
இரண்டு மாதத்துக்கு முன்பே , நல்லவனாய், பவ்வியமாய் நின்று , என் மேல் அதிகாரியிடம் இரண்டு நாள் விடுமுறை கேட்டு, சரி என்ற அனுமதியும் வாங்கிவிட்டேன். நாளை விடுமுறை என்று வகுப்பாசிரியர் மாலை நேரத்தில் வாசிக்கும் தகவல் அறிக்கை கடவுளாய் தெரிந்து, தகவல் அறிக்கைக்கு நன்றி சொல்லிவிட்டு அருகில் அமர்ந்து இருக்கும் நண்பனை சந்தோசத்தில் அடித்துவிட்டு, நாளை என்ன செய்யலாம் என்ற ஓராயிரம் திட்டங்களை தீட்டும் பள்ளி நாட்களை ஞாபகப்படுத்தியது, சரி விடுமுறை எடுத்துகொள் என்று என் மேல் அதிகாரி கூறிய அந்த நிமிடத்தில் .
நிச்சயம் சந்தோசம் இருக்கத்தானே செய்யும்,ஆறேழு மாதத்துக்கு பிறகு சொந்த ஊருக்கு, அப்பா, அம்மாவை பார்க்க போகிறேன், முக்கியமாய் என் தனலஷ்மியை பார்க்க போகிறேன், "நீ திருவிழாவுக்கு கட்டாயம் வந்தே ஆக வேண்டும் என்ற தனலஷ்மியின் ஆணைக்கு தான் இந்த விடுமுறையே" . யார் இந்த தனலஷ்மி?, தான் ஒரு பெண்ணாய் இருந்தாலும் ,தன் கணவனோடு சேர்ந்து புழுதி க்காட்டிலும், சேற்றிலும்,வெய்யலிலும் வியர்வை சொட்ட சொட்ட விவசாயம் பார்க்கும் தருவாயிலும் கூட,என்னை சாப்பிட்டியா?, நல்லா சாப்பிட்டியா?,என்ன சாப்பிட்ட?, நல்ல உணவை சாப்பிட்டியா?,பார்த்து சூதனமா போகனும், பேருந்தில் தொங்கிக்கொண்டு போககூடாது.
நம்ம அப்பா, அம்மாவோட அலைபேசியில் பேசினியா?,உடற்பயிற்சி செய்யும்போது பார்த்து செய்யனும், அதிகஎடை தூக்கக்கூடாது, ரொம்ப நேரம் அரட்டை அடிச்சுட்டு நேரம் கழிச்சு தூங்கமா, சரியான நேரத்துல தூங்கணும் என்று ஆயிரம் அக்கறையை, அன்போடு அடுக்கடுக்காய் என் மேல் திணிப்பவள். அக்கா என்ற ஒற்றை உறவில் உலகம் காட்டியவள், அக்கா என்ற வார்த்தைக்கு அம்மா என்றொரு அர்த்தம் இருப்பதாய் பாசத்தால் உணர்த்தியவள்,
அம்முமா, புஜ்ஜிமா,தங்கம், செல்லம், மயிலு, என்று பாசத்தை- செல்ல பெயர்களாய் என் மீது ஒட்டிவிட்டவள், பூஜா, தினேஷ் என்ற அழகிய அவள் செல்லங்களுக்கு மூத்தவனாய், முதல் பையன் நீ என்று பூரிப்போடு புன்னகைத்து என்னை மார்போடு பாசமாய் அனைத்து ஆனந்த கண்ணீர் வடிப்பவள். அவள் பாசத்தை நம்பிக்கையாய் எழுத ஆரம்பித்துவிடலாம்,முடிக்கமுடியாது என்று
ஆசையாய் காத்திருந்த நாள், நிஜத்தில் நிழலாடும் தருணமாய் மலர்ந்தது . அவசர அவசரமாய், அலுவலக வேலைகளிடம் எனக்காய் நான்கு நாட்கள் காத்துஇருக்கும்படி கூறிவிட்டு , என்னோடு வாருங்கள் என் அக்காவை காணலாம் என்று என் உடைகளிடம் சொல்லிக்கொண்டே, அவைகளின் அனுமதியின்றி திணித்துக்கொண்டு புதன்கிழமை இரவு ஓடி சென்று சேலம் பேருந்தை பிடித்து இருக்கையில் அமரும்பொழுது வியர்வை துளிகள் அழகாய் கண்சிமிட்டி, என் தேகம் சுற்றி பார்க்க கிளம்பிவிட்டன. மனது மட்டும் ஏனோ என் அக்காவின் பாசத்தை நினைவில் நிரப்பிக்கொண்டிருக்க மறக்கவில்லை, நிச்சயம் ஒரு 100 பேரிடமாவது சொல்லி இருப்பாள்,என் தம்பி வருகிறான், தம்பி வருகிறான் என்று. என்னையும் மீறிய ஆவல் ஓட்டுனரின் வேகத்தை பார்த்து சலித்துகொண்டது அவ்வப்போது.
