Thursday, June 10, 2010
வாருங்கள், வதம் செய்தே தீர வேண்டும் --- நிறைவுப்பாகம்
நன்றிங்க நிறைவுப்பாகத்தை படிக்க வந்ததிற்கு...
முதல் பாகம் இணைப்பு இங்கே : -
முதல் பாகம்
மூன்றாம் காரணம்-- ஊடகங்கள், செய்தித்தாள்கள், திரைப்படைதுறைகள் - இந்த ஊடகங்கள் மக்களுக்கு இப்பொழுது என்ன ஊட்டிக்கொண்டு இருக்கிறது?,
தொடர்கள் (கள்ளக்காதல், ஒருத்தன் மனைவிமீது இன்னொருவன் ஆசைப்படுவது, போட்டி போட்டு ஒரு இளைஞனை பல பெண்கள் காதலிப்பது, ஜூம் மந்திர காலி மாதிரி வித்தை காட்டுவது, என்னும் எத்தனையோ அசிங்கங்களை விளம்பரத்தோடு காட்டுவது),
செய்திகள் (சாமியார்கள் செய்த தவற்றை வினாடிக்கு ஒருமுறை விளம்பரபடுத்தி, நமது வீட்டிற்குல்லையே வந்து சிறுகுழந்தைகளின் மனதில் விஷமத்தை வளர்ப்பது).
நடன போட்டிகள் (சிறு பிஞ்சு குழந்தைகளுக்கு திரைப்படத்துறை மட்டும் தான் வாழ்க்கை என்று பிஞ்சு நெஞ்சில் விஷம் ஊட்டுவது,தொடர் நயாகிகள் கொஞ்சமும் வெட்கப்படாமல் மேடைகளில் தன் அங்கங்களை காட்டியும்,அழுதும், அதற்கும் சேர்த்து மறைமுகமாக பணத்தை வாரிக்கொண்டு செல்வது).
விருது வழங்கும் விழாக்கள் (கதையே இல்லாத படத்திற்கு ,கதை இருக்கிறது , அங்கே சிரிக்க வைத்து இருக்கிறோம்,இங்கே அழ வைத்து இருக்கிறோம், லண்டனில் பாடல்களை ஒளிப்பதிவு செய்து இருக்கிறோம்,மயிர்கூச்செறியும் சண்டைகளை படமாக்கி இருக்கிறோம், முக்கியமாக இப்பட நாயகனையும், நாயகியையும் சிரமப்பட்டு நடிக்க வைத்து இருக்கிறோம், கடைசியாக படத்தை பார்க்கவைத்து உங்களையும் முட்டாள் ஆக்க இருக்கிறோம் என்று சொல்லாமல் சொல்லி , தனக்கு தானே விருதும் வழங்கிக்கொள்கிறார்கள் , இவற்றை அணைத்தையும் நொடிக்கொரு முறை விளம்பரம் செய்து பணமீட்டுகிறார்கள் இந்த பாழாய் போன ஊடங்களை சேர்ந்தவர்கள்.)
திரைப்படைதுறைகள்-- 2 ரிப்பன்களை மட்டும் உடைகளாய் கட்டிக்கொண்டு 5 பாடல்களுக்கு ஆடுவது, ஒரே அடியில் உயர பறக்க வைப்பது, படிப்பதை விட்டுவிட்டு எப்படி தறுதலையாய் சுற்றுவது, காதலிப்பது, இப்படி அர்த்தமற்ற படங்களை இயக்கிவிட்டு நானும் பெரிய இயக்குனர் என்று விழா எடுத்து கொள்வது, இப்படி அல்லவா செல்கிறது இந்திய திரைப்படத்துறை, சில நல்ல கருத்துகளை சொல்கின்ற படங்கள் ஒன்றிரண்டு வரத்தான் செய்கின்றன. திரைப்படத்தின் மூலம் ஒரு ஒளிமயமான இந்தியாவை உருவாக்க கூடிய ஒரு துறை இப்படியா மக்களை மடச் சாம்பிரானிகலாக்குவது,
செய்தித்தாள்கள் -- இவைகள் முதல் பக்கத்தில் சிந்தும் செய்தி என்னவாக இருக்கிறது என்றால்?, எப்போதோ வெளியிடப்படும் படத்தின் விளம்பரம், அல்லது மொக்கையாக ஓடிக்கொண்டு இருக்கும் படத்தின் விளம்பரம், அரைகுறை ஆடையுடன் நிற்கும் உள்ளாடை விளம்பரங்கள், தலைவனை புகழ்ந்து வண்ணப்படமும், வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம் என்கிற பழைய புளிச்சு போன வசனம்.
