் இனியொரு நன் பதிவை தர முயற்சிக்குரேன் ...
மிக்க நன்றி kiruthika உங்கள் வாழ்த்திற்கும், உங்கள் பின்னூட்டத்திற்கும்..
Post a Comment