எப்படியோ வீடு சென்றுவிட்டது மனமும், உடலும் வியாழக்கிழமை அதிகாலையில் . அப்பா, அம்மாவோடு சந்தோசமாய் சில மணித்துளிகள்.சிறிதுநேரத்தில் அக்காவிடம் இருந்து அழைப்பு, எப்பொழுது இங்கே வருகிறாய் என்று, சிறிது விளையாட்டாய், நான் ஊருக்கு நாளைக்கு தான் வருவேன் என்றதும், அழுகையுடன் துண்டிக்கப்பட்டது அழைப்பு. அவசரமாய் புறப்பட்டு, அக்காவீட்டின் முன் நின்றேன், அக்கா கடைக்கு பொருள்கள் வாங்க போயிருப்பதாய் உணர்ந்தத தருணத்தில் உறவினர்களின் வரவேற்பு அனைத்தும் முற்றுபெராமல் தொக்கிநின்றது என் அக்காவின் பாச வரவேற்ப்பு இல்லாமல்.
வாசலை உற்றுநோக்கியே தோய்ந்த என் உடலும், மனுமும் மௌனமாய் கனத்துகொண்டே தூக்கத்தை கட்டிக்கொண்டது, அக்காவின் வருகையை உணர்ந்த தருணத்தில் பூத்த ஆவலை அழகாய் அக்காவிடம் கொண்டு சேர்க்க ஓடி சென்று அக்காவின் அருகே அமர்ந்து, சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் என்று புன்னகைபூத்த என் உதடுகூட சுருங்கிகொண்டது அக்காவின் கலங்கிய கண்களை பார்த்ததும். என்ன சொல்ல?, அழகாய் சொல்லிவிட்டாள் என் அக்கா என் மேல் வைத்து இருக்கும் பாசத்தை கலங்கிய கண்ணீர்துளியால்,
அம்முமா எப்படி இருக்க?, என்பதில் ஆரம்பித்தது எப்பொழுது முடிந்தது என்று கணக்கில் வைத்து கொள்ளவில்லை,அத்தனை வேலைக்கு மத்தியிலும் ஓடி வந்து "சாப்பிடு விஜிமா" என்று கெஞ்ச மறக்கவில்லை என் அக்கா. எவ்வளவு பாசமுங்க என் அக்காவுக்கு என்மேல, இந்த பாசத்துக்கு தாங்க உலகத்துல அத்தனை உயிரும் ஏங்குதுங்க,என் கையை பிடிச்சு கூடவே சின்ன குழந்தை மாதிரி கூட்டிக்கிட்டு, சமைக்கிறதுல இருந்து, சாப்பாடு போடறது, துவைக்கிறது, பாத்திரம் கழுவறது, சொந்தகாரங்கள வரவேற்கிறது வரைக்கும் அத்தனை வேலையையும் சலிக்காம செய்ததுங்க.
சின்னதாய் என்னை யாரவது வேலை செய்ய சொன்னாகூட, ஓடி வந்து உன்னை யாரு விஜிமா செய்ய சொன்னது, நான் பார்த்துக்கிறேன், நீ ஒன்னும் செய்யகூடாதுன்னு சொல்றப்ப கண்ணீர் சொட்டுமுங்க, கண்ணீர துடைச்சு எரிந்துட்டு, அடம்பிடிச்சு என் அக்காவீட்டு திருவிழாவுல நானும் என்னால முடிஞ்சவேலை செய்யணும்னு செய்தபோது, கொஞ்சம் பெருமையா தான் என் அக்கா எல்லோர்கிட்டயும் சொல்லிகிட்டா "என் தம்பி பாரு ,முன்னாடி நின்னு எடுத்துக்கட்டி வேலை பார்க்கிறான்னு". .
எது சரி, எது தவறு அப்டின்னு பிரிச்சு பார்க்கிற பக்குவம் என்கிட்ட இருக்குங்க, யோசிச்சுமுடிவு எடுக்க தெரியுமுங்க, ஆனா இது எல்லாம் மறந்துபோகுமுங்க சிலநேரங்களில்,அந்த மாதிரி தருணங்கள் நிறையா உண்டு, அதுல ஒண்ணு தான் நான் அப்போகடந்து போனேன். சின்ன குழந்தைல ஆரம்பிச்சு, வயசாகி சாகுற மனுஷன் வரைக்கும் தன்னை நேசிக்கிற அம்மா, அல்லது நேசிக்கிற மனைவி, நேசிக்கிற பையன், நேசிக்கிற பொண்ணு, நேசிக்கிற அக்கா, நேசிக்கிற அண்ணா இவுங்க தன்னை தான் அதிகம் நேசிக்கணும் அப்டிங்கற ஒரு இனம்புரியா, பாசத்துல மிதக்குற ஒரு பிடிவாத உணர்வு இருக்கும்.
அதேதாங்க எனக்கும், என் அக்கா ,என்னை கவனிக்க தவறிய சில நிமிடங்கள், உறவினர்களை சிரிசுகிட்டே வரவேற்கிற தருணங்கள் என்று நிறையா தருணங்கள் என் பிடிவாதத்தை அதிகரிக்க தான் செய்தது, என் அக்கா என்னை மட்டும் தான் நேசிக்கணும், என்னை கவனிக்க தவறக்கூடாது என்ற பிடிவாதம் , ஓவ்வொரு மனிதனுக்குள்ளும் குழந்தைதன பிடிவாதங்கள் சில நேரங்களில் இருக்கத்தான் செய்கிறது, ஆயிரம் பேர் அறிவுரை கூறலாம். அம்மாகிட்ட போயி தீருவேன்னு அடம்பிடிக்கிறதும் ,அம்மாகிட்ட வேறஒருத்தங்க குழந்தை கையில இருக்குறப்ப வர பிடிவாதமும், சின்ன குழந்தைல இருந்தே ஒவ்வொரு மனுசனுக்குள்ளும் உயிராய் கலந்துவிடுகிற, தவிர்க்க முடியாத ஒரு உணர்வு.