ஒரு ஊடகம் சமுதாய முன்னற்றதிற்காக இல்லாமல், மக்களை மந்திகளாக்கி,நாளை என்ன ஆகும் என்று புதிது புதிதான கேவலமான தொடர்களை காண மக்களை அவரவர்கள் வீட்டிலே கட்டிபோடும் நிலையை செய்து கொண்டு இருக்கிறது. எப்படி தெரியும் எங்கு எங்கோ நடக்கும் பட்டினி சாவுகளும், பசி கொடுமைகளும், ஏழை ஒருவனுக்கு இழைக்கப்படும் அநீதி,பேருந்தில் தொங்கிக்கொண்டு உயிரை, பேருந்தின் படிக்கட்டில் வைத்து பயணம் செய்யும் அடிப்படை இந்திய குடிமகனின் வலி. இலங்கையில் ஒரு இனமே அழிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது , அவைகளை மக்களுக்கு எடுத்து சொல்லி உண்மை நிலையை அறியவைத்து, மக்களை ஒருமைப்படுத்தி அதற்கு ஒரு தீர்வு காணச்செய்யாத ஒரு ஊடகம், ஒரு மிகப்பெரிய தலைவனக்கு பாராட்டு விழா, அதில் குத்தாட்டம் போடும் மானம்கெட்ட பிச்சைகாரிகள், அதையும் அமர்ந்து உற்று நோக்கும் தமிழனத்தலைவர்கள், இப்படி மனிதனை சிந்திக்க விடாமல் மந்திகலாகவே வைத்து தனது காரியங்களை சாதித்து கொள்கிறது.
ஒரு திறமையான, உண்மையான ஊடகம் என்ன செய்ய வேண்டும்? என்பதை படிப்பறிவு இல்லாதவனை கேட்டால் கூட சொல்வான். அப்படி இருக்க ஊடகம் நடத்துவோருக்கு தெரியவில்லை என்றால் அவர்கள் ஊடகம் நடத்த அருகதை அற்றவர்கள் என்று நேரடியாகவே திட்டலாம்.சரி , ஊடகம் என்ன செய்யவேண்டும்?.எங்கே அநீதி இலைக்கபடுகிறதோ அங்கே சென்று உண்மை நிலையை ஆராய்ந்து அதற்குரிய நடவடிக்கை எடுக்க அரசியல்வாதிகளை உந்த வேண்டும்.
மக்கள், இப்படிப்பட்ட உறவுகளை தவறாக காட்டும் தொடர்களையும் , இப்படிப்பட்ட காமவெறிகள் நிறைந்த செய்திகளையும், ஆடைகள் குறைத்து ஆடப்படும் நடனப்போட்டிகளையும், தகுதியே இல்லாத தரம்கெட்ட படங்களின் விருதுகள் வழங்கும் விழாக்களையும் தான் காண விரும்புகிறார்கள் அதனால் தான் இப்படி ஒளிபரப்புகிறோம் என்று தயவு செய்து என் தேசமக்களை நோக்கி உங்கள் அசுத்த கரங்களை நீட்டி விடாதீர்கள், என் தேசமக்கள் பிறக்கும்போதே தொடர்களையும்,செய்திகளையும்,விருதுகள் வழங்கும் விழாக்களையும் பார்த்து வளரவில்லை, தவறான ஊடகங்கள் தான் என்தேச மக்களை தன் பாதைக்குள் வரவழைத்து , அடிமையாக்கிவிட்டன. அதனால் அணைத்து ஊடகங்களும் ஒன்றுபோல் மாறவேண்டும், நாட்டின் உண்மை நிலையை துல்லியமாக படம் பிடித்து காட்ட வேண்டும் .
