
நான் சாதித்த நாட்களும், வீண் செய்த நாட்களும் துலைந்து போயின,
நான் உன்னோடு இருக்கும் இந்நாட்கள் மட்டும் என் நாட்குறிப்பேட்டில் ஏறி அழகாய் கண்சிமிட்டுகின்றன..
என் ஒவ்வொரு அதிகாலை கண்விழிப்பிலும் உன் முகம் பார்த்து,
பிடிக்காத தேனீரையும் விரும்பிப்பருகும் நொடிபொழுதுகள்.
உன் கண்களை இன்னும் அழகாய்க் காட்டும் , நீ என்னோடு
சண்டையிட்ட நிமிடப்பொழுதுகள்.
நான் இன்னும் உறங்கிக்கொண்டு இருப்பதாய் நினைத்து,
அதிகாலைகளில் என் நெற்றியில் நீ விட்டு செல்லும் அழகிய முத்த நிமிடத்துளிகள்.
என் மார்பில் நீயும் , உன் மடியில் நானும், உறங்கிப்போன நேரத்துளிகள்.
நீ வலியினால் கண்கலங்கும் - வரமா? சாபமா? என்று தெரியாத அந்த நாட்களில்
தலைகோதி, தோல்கொடுக்கும்போது நீ சிரிக்கும் அந்த நிமிடத்துளிகள்.
நம் இருக்கமான இரவுகளில் நீ வெட்கப்படும் அழகிய தருணங்கள் நிறைந்த நிமிடங்கள்.
தெரியாமல் என்னை இடித்து சென்ற முகம் தெரியா பெண்ணை
சத்தம் வராமல் திட்டிதீர்த்த உன்இதழ்களுக்கு, முத்தமிட்ட நிமிடத்துளிகள்,
ஈரக்கூந்தலில் கடவுளிடம் எனக்காய் வேண்டிக்கொள்ளும் அந்த நிமிடத்துளிகள்
கடைசி மழைத்துளியையும் நாம் ஒன்றாக ருசித்த அந்த மாலைநேர மணித்துளிகள்
எனக்காய் அவசர அவசரமாய் சமைக்க கற்றுக்கொண்டு,தீக்காயத்தோடு சரியாக வேகவைக்காத உணவையும் அழகாய் பரிமாறும் அந்த நிமிடத்துளிகள்
இப்படி எத்தணையோ நிமிடத்துளிகள்........
இன்னும் நான் உன்னோடு வாழப்போகும் லட்சக்கணக்கான மணித்துளிகள் ,என் நாட்குறிப்பேட்டில் ஏறி கண்சிமிட்ட முண்டியடித்துக்கொண்டு நிற்கின்றன பாவமாய் ......
5 comments:
Romba nalla iruku vijay....
Romba arumaiya, rasichu ezhudhi irukinga....
good.......
நன்றி ராதா ...மிக்க நன்றி உங்கள் கருத்துகளுக்கு ..........
நன்றி C...மிக்க நன்றி உங்கள் கருத்துகளுக்கு ..........
Post a Comment