என் முகத்தில் இருக்கும் கோபத்தை புரிந்து, ஓடி வந்து,
"விஜிமா, எதுக்கு கோபம்?." என்ற கேள்வியை கேட்கும்பொழுதே தெரிந்திருக்கும் என் அக்காவிற்கு எதற்காய் என் கோபம் போராடுகின்றன என்று?. இது முதல் முறை அல்ல, ஆச்சர்யபடுவதற்கு, பல லட்சகணக்கான முறை பார்த்த பிடிவாதம் தான். என் அருகே அமர்ந்து, என் கன்னங்களை பிடித்து,
"விஜிமா, நான் உன் அம்மா, நீ தான் எனக்கு முதல்,அப்புறம் தான் இந்த உலகமே, மற்றவர்களிடம் சிரிச்சு பேசுவதாலோ, உன்னை சில நேரங்களில் கவனிக்க தவருவதாலோ உன்மேல் என் பாசம் குறைஞ்சுடுச்சு என்று அர்த்தம் இல்லை விஜிமா "என்று கூறிமுடித்து, கன்னத்தில் முத்தம் இடும்பொழுது கண்ணீர் சிந்தியது என் கண்கள்.
விஜிமா எதுக்கு அழுகுற?, அழகூடாது, என்று என் கண்ணீரை துடைத்துவிட்டு, அவள் கண்கள் கலங்குவதை காணும்பொழுது இதயம் கனக்க செய்தது, வா விஜிமா, இனிமேல அம்மா உன்னை கவனிக்க தவறமாட்டேன் என்று, என்னை கூடவே கைபிடிச்சு சுத்தினது , இந்த உறவுகாரங்களால புரிஞ்சுக்க முடிஞ்சுதான்னு தெரியல, "இந்த பையன் என்ன குழந்தையா இப்படி கூடவே சுத்துறான், இந்த பொண்ணுக்காவது அறிவுவேணாம் , இப்படியா கூடவே கூட்டிகிட்டு சுத்துறது" என உறவுகாரங்க மனசுக்குள்ள கேட்ட கேள்விகளுக்கெல்லாம் என் அக்கா சத்தமா சொன்னா பதில் "விஜிமா என் முதல் பையன், எத்தனை வயசானாலும் 3 மாச குழந்தை தான் இவன் எனக்கு"
அழகாய்,சந்தோசமாய் நகர்ந்த மூன்று நாட்களும், என்னை சோகமாய் நான்காம் நாளின் கையில் ஒப்படைத்தது. என் அக்காவை விட்டு பிரிந்து செல்ல போகிறேன், என் அக்காவோட பாசத்துல கலங்கிபோன என் மனசு அடம்பிடிச்சுது அங்கிருந்து புறப்பட்டு செல்ல, அவ்வளவு பாசம் காட்டின என் அக்காகிட்ட, போயிட்டு வருகிறேன் என்று சொல்லிட்டு, திரும்பிபார்க்காம வீட்டுக்குவந்து தேம்பி தேம்பி அழுது, சொட்டிய ஒவ்வொரு கண்ணீரிலும் என் அக்காவோட பாசத்தை பார்க்க முடிஞ்சுது.சேலத்துல இருந்து சென்னைக்கு பேருந்து புடிச்சு அமர்ந்து, அக்காகிட்ட அலைபேசியல் அழுதஅழுகை பேருந்தில தூங்கிக்கொண்டு இருந்தவங்கலோட காதுகளை எட்டி இருக்கும்,
இயல்பு வாழ்க்கைக்கு வர மூன்று நாட்கள் பிடித்தது, பார்த்து பார்த்து சாப்பிடு, தூங்கு, அங்க போகாத, அந்த வேலை செய்யாத என்று பாசம் காட்டிய அம்மா அருகே இல்லை எனும்பொழுது, இந்த வாழ்க்கை எதுக்கு?,பாசத்தை பத்திரமாய் வீட்டில் மடித்துவைத்து விட்டு இங்கே எதைதேடுகிறேன் என்ற ஆயிரம் கேள்விகள் மனதை இன்னும் கனப்படுத்தியது . இந்த மூன்று நாட்களும் அக்காவை அழைக்கும் பொழுதெல்லாம் , அக்கா கூறிய முதல் வார்த்தை " நீ எங்கு இருந்தாலும், அம்மா நான் உன்னோடு இருக்கிறேன்".நான் அனுப்பிய அதிக குறுந்தகவல் "I Love U Akka, I Miss U Akka" .இந்த ஒற்றை வார்த்தையால் என் அக்காவின் பாசத்தை அடக்கிவிடமுடியாமல், உணர்த்தமுடியாமல்,சரியாக சொல்லிவிட முடியாமல் தவித்ததின் விளைவாய் "தனலஷ்மி -பாசம் என்றால்." இதுவும் முழுமையாய் உணர்த்தியாதாய் ஏற்றுகொள்ளமுடியாமல் கனத்த இதயத்தோடு சுற்றிகொண்டிருக்கிறேன்...