ஆடைகள் இருந்தும் குறைவான ஆடைகளை உடுத்தி நடனமாடும் நமீதா, இன்னும் எத்தனையோ மீதா-க்களை படம் பிடித்து காட்டும் நேரங்களில் உடுத்த ஆடை இல்லாமல் மானம் காப்பாற்ற தவிக்கும் என் சகோதரிகளின் , சகோதர்களின் வலிகளை ஊடகங்களின் வழியாக நாட்டு மக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் உணர்த்த வேண்டும். தவறு செய்யும் அரசியல்வாதிகளின் கீழ்த்தரமான இன்னொரு பக்கத்தை ரகசியமாய் பதிவு செய்து அம்பலப்படுத்த வேண்டும். செய்தித்தாள்களில் சாதித்தவர்களின் முகவரியை முன்னுரையாக கொடுத்து நம் தேசத்தின் பெயரை,உலக ஏட்டில் முதன்மை பெற உறுதுணையாக இருங்கள், சாதித்த தூய தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதுங்கள், தேவை இல்லாத செய்திகளை கடைசி பக்கத்தில் போடுங்கள் .
நான்காம் காரணம்-- பல பொறுப்பற்ற இளைஞர்கள் (என்னையும் சேர்த்துதான்).
ஐ.டி துறை இளைஞர்கள்- அதாவது பணத்தை எப்படி செலவு செய்வது என்று தெரியாத அளவுக்கு பணம் அதிகமீட்டும் திறமை மிகுந்தவர்கள், தன் இளமையை அந்நிய நாட்டிற்கு விற்றவன்.சரி இவர்கள் செய்யும் தவறு என்ன?.நிறையா தவறுகள் இருக்கின்றன, அதில் சில- மாதங்களில் பல 1000 ரூபாய் ஈட்டும் இவன், அதே பல 1000 ரூபாய் ஈட்டும் உடன் பணிபுரிவோரிடம் தொட்டதுக்கெல்லாம் பல 1000 ரூபாய் செலவழித்து விருந்து உபசரிப்புகள் நடத்துகிறார்கள், வெளி உலகத்தில் நடக்கும் அவலங்கள் தெரியாமல் இருக்க தோழிகளிடம் பேசுவதிலும், ஒலி நாடக்களில் பாடல் கேட்பதிலும் தங்களது நேரங்களை சுருக்கி கொள்கிறார்கள்.(ஒரு சில பொறுப்புள்ள ஐ.டி துறை இளைஞர்களும் இருக்கிறார்கள், நான் அவர்களை பற்றி எழுதவில்லை இங்கே)
அறிவியல் துறைசார்ந்த இளைஞர்கள்-- தனது அறிவின் திறமையால் நிலவிலும், கண்ணுக்கு தெரியா கிரகங்கள் கண்டறிவதிலும், புதிய புதிய மருந்துகள் தயாரிப்பதிலும் கில்லாடிகளான இளைஞர்கள் இவர்கள் தான். சரி இவர்கள் செய்யும் தவறு என்ன?. இந்திய மண்ணில் படித்து அறிவை பெருக்கிக்கொண்டு, அயல் மண்ணில் வேலை செய்யும் கொஞ்சம் சுயநலம் கொண்ட இளைஞர்கள்..(ஒரு சில பொறுப்புள்ள அறிவியல் துறைசார்ந்த இளைஞர்களும் இருக்கிறார்கள், நான் அவர்களை பற்றி எழுதவில்லை இங்கே)
படிப்பறிவில்லா இளைஞர்கள்-- கல்லையும் உடைத்து தூளாக்கும் பலம் கொண்டவர்கள்,மழையிலும், பணியிலும்,வெய்யலிலும் ஓய்வின்றி உழைப்பவர்கள். சரி இவர்கள் செய்யும் தவறு என்ன?. குடித்துவிட்டு மானம்கெட்டு தெருக்களில் கிடக்கிறார்கள்,சமுதாய சிந்தனை இல்லாமல் கெட்டு குட்டிசுவராய் போகிறார்கள், இவர்களால் குடும்பத்தில் சண்டை தான் மிச்சமாய் இருக்கிறது. ..(ஒரு சில பொறுப்புள்ள படிப்பறிவில்லா இளைஞர்களும் இருக்கிறார்கள், நான் அவர்களை பற்றி எழுதவில்லை இங்கே)
