Monday, February 22, 2010
சிரித்தே கொன்றாய் ......
இரவு முழுவதும்-
சுவரையே வெறித்து பார்த்த கண்கள்,
உன் செல்ல பெயரை உச்சரித்தே காய்ந்துபோன உதடுகள்,
நீ திட்டியனவாய் இருந்தாலும் திரும்ப திரும்ப கேட்டு கொண்டே இருந்த காதுகள்,
விநாடிகளை கணக்கிட்டு கொண்டிருந்த விரல்கள்,
புரண்டு படுத்தே தேய்ந்த தேகம்,
சண்டை இட்டது போல் வெட்கத்தால் பிரிந்தே இருந்த கால்விரல்கள்,
இருட்டிலும் பிரகாசிக்க முயற்சித்த முகம்,
எங்கு எங்கே ரசாயன மாற்றம் நடக்கிறது என்று தெரியாமல் தவித்த உடல்,
உடலெங்கும் ஓடி எதோ சொல்ல முயன்று தோற்று போன குருதி,
ஓடிய குருதியின் வெப்பம் தாங்காமல் வெடிக்க முயற்சித்த நரம்புகள்,
புடைக்கும் நரம்பிற்கு சமாதானம் கூறிய தோல்கள்,
எனது உடலில் உனது உளவாளியாய் வேலை பார்த்த உன் நினைவுகள்,
காற்றில் உன்னை தேடி இதயத்தோடு இணைக்க முயற்சித்த ஒவ்வொரு சுவாசமும்,
தனக்குள் உனக்கொரு இடத்தை கொடுத்து கனத்த இதயம்,
இவையனைத்தும் வெட்கத்தில் இறந்து பிறந்தன
என்னை திட்டிய பிறகு, நீ சிந்திவிட்டு போன காலை நேர பனித்துளி புன்னகையால்.........
--விஜி
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
வாழ்த்துக்கள் உங்க சொந்த அனுபவமோ
:) Gud Nanba..
நல்ல கவிதை . வாழ்த்துக்கள்.
நன்றி சிவசங்கர் ..நிச்சயமாய் இது அனுபவம் இல்லை .. :) ...மிக்க நன்றி உங்கள் கருத்துகளுக்கு ..........
நன்றி சிவாஜி சங்கர்.. நீங்கள் உற்சாக படுத்தியதற்கு நன்றி .. :) ...மிக்க நன்றி உங்கள் கருத்துகளுக்கு .......
நன்றி ரமா .. ...மிக்க நன்றி உங்கள் கருத்துகளுக்கு ..........
hey dude you r amazing
its such a hard job bringing the feeelings into words
i cud imagine the atmosphere reading every sentence of yor kavidhai
I, I cant tell them as sentences
lovely feeelings
am sure yo cud not hav brought all feelings in the words
the gal is really lucky dude
Rock on!!!!
:)
:)
Post a Comment