ஒரு வார்த்தையிலும், ஒரு பதிவிலும் முடிந்துவிடுவதாய் உணரமுடியவில்லை என் அக்காவின் பாசம் ...ஜென்மங்கள் தாண்டியது ...
45 comments:
VIJAY ENNA SORATHUNNE THERIYALA........... NESAMAVE ENAKKUM KANNEER VANTHATHU...
//பாசத்தை பத்திரமாய் வீட்டில் மடித்துவைத்து விட்டு இங்கே எதைதேடுகிறேன் என்ற ஆயிரம் கேள்விகள் மனதை இன்னும் கனப்படுத்தியது//
ITHE KELVI ENNAIKU INTHA OORUKKU VANTHANA ANNAILERNTHU MANASULA ODIKITTU IRUKKU.
என்ன சொல்வதென்று தெரியவில்லை விஜய்.. சகோதரிகள் இல்லாத வீட்டில் பிறந்தவன் நான்... என் நண்பர்களின் வீட்டுக்கு செல்லும் தருணங்களில் அவர்களின் அன்பையும் அரவணைப்பையும் பார்த்து எனக்கொரு சகோதரி இல்லையே என்று ஏங்கிய நாட்கள் எண்ணிலடங்காதவை...
அருமையான நடையில் மனதில் உள்ளவற்றை கொட்டியிருக்கிறீர்கள்...
//என் முகத்தில் இருக்கும் கோபத்தை புரிந்து ஓடி வந்து என்ன விஜிமா, எதுக்குமா கோபம்?.என்ற கேள்வியை கேட்கும்பொழுதே தெரியும் என் அக்காவிற்கு எதற்கு என்று, ஏனென்றால் நான் இப்படி பிடிவாதம் பிடிப்பது முதல் முறை இல்லை, பல லட்சங்களை தாண்டி இருக்கும், எவ்வளவு அழகாய் என் கன்னங்களை பிடித்து .தோல் மேல் கைபோட்டு, "விஜிமா, நான் உன் அம்மா, நீ தான் எனக்கு முதல், அப்புறம் தான் இந்த உலகமே", மற்றவர்களிடம் சிரிச்சு பேசுவதாலோ, உன்னை சில நேரங்களில் கவனிக்க தவருவதாலோ உன் அம்மாக்கு உன்மேல் பாசம் குறைஞ்சுடுச்சு என அர்த்தம் இல்ல விஜிமா "என்று கூறிமுடித்து கன்னத்தில் முத்தம் இடும்பொழுது கண்ணீர் சிந்தியது என் கண்கள்//
அன்புள்ள விஜய்!! எப்பொழுதும் போல் மிக அழகாக எழுதி இருக்கிறிர்கள். உங்கள் எழுத்தில் எப்பவும் ஒரு எதார்த்தம் இருக்கும். அது படிப்பவரை சுன்டி இழுக்கும். மேல் கொடுத்துள்ள பத்தியில் அது காணவில்லை என்பது என் தாழ்மையான கருத்து...
மாற வேண்டும் விஜய், இந்த அதீத அன்பும் தனக்கு மட்டுமே என்னும் possessiveness உம் அதிக கஷ்டங்களைத் தரும். அனுபவித்தவள் சொல்கிறேன், இள வயதிலேயே மாற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள். ஆனால் இந்த மன நிலை உள்ளவர்கள் அபூர்வமானவர்கள் என்பது என் சொந்த கருத்து.
ஒரு வார்த்தையிலும், ஒரு பதிவிலும் முடிந்துவிடுவதாய் உணரமுடியவில்லை என் அக்காவின் பாசம் ...ஜென்மங்கள் தாண்டியது ...
..........மனதை தொட்ட பதிவு. இத்தனை அழகாக உங்கள் பாசத்தை, ஒவ்வொரு வார்த்தையிலேயும் ஏற்றி விட்டு இருக்கிறீர்களே...... Superb!
May God bless you both!
உணர்வுப்பூர்வமான பதிவு விஜய்
நைஸ்.
விஜிமா..
பொறுமையா வீட்டுக்கு வந்து எல்லா வேளையும் முடிச்சுட்டு உன் பதிவ...ஒரு காதலியோட காதல் கடிதம் படிக்கும் ஆவலோடு வாசிக்கிறேன் பா.....! என் தம்பி அடிக்கடி எழுத முடியமல் வேலை தடுக்கிறதே என்ற கவலை எப்போதும் எனக்கு இருக்கும்.....எப்போ நீ பதிவு இட்டாலும் முதல் குழந்தை பார்க்கும் தாய் போலத்தான் நான் பார்ப்பேன்......உனக்குள் என்னைப் பார்பதால்தான் அதுவும்.....அக்காவின் பாசம் எனக்கு தெரியும் தம்பி.....கண்கள் கலங்கி...அக்கா உன் மீது வைத்திருக்கும் பாசத்தில் நெகிழ்ச்சியும்....கொஞ்சம் பொறாமையும்.....எனக்கு வந்தது உண்மை....