ஹீரோக்களின் ரசிகன்கள்-- தனது ஹீரோக்களை பற்றி தவறாக பேசும்பொழுது ஒருவனாய் நின்று தனது ஹீரோ சிறந்தவன் என்று சமாளிக்கும் திறமை படைத்தவன், தனது ஹீரோவின் உயர்ந்த பட விளம்பரங்களை தனது உயிரை துச்சமாய் நினைத்து இரும்பு கம்பிகளில் தொங்கி கட்டி முடிப்பவன்.முண்டியடித்து முதல் நாளே தனது ஹீரோவின் மொக்கை படங்களையும் பார்ப்பவன்.சரி இவர்கள் செய்யும் தவறு என்ன?. இவர்களைப்பற்றி மேலே பெருமையாய் சொன்னவைகள் தான் இவர்கள் செய்யும் தவறுகள், தனது வீட்டிற்கு மண்ணெண்ணெய் வாங்க வரிசையில் நிற்காதவன் ,தன்னை யாரென்றே தெரியாத ஒரு ஹீரோவுக்காக உயிரை கொடுக்க துணியும் முட்டாள் தனம் தான் இவர்கள் செய்யும் தவறு . ..(ஒரு சில பொறுப்புள்ள ஹீரோக்களின் ரசிகன்கள் இருக்கிறார்கள், நான் அவர்களை பற்றி எழுதவில்லை இங்கே)
ரோமியோக்கள்-- ஒருமுறை தன்னை பார்த்து கண் இமைத்தவளுக்காக, பல இரவுகள் கண்விழித்து கனவில் காத்திருப்பவன், பேருந்து படிக்கட்டுகளில் தன் உயிரை வைத்துவிட்டு தலைகீழ் சாகசம் செய்து தன் காதலியை அசத்துபவன்.சரி இவர்கள் செய்யும் தவறு என்ன?.நினைத்தவள் கிடைக்கவில்லை என்று குடித்துவிட்டு, தாடியோடும்,தண்ணியோடும் அலைவதை பெருமையாய் கருதிக்கொண்டு இருப்பது, சமூக சிந்தனை இல்லாமல் சுயநலத்தில் தன்னை மாய்த்துகொள்வது.
சரி இவர்கள் என்ன செய்ய வேண்டும்?எப்படி செய்ய வேண்டும்?.இதற்க்கான தீர்வு என்ன?
ஐ.டி துறை இளைஞர்கள்: இவர்கள் வெட்டியாய் விருந்து உபசரிப்பு மற்றும் பலவகைகளில் விரயம் செய்யும் பணத்தை ஒரு நாள் உணவிற்கு தடுமாறும் ஏழைகளுக்கு கொடுத்து உதவ வேண்டும்.தனது வலைதளங்களில் கஷ்டப்படும் ஏழைகளை பற்றி மக்களுக்கு தெரியபடுத்தும் பொறுப்புள்ள செயல்களை செய்ய வேண்டும்.
அறிவியல் துறைசார்ந்த இளைஞர்கள்: இவர்கள் தாய் நாட்டிற்காக தன் சுயநலத்தை தியாகம் செய்து இந்தியாவில் அறிவியலை மேன்மை அடையசெய்ய வேண்டும்.
படிப்பறிவில்லா இளைஞர்கள்: இவர்கள் குடும்பத்தின் நிலைமை அறிந்து குடும்பத்தின் தரத்தை உயர்த்த வேண்டும்.அவ்வப்பொழுது தங்களை சமூக பணிகளிலும் ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும்.
ஹீரோக்களின் ரசிகன்கள்: தன்னை யார் என்றே தெரியாத ஒருவனுக்காக உயிரை பணயம் வைப்பதைவிட்டுவிட்டு , தன்னை சார்ந்த ஊர் மக்களின் குறைகளை கேட்டு அதற்கான நல்வழிகளை செம்மைப்படுத்தவேண்டும்.
ரோமியோக்கள்: காதலை இழந்தவர்களும் சரி,காதல் செய்பவர்களும் சரி , தன் காதலோடு சேர்த்து சமூக அக்கறையும் எடுத்துக்கொண்டால் ,உங்கள் காதல் வளர்வது போல் நம் இந்தியாவும் வளரும் அல்லவா.இதை இவர்கள் செய்ய வேண்டும்
கடைசியாக அணைவரும் நம் பாரதியின் பாடலை நினைவில் வைத்துகொண்டு வாழ்ந்தால் போதும் வலிமையான இந்திய தேசத்தை படைக்கலாம்...
தேடி சோறு நிதம் தின்று பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி மானம்வாடி
துன்பம் மிக உலான்ற்று பிறர்வாழ
பல செயல்கள் செய்து நரைகூடி
கிழப் பருவம் எய்தி -கொடும்கூற்றுக்கு
இரையென மாயும்பல வேடிக்கை
மனிதரை போல நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?
வாருங்கள் புதியதோர் இந்தியாவை படைப்போம்...நீங்கள் இல்லாமல் நம் இந்தியதேசம் இல்லை..
 
Subscribe to:
Post Comments (Atom)
28 comments:
ஊடகங்கள் கள்ளக்காதல், ஒருத்தன் மனைவிமீது இன்னொருவன் ஆசைப்படுவது, போட்டி போட்டு ஒரு இளைஞனை பல பெண்கள் காதலிப்பது//
ஊடகம் இப்படி தான் இருக்கிறது. நல்ல பதிவு நல்ல சிந்தனை...
நன்றி சௌந்தர், உங்களை போன்றோரின் உறுதுணை நிச்சயம் எங்களை சாதிக்க தூண்டும்..நன்றி சௌந்தர் உங்கள் பின்னூட்டதிற்கு
makka ....... kalakitta makka
நன்றி C அவர்களே, உங்களை போன்றோரின் பாராட்டுகளும் நிச்சயம் எங்களை சாதிக்க தூண்டும்..நன்றி C உங்கள் பின்னூட்டதிற்கு
நேதாஜி யின் வழியில் செல்ல துடிக்கும் அனைவரும் ஒன்று சேர்ந்தால் நாட்டை வெகு விரைவில் சீர் படுத்தி விடலாம்...!
நேதாஜி யின் அதி தீவிர பக்தனான எனக்கு உங்கள் பதிவு மகிழ்சி அளிக்கின்றது..!
நண்பா! அருமையான சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு. இப்படியொரு தேசத்தினை இன்றைய இளைஞர்களால் இலகுவாகப் படைக்க முடியும். நவீன இளைஞர்களின் கைகளில் தான் உள்ளது நாளைய உலகின் எதிர்காலம்.
நன்றி தமிழ் அமுதன் அவர்களே, நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை, சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் போல் ஒரு தலைவன் கிடைத்தால் நம் தேசத்தை உலக நாடுகளில் முதன்மை நாடாக மாற்றிவிடலாம்.இதில் துளியும் ஐய்யமில்லை...
நன்றி தமிழ் அமுதன் உங்கள் பின்னூட்டதிற்கு
மிக்க நன்றி தமிழ் மதுரம் அவர்களே, நிச்சயம் இப்படியொரு தேசத்தினை இன்றைய இளைஞர்களால் இலகுவாகப் படைக்க முடியும் தோழரே, நிச்சயம் உருவாக்குவோம் தோழரே,
நன்றி தமிழ் மதுரம் உங்கள் பின்னூட்டதிற்கு
ஆம்..வலிமை மிக்க பாரதத்தை உருவாக்குவோம்!!
மிக்க நன்றி ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி அவர்களே, நிச்சயம் இப்படியொரு தேசத்தினை இன்றைய இளைஞர்களால் இலகுவாகப் படைக்க முடியும் தோழரே, நிச்சயம் உருவாக்குவோம் தோழரே,
நன்றி ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி உங்கள் பின்னூட்டதிற்கு
வலையுலகில் இன்றைய டாப் ட்வென்டி பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்
மிக்க நன்றி sinhacity அவர்களே,
உங்கள் வலைதளத்தில் எனது பதிவையும் முதல் தர வரிசையில் கொண்டு வந்ததிற்கு நன்றி தோழரே..