என்னிடம் நீ காட்டும் நேசமும் இதே மாதிரிதான்.... ! நீ ஊருக்கு போறேன்னு சொன்னவுடன் நான் துபாயில் இருந்தாலும் என்னை விட்டு பிரிந்து செல்வது போலத்தான் உணர்ந்தேன்....ஏனென்றால்....அண்ணா என்று சொல்லி விட்டு நீ சிரிக்கும் சிரிப்பின் பின்புலத்தில் இருக்கும் பாசத்தின் வலுவில் திக்குமுக்காடிப் போனவன் நான்......! உன்னை இன்னும் எனக்கு நெருக்கமாக்கியிருக்கிறது இந்த கட்டுரை......
என்னதான் செய்து தொலைக்கப் போகிறோம் இறப்பதற்கு முன்பு.....தீர தீர பாசத்தோடு இருந்து விட்டு மரிப்போம் தம்பி.....
யோசிக்காமல் நேசிக்கிறேன்....விஜய் என்னும் குழந்தையை......!
Unnoda antha nadkalai ennal payanikka mudinthathu vijay, oru akkavin pasam ennai enka vaikkirathu enakku oru akka illaiye entru...
உங்கள் எழுத்தைப் படித்தாலே...உங்களது அக்கா மீதும் உங்கள் மீதும் எனக்கும் வருகிறது பாசம்...ஜென்மங்கள் இருக்கிறதோ இல்லையோ...பாசத்திற்கு இந்த உலகில் அளவு கிடையாது என்பதால் வகுக்கப்பட்ட வார்த்தையாகத்தான் அது இருக்கும் என நினைக்கிறேன்....நல்ல நினைவுகள்...விஜய்..
Dear viji,
I can understand your realy feeling. Once i was like you at chennai. The feeling still in my heart ....
பேருந்தில் தொங்கிக்கொண்டு போககூடாது.///
இப்போ உங்க தம்பி தொங்கிட்டு தான் போகிறார்
பாசமும் எதார்த்தம் உணர்வுப்பூர்வம் என்று இருக்கிறது
எப்போதும் போல அருமையா எழுதியிருக்கீங்க விஜய்..
எனக்கு என்ன எழுதறதுனே தெரியலை அண்ணா ,
வழக்கம் போல நீங்க கலக்கி இருக்கீங்க.. அதிலும் கடைசியில் நீங்க
சொன்னீங்கள்ள மூன்று நாள் தங்கிவிட்டு நான்காம் நாள் கிளம்பப்போறேன் அப்படின்னு சொல்லும்போது எனக்கும் ஒரு வித பிரிவு உணர்ச்சி வந்தது. இப்படி எழுதுவது எல்லோருக்கும் கிடைப்பதில்லை. உங்களுக்கு மனித உணர்வுகளை வர்ணிக்க முடிகிறது .. தொடர்ந்து எழுதுங்க. நானும் கூட இந்த பதிவப் பத்தி இன்னும் நிறைய எழுதனும்னு நினைக்கிறேன். ஆனா என்னாலையும் இதுல கொஞ்சம் ஒன்ற முடியல , காரணம் terror சொன்னது மாதிரி எனக்கு அதிக வர்நிப்பாகத் தெரிந்தது. ஆனா அது உண்மையானால் சத்தியமாக உங்களைப் போன்று கொடுத்து வைத்தவர்கள் யாரும் இல்லை.. அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன் ..
மிக்க நன்றி ஜீவன்,
உங்கள் உணர்வையும் என்னோடு பகிர்ந்து கொண்டதிற்கு, எல்லா மனிதர்களுக்கும் இந்த மாதிரி வாழ்க்கையை திரும்பி பார்க்க வைக்கிற சம்பவம் நிறையா இருக்கு அப்டின்னு உங்க உணர்வுகள் மூலம் என்னக்கு அழகாக புரிய வைத்தற்கு மிக்க நன்றி,
உங்கள் நேரத்தை எனக்காய் ஒதுக்கி பின்னோட்டம் இட்டதிற்கு மிக்க நன்றி ஜீவன்..
நண்பா ஜெயந்த் ,
கவலை படாதீங்க ஜெயந்த், இயற்கை சில நேரங்களில் பாசங்களை மாற்றி இன்னொருவர் கையில் ஒப்படைக்கும், அதனால் உங்களுக்கு வேறு எங்கோ இருந்து இதைவிட அழகான பாசம் கிடைக்கும் என நம்புகிறேன், பார்ப்போம் ஜெயந்த்.
மிக்க நன்றி என்னை ஊக்குவித்து உங்கள் பின்னூட்டத்தை எனக்கு சமர்பித்ததர்க்கு...
அன்பின் TERROR-PANDIYAN(VAS)
முதலில் உங்களுக்கு எனது நன்றிகள், வாசித்துவிட்டு அப்படியே செல்லாமல், அழகாய் தவறை உணர்த்தி இருக்கிறீர்கள், நீங்கள் உணர்த்தியது மிக சரியே, அதனால் எனக்கு தெரிந்தவரை மாற்றி இருக்கிறேன், கற்பனை என்றால் அழகாய் கற்பனை செய்து எழுதிவிட முயற்சிக்கலா, இவை யாவும் உண்மையே எனும்பொழுது கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு நடந்ததை,வார்த்தை அமைத்தலில் கவனம் காட்டாமல் விட்டுவிட்டேன்,
மிக்க நன்றி TERROR-PANDIYAN(VAS) உங்களுக்கு, தவறை உணர்த்தி திருத்திக்கொள்ள வாய்ப்பு கொடுத்தமைக்கு ...