நன்றி sinhacity உங்கள் பின்னூட்டதிற்கு
பத்திரிக்கை, திரை ஊடகங்களின் "விளம்பரங்களு"க்குப் பின்
மிகப் பெரிய உலகமயமாக்கலின் மாயக்கண்ணாடி இருக்கிறது.
கருப்பாய் இருந்தால் கிடைக்காத வேலை சிவப்பானால் கிடைக்கும்.
பாடிஸ்பிரே போட்டால் பெண்கள் எல்லாம் எலி மாதிரி பின்னால்
ஓடி வருவார்கள். அந்த பனியன் போட்டு வீரம் வந்து கெட்டவர்களை
அடித்தவுடன், திருமதி தாலியை மறைத்துவிட்டு லுக் விடுவாள்.
அந்த பாணம் பருகியவுடன் மலையே பிளந்து வழி விடும்.
கிளர்ச்சி படங்களை காட்டி சிற்றின்பத்தை பேரின்பமாக்கி,
கருத்தடை சாதனம் விற்ப்பார்கள்.பிராண்டு டிரஸ் போடாதவன்
வாழத் தெரியாதவன். கார் வாங்காதவன் வாழவே லாயக்கில்லாதவன்.
இப்படி நேராக, மறைமுகமாக விளம்பரப்படுத்தியே, மக்களை ஒரு
வழி பண்ணிவிடுவார்கள்.
இராவணு ரீதியாக வியட்நாமில் 'தோற்ற' அமெரிக்க அரசு,
அங்கே 'கோக்' விற்பனை தொடங்கி, விளம்பரங்கள் செய்து
வணிக ரீதியாய் 'வெற்றி' அடைந்தார்கள்.
எதைப்பற்றியும் கவலைப் படாத நம் பிரதமர், அமெரிக்க
அணுசக்தி ஒப்பந்தத்துக்கு மட்டும் ஏன் சட்ட சபையில்
அவ்வளவு கோபப்பட்டாரு? இன்னும் நிறைய இருக்கிறது
விஜய். இப்போது தான் பனிமலையின் சிறு துகள் தென்படுவது
போல் தெரிகிறது. பார்ப்போம்... மீண்டும்.
ரொம்ப நாளைக்கு அப்புறம் இரு மிகச்சிறந்த பதிவு படித்திருக்கிறேன். இந்த நெருப்பு...விரவி எங்கும் பரவவேண்டும்....என் தம்பி விஜய் போல்....அக்னி குஞ்சுகள் தேசம்ங்கும் வெடித்துச் சிதற வேண்டும்....... அந்த அக்னியில் கொடுமைகள் எல்லாம் எரிந்தே போகட்டும்.
எத்தனையோ பதிவர்கள் தங்களை பிரபல படுத்திக் கொள்ள....மொக்கைகளை பதிவுகளாக்கி பவனி செய்ய விடும் இந்த கால கட்டத்தில்....
நெருப்பை எடுத்து வீசியிருக்கிறான்....தம்பி.....
ஒவ்வொரு இந்திய இளைஞனும்...தவறாமல் வாசிக்க வேண்டியது இந்த இரண்டு பாகமும்.
என் தம்பிக்கு வாழ்த்துக்கள்....தொடர்ந்து எரியட்டும் ஞான அக்னி....!
நன்றி திரு வாசன் அவர்களே, நீங்கள் சொல்வது உண்மை தான், நம் தேசத்து மக்களை சிந்திக்க விடாமல் மந்திகலாக்கி வைத்து இருக்கிறார்கள், நிச்சயம் விரைவில் இளைய சமுதாயம் ஒன்று சேர்ந்து சுட்டெரிக்க போகிறது, அந்த நாள் வெகு தொலைவில் இல்லை ,திரு வாசன் அவர்களே..நம் தேசம் மலரும் விரைவில்..நன்றி திரு வாசன் அவர்களே உங்கள் கருத்துக்கள் நிறைந்த பின்னூட்டத்திற்கு ...