அன்பின் நாய்க்குட்டி மனசு ,
உங்க வயசு எனக்கு தெரியாது, இருந்தாலும் உங்க வார்த்தைக்கு நிச்சயம் மதிப்பு கொடுக்கிறேன், நிச்சயம் நீங்கள் சொல்வது போல் என்னை மாற்றிக்கொள்ள முயற்சிக்குறேன், பாசத்தை குறைத்து கொள்ளபோவது இல்லை, என்னுடன் மட்டும் பாசம் வைக்கவேண்டும் எனும் பழக்கத்தை மாற்றிக்கொள்ள முயற்சிக்குறேன் நாய்க்குட்டி மனசு .
ஒவ்வொரு முயற்சியும் வெற்றியில் முடிய வேண்டும் என்று நிர்பந்தம் இல்லை, ஆதலால் என் முயற்சியில் வெற்றி கிட்டினாலும் சரி, தோல்வி கிட்டினாலும் சரி,சந்தோசம் தான் :)
மிக்க நன்றி உங்கள் சகதோரனுக்கு அறிவுரைகள் கூறுவது போல் எனக்கும் கூறியதற்கு ...
நன்றி சித்ரா அக்கா,
உங்க மனதை தொட்ட பதிவுன்னு சொல்லி இருக்கீங்க, அந்த அளவுக்கு எழுதி இருக்கனா அப்டின்னு தெரியல, அந்த அளவுக்கு எங்க பாசம் பெரிசான்னு தெரியல இருந்தாலும் ரொம்ப சந்தோசம். என்னையும் என் அக்காவையும் வாழ்த்தி இருப்பதற்கு நன்றி.என் பதிவுகள தவறாம படிச்சு என்னை ஊக்கிவிப்பதற்கு மிக்க நன்றிங்க அக்கா, மிக்க அவசியம் என்னை போன்ற தம்பிகளுக்கு உங்களை போன்ற அக்காக்களின் ஊக்குவிப்பு....
மறக்காமல் பின்னோட்டம் விட்டு சென்றதிற்கு மிக்க நன்றிங்க அக்கா
அன்பின் அன்பரசன்
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.என் பதிவை பற்றிய உங்கள் விமர்சனத்திற்கு மிக்க நன்றி.உங்களை போன்றோரின் வருகையும் வாழ்த்தும் விமர்சனுமும், மிக்க அவசியம் என்னை போன்ற கத்துக்குட்டி எழுத்தாளர்களுக்கு ...மிக்க நன்றி அன்பரசன்..
மீண்டும் வருக நேரம் இருந்தால்...
தேவா அண்ணா,
என்ன சொல்றதுன்னு தெரியல அண்ணா , ஒரு பாசத்தை பற்றி எழுதி இன்னொரு அழகான பாசத்தை பற்றி புரிஞ்சுக்க வாய்ப்பு கிடைச்சதை நினைச்சா சந்தோசமா இருக்கு அண்ணா.
அக்கா பாசம், அண்ணா பாசம், தம்பி பாசம், அம்மா பாசம் இதை எல்லாம் அனுபவிக்க தெரியாத மனுசங்க இல்லைன்னு தான் நான் நினைக்கிறேன் அண்ணா , எங்கையாவது, யாரு மேலையாவது பாசம் வைச்சு இருப்பாங்க, அப்டி வைக்க தவரினவங்க தான் நிறையா தப்பு பண்றாங்கன்னு நினைக்கிறேன் அண்ணா
நீங்க சொல்ற மாதிரி தீர தீர அன்பும், பாசமும் வைச்சுட்டு சாக பிடிக்கும் அண்ணா..
ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணா நீங்களும் என் அக்கா மாதிரி என் மேல் பாசம் வைச்சு இருக்கீங்க அப்டின்க்ரத நினைச்சா, இந்த வலைபதிவாள உங்க பாசத்த சம்பாதிச்சு இருக்கேன் , ரொம்ப சந்தோசம் அண்ணா ...
I love u annaa
மிக்க நன்றிங்க சிவா
ஆணி அதிகமா இருக்குற நேரத்துல கூட நீங்க, மறக்காம பின்னோட்டம் போட்டதுல மிக்க சந்தோசம் சிவா, ஜெயந்துக்கு சொன்ன பதில் தான் சிவா உங்களுக்கும்
கவலை படாதீங்க சிவா, இயற்கை சில நேரங்களில் பாசங்களை மாற்றி இன்னொருவர் கையில் ஒப்படைக்கும், அதனால் உங்களுக்கு வேறு எங்கோ இருந்து இதைவிட அழகான பாசம் கிடைக்கும் என நம்புகிறேன், பார்ப்போம் சிவா.
அன்பின் ரமேஷ்...
//ஜென்மங்கள் இருக்கிறதோ இல்லையோ...பாசத்திற்கு இந்த உலகில் அளவு கிடையாது என்பதால் வகுக்கப்பட்ட வார்த்தையாகத்தான் அது இருக்கும் என நினைக்கிறேன்....//
நீங்கள் சொல்வது சரி தான் ரமேஷ், சில உணர்வுகளை கேட்பதை விட, உணர்தலே அதிகபடியான சந்தோசத்தை தருகிறது என்பதே உண்மை.எனக்கு தெரியும் நீங்க இப்பொழுது கொஞ்சம் (சாரி , அதிகமாவே ) பிசி ன்னு தெரியும்..அப்படி இருந்தும் பின்னோட்டம் இட்டதற்கு மிக்க நன்றி ரமேஷ்..
am really very happy ramesh...