மிக்க நன்றி தேவா அண்ணா, நீங்கள் என்னோடு இருக்கும் நம்பிக்கை, தைரியம் தான் என்னை இவ்வளவு எழுத செய்து இருக்கிறது,.. ஏதோ ப்ளாக் ஆரம்பிச்சேன், நாலு காதல் கவிதையை பதிவு பண்ணினோம் என போய்கிட்டு இருந்த என்னை, மக்களுக்கு, இளைய சமுதாயத்துக்கு எதாவது சொல்லணும் என கற்றுக்கொடுத்தது நீங்க தான்..எழுத்துக்கு எவ்வளவு வலிமை இருக்கு என நீங்க எழுதின கதை, நடந்த உண்மை சம்பவங்கள், இவற்றிலிருந்து கற்றுக்கொண்டேன் ..
நிஜமாய் நம் தேசம் மிளிரும் அண்ணா விரைவில், நாம் வீசும் தீ நிச்சயம் ஒருநாள் பற்றி எரியும் ....
மிக்க நன்றி தேவா அண்ணா,உங்கள் கருத்துக்கள் நிறைந்த பின்னூட்டத்திற்கு ...
நல்லதொரு இடுகை நண்பா,
நம்மால் முடிந்ததை செய்வோம்.
சமூதாயத்தின் மீது உங்களுக்கு இருக்கும் அக்கறை எல்லோருக்கும் வர வேண்டுகிறேன்.
தொடர்ந்து எழுதுங்கள்....
விஜய் உங்களுக்கு இன்னும் வெறும் 42 தொடர்பவர்களா, விரைவில் அது 402 அல்லது 4002 ஆகா வாழ்த்துகள்.
இந்த அக்னி பிரவாகம் தொடரட்டும், பரவட்டும்.
நன்றி கனிமொழி அவர்களே, நிச்சயம் நம் தேசம் மிளிரும் விரைவில் ,அதுவரை நம் பணிகளை நாம் செய்தே தீருவோம் .புதிய தேசம் படைப்போம் ,மிக்க நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு .
நன்றி பட்டாசு அவர்களே, நிச்சயம் நம் தேசம் மிளிரும் விரைவில் .புதிய தேசம் படைப்போம் ,மிக்க நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு பட்டாசு அவர்களே .
Good Post Nanba!
நன்றி கார்த்திக், உங்களை போன்றோரின் ஊக்கம் எங்களுக்கு தேவை ...மிக்க நன்றி கார்த்திக் உங்கள் பின்னூட்டதிற்கு..அடுத்த பதிவில் பார்ப்போம் கார்த்திக்.
வணக்கம் விஜய்,
உங்களின் பார்வை, சிந்தனை பாராட்டப்பட வேண்டும். தங்களைப் போன்ற இளைஞர்களுக்கு இப்படி தன்னலமற்ற சிந்தனை இருப்பது குறித்து, நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தங்களுடையப் பதிவுகளில் இதுபோன்ற சமுக விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்துக்களை தொடர்ந்து நிறைய எதிர்பார்க்கிறேன்.
நன்றி.
நன்றி அமைதி அப்பா..நீங்கள் கொடுக்கும் உற்சாகம் தான் ,என்னை போன்றோரின் இளமையை சரியான பாதையில் செலுத்தி,அக்னி பிரவேசங்களை ஏற்படுத்தி நாடு முழுவதும் பரவி நம் தேசத்தை முதன்மை நாடாக மாற்றும், நிச்சயம் இன்னும் பரவும் என் இளமை தீ என் தேசத்திற்காய் விழிப்புணர்வு எனும் பதிவுகளால் .நன்றி உங்கள் ஆதரவிற்கு அமைதி அப்பா ...மிக்க மகிழ்ச்சி...
ரொம்ப அருமையான மற்றும் வரவேற்கத்தக்க பதிவுங்க ..!
சிந்திக்க வேண்டிய பதிவு .. அருமை ..
நன்றிங்க செல்வகுமார் .. என்னை எழுத தூண்டும் வார்த்தைகளை வீசியதற்கு....மிக்க நன்றி உங்கள் பின்னூட்டதிற்கு ...மீண்டும் வருக
hi hi hi.... test comment
Post a Comment