அன்பின் shansamy அவர்களே,
மிக்க நன்றி உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும். உங்களுக்கும் மனசு கனக்கும் பாசம் இருந்து இருப்பதை நினைத்து சந்தோச படுகிறேன். உங்களுக்கும் வாழ்த்துக்கள்..
மிக்க நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு shansamy அவர்களே
மிக்க நன்றி சௌந்தர்,
//இப்போ உங்க தம்பி தொங்கிட்டு தான் போகிறார்//
ஹ ஹ அஹ ஆஹ :)
இப்போ பேருந்துல தொங்கிகிட்டு போவது இல்லை சௌந்தர்..
இப்போ ரயிலில் தான் தொங்கிகிட்டு போகிறேன்..ஹ் ஆஹா எ
:)
நன்றி சௌந்தர்
அன்பின் பதிவுலகில் பாபு
மிக்க நன்றி உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும். உங்களை போன்றோரின் வாழ்த்துக்கள் மிக்க அவசியம் தோழா..
அன்பின் தம்பி ப.செல்வக்குமார்,
மிக்க நன்றிப்ப உன் அழகான பின்னூட்டத்திற்கு,
// terror சொன்னது மாதிரி எனக்கு அதிக வர்நிப்பாகத் தெரிந்தது. //
இங்கே அக்காவோட பாசத்த ஒரு 10 % தான்பா சொல்லி இருக்கேன், அதுவே வர்ணிப்பாக தெரிகிறது..இதுல குறிப்பிட்டு இருக்கிற அத்தனையும் உண்மைப்பா. மிகைபடுத்தி எழுதி என்ன பண்ண போறேன் :) ...
பதிவை எழுதும் பொழுதே தெரியும், கொஞ்சம் படிக்ரவங்களுக்கு மிகைபடுத்தி எழுதி இருக்குற மாதிரி தோணும்னு, ஆனா அதை பத்தி கவலைபடாம தான் மறைக்காம எழுதி இருக்கேன்...
நான் எழுதி இருப்பது மிகக்குறைவே..என் அக்காவோட பாசத்த எழுத முடியாது
//அவள் பாசத்தை நம்பிக்கையாய் எழுத ஆரம்பித்துவிடலாம்,முடிக்கமுடியாது என்று//
விஜய் ஏனோ உங்கள் தளம் பக்கம் வராமல் இருப்பதற்கு என் மறதி ஒரு காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனா இன்று உங்க அக்கா என்னை கை பிடிச்சி இழுத்திட்டு வந்திட்டாங்க. மறக்காமல் இருக்க தொடருகிறேன் இன்றில் இருந்து....!
உங்கள் இருவரின் பாசம் என்னை பொறாமை கொள்ளவே செய்கிறது.
///தன்னை தான் அதிகம் நேசிக்கணும் அப்டிங்கற ஒரு இனம்புரியா, பாசத்துல மிதக்குற ஒரு பிடிவாத உணர்வு இருக்கும்.///
உங்களின் இந்த உணர்வு அப்படியே என்னை பிரதிபலிகிறது. இந்த possessiveness தவறோ என்று பல நேரம் நினைப்பது உண்டு. ஆனால் அன்பின் முன் சரியே என்று மனம் சமாதானம் செய்து கொள்ளும்...
அன்பு காட்டாமல் பாசத்தை பரிமாறி கொள்ளாமல் எதை சாதிக்க போகிறோமோ தெரியவில்லை...!
உங்கள் இருவருக்கும் இந்த அக்காவின் வாழ்த்துக்கள் .
சகொதரியின் பசத்தில் தாய்மை உணரும் அனுபவம் உங்களுக்கு கிடைத்த விதத்தில் நிங்கள் கொடுத்து வத்தவர்.ஏனென்றால் இதை படிக்கும் போது என்னால் உணர முடிகிறது
இவண்,
உங்கள் ரசிகன் சந்துரு !...
பொறாமையா இருக்கு விஜய், உங்களை பாக்கும் போதெல்லாம் !......
இவண்,
உங்கள் ரசிகன் சந்துரு !...
முதலில் என்னையும் என் அக்காவையும் வாழ்த்தியதற்கு மிக்க நன்றிங்க கௌசல்யா அக்கா ...அப்புறம் என் வலைதளத்து பக்கம் வந்து இருக்கீங்க, அதுக்கே உங்களுக்கு treat வைக்கணும் . :) ...
கொஞ்சம் வேலை அதிகம் அதனால வலைதளத்து பக்கமே வர முடியாம போய்டுச்சு, அப்டி வந்தா உங்க வலைத்தளத்து பக்கமும் மறக்காம வந்துட்டு போறேன். நிறையா பதிவை போட்டு வைங்க, நேரம் இருக்குறப்ப இந்த தம்பி வந்து படிச்சுட்டு மறக்காம வாழ்த்து சொல்லிட்டு போறேன்
:)
மிக்க நன்றிங்க mkr ......
நீங்கள் சொல்வது போல், பாசம், அன்பு அனைவராலும் உணரக்கூடிய மனதனில் உணர்வுகளில் கலந்துவிட்ட ஒன்று , அதைதான் இங்கே எழுதி உள்ளேன், என்னாலும் உணர முடிகிறது என்று நீங்கள் கூறுகையில் மிக்க சந்தோசம்,
என் எழுத்துக்கள் உங்களை வந்தடைந்ததில் மிக்க மகிழ்ச்சி mkr தோழரே ..
நண்பா சந்துரு,
நீங்க பொறாமை படுகிற அளவுக்கு நானும், என் பாசமும் இருக்கிறோமா அப்டின்னு தெரியல , ..ரொம்ப நாட்கள் கழிச்சு இந்த பதிவை படிச்சு இருக்கிறீங்க போல, மிக்க சந்தோசம் சந்துரு ...
எப்போ வரோம் அப்டிங்கிறது முக்கியம் இல்ல , எப்படி வரோம் அப்டிங்கிறது தான் முக்கியம்னு நீங்க சொல்றது கேக்குது, ரொம்ப பக்கத்துல தான உட்கார்ந்து இருக்கீங்க ... :)
அக்கா என்றால் அன்பு என் உணர்த்திய பதிவு..........கொஞ்சம் பிசியாக் இருந்துவிடேன். பதிவுக்கு நன்றி.
மிக்க நன்றிங்க நிலாமதி அக்கா,
நிறையா வேலைகள் இருந்தாலும் மறக்காம வந்து படிச்சு பாராட்டி இருக்கீங்க..ரொம்ப சந்தோசம் அக்கா...எனக்கும் தான் நிறையா ஆணி அடிக்கிற வேலை இருக்கு அக்கா :) , நானும் உங்க பின்னூட்டத்திற்கு பதிலளிக்க தான் இப்போ வந்தேன்....
ரொம்ப சந்தோசம் நீங்க படிக்காம விட்டுடீங்க அப்டின்னு கொஞ்சம் பீல் பண்ணினேன் , இனி இல்லை ... :)
ரொம்ப நன்றிங்க அக்கா
இவ்வளவு அழகாகவா நீ எழுதுற .......................உண்மைஎலையே நீ ஒரு நல்ல எழுத்தாளர் da
இவ்வளவு அழகாகவா நீ எழுதுற .......................உண்மைஎலையே நீ ஒரு நல்ல எழுத்தாளர் da
அன்பின் மணிகண்டன்,
முதல்ல நீங்க என் வலைதளத்து பக்கம் வந்ததே பெரிய சந்தோசம் எனக்கு, இதுல நீங்க என்னை வாழ்த்தி இருக்கீங்க மிக்க சந்தோசம், ஆனா கொஞ்சம் அதிகமா வாழ்த்திட்டீங்க , எழுத்தாளர் அப்டின்னு, நிஜமா அப்டி இல்லைங்கா, சும்மா எழுதுறோம் அவ்வளவு தான், எழுத்தாளர் ஆகுறதுக்கு நிறையா தகுதி வேணும், என்கிட்டே இல்லை அது ..
மிக்க நன்றி மணி...
உங்க பாசம் நெகிழ வைக்குதுங்க... கண் முன், நினைக்க முடிகிறது..
என்றென்றும் இது போலவே இருக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்..!!
(இப்படி உறவுகள் அமைவதே ஒரு கொடுப்பினை தான்...) :-)))
வழமைபோல் சுப்பர்
படித்ததும் என் அக்காவிற்கு phone பண்ணி பேசினேன். சில எழுத்துக்கள் நம் நினைவுகளை விழிக்க வைக்கின்றன.
நன்றி விஜய்
Aruami..mika mika aruami, VIJAI,.......
Ezhuthiya vaarThaikalaiyum thaandi nirkkirathu ungaLathu unarChipoorva maana Sahodarip paasam. NeengaL oru nalla ezhuTHaLar mattumalla,adipapadiyil, oru sirnatha nalla manithar...Iraivan UngLukku (sahodari Vijayalaxmaiyum sErTHu) aLiTha intha "Paasaponaaippu" innum pala jenmangaL thoadara, manamaara vaazTHukiren, anbare.
Sahodari illathavargaLaiyum "yEnga vaikkum" ungaLathu sodarip paasam.Vaazhga Pallandu...
Neelakantan.C.S. Palakkad, Kerala
மிக்க நன்றிங்க ஆனந்தி,
நிச்சையம் உங்களது வாழ்த்துக்கள் என்னையும், என் அக்காவையும் நீண்ட நாள் இதே பாசத்தோடு இருக்க வைக்கும் என உறுதியாய் கூறுகிறேன்.
வாழ்க்கையில் விட்டுச்செல்லும் சில பாச சுவடுகள் இவை. நிச்சயம் அழியாமல் இருக்கும்.
மிக்க நன்றி மீண்டும் ஒருமுறை .
மிக்க நன்றிங்க யாதவன் ,
மிக்க நன்றிங்க ஜெயந்தி,
மிக்க சந்தோசம் நீங்கள் உங்கள் சகோதரியை அழைத்து பேசியமைக்கு, உங்கள் சகோதரி பாசம் எப்பொழுதும் தொடர எனது வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி பின்னோட்டம் அளித்தமைக்கும்.
Post